Tuesday, July 17, 2007

புதிர் மனிதர்கள்

நேற்று காலையில கேபின் கதவ படார்னு திறந்துட்டு ஒரு அம்மா உள்ள வந்தாங்க. உள்ள வந்த அப்புறம் மீண்டும் வெளியே போய், உள்ள உக்கார்ந்துட்டு இருக்குறது நான் தானான்னு பெயர் பலகையை பார்த்து உறுதி பண்ணீட்டு, சுனிதா சிங் அனுப்பிச்சாங்க....உங்க கிட்ட பேசனும்னு சொல்லீட்டு அவங்களே சேர் இழுத்து போட்டு உக்கார்ந்துட்டு...எனக்கு ஒரு உதவி வேனும், செய்வீங்களான்னு ஒரே பதட்டம்.

நான் முதல்ல உட்கார சொல்லி குடிக்க தண்ணி குடுத்து ஆசுவாசப்படுத்தினேன். நான் தண்ணி கேக்கவேயில்லியே அப்படீன்னு ஆரம்பிச்சாங்க.'' என் பையனுக்கு எதிலெயும் ஆர்வம் இல்லை. படிக்க மாட்டேங்குறான், யாரு கிட்டேயும் பேச மாட்டேங்குறான், எத பார்த்தாலும் பயம், கோவம், எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை, அவன் ரொம்ப ப்ரில்லியன்ட், நல்ல மனசு, ஆனா என்னமோ இப்படி ஆயிட்டான், அவன எப்படியாவது சரி பண்ணனும்னு அழுக ஆரம்பிச்சுட்டாங்க

நானும் என் அலுவலக நண்பர்களும் அந்த அம்மாவ சமாதனப் படுத்தி, முதல்ல பதட்டப் படாம இருங்க, கண்டிப்பா நாங்க உதவி செய்யறோம்னு சொல்லி அமைதி படுத்தினோம். ஆனா அந்த அம்மா ஹிந்தியிலேயும், பஞ்சாபியிலேயும் மாறி மாறி பேசறத நிறுத்தவேயில்லை.

பையன் என்ன படிச்சு இருக்கான்னு கேக்கவே, +2 ன்னு சொன்னாங்க. ஓ சின்ன பையன் தானே கவுன்சலிங்க் குடுத்தா சரி ஆயுடும்னு சொன்னா, அந்த அம்மா ''என்ன சின்ன பையனா..? 26 வயசு பையன் சின்ன பையனா?" ன்னு கேட்டு கோவப்பட்டாங்க. எங்களுக்கு எப்படி தெரியும் 26 வயசுன்னு? சரி எதோ மனக் கஷ்டத்துலே இருக்காங்கன்னு நாங்களும் பேசாம இருந்தோம்.

சரி சின்ன வயசுல அவன பாதிக்கற மாதிரி ஏதாவது நடந்ததான்னு கேட்டா. அப்புறம் சொல்றாங்க மெதுவா. அவன் பிறந்தது ஈரான்ல, அதுக்கு அப்புறம் கனடாவுல இருந்தோம், அப்ப சில குடும்ப பிரச்சனைகள், எனக்கும் என் கணவருக்கும் எப்பவும் பிரச்சனை னு சொல்லி அவங்க கணவர் பத்தி புகார் சொல்ல ஆரம்பிச்சாங்க.

கொஞ்ச நேரம் கேட்டுட்டு நான் சொன்னேன், ''மேடம், உங்களுக்கு கண்டிப்பா நாங்க உதவி செய்யறோம், ஆனா இதுக்குன்னு தனி டிபார்ட்மென்ட் இருக்கு, நானே உங்களை அங்க கூப்டுட்டு போறேன், Clinical Psychologist இருக்காங்க அங்க போலாம்னு சொன்னா,

''என்ன நீ என்ன தட்டி கழிக்க பார்க்குறே,அங்க எல்லாம் போக என் பையன் ஒன்னும் பைத்தியம் இல்லை, நான் மனசு விட்டு பேசனும் அப்பதான் உங்களுக்கு புரியும், கேக்க முடியுமா முடியாதா'' ன்னு பேப்பர் வெயிட்ட டமால்னு கீழே போட, சரி சரி சொல்லுங்கன்னு சொன்னேன். பாரு என் பையன் வெளியே நின்னுட்டு இருக்கான். அவனுக்கு உள்ள வர பயம். முதல்ல நான் பேசீட்டு அப்புறம் அவன கூப்பிடலாம்னு தான் அவனை வெளியவே விட்டுட்டேன். இது தான் பிரச்சனைனு மீண்டும் அவங்க முதல்ல சொன்ன விஷயத்த சொல்ல ஆரம்பிச்சாங்க.

உங்களுக்கு எத்தனை குழந்தைகள்னு கேட்டேன். அதுக்கு அவங்க எனக்கு ரெண்டு பசங்க, இரட்டை குழ்ந்தைகள்னு சொன்னாங்க. என் அலுவலக நண்பர் ராகுல், '' அப்ப இன்னொரு பையன் என்ன பண்றார். அவர் நல்லா இருக்காரா? 26 வயசுன்னா அவரு இப்ப ஏதாவது வேலையில இருக்கனுமே'' ன்னு கேட்டார், அவன் பத்தாம் வகுப்பு படிக்கிறான்னு அடுத்த குண்ட தூக்கி போட்டாங்க.

எங்களுக்கு ஒன்னும் புரியலை. ஆனா ஏதோ பிரச்சனைல இருக்காங்கன்னு மட்டும் புரிஞ்சது. ஆர்வக் கோளாறுல ராகுல் 'அது எப்படி' ன்னு கேக்கவே அந்த அம்மா, " இங்க பார்..நான் பெரிய பையன பத்தி பேசத்தான் வந்து இருக்கேன், அவன பத்தி மட்டும் பேசுங்க, ஏன் தேவை இல்லாத கேள்விகள் கேக்கறீங்க"....இதக் கேட்டுட்டு ராகுல் கப்சிப்.

நான் ''சரி சரி...சாரி மேடம்...சொல்லுங்க...உங்க வீடு எங்க இருக்கு'' ன்னு கேட்டேன், கிரேட்டர் கைலாஷ்ல இருக்குன்னாங்க.

இதக் கேட்டுட்டு நான் பேசாம இருந்து இருக்கலாம்.....''கிரேட்டர் கைலாஷ் பார்ட் ஒன்னா, பார்ட் டூவா ன்னு கேட்டேன் ( GK- 1 & GK-2 ன்னு ரெண்டு இடம் இருக்கு). இத்தன டீடெய்லா கேட்டு நான் என்ன பண்ணப் போறேன்..அதான் விதி வலியது...பிரச்சனைய தேடி போய் வாங்குறது தான் நம்ம வழக்கம்

வந்ததே கோபம் அந்த அம்மாக்கு. ''அதான் GK-1 னு தானே சொன்னேன், எதுக்கு நீ மறுபடியும் கேக்குறே, பாரு இப்படித்தான், என் பையனையும் முட்டாள் தனமா கேள்வி கேக்குறதுனால அவனுக்கு கோவம் வருது, ஏன் நீங்க எல்லாம் இப்படி இருக்கீங்க?..ன்னு கேட்டாங்களே பார்க்கலாம்.

ராகுல் அவங்ககிட்ட...''மேடம் நீங்க GKனு தானே சொன்னீங்க...அதான் கேட்டோம்''...அந்த அம்மா....''அப்ப நான் பொய் சொல்றனா...நீங்கள்ளாம் படிச்சவங்களா...be professional''.

ஆஹா இன்னைக்கு நமக்கு நேரமே சரியில்லை போல இருக்குன்னு நினச்சுட்டேன். ராகுல் வேற என்னை பார்த்து முறச்சுட்டு உட்கார்ந்து இருக்கான்...பிரச்சனை யாருக்கு பையனுக்கா, அம்மாக்கான்னு எனக்கு சந்தேகம் வந்துச்சு.

அப்புறம் பக்கத்துல வந்து தோள் மேல கை போட்டு " பாருங்க மேடம், உங்களுக்கு உதவறதுக்கு தான் நாங்க இங்க இருக்கோம். ஆனா கவுன்சலிங்க் டிபார்ட்மென்ட் இன்னொரு இடத்துல இருக்கு.

நாங்க எய்ட்ஸால பாதிக்கப் பட்டவுங்களுக்காகவும், ஊனமுற்றோர்க்காகவும் சில களப்பணிகள் செய்யறோம்..அவ்வளவு தான்னு சொன்னேன் மேலும் " Our Psychologist sits in another room, i will take you there" ன்னு சொன்னா அந்த அம்மா.." so if I want your help, I should have HIV is it?...otherwise I should be a handicap?. you people want to escape when you really meet live cases. you are hippocrates, good for nothing னு சகட்டு மேனிக்கு பேச ஆரம்பிச்சுட்டாங்க.

அது வரைக்கும் ஆர்வக் கோளார்ல இருந்த ராகுலும், அபிஷேக்கும் எழுந்து வெளியே ஒடியே போய்ட்டாங்க.

நான் தொலைஞ்சேன்னு நினச்சுட்டு மீண்டும் பக்கத்துல உக்காந்து எடுத்து சொன்னேன். எதுக்காக உளவியல் நிபுனர பார்க்கனும்னு. ஒரு வழியா அவங்களுக்கு புரிய வச்சு உளவியல் நிபுனர பார்க்கிறதுக்கு ஒத்துக்க வைக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயுடுச்சு.

எனக்கு ''இன்னைக்கு நேரம் ஆயுடுச்சு, நாளைக்கு வந்து பார்க்குறே''ன்னு சொல்லிட்டு வேகமா போய்ட்டாங்க.

எங்க கிட்ட பேச்சீட்டு இருக்கப்பவே ஃபோன் வந்துட்டே இருந்துச்சு... பையனும், கணவரும் ஃபோன் பண்றாங்கன்னு சொன்னாங்க. அவங்க கிட்ட நான் ஆபீஸ்ல இருக்கேன்...இதோ வந்துடறேன்னு சொல்லிட்டு இருந்தாங்க. உண்மையான பிரச்சனை என்ன, யாருக்குன்னு தெரியலை?.

ஆனா குடும்பத்தில ஏதோ பிரச்சனை இருக்கு....ஹ்ம்ம். மறுபடியும் அந்த அம்மாவ சந்திச்சு பேசனும். நிஜமாவே அப்படி பிரெச்சனையோட ஒரு பையன் இருக்கானா.. இல்லை... இந்த அம்மா கிட்ட தான் பிரச்சனையான்னு பார்க்கனும்.

24 comments:

சினேகிதி said...

ஆஹா...மறுபடியும் சந்திச்சுப் பேசினா என்ன நடந்ததென்டு எழுதுங்கோ!!

துளசி கோபால் said...

அடக்கடவுளே..பிரச்சனை அம்மாகிட்டேதான் இருக்குன்னு பக்ஷி சொல்லுது.

GKன்னதும் நம்ம பையனைச் சொல்றிங்களொன்னு ஆர்வம் எட்டிப் பார்த்துச்சு:-)

முத்துலெட்சுமி said...

அய்யோ பாவம் மங்கை நல்லா மாட்டிக்கீட்டீங்களா..துளசி சொல்றா மாத்ரி அம்மா கிட்ட என்னவோ ப்ராப்ளம் இருக்கு..பாருங்க ரெண்டு பிள்ளைங்களையும் வேற படிக்க வைக்கலயாம்..

அபி அப்பா said...

ஆஹா மாட்டிகிட்டீங்களா!:-)) உங்க ஆஃபீஸ்ல சுனிதாசிங் என்ன மாதிரி ரொம்ப வெவரமானவங்க. அதான் உங்க கிட்ட கைநீட்டி விட்டுட்டாங்க:-))

கோபிநாத் said...

\\இந்த அம்மா கிட்ட தான் பிரச்சனையான்னு பார்க்கனும்.\\

அந்த அம்மாவுக்கு தான் பிரச்சனை....பாவம் பார்த்து உதவி செய்யுங்க.

பங்காளி... said...

விதி வலியது...

வாழ்த்துக்கள்...

மங்கை said...

சினேகிதி, துளசி, லட்சுமி, அபி அப்பா, கோபி, பங்காளி, நன்றி

சுல்தான் said...

நீங்க எழுதியதை வைத்துப் பார்த்தால் அந்த அம்மாவினால்தான் அந்தப் பையனு(?)க்கு பிரச்னை என்று தெரிகிறது. பாவம் என்ன செய்யப் போறீங்க!

Thekkikattan|தெகா said...

ஏனுங்க, எயிட்ஸ்க்கு கவுன்சலிங் கொடுக்கிற இடத்தில இந்த மாதிரி அரை லூசுங்களோட உட்கார்ந்து குடும்பப் ப்ரச்சினையை கேக்கிறதே தப்பு. ஒரே வார்த்தையில முடிச்சிருக்கலாம், இது வேற துறை, நீங்க பார்க்க வந்த மக்கள் வந்து xyz ரூம்ல இருக்காங்கன்னு அனுப்பிச்சுருக்கலாம்.

என்னாது அடுத்த முறை திரும்பி வேற சந்திக்கப் போறீங்களா... ஓ! கர்த்தரே மங்கை தான் என்ன செய்கிறோம் என்று அறியாமல் செய்கிறார் அடுத்த முறை அந்த சுனிதாசிங்கிடமிருந்து இவர்களை காப்பாற்றும் :-)))

மங்கை said...

சுல்தான்..

கணவன் மனைவிக்கு இடையே இருக்குற பிரச்சனையில பையனை பலி காடாக்கறாங்களோன்னு எனக்கும் தோனுது...இன்னைக்கு வர்ரேன்னு சொல்லீட்டு போன பெண் வரலை.. உளவியல் துறையில சொல்லியாச்சு.. இதுக்கு அப்பாலும் நான் உதவனும்னா பெர்சனலா நான் தலையிட்டா தான் உண்டு...அது தான் யோசிட்டு இருக்கேன்...பார்க்கலாம் ஒரு ரெண்டு நாட்களுக்கு..வர்ராங்களான்னு பார்க்கலாம்..

மங்கை said...

தெகா...

இனிமெல் பதிவ போட்டுட்டு கீழ சில objective questions குடுக்கலாம்னு பார்க்கிறேன்...:-))))))

சுனிதா சிங் எங்க கல்லூரியில வேலை செய்யற பெண்....அவ ரெஃபர் பண்ணி இந்த பஞ்சாபி பெண் என்ன பார்க்க வந்தா..

தெகா நான் படிப்பு முடிச்சுட்டு சேர்ந்த முதல் வேலையே ஊட்டி எமரால்ட் ஹைட்ஸ் காலேஜ்ல இருந்த குடும்ப ஆலோசனை மையத்துல தான். அதனால தன் இந்த ஆர்வம்..

கண்மணி said...

இன்ட்ரெஸ்டிங் ஒரு சஸ்பென்ஸ் படம் பார்த்த மாதிரி இருக்கு.ஆனா அதே நேரம் ஏதோ பிரச்சினை அந்தப் பெண்மணிக்குன்னு தோனுது.பாவம்.

எதுக்கும் மறுபடியும் வந்தா நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.

delphine said...

அம்மாவால குழந்தைக்கு பிரச்னை!
குழந்தையால அம்மாவிற்கு பிரச்னை..
எதுவாக இருந்தாலும் மங்கை..இன்னும் கொஞ்சம் விஷயத்தைக் கேட்டு..;...
தீர்வுக்காணுங்கள்...

நாமக்கல் சிபி said...

//அம்மாவால குழந்தைக்கு பிரச்னை!
குழந்தையால அம்மாவிற்கு பிரச்னை..
எதுவாக இருந்தாலும் மங்கை..இன்னும் கொஞ்சம் விஷயத்தைக் கேட்டு..;...
தீர்வுக்காணுங்கள்...
//

இங்கே அந்த அம்மாவே ஒரு குழந்தையா வந்திருக்காங்க!

அன்பா அரவணைச்சி பொறுமையா செவிமடுத்து கேட்டு கவனிச்சிருக்கணும்!

ம்.! உங்க புரொபஷனும் புனிதமானதுதான் மேடம்!

நல்ல பதிவு!

J K said...

நல்லா ஒரு க்ரைம் ஸ்டோரி படிச்சதுபோல் இருந்தது, ஆனா தொடரும்னு போட்டுட்டீங்களே!

சீக்கிரம் சந்திச்சு பேசி முடிவ எழுதுங்க. நாங்க காத்திட்டிருக்கோம்.

மங்கை said...

கண்மணி நன்றி...

வாங்க சிபி..நன்றி..அந்த மேடத்த விட்டிறுங்களேன்..:-))

வாங்க ஜேகே..அந்த அம்மாவ சந்திக்கிறதுக்கு இன்னைக்கு கூட முயற்சி செய்தேன்..தப்பான முகவரி.. தொலஒபேசி எண் குடுத்துட்டு போஉ இருக்காங்க..ஹ்ஹ்ம்ம்

பாரி.அரசு said...
This comment has been removed by the author.
சிவபாலன் said...

அடடா, மங்கை உங்க நிலைமை ரொம்ப பரிதாபம்..

எதற்கும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க..

அந்த அம்மா பேப்பர் வெயிட்டை உங்க மேல போடாமல் இருந்தாங்களே.! தப்பிச்சீங்க..

மங்கை said...

பாரி அரசு..

என்ன சொல்ல வரீங்க... தற்காப்பு மனவள கலை சரி..

அது என்ன என் குடும்பம் பாதிக்கப் படும்னா?.. புரியலையே..:-))

மங்கை said...

நன்றி சிவா..

நான் அந்த அம்மாக்கு உதவ தான் நினைக்குறேன் ...எனக்கு ஒரு பிரச்சனையும் வராது..

மங்கை said...

//அம்மாவால குழந்தைக்கு பிரச்னை!
குழந்தையால அம்மாவிற்கு பிரச்னை..
எதுவாக இருந்தாலும் மங்கை..இன்னும் கொஞ்சம் விஷயத்தைக் கேட்டு..;...
தீர்வுக்காணுங்கள்...//

ஆமா டாக்டரம்மா....முடிஞ்ச அளவுக்கு உதவ முயற்சி செய்யறேன்..

பாரி.அரசு said...
This comment has been removed by the author.
காட்டாறு said...

அவங்க உங்களை என்ன நெனச்சிட்டு போயிருப்பாங்கன்னு நெனச்சேன்.... சிரிச்சேன். ;-)

பாரி.அரசு said...

மங்கை,
மன்னிக்கவும், என்னுடைய பின்னூட்டத்தை நான் நீக்கியிருக்கிறேன். அது உங்கள் பதிவை வாசிப்பவர்களை தவறாக சிந்திக்க வைக்கலாம் அதனால் நீக்கிவிட்டேன். நான் சொல்லியது உங்களுக்கானது வாசிப்பாளர்களுக்கு அது தேவையிருக்காது.
நன்றி!