Tuesday, May 08, 2007

கடவுளே உன் படைப்பை நிறுத்தி விடு

இப்படித்தான் தோன்றியது நேற்று ஒரு செய்தியை பார்த்த பின். மனிதம் இல்லாத உலகில், மனிதர்களை நம்பி பிறக்கும் குழந்தைகள் படும் கஷ்டங்களை பார்த்தால், பிறக்காமல் இருப்பது நன்று என்று தோன்றுகிறது.

பணம், அதிகாரம், நாகரீக போதையில் மயங்கி கிடக்கும் மனிதனை முதலில் தெளிய வைத்துவிட்டு பின் படைக்கும் தொழிலை பாரும் கடவுளே.

நாளுக்கு நாள் மனிதனுக்கு தேவைகளும், ஆசைகளும் அதை அடைய வாய்ப்புகளும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. எந்த விலை கொடுத்தாகினும், எந்த பாவத்தினை செய்தாகினும் இந்த வசதி வாய்ப்பினை அனுபவிக்க அவன் சிறிதும் யோசிப்பதில்லை. ஆண் ,பெண் இரண்டுபேருமே இதில் சலைத்தவர்கள் இல்லை.

அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறனோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இது போல உணர்ந்த போதெல்லாம் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நான் தவறியதில்லை... அதனால் இதையும் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்று வட மாநிலங்களில் அநேக வீட்டில் பணியில் அமர்த்தப்படுபவர்கள் பத்தில் இருந்து பதினைந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள். அதுவும் பெண் குழந்தைகள். பட்டினி சாவில் இருந்து தப்பிக்க இவர்களின் பெற்றோர்கள் இவர்களை அனுப்பி வைத்து விட்டு, வருடக் கணக்கில் இவர்கள் என்ன ஆனார்கள் என்று எட்டிப் பார்ப்பது இல்லை. முக்கியமாக வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அதிகம்.

நேற்று தொலைக்காட்சியில் பார்த்த ஒரு செய்தி.12 வயது சிறுமி ஒருத்தி, கை, கால் விரல்கள் எல்லாம் அடி வாங்கி அடி வாங்கி கருப்பாக மாறி, நசுங்கி, காயப்பட்டு...அய்யோ என்று எனக்கு அலற தோன்றியது. மேலும், எனக்கு சொல்லவே கஷ்டமாக இருக்கிறது...அந்த வீட்டில் இருந்த ........ (அவர்களை என்ன சொல்லி குறிப்பிடுவது என்று தெரியவில்லை) அந்த பிஞ்சின் கண்ணத்தில் இஸ்திரி பெட்டியை வைத்து அழுத்தி.....கண்கள் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை..அடி வாங்கி வாங்கி அநத அளவிற்கு வீங்கி இருந்தது.. ...உடம்பு பூராவும் காயப்ங்கள்..தீப்புண்கள்..வாய்விட்டு அழுதே விட்டேன்.

மிருகங்கள் கூட அவைகளுக்கு ஏதாவது ஆபத்து வரும்பொழுது தான் தாக்கும். ஆனால் இவர்கள்?....அப்படி என்ன பெரிய தவறை அந்த குழந்தை செய்திருக்கப் போகிறது? மற்றொரு குழந்தைக்கும் இதே போல நேர்ந்த கொடுமையை சொல்லி காவல் நிலையத்தில் அழுத காட்சி, எனக்கு நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது.ஏதோ ஒரு தொண்டு நிறுவணம் தலையிட்டு அந்த குழந்தைகளை காப்பாற்றியிருக்கிறது.

இந்த உலகத்தில் தூய்மை என்ற சொல்லுக்கு பொருள் என்னை கேட்டால் குழந்தைகள் என்று தான் சொல்லத்தோன்றும். கள்ளங்கபடமின்றி, வெளிப்படையாக பேசி, யாராயிருந்தாலும் அதிகமாக ஆராய்ச்சி செய்யாமல் எளிதாக நம்பி, உண்மையாக நேசித்து, சிரிப்பை மட்டுமே விரும்பும் ஒரு அற்புத பருவம். ஆனால் இன்றைய குழந்தைகளின் வாழ்வில் இந்த பருவம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருவதும் நம்மால் தானே?.

இந்த அற்புதத்தை நாம் எந்த அளவிற்கு பாதுகாத்து, ரசித்து வருகிறோம் என்பது நம் மனசாட்சிக்கு தெரியும். பணம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு இன்று மனிதன் ஆடும் ஆட்டம்...
..ஹ்ம்ம்ம்.

வறுமையின் கொடுமையிலிருந்து மீள இன்று இக்குழந்தைகள் எந்த வேலை செய்யவும் தயங்குவதில்லை என்பது நாம் அறிந்த உண்மை. தான் பெற்ற குழந்தை ஒழுக்கத்தின் சின்னமாக வாழவேண்டும் ஆசை படும் அதே மனிதன் தான் தன் பாலியல் இச்சையை இன்னொரு குழந்தையிடம் பணத்தை காண்பித்து தீர்த்துக் கொள்கிறான்.

பெற்றோர்களாலும் ஆபத்து, பள்ளியில் ஆசிரியர்களாலும் தொல்லை, சரி உழைத்து வாழலாம் என்றால் இந்த மனித மிருகங்களின் கொடுமை, வெளியே சமுதாயத்திலும் பாதகர்கள்,பாலியல் துன்புறுத்தல்கள்.எங்கே தான் இவர்களுக்கு பாதுகாப்பு?

குழந்தைப் பருவமும், கனவுகளும், ஆசைகளும் எல்லாக் குழந்தைகளுக்கும் பொது தானே?... இவர்களுக்கு ஏக்கம் இருக்கதா?..தாயின் அன்பையும், தந்தையின் அரவணைப்பையும் நினைத்து ஏங்காதா இவர்களின் மனம்.?..

செய்தியை முழுவதுமாக பார்க்க முடியாமல் போனதால், அலுவலக தோழி ஒருத்திக்கு தொலைபேசியில் கேட்டால், ''எதற்கு நீ இந்த அளவிற்கு உணர்ச்சி வசப்படுகிறாய்..பாவம் தான்..ஆனால் நாம் என்ன செய்ய முடியும்.... தனியாக இருக்கும் போது இது போல செய்திகளை பார்த்து 'உன் நிம்மதியை' கெடுத்துக் கொள்ளாதே'' என்று சொல்லி, தன் "ஆள்" சேட்டில், இவள் ஐடியை 'பிளாக்' செய்து விட்டு வேறு பெண்ணுடன் சேட் செய்வதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டாள். மற்றொருவரிடன் பகிர்ந்து கொண்டபோது..."நீ இது போல செய்திகளைப் பற்றி பேசி பேசி 'இன்ஹேலர்' செலவைத்தான் அதிகப் படுத்தப் போகிறாய்' என்றார். ஹ்ம்ம்

அவ்வளவுதானா?...நம்மால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாமல் முடியாவிட்டாலும், அந்த குழந்தைகளுக்காக ஒரு நிமிடமேனும் நம் மனம் வருந்தக்கூடாதா? இதைப் பற்றி பேசக்கூட நமக்கு விருப்பம் இல்லையே.... ஹ்ம்ம். இது போன்ற வன்செயல்களுக்கு ஆளான பின், மன உளைச்சலின் காரணமாக அவர்கள் பொறுப்பான வாழ்க்கை முறையை கடைபிடிப்பார்கள் என்று நாம் எவ்வாறு எதிர் பார்க்கமுடியும்?. நாளை இந்த குழந்தைகள் வாழ்க்கையில் தோற்றால், அந்த தோல்வி அவர்களுக்கு இல்லை, நமக்கு தான்.

இந்த குழந்தைப் பருவம் என்ற 'அற்புதத்தை' பாதுகாப்பது நம்மால் முடிந்த ஒன்று தானே?.... குறைந்தபட்சம் அதை அழிக்காமலாவது இருக்கலாம் அல்லவா?. தூக்க முடியா பாரத்தை இன்றைய குழந்தைகள் சுமக்கின்றன.
மீண்டும் ஒரு வேண்டுகோள்.... முடிந்தால், இந்தியாவில் உள்ள அன்பர்கள் தங்கள் வாகனங்களில், '1098' என்ற 'Child help line' எண்ணை ஒரு ஸ்டிக்கராக ஒட்டிக் கொள்ளுங்கள். குழந்தைகளுக் கெதிரான குற்றங்கள் நொடிக்கு ஒன்று நடப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. நீங்கள் செய்யும் இந்த உதவி சிக்கலில் இருக்கும் ஒரு குழந்தைக்கு உபயோகமாக இருக்கலாம் நன்பர்களே. இந்த எண்ணை எந்த குழந்தையிடமாவது சொல்ல வேண்டும் என்றால்..பத்து, ஒன்பது எட்டு (1098) என்று சொன்னால், அவர்கள் எளிதாக நினைவில் வைத்துக் கொள்வார்கள்.

நான் பார்த்த அந்த காட்சியை பார்த்தவர்கள் கண்டிப்பாக சில நாட்களுக்கு சாப்பிடவோ தூங்கவோ முடியாது..ஹ்ம்ம்

35 comments:

கோவி.கண்ணன் [GK] said...

மங்கை,

படிக்கும் போதே பதைபதைப்பாக இருக்கிறது.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்கிறார்களே ! இதையெல்லாம் அவர்கள் தெரிந்து இருக்கவில்லை என்றால் அவர்கள் மிருகங்கள் தான். சமூகத்தில் சேர்ந்து வாழ தகுதியற்றவர்கள்.

நந்தியா said...

நீங்கள் பார்த்த அந்த காட்சியை வாசித்த எனக்கே தாங்க முடியாமல் இருக்கு.
நீங்கள் சொன்னது போல கள்ளம் கபடமற்ற தூய்மையான மனதை கொண்ட இச் சிறார்களுக்கு நடக்கும் கொடுமைகள் தான் எத்தனை?

துளசி கோபால் said...

படிச்சதும் எனக்கும் ரொம்ப மனவருத்தமா இருக்குங்க.

பதிவின் தலைப்பு........?
கடவுள் படைப்பு............?

கடவுள் பாவம். அவர் என்ன பண்ணுவார்?

நம்பறீங்களா? மனுஷன் ச்சும்மா இருந்தாப் போதாதா?
அதென்ன உடல் பசியோ? எப்படி வளர்ப்பாங்க? இப்படித்தானா? (-:

aravindaan said...

படிபதற்கே மிகவும் கஷ்டமாக இருந்தது.. எப்படிதான் அந்த நிகழ்ச்சியை பார்த்தீர்க்ளோ. மனைத மிகவும் பாதித்தது...

Osai Chella said...

// "கடவுளே உன் படைப்பை நிறுத்தி விடு"//
இந்த மாதிரிக் கொடுமைகளைப் பார்த்துதான் கடவுளை விட புரட்சியே மருந்து என்று நாங்கள் கலகம் செய்கிறோம். முதலாளி தொழிலாளி உறவுகள் குழந்தைகள் மட்டுமல்ல குமரிகளுக்கும் பல கொடுமைகளை இழைத்தே வந்திருக்கிறது. நாம் துவண்டுவிடக்கூடாது சகோதரி."நண்பனின் பிணம் மீது ஏறி ஓடினேன்.. எதிரியை குறி வைத்து" என்ற போராளியின் மனப்பக்குவம் நம்மிடம் வரவேண்டும். உங்கள் விழிப்புணர்வுப் பயணம் தொடரட்டும்... நாங்களும் உடனிருக்கிறோம். பெரியார் அம்பேத்கார் போன்றவர்கள் பெரியாரைச் சிந்திக்க வைத்தனர். காமராசர் ஏழைக் குழந்தகளை பள்ளி வரை வரச்செய்தார். படிபறிவும் பகுத்தறிவும் இணையும் பொழுது சமூகமே விழிப்புணர்வு பெற்றது... வடநாட்டோடு ஒப்பிடும்போது நாம் பரவாயில்லை!

Unknown said...

//பணம், அதிகாரம், நாகரீக போதையில் மயங்கி கிடக்கும் மனிதனை முதலில் தெளிய வைத்துவிட்டு பின் படைக்கும் தொழிலை பாரும் கடவுளே.//

:-))

கடவுள்,அவனை அடைய பல மார்க்கங்கள், அதிலும் தனது மயக்கம்(மார்க்கம்)தான் சிறந்தது என்று சொல்லும் மக்கள்....இவர்கள் அனைவரும் திருந்திவிட்டாலெ உலகம் திருந்திவிடும். உலகில் கடவுள் நம்பிக்கையாளர்கள்தான் அதிகம். :-))

ஆனால் இவர்கள் திருந்தமாட்டார்கள் அதுதான் உண்மை.

கோவில் வாசலில் பூ விற்கும் சிறுமியிடம் பேரம் பேசிவிட்டு (அவளைப் பற்றி ஒரு கணம் கூட சிந்திக்காமல்) கடவுளுக்கு லட்சார்ச்சனை செய்து புண்ணியத்தை வாங்க போட்டி போடுவார்கள்.

***

//நாளுக்கு நாள் மனிதனுக்கு தேவைகளும், ஆசைகளும் அதை அடைய வாய்ப்புகளும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. எந்த விலை கொடுத்தாகினும், எந்த பாவத்தினை செய்தாகினும் இந்த வசதி வாய்ப்பினை அனுபவிக்க அவன் சிறிதும் யோசிப்பதில்லை. ஆண் ,பெண் இரண்டுபேருமே இதில் சலைத்தவர்கள் இல்லை. //

நுகர்தலே வாழ்வின் லட்சியமாக வாழும் இவர்கள் திருந்த மாட்டார்கள்.

:-(((

***

நீங்கள் சம்பவத்தை பார்த்த அந்த வீட்டு மனிதர்கள் வீட்டில் கடவுள் படம் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. நான் சந்தித்த 99.999 % கடவுள் நம்பிகையாளர்களுக்கு சமுதாயத்தைப் பற்றி கிஞிச்த்தும் அக்கறை இல்லை. அவர்களே அனைத்துச் சட்டங்களையும் தங்களின் வசதிகளுக்காக மீறுபவர்களாக உள்ளனர்.

:-((((

***
நீங்கள் சொன்ன நம்பர் toll free யா?
யாரால் அது பதிலளிக்கப்படும்?

சென்ஷி said...

படிக்கும்போதே நெஞ்சு பதறுகிறது...
:(

இந்த கொடுமைக்கெல்லாம் விடிவுகாலம் குழந்தைகளை குறைந்த பட்சம் 10வது வரை படிக்க வைக்காத பெற்றோர்களை கண்டிப்பதன் மூலம் மட்டுமே குறையும் என்பது என் எண்ணம். இலவச கல்வி கொடுத்தும் அதை சரிவர புரிந்து கொள்ள செய்யவிடாமல் தடுக்கும் நம் அரசியலமைப்பின் மேலும் கோபம் வருகிறது. இன்றைய சூழலில் படிப்பை விட சிறந்த தற்காப்பு ஆயுதம் குழந்தைகளுக்கு வேறு ஏதும் இருக்க முடியுமா தெரியவில்லை.

சென்ஷி

பொன்ஸ்~~Poorna said...

:(((( நந்தியா சொல்வது போல், நீங்கள் விவரித்திருக்கும் சின்ன பகுதியைக் கூட முழுவதும் படிக்க முடியவில்லை.. நீங்கள் சொல்வது போன்ற 'மனிதர்களை' நானும் சந்தித்திருக்கிறேன்.. இது போன்ற விசயங்களைப் பற்றிப் பேசக் கூடத் தயாராக இல்லாத மனிதர்கள், பேசினாலும், "என்ன செய்ய, அது அவன்/அவள் தலைவிதி. போன ஜென்மத்து வினைப்பயன்" என்று (வெட்டி) வேதாந்தம் பேசும் மனிதர்கள், இது போன்ற பிரச்சனைகளைக் கண்ணெதிரே பார்க்கும் போது கூட "நமக்கெதுக்கு வம்பு" என்று நகர்ந்து போகும் மனிதர்கள்...

என்ன செய்ய..

குழந்தைகள் உதவி எண்ணைக் கண்டிப்பாக ஒட்டிக் கொள்ளலாம்.. நல்ல யோசனை.. முடிந்தால் ஸ்டிக்கர் கிடைக்கும் இடத்தைப் பற்றிச் சொன்னீர்கள் என்றால், நண்பர்களுக்கும் வாங்கித் தர உதவியாக இருக்கும்.. எங்கே கிடைக்கும் என்று ஐடியா இருக்கா?

நந்தா said...

படிக்கும் போதே என்னவோ செய்கிறது....

இதுல ஒரு கொடுமை என்னன்னா அவர்கள் வீட்டிலும் இதே போன்று ஒரு குழந்தை இருக்கும்... அந்த குழந்தை பள்ளிக்கு செல்லும் அதே வேளையில், இந்த குழந்தை வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருக்கும்...

திருந்தித் தொலைங்கடா என்று கத்த வேண்டும் போலிருக்கிறது...

பங்காளி... said...

பதினைந்து வயதுக்கு கீழ் உள்ளவர்களை வேலைக்கு வைப்பது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமல்லவா...

நீங்கள் குறிப்பிடும் ஸ்டிக்கரில் இந்த வாசகத்தினையும் சேர்த்தால் விழிப்புணர்வு அதிகரிக்கும்.

கலை said...

உங்கள் பதிவு வாசித்தபோது, மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. குழந்தைகளை இப்படி கொடுமைப்பபடுத்த எப்படி முடிகின்றது என்பது புரியாத புதிர்.

:((((

மங்கை said...

கோவி.கண்ணன், நந்தியா, துளசி

இன்னும் அந்த காட்சி மனதை விட்டு அகலவில்லை...

துளசி...இந்த மாதிரி நேரங்களில் முதல்ல கடவுள் நியாபகம் தான வருது..

மங்கை said...

அரவிந்தன், செல்லா

நம்மால் முயன்றதை செய்வோம்...

கல்வெட்டு...
அதி டால் ஃப்ரீ நம்பர் தான்.. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நோடல் ஏஜென்சி நியமிக்கப் பட்டிருக்கும்.. அவர்கள் உதவுவார்கள்..

மங்கை said...

சென்ஷி, பொன்ஸ்

சென்னையில் எங்கு கிடைக்கும் என்று கேட்டு சொல்கிறேன்...

நந்தா, பங்காளி, கலை

எந்த சட்டத்தை மதித்து இருக்கிறார்கள்.
திமிர் பிடித்த சுயநலப் பேய்கள்...
இவர்களுக்கெல்லாம் விசாரனை என்ற ஒன்று இருக்கவே கூடாது, பொது மக்கள் மத்தியில் தண்டனை நிறை வேற்றப்படவேண்டும்..ஆத்திரம் அடங்கவில்லை..ஹ்ம்ம்ம்

மங்கை said...

ஓசை செல்லா..நீங்க சொன்னது ரொம்ப சரி..
வட மாநிலங்கள பார்க்கிறப்போ, தென் மாநிலங்கள் பரவாயில்லைதான்
நமக்கு நாகரீகமும் பண்பும் நடத்தையிலும், எண்ணத்திலேயும் பிரதிபலிக்குது..
ஆனா இங்க நாகரீகம், உடையிலும், வாழ்க்கை முறையிலும் தான் இருக்கு...
இந்த அளவுக்கு மோசமான மக்கள் இருப்பாங்கன்னு எனக்கு தெரியலை

G.Ragavan said...

குழந்தைகளைக் குழந்தைகளாகப் பார்க்காத கண் என்ன கண்? குழந்தைகளைக் குழந்தைகளாக நினைக்காத நெஞ்சென்ன நெஞ்சு?
குழந்தைகளைக் குழந்தைகளாகத் தொடாத கை என்ன கை?
சீச்சீ! என்ன வயிற்றெரிச்சல்! இந்தக் கொடுமை மறைந்தே ஆகவேண்டும்.

மங்கை said...

ராகவன்...

அதான்...அதெப்படி இப்படி ஒரு கொடுமையை செய்ய மனசு வருதுன்னு புரிய மாட்டேங்குது. அடுக்கறப்போ மனசு பதறாது???...அந்த குழந்தை முகம் வலியால் துடிக்கிறத பார்த்துட்டே மீண்டும் எப்படி அவங்களுக்கு அடிக்க தோனுது..

தருமி said...

வருத்தத்துடன் ...

யாழினி அத்தன் said...

மங்கை அவங்களே,

நீங்க வலையேற்றம் பண்ணுகிற வேகத்திற்கு என்னால படிக்க முடியல. ஒரு காரணம் நான் அடிக்கடி தொலைதூர பயணத்தில் இருப்பதால்.

கடந்த சில பதிவுகள் ஒவ்வொன்றும் உங்கள் சேவை உள்ளத்தை பறை சாற்றும் பதிவுகள்.

பெரும்பாலான இந்த மாதிரி வேலை செய்யும் குழந்தைகள் பெற்றோரால் கைவிடப்பட்டவை அல்லது பராமரிக்கப் படாதவை. இவர்களை கேட்பாரற்று இருப்பதால்தான் முதலாளிகள் advantage எடுத்துக் கொள்கிறார்கள். அதனால், முதல் குற்றம் பெற்றோருடையது. பராமரிக்க வசதியில்லையென்றால் எதற்கு குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்?

பள்ளிக்கூடத்தில் ஆசிரியரிடம் அடி வாங்குவது என்பது ஒரு விதமான "approved torture" என்று சொல்லலாம்.

இதற்கு ஒரு படி மேலே சென்றால் பெற்றோர்களே குழந்தைகளை நையப் புடைப்பதை என்னவென்று சொல்வீர்கள்.

குழந்தைகள் எல்லாருக்குமே ஒரு target ஆக இருப்பது அவர்களின் இயலாமையோ?

குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் உலகமெங்கிலும் தினசரி நடக்கும் நிகழ்வு. அமெரிக்கா போன்ற நாடுகள் ஏராளமான சட்டங்களை கொண்டு குழந்தகளை பாதுகாக்கும் வேளையில், இந்த விழிப்புணர்வு இப்போதுதான் இந்தியாவில் வரத் துவங்கியுள்ளது. குழந்தைகளை நம்பி பீடி சுற்றும் தொழிலிருந்து ஏனைய தொழில்களெல்லாம் ஓடிக் கொண்டிருப்பதால், அரசுக்கு இது ஒரு பெரிய challenge ஆக இருக்கும்.

BTW, நேற்று சன் டிவி-யில் குழந்தைகளை வாகனங்களில் முன் அமர, நிற்க வைத்து ஓட்ட தடை வருகிறது என்ற செய்தி கேட்டேன். பட்டுன்னு பட்டது, அப்ப டூ-வீலர் வச்சிருவங்க 2 குழந்தைக வச்சிருந்தா, கார் வாங்க வேண்டி வருமோ?

இராம்/Raam said...

மங்கை,

படிக்கிறோப்பவே தாங்கமுடியலைங்க.... :((

VSK said...

இது எல்லா இடங்களிலும் நடக்கிறது.

ஆன் பெண் இருபாலரும் இதனைச் செய்கிறார்கள்.

சிறார் துன்புறுத்தல்[Child Abuse] ஒரு கடுமையான குற்றமாக இன்னும் கருதப்படவில்லை இந்தியாவில்.

ஆந்திராவிலும், சிவகாசியிலும் நடக்கும் கொடுமைகளைப் பார்த்து விட்டு வாருங்கள்!

இதற்கென ஒரு இயக்கம் தொடங்கி, அனைவரையும் மீட்டு, ஒரு காப்பகம் மூலம் இவர்களைப் பேண வேண்டும்.

பத்மா அர்விந்த் said...

வருத்தம் தந்த இன்னொரு நிகழ்வு. இன்னும் இதுபோல செய்திகளை கேட்க மரத்தே போய்விடும் மனம்.
இதே போன்ற நிகழ்வு முன் நடந்தபோது நான் எழுதியது இங்கே:http://reallogic.org/thenthuli/?p=184
வேற்றுமை எதுவும் இல்லை. காவலர்களும் விழித்து கொள்ளவும் இல்லை.

வல்லிசிம்ஹன் said...

மங்கை,
வட இந்தியாக்குக் கூடப் போக வேண்டாம்,
நம்ம ஊரில சென்னைலே எத்தனையோ குழந்தைகளைக் கிராமத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்து ,பிழிந்து விடுவார்கள்.
அதில அவர்களுக்குத் துளிகூடச் சிந்தனை செலவழிப்பது கிடையாது. அது பருவம் அடைந்தவுடன் கொண்டு விட்டு விடுவார்கள்.
அது ரெண்டுங்கெட்டனா,
கிராமத்தில இருக்கப் பிடிக்காமல் திரும்பி வந்து வேற மாதிரி அவஸ்தைப்படும்.
யாருக்கு என்ன கவலை?
முடிந்தவரை நம்மால் ,நம் கண்ணுக்குத் தென்படும் குழந்தைகளைக் காப்பாற்றலாம்.

மங்கை said...

தருமி, ரமேஷ், எஸ்கே, இராம்,பத்மா வல்லிம்மா...

இது எல்லா இடங்களிலும் நடக்கிறது தான்..ஆனால் வட இந்தியாவில் அதிகம் என்று நினைக்கிறேம்.. அதிகமோ, கம்மியோ, ஒரு குழந்தை துன்பத்ஹ்டில் இருந்தாலும் அது பாவம் தானே?..

இவர்களுக்கான..காப்பகங்கள், மறுவாழ்வு மையங்கள் இல்லாமல் இல்லை... பெற்றோர்களே விரும்பி இவர்களை இது விட்டு விட்டு செல்வதால். இந்த செல்வங்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை...ஹ்ம்ம்

இயக்கம் எல்லாம் இருக்கு எஸ்கே ஐயா.. நானே ஒரு பேப்பர் பிரசன்ட் பண்ணேன் அந்த இயக்கம் துவக்க விழாவில.. "Making Noida a Child Labour free Dsitrict"... எங்க கிட்ட அலோசனை எல்லாம் கேக்கறாங்க ஆனா அதுக்கு அப்புறம் என்ன பண்ணறாங்க்ன்னு தெரியலை...

காட்டாறு said...

என்னங்க மங்கை இது. கொடுமையா இருக்குதே. மனசு பதறுது. என்ன பண்ணலாம் இது போல குரூர மனம் படைத்தவர்களை? கொஞ்ச நேரம் ஒன்றும் எழுதத் தோணாமல் உட்கார்ந்து விட்டேன். கேட்ட எனக்கே இவ்வளவு பதறுதுன்னா.... பார்த்த உங்களுக்கு... வலி தாங்கிய அந்த பிஞ்சுக்கு....

Radha Sriram said...

ரொம்ப கொடுமைங்க இது!! குழந்தைகள குழந்தைகளா பாக்காதவங்கள என்ன பண்ணினா தேவல??
//இந்தியாவில் உள்ள அன்பர்கள் தங்கள் வாகனங்களில், '1098' என்ற 'Child help line' எண்ணை ஒரு ஸ்டிக்கராக ஒட்டிக் கொள்ளுங்கள்.//

நல்ல சஜஷன்.....!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்ன சொல்லறதுன்னே தெரியல...

பொதுவா எங்கயாச்சும் குழந்தைங்க அழறத கேட்டாலே வயிறெல்லாம் என்னவோ செய்யும்...அப்படி ஒரு ஒருத்தருக்குள்ளும் இருக்கற கருணை எங்க போயிடுச்சோ தெரியல.

குட்டின்னு ஒரு படம் வந்துச்சே அது நினைவுக்கு வந்துடுச்சு.படம் பார்த்துட்டு அவ என்ன ஆனாளோன்னு கொஞ்ச நாளுக்கு கவலையா இருந்தேன்..ஏன்னா உண்மையில் இந்த மாதிரி குழந்தைங்க எத்தனை இருக்காங்க..

நம்பர் பத்தி முன்னமே சொன்னீங்க இருந்தாலும் இந்த முறை நிறைய பேரைப் போய் சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன்.

மங்கை said...

காட்டாறு, ராதா, லட்சுமி...

கொடுமைதான்...அரசு அதிகரிகளுக்கு இது எல்லாம் தெரியாமல் இல்லை... UN ல இருந்து நம்ம ஊர் பஞ்சாயத்து போர்ட் வரைக்கும் எல்லாரும் தான் திட்டங்கள் வகுக்குறாங்க..ஆனா அந்த திட்டம் எல்லாம் என்ன ஆகுதுன்னு தெரியலை...ஐந்து நடசத்திர ஹோட்டல்ல கூட்டத்த நடத்தி, பேசி அடுத்த நாள், வேற எங்க கூட்டம் போடலாம்னு யோசிக்கிறது தான் இவங்க வேலை..ஹ்ம்ம்ம்

நாளுக்கு நாள் இது மாதிரி குற்றங்கள் அதிகமாயிட்டு தான் இருக்கு.. அதுவும் புதுசு புதுசா குற்றங்கள் நடக்குது...

அன்புத்தோழி said...

இந்த காலத்திலே பாதி பேருக்கு மேல் மனசாட்சி இல்லாமல் தான் இருக்கிறார்கள். நமக்கேன் வீண் ஒம்பு என்ற நினைப்பு தான் இருக்கிறது. எல்லா குழந்தைகளும் நம்முடைய குழந்ததைகள் என்று நினைத்தாலே மனித்ததன்மையும், பாசமும் தானாக வரும். கடவுளே படைத்தவர்களை நல்லபடியாக காப்பாத்துவது உன் கடமை. அந்த மனசாட்சி இல்லாத பெற்றோர்களுக்கு நல்ல புத்தியை கொடு. மேலும் அவர்கள் இன்னும் குழந்தை பெற்றுக்கொண்டே போனால்......

லிவிங் ஸ்மைல் said...

மங்கை,

என்ன சொல்ல, எதை சொல்ல என்பதே திணறலாய் இருக்கிறது,



தங்களைப் போன்றவர்களாவது இத்தகைய மனித உருவின் சனியன்களுக்கு கடும் தண்டனை வாங்கித்தர முயற்சி எடுக்கவேண்டும்.


இத்தகைய வெட்ககரமான செயல்களை பற்றி விழிப்புணர்வு தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக வறுமைவில் வாடும் ஏழைகளுக்கு இத்தகைய கொடுமைகள் தெரியப்பட வேண்டும்.


1098 என்ற எண்ணை பரிசோதித்தேன். என் கண்முன் இத்தகைய கொடுமைகள் நடந்தால் நிச்சயம் தகவல் தெரிவிப்பேன்.

Santhosh said...

// "கடவுளே உன் படைப்பை நிறுத்தி விடு"//
இதை எல்லாம் படிக்கும் பொழுது இது நடந்தாலும் நல்லதே என்று தோன்றுகிறது மங்கை. படிக்காத மக்கள் தான் இப்படி செய்கிறார்கள் என்று நினைத்தால் படித்த மிருகங்களும் இது மாதிரி செய்கின்றன. 1098 ஒரு புது தகவல் முடிந்த அளவுக்கு மக்களுக்கு சொல்ல முயற்சி செய்ய வேண்டும். நம்மிடம் வேலை செய்பவர்களும் மனிதர்களே என்று ஒரு கணம் நினைத்தால் கூட போது இது போல் செய்ய மனம் வராது.

மங்கை said...

//1098 ஒரு புது தகவல் முடிந்த அளவுக்கு மக்களுக்கு சொல்ல முயற்சி செய்ய வேண்டும்//

ஆமா சந்தோஷ்...அது தான் நான் எதிர் பார்க்கிறேன்..நன்றி

கண்மணி/kanmani said...

மங்கை நீங்க பார்த்தது கொஞ்சம்.இதுபோல் நிறைய குழந்தைகள் உண்டு.பாலியல் பலாத்காரத்திற்கும் உட்படுத்தப் படுகிறார்கள்.
நம்மால் முடிந்ததைச் செய்வோம்
நோ டென்ஷன் ம்மா
1098 மிக அவசியமான தகவல்.

Raji said...

mangai ippo thaan unga blog padikkiren. sorry for the comment which might be too late.y know what? u r absolutely normal. dont stop feeling compassionate for people around you. naanum ippadithaan. and thats how all human beings should be. people around us, especially in India, in cities....are becoming emotion less. and when something happens to them, they feel the world should help. Hows it posible?. I feel Delhi is the worst example for this in our nation. My love and prayers for you. continue your service. People just go to temple in india and beg/demand god everything they greed, but real spiritual people knows that these kind of inhuman acts by your neighbours can affect your life and socities in a subtle way.So alteast our few tears, prayers and help might do little damage control. love, your friend Raji

மங்கை said...

//I feel Delhi is the worst example for this in our nation//

ஆமா ராஜி..வட இந்திய மாநிலங்களில் இது போன்ற செயல்கள் அதிகம் தான்..
உங்கள் வருகைக்கு நன்றி