Friday, February 27, 2009

நாட்டுப் பற்று என்றால்?????

வாக்கு வாதம் எனக்கு பிடிக்காத ஒன்னு தான்...அதுவும் அலுவலகத்துல, அலுவல்களுக்கு சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தைப் பற்றி பேச எனக்கு விருப்பமில்லை யென்றாலும், இன்னைக்கு அது தவிர்க்க முடியாததாயிடிச்சு....

மதியம் ஒரு அலுவலக நண்பர், இரண்டு பேரை அறிமுகம் செய்து வைத்தார். ஒரு ஆண், ஒரு பெண், 23 அல்லது 24 வயது இருக்கும். ஒரு ஆன்மீக அமைப்புல இருந்து வந்திருந்தாங்க. அலுவலக நண்பர்கள் 6 பேரை உட்கார வைத்து, அந்தப் பெண் பேச ஆரம்பித்தார்.

"வரும் ஞாயிறு நாங்க ஒரு பீஸ் மார்ச்சுக்கு ஏற்பாடு செய்திருக்கோம்..Peace march is against the terrorism and corruption.. Please..please..please...you should all join' அப்பிடீன்னு பல ப்ளீஸ்களை போட்டு பேச ஆரம்பித்தார். கூட வந்த பையன் "எதுக்கு நீ ப்ளீஸ் இவ்வளோ போடுறே..வரவேண்டியது அவங்க கடமை' னு ஆரம்பிச்சான்..அப்பவே நாங்க நெளிய ஆரம்பிச்சோம்.

பிறகு நாங்கள் எல்லோரும் "நல்ல விஷயம் தான்... நாங்களும் வர்ரதுக்கு முயற்சி செய்யறோம்" னு சொன்னோம். வந்த அம்மணி, "இல்லை நீங்க கண்டிப்பா வர்ரேன்னு சொன்னா மேற்கொண்டு பேசலாம்' னு சொல்ல...நாங்க ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்தோம்.


அலுவலக தோழி ஒருத்தி ரொம்ப யதார்த்தமா.. "நாங்க ஃபேமிலியோட வெளியே போறோம்...ஏற்கனவே பிளான் பண்ணிட்டோம்....இன்னைக்கு இரவே கிளம்பறோம்" னு சொல்ல.... வந்த பையன்...."நீங்க ஏன் அதை ஒரு வாரத்துக்கு தள்ளி போடக் கூடாது" னு கேட்டான். சரி நல்ல விஷயத்துக்காக இதை ஆர்வம் மிகுதியால சொல்றான்னு நினைத்து யாரும் ஒன்னும் பேசலை.

அவர் அதோட நிற்கலை...."நீங்க இந்த பீஸ் மார்ச்சுக்கு வராம, I am a true Indian...I love my India...I love peace னு சொன்னா... 'THAT MEANS YOU ARE A FRAUD' னு ஒரு அறிக்கை விட்டான்... எனக்கு வராத கோபம் வந்தே விட்டது.... நாங்களும் சின்ன பையன்...போகட்டும்னு அடக்கி வாசிச்சோம்...ஆனா இந்த வார்த்தை என்னை ரொம்பவே ட்ரிக்கர் பண்ணீடுச்சு.

"Who are you to give an endorsement for my patriotism?" னு கேட்டேன்... அவங்க குடும்ப சூழ்நிலை தெரியாம அவங்களை ஃபிராடுனு சொல்ல நீ யார்னு கேட்டேன்.... உதாரணத்திற்கு... நான் இங்க தனியா இருக்கேன்....நான் இருக்கும் இடத்திற்கும் பீஸ் மார்ச்சு துவங்கும் இடத்திற்கும் 35 கி மீ. மாலை 6 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு தனியா வந்துட்டு போக எனக்கு தைரியம் இல்லை....தில்லி அவ்வளவு பாதுகாப்பான இடமும் இல்லை....அப்படி நான் வராத பட்சத்தில், உடனே எனக்கு நாட்டுப்பற்று இல்லை...நான் ஒரு ஃபிராடுனு சொல்ல நீ யார் னு கேட்டேன்... அவர் உடனே...அப்போ உங்களுக்கு உங்க பாதுகாப்பு தான் முக்கியம்....நாட்டின் பாதுகாப்பு முக்கியம் இல்லையானு கேள்வி எழுப்பினார். மேலும் பஸ் ரூட் தெரியலை, அதுனால வரலைன்னு சொல்ற நீங்க எல்லாம் ஹிப்போக்ரெட்ஸ். You people dont have the responsiblity....Wont you go miles if you get a job for 50,000..there you wont see safety...because you are paid.

நான் கேட்டேன்..do you want me to compromise my personal safety and join your peace march...னு கேட்டேன்...அவர்.".again and again you are talking about your personal safety and proving how selfish you people" are னு வசனமா வசனம் பேசினார். கூட வந்த பெண் இதுக்கு மேல பேச விட்டா நிறுவனத்திற்கு கெட்ட பெயர் வந்திடும்னு பையனை இழுத்துட்டு போயிட்டார்.

நோக்கம் சரியானதாய் இருந்தாலும் அதை அணுகும் முறையை நல்ல படியாக கையால வேண்டாமா?. ஒரு நல்ல விஷயத்திற்காக பாடுபடும் இவர்கள், வார்த்தைகளை இப்படி மானாவாரியா விடலாமா?... நல்ல உணர்வுகளை, நல்ல எண்ணங்களை இங்கே கற்றுக் கொள்ளும் இவர்கள், அதை செயலில் காட்டவேண்டாமா?. எடுத்த எடுப்பிலேயே இப்படி ஒரு வார்த்தையை விட்டால், கேட்ப்பவர்களுக்கு இந்த நோக்கத்தின் மேல் நம்பிக்கை வருமா?.

குறிப்பு: ஒரு தனிமனிதன் ஒரு சக மனிதனின் மேல், அதுவும் அவரைப் பற்றி அறியாத பொழுது, சுமத்தும் குற்றச்சாட்டின் பொருட்டு வெளிப்பட்ட கோபத்தின் விளைவாக இந்தப் பதிவு....மற்றபடி பீஸ் மார்ச் போவதைப் பற்றியதில்லை

16 comments:

Thekkikattan|தெகா said...

மங்கை,

அவர்களின் நோக்கம் உயர்வானது, அதன் பொருட்டு எந்த சுய லாபமும் கிடையாது என்பது ஆழமாக அவர்களின் மனதில் பதிந்ததால் தன் பக்கம் எல்லா தார்மீக நியாயமும் இருப்பதாக நினைத்துக் கொண்டு, வயதினூடக பெரும் பக்குவமின்மையால் வந்த முதிர்ச்சியற்ற வார்த்தைகளவை. அவர்களின் வயதினைக் கருத்தில் கொண்டு நாம பொழச்சுப் போவட்டுமின்னு விட்டுடுவோம் :-) .

இருந்தாலும் நீங்க அந்த பச்சை மண்களின்(அவர்களுக்கு) கற்கைக்கு ஒரு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சு வைச்சதும் ஒரு விதத்தில் நல்லதுதான்.

ஜீவன் said...

அமைதியை பற்றி பேச வருபவர்கள் முதலில் அமைதியாக பேசவேண்டும்!
விரும்பத்தகாத வார்த்தைகளை பேசக்கூடாது!

/// நல்ல உணர்வுகளை, நல்ல எண்ணங்களை இங்கே கற்றுக் கொள்ளும் இவர்கள், அதை செயலில் காட்டவேண்டாமா. எடுத்த எடுப்பிலேயே இப்படி ஒரு வார்த்தையை கேட்டவர்களுக்கு, இந்த நோக்கத்தின் மேல் நம்பிக்கை வருமா//

நியாயமான கேள்வி!

இவர்கள் அழைத்தவுடன் செல்ல வேண்டும்! இல்லாவிட்டால்
நாட்டு பற்று இல்லாதவர்கள் ஆகிவிடுவார்களா?

இது, இவர்கள் போன்றோரை தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கிறார்களே அவர்கள் தவறு!

யட்சன்... said...

மீ த ஃபர்ஸ்ட் இல்லையா :(


நிறுவனத்தின் பேரை போட்ருக்கலாம்...இந்த பதிவை அந்த நிறுவனத்தின் பார்வைக்கு கொண்டு போகலாம்.

யாகாவராயினும் நாகாக்க...ன்னு எங்க தாத்தா ஒருத்தர் சொல்லீருக்காருப்பா, அதை உங்க ஆளுங்களுக்கும் சொல்லிக்குடுங்கன்னு சொல்லலாம்.

ஆமா ஏன் கிசு கிசு பாணியில நிறுவனம் நிறுவனம்னு போடனும்...பேரப்போட்டாத்தானே அவுக டவுசரை கழட்ட முடியும்...பேர மட்டும் போடுங்க...மத்ததை நான் பார்த்துக்கறேன்...

:D

யட்சன்... said...

இதுல இருந்து இன்னொன்னும் தெரியுது, உங்களுக்கு வயசாய்டுச்சி...அதான் இத்தனை கோவம் வருது.

ஹி..ஹி..ம்ம்ம்ம்

புருனோ Bruno said...

//அவர்களின் நோக்கம் உயர்வானது, அதன் பொருட்டு எந்த சுய லாபமும் கிடையாது என்பது ஆழமாக அவர்களின் மனதில் பதிந்ததால் தன் பக்கம் எல்லா தார்மீக நியாயமும் இருப்பதாக நினைத்துக் கொண்டு, வயதினூடக பெரும் பக்குவமின்மையால் வந்த முதிர்ச்சியற்ற வார்த்தைகளவை.//

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்

//இருந்தாலும் நீங்க அந்த பச்சை மண்களின்(அவர்களுக்கு) கற்கைக்கு ஒரு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சு வைச்சதும் ஒரு விதத்தில் நல்லதுதான்//
வழிமொழிகிறேன்

viji said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

திகழ்மிளிர் said...

/நோக்கம் சரியானதாய் இருந்தாலும் அதை அணுகும் முறையை நல்ல படியாக கையால வேண்டாமா?. ஒரு நல்ல விஷயத்திற்காக பாடுபடும் இவர்கள், வார்த்தைகளை இப்படி மானாவாரியா விடலாமா?... நல்ல உணர்வுகளை, நல்ல எண்ணங்களை இங்கே கற்றுக் கொள்ளும் இவர்கள், அதை செயலில் காட்டவேண்டாமா?. எடுத்த எடுப்பிலேயே இப்படி ஒரு வார்த்தையை விட்டால், கேட்ப்பவர்களுக்கு இந்த நோக்கத்தின் மேல் நம்பிக்கை வருமா?. /

சரியாகச் சொன்னீர்கள்

அபி அப்பா said...

நீங்களே அமைதியின் திலகம். உங்க கோவத்தையே கிளறிட்டானே பையன். போகட்டும் சின்ன பையன் தானே மாப்பு கொடுத்துடுங்க!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ரொம்ப கஷ்டம் தான்..
கெட்ட செயல் செய்ய தீவிரவாதிங்களுக்கு யாரோ ப்ரைய்ன் வாஷ் செய்தமாதிரி... நல்ல காரியம் செய்யனும்ன்னு அதையும் தீவிரமா செய்ய இவங்களுக்கு ப்ரைய்ன் வாஷ் செய்துட்டாங்களா..

முத்துலெட்சுமி-கயல்விழி said...

\\ யட்சன்... said...

மீ த ஃபர்ஸ்ட் இல்லையா :(//

நல்லா வேணும்.. :)

மங்கை said...

பின்னூட்டமிட்ட் நண்பர்களுக்கு நன்றி..

இப்பொ நினச்சு பார்த்தா முதிர்ச்சியற்ற வார்த்தைகளாகத்தான் தோனுது...அவர்களின் முயற்சியை, முனைப்பை பாராட்ட வேண்டும்.. இருந்தாலும் எடுத்த எடுப்பில் இப்படி ஒரு வார்த்தையை யாரும் எதிர்ப்பார்க்க மாட்டார்கள்...

மக்களின் எண்ணங்களை மாற்ற வேண்டும், பிரச்சனையின் தீவிரத்தை அவர்கள் உணரவேண்டும் என்ற நோக்கம் இந்த பாத யாத்திரையின் அடிப்படை... அதை மக்களிடம் எடுத்து செல்பவர்களின் எண்ணம், உணர்வு, பேச்சு எப்படி இருக்க வேண்டும்?..ம்ம்ம்ம் அதற்கான பக்குவம் வேண்டும் என்பதை ஒருங்கினைப்பாளர்களும், இளைஞசர்களும் மனதில் கொள்ளவேண்டும்...

பாச மலர் said...

உண்மைதான் மங்கை. முதிர்ச்சியற்ற வார்த்தைகள்..இதுவே படிப்படியாக முதிர்ச்சியற்ற செயல்களிலும் முடிகிறது பல வேளைகளில்..

sakthi said...

மேடம் சின்ன பையன் தானே மன்னிதுவிடுவோம் ,புரியும்படி கூறினால் யாரும் புரிந்து கொள்வர் .கோவை சக்தி

SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி said...

நானா இருந்தா அங்கயே தூக்கி போட்டு மிதிச்சிருப்பேன்.. அவனுக்கு நாட்டுப்பற்று என்பது அவன் சார்ந்த நிறுவனத்துக்கு விளம்பரம் தேடித் தரவே.. என்ன இருந்தாலும் மிக மோசமான அப்ரோச்..

Inilan said...

Idhai thaan aarvakolaaru enbaargalo???

:)))

கவிதா | Kavitha said...

"Who are you to give an endorsement for my patriotism?" னு கேட்டேன்... அவங்க குடும்ப சூழ்நிலை தெரியாம அவங்களை ஃபிராடுனு சொல்ல நீ யார்னு கேட்டேன்.... //

மங்கைஜி, நிறைய பேரை இப்படித்தான் கேட்கனும்னு எனக்கு கூட தோனும்.. :(