Tuesday, November 21, 2006

சில நேரங்கள்...சில மனிதர்கள்

இன்னைக்கு எச்ஐவி நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு கிடைக்கிற மாதிரி நிதியுதவி வேற எந்த சமுதாய பணிகளுக்கும் கிடைப்பதில்லை. ஆனா இது நியாயமா பாதிக்கப்பட்டவங்களுக்குப் போய்ச் சேருதாங்கறது சர்ச்சைக்குரிய விஷயம்.

கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி, National Professional Social Workers Association ம் அமெரிக்க தூதரகமும் இணைந்து அகில அளவில HIV/AIDS குறித்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. MSW படிச்சவங்க எல்லாரும் சேர்ந்து தொடங்கின இந்த அசோசியன்ல நானும் ஒரு நாம்கே வாஸ்தா மெம்பர். ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழகத்தில இருக்கும் ஒரு பேராசிரியர், நான் மற்றும் இப்ப நான் ஈடுபட்டிறுக்கிற ஒரு திட்டத்தில (Project Prathibha- Engaging Women of Faith) இருக்கும் partners எல்லாரும் சேர்ந்து இந்த கருத்தரங்க்கில ஒரு பேப்பர் பிரசன்ட் பண்ணோம்.

மத நல்லிணகத்த (Inter Faith Concept) அடிப்படையா வச்சு செயல்படுத்துற இந்த திட்டத்தின் நோக்கம் ,ஆன்மீகத் தொண்டில் தம்மை அர்பணித்த பெண்கள், அவர்கள் எந்த மதமாய் இருந்தாலும் சரி அவங்க மூலமா எச்ஐவி பற்றிய விழிப்புணர்வ ஏற்படுத்திறதுதான். சமுதாயத்தில இருக்கிற அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் இருந்தால்தான் எச்ஐவி தடுப்பு நடவடிக்கைகள் அதிகபட்ச வெற்றியை அடைய முடியும். இத கருத்தில் கொண்டு தான் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.


அமிர்தானந்தமாயி, பிரம்மகுமாரிகள், பஹாய், முஸ்லிம், கிறிஸ்தவர்கள், ஆர்ய சமாஜ், இந்து, சமண மதப்பெண்கள், Gandhi Peace Foundation ல இருக்கிற பெண்கள் என, எல்லாரும் ஆதரவா இருக்காங்க. UNICEF உதவியுடன் சுமார் 500 பெண்களுக்கு அவங்க நடத்திற பிரார்த்தனை கூட்டத்தில HIV பற்றிய விழிப்புணர்வ ஏற்படுத்த பயிற்சி கொடுக்க திட்டம்.இந்த திட்டம் ஆசியாவிலேயே இது வரைக்கும் யாரும் செயல் படுத்தாத திட்டம்.

கிறிஸ்தவ மதத்திலுருந்து சர்ச் ஆப் நார்த் இந்தியாவை சேர்ந்த ஒரு பெண், அவங்களா விருப்பபட்டு வர்ரேன்னு சொல்ல அவங்க பேச்சுத்திறனை பற்றி அறிந்து அவங்களையும் சேர்த்தோம்.அவங்க பேர் பதிவு செஞ்ச அடுத்த நாளே கருத்தரங்க ஒருங்கினைப்பாளர் என்ன கூப்பிட்டு, 'சர்ச் ஆப் நார்த் இந்தியா' பெண்ணுக்கு அவ்வளவு அனுபவம் இல்லை வேறயாராவது சேர்த்துக்குங்கன்னு சொல்ல, நான் அடுத்த நாள் சொல்றேன்னு சொல்லிட்டேன். அப்புறம் தான் தெரிஞ்சது ஒருங்கினைபாளரும் அவரோட இருக்கும் மற்றவர்களும் கத்தோலிக்கர்கள்,சர்ச் ஆப் நார்த் இந்தியாவோ பிரோட்டஸ்டான்ட் பிரிவ சேர்ந்ததுன்னு.

பேசப்போற விஷயமே மத நல்லிணகத்த அடிப்படையா வெச்சு செயல்படுத்தும் ஒரு திட்டத்தை பற்றி. அதனாலேயே எங்களுக்கு இந்த அழைப்பும் விடப்பட்டது. ஆனா அழைப்பு விடுத்த அவங்களே இப்படி ஒரு பிரச்சனைய ஏற்படுத்துனது அதிர்ச்சியா இருந்தது.ஆனா கடைசியில அந்த பெண் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதால அவருக்கு பதிலா Catholic Bishop Conference ல களப்பணியாளரா இருக்கும் திரு.ஜேம்ஸ் என்பவரை சேர்த்தோம். மறுபடியும் ஒருங்கினப்பாளரின் தலையீடு. புதுசா குழுவில சேர்ந்தவர் களப்பணியாளர் தான் அவருக்கு எல்லாம் கருத்தரங்கில பேச அனுமதி கொடுக்க முடியாதுன்னு சொல்ல,நான் முடிவா அவர் தான் பேசுவார்னு சொல்லீட்டேன். பேசறதுல ஏதாவது தப்பு இருந்தா கேள்வி பதில் பகுதியில பார்த்துக்கலாம்னு அடிச்சு விட்டேன்.

HIV/AIDS தடுப்பு பணியில களப்பணியாளர்களின் அனுபவப் பகிர்தல் தான் ரொம்ப முக்கியம். இந்த கோணத்தில பார்க்காம முதுநிலை பட்டம், டாக்டர் பட்டம் வாங்கினவுங்க தான் பேசனும்னு சொல்றத எங்களால ஏத்துக்க முடியலை.மற்ற தலைப்புகளுக்கு அவர் சொல்றது சரியாக இருக்கலாம். ஆனா எச்ஐவி எய்ட்ஸ் பற்றி பேச களப்பணியாளர் கண்டிப்பா வேனும்னு சொல்லி புரிய வச்சோம்.மேலும் பேசப் போற விஷயத்திலேயும் அவர் அவரோட (கத்தோலிக்கர்களின்) கருத்துக்களை சேர்த்துக்க சொல்லி வற்புறுத்தினார். ஆணுறை பற்றி பேசக் கூடாது, ஓரிணச்சேர்க்கையை பற்றி பேசக்கூடாதுன்னு பல கட்டுப்பாடுகள் போட்டார். நாங்க எதையும் ஏத்துகலை. இது எல்லாம் இல்லாம எய்ட்ஸ் பற்றி பேச முடியாதுன்னு சொல்லி கருத்தரங்கத்தில சந்திக்கலாம்னு ஒரே போடா போட்டேன்.

பதட்டத்தோட கருத்தரங்கில பேசி முடிச்சோம்.ஆனா எதிர் பார்த்ததை விட சிறப்பாவே வந்துச்சு. நிறைய கேள்விகள். களப்பணியாளர் தான் பார்வையாளர்களின் பல சந்தேகங்கள தீர்த்து வச்சார்.3 நாள் நடந்த இந்த கருத்தரங்கில எங்க presentation தான் சிறப்பா இருந்துச்சுன்னு அறிவிச்சப்போ..ஹம்ம்ம்.. ஒரு மாசமா இருந்த பதட்டம் எல்லாம் போயே போச்.....பின்ன இருக்காதா, வாழ்க்கையில முதல் முறையா முதல் பரிசு வாங்கியிருக்கேனே.. :-))) ... களப்பணியாளருக்கு சிறப்பு பரிசும் கொடுத்தாங்க. . ஒரு பெரிய பெரு மூச்சு விட்டுட்டு, தாமஸ போய் பார்த்து நாலு வார்த்தை கேக்கனும்னு தேடினேன். ஆள் தட்டுப்படவே இல்லை.


மற்ற சமுதாய பணிகளை விட எய்ட்ஸ் தடுப்பு பணிகள், அனுபவ பகிர்தல மையமா வச்சு,பாதிக்கபட்டவங்களின் ஈடுபாட்டோட செயல்படுத்தினாதான் அந்த முயற்சி முழுமை அடையும். எச்ஐவியால பாதிக்கபட்டவங்களை கருத்தரங்கில சேர்த்துக்கறதுக்கும் அவர் அனுமதி தரலை.உண்மையா அர்ப்பணிப்புடன் திட்டங்ளை செயல் படுத்தீட்டு வர எத்தனையோ நிறுவனங்கள் நிதி உதவி கிடைக்காம, தத்தளிச்சுட்டு இருக்கு. எயிட்ஸ் நோய் பாதிப்பு காரணமா பெற்றோரை இழந்த சிறார்கள், கணவனை இழந்த பெண்கள் என, மருத்துவ செலவு செய்ய முடியாம அவதிபடறவுங்க ஏராளம்.


ஆனா வருடா வருடம் இத்தன அமர்களத்தோட கருத்தரங்கம் நடத்துரவுங்க குறைந்தபட்சம் பாதிக்கபட்டவங்களையும் கலந்துக்க வச்சு அவர்களின் எதிர்பார்பையும், இன்னல்களையும் பகிர்ந்துக்கவாவது அனுமதிக்கலாம். இந்த கருத்திரங்க்கின் நோக்கம் அல்லது கருத்திரங்கின் மூலமா அவங்க எதிர்பார்க்கும் output end result என்னன்னு யாருக்கும் தெரியலை.


MSW பாடதிட்டத்தில HIV சம்பந்தமான பகுதிகளை சேர்ப்பதை பற்றி விவாதிப்பது தான் எங்கள் நோக்கம் அடிச்சு விட்டார் தாமஸ். அதுக்கு இவ்ளோவ் செலவுபண்ணி அகில இந்திய அளவில கருத்தரங்கு நடத்தனுமா?, தேவையில்லையேஅனுபவம் மிக்க பேராசிரியர்கள் பத்து பேர கூப்பிட்டு ஒரு அறையில, கலந்துரையாடல்ல முடிச்சிருக்கலாமே. எச்ஐவி கருத்தரங்கம்னு பேரு வச்சாதான் நிதி வரும். அது தான் உண்மை.அதுக்காக நிதிய வாங்கி நாட்டில மூலை முடுக்கில இருக்கவங்கள எல்லாம் கூப்டு 5 ஸ்டார் ஓட்டல்ல தங்கும் வசதி கொடுத்து தில்லிய சுத்திக் காமிச்சுட்டு இருக்காங்க.


இதைவிட கேவலம் வேறெதுவும் இருக்கமுடியாது.

27 comments:

மங்கை said...

test

Anonymous said...

வணக்கம்!
தாய் நாட்டின்
தலைநகரவாசியே
தலைவணங்குகிறேன்!
தங்களுக்கு மட்டுமல்ல
தங்களுடைய
தரமான தகவல்களுக்கும்தான்!
தமிழில் எழுத ஆசை
தத்துவம் தெரியாது
தரமான தமிழும் தெரியாது
தாகம் மட்டும்
தமிழ் தாகம் மட்டும்
தமிழ் வலைப்பின்னல் என்றால்
தானாக கொட்டுகிறது
தமிழ்!
வாழ்க தமிழ்!
வளர்க தமிழர் புகழ்!
சிங்கார
சிங்கப்பூர் வாசியாக
அங்கீகாரம்
கிடைத்தபோதும்
தாய் நாட்டுக்காரர்களின்
திறமையை பாராட்டாமல்
இருக்கமுடியாது!
உமது பணி தொடர
இறைவன் அருளட்டும்
அடியேன் ஆசிர்வதிக்க
வயதில்லை,
வாழ்த்த வாயிருப்பதால்
"வாழ்க வளமுடன்"

கானா பிரபா said...

முதற்பரிசு பெற்றமைக்கும் நல்லதொரு பதிவை வழங்கியதற்கும் பாராட்டுக்களும் நன்றிகளும் உங்களுக்கு

Hariharan # 03985177737685368452 said...

வாழ்த்துக்கள் மங்கை!

மங்கை said...

ஆஹா...பிரேம் அவர்களே..என்ன சொல்றதுன்னு தெரியலை... நம்ம தமிழ் புலமை ரொம்ம்ம்ம்ம்பபபப கம்மி

நான் எழுதறது மன நிம்மதிக்காக... அது ஒன்னு தான்..வேற காரணம் இல்லை பிரேம்...

உங்க கவிதைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி....

நன்றி பிரபா, ஹரிஹரன்

பங்காளி... said...

ம்ம்ம்ம்...வர வர பெரிய எளுத்தாளராய்டே வர்றீங்க..அசத்துங்க அசத்துங்க....

அப்பால தமிழ்மணத்துல சீக்கிரமா நட்சத்திரம் ஆய்டுவீங்கோன்னு நெனைக்கிறேன்.....

சரி இப்ப நம்ம மேட்டருக்கு வர்றேன்...ஹி..ஹி...இந்த தொண்டு நிறுவனம் வச்சா ஒரு கோடி ரூவா சம்பாதிக்க எம்புட்டு நாளாவும்....க்குவிக்கா பணம் சம்பாதிக்க என்னால்லாம் பண்ணனும்....ட்ரேட் சீக்ரெட் இருந்தா சொல்லிக் கொடுங்க தாயீ புண்ணியமாப் போகும்...ஹி..ஹி...

பங்காளி... said...

தெரியாமத்தான் கேக்றேன்...நம்ம ப்ரேம் எதுக்கு இம்புட்டு ஃபீலிங்ஸ் ஆவுறாரு!

மங்கை said...

முதல்ல லேட்டா வந்ததுக்கு 10 பின்னூட்டம் fine... அப்புறம் தான் மத்ததெல்லாம் :-((((

Sivabalan said...

மங்கை,

பதிவின் மூலம் நீங்கள் சொல்லவரும் கருத்து சரியே.

//எச்ஐவி கருத்தரங்கம்னு பேரு வச்சாதான் நிதி வரும். அது தான் உண்மை.அதுக்காக நிதிய வாங்கி நாட்டில மூலை முடுக்கில இருக்கவங்கள எல்லாம் கூப்டு 5 ஸ்டார் ஓட்டல்ல தங்கும் வசதி கொடுத்து தில்லிய சுத்திக் காமிச்சுட்டு இருக்காங்க. //

ம்ம்ம்ம்ம்... எல்லாமே விளம்பரத்திற்காக எனும் போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.

மங்கை said...

பங்காளி... said...
//தெரியாமத்தான் கேக்றேன்...நம்ம ப்ரேம் எதுக்கு இம்புட்டு ஃபீலிங்ஸ் ஆவுறாரு//

நம்ம தமிழ பார்த்து tension ஆயிட்டார் போல...

ramachandranusha(உஷா) said...

மங்கை இதுதான் என் பதிவில் நீங்க குறிப்பிட்ட மேட்டரா? மத்தப்படி விஷயங்களை நறுக்குன்னு சொல்லிட்டீங்க. பரிசு
பெற்றதற்க்கு வாழ்த்துக்கள்.

மங்கை said...

நன்றி சிவா...

மங்கை said...

ஆமா Usha.. இன்னும் நிறைய நடந்தது
அது எல்லாம் போட்டா பிரச்சனை.. வேண்டாம்னு விட்டுட்டேன்..:-)

நன்றி..

Thekkikattan|தெகா said...
This comment has been removed by a blog administrator.
Thekkikattan|தெகா said...

//பேசப்போற விஷயமே மத நல்லிணகத்த அடிப்படையா வெச்சு செயல்படுத்தும் ஒரு திட்டத்தை பற்றி. அதனாலேயே எங்களுக்கு இந்த அழைப்பும் விடப்பட்டது. ஆனா அழைப்பு விடுத்த அவங்களே இப்படி ஒரு பிரச்சனைய ஏற்படுத்துனது அதிர்ச்சியா இருந்தது..//

மங்கை, இங்கு மக்கள் பின்னூக்கிகளில் கொந்தளித்துப் போவது எதற்கு என்று எனக்கு புலப்படுகிறது.

எங்கும் இந்த மத நல்லிணக்கம், பொதுச் சேவை என்று ஆரம்பிக்கும் இடங்களில் கூட இது போன்ற அரசியல் சர்வ சாதாரணமே, அந்த சூழலில் தப்பிப் பிழைப்பதற்கு நெளிவு சுளிவு தெரிய வில்லையெறால் ரொம்ப கஷ்டம் அந்த ஏரியாவில் பணியாற்றுவது.

இதற்கிடையில் நீங்களாகவே கொண்டு வந்த ஒரு கான்செப்ட்_யை அதே பாதையில் செல்வதை பொறுக்காமல் சிலர் தடம் மாற்ற முறச் செய்ய எத்தனித்த பொழுது எழுந்து நின்றது, பாராட்டுதலுக்குரியது.

நமக்கு இன்னும் நிறைய மங்கைகள் வேண்டுமிங்கே :-)

மங்கை said...

ரொம்ப நன்றி தெகா...

ஆனா என் குரல் எத்தன தூரத்திற்கு போகும்னு தெரியலை...

நல்ல திட்டம் இது. தெகா.. பெண் மதத்லைவர்களை ஈடுபடுத்தறதும் ரொம்ப எளிதா தான் இருந்துச்சு.. ஆனா இந்த மாதிரி நடுவில இருக்கிறவுங்க தான் குட்டைய கிளப்புறாங்க

நன்றி

பங்காளி... said...

என்னைத் தவிர வேற யாரும் ஓட்டு போடலை போலருக்கே....பெரிய பெரிய விசயமெல்லாம் எழுதறாங்க..தாராளமா ஒரு ஓட்டு போடலாம்ல

ஓட்டு போடுங்க மக்களே!

(மங்கை...எப்படி நம்ம கேன்வாசிங்...அப்பால அந்த ட்ரேட் சீக்ரெட் ஏதாவது தெரிஞ்சா சொல்லிக் குடுங்க தாயீ!....ஹி...ஹி)

Anonymous said...

என்ன பங்காளி இப்படி கேட்டுபுட்டீங்க!
தாய் நாட்டைவிட்டு விலகியிருந்து பாருங்க அப்ப தெரியும் இந்த கஷ்டம்! எங்க நாட்டில் நான் தமிழ் பேசும் நேரமே குறைவுதான் தெரியுமா, எங்கள் அலுவலகத்தில் நான் ஒருவந்தான் தமிழன்....பிறகு எங்கே பேசுவது தமிழ்! அதுதான் உங்களைப்போன்ற தமிழ் வலைப்பதிவர்களை கண்டால், சந்தோஷம் துள்ளிக்கொண்டு வந்து விடுகிறது.

அதுமட்டுமல்ல, மங்கையின் வலைப்பதிவுக்கு இப்பதான் முதல் முறையா வந்தேன், அதுதான் சற்று ரஜினி ஸ்டைலில் வந்தேன்... அட என்ன அதுன்னு கேட்கிறீங்களா... அட அவரு முதன் முதல் திரைபட்டத்தில் வரும்போது, புயலை கிளப்பிகிட்டு, அனல் பறக்க வருவார்ல, அதுமாதிரி வந்தேப்பா, போக போக சூடு தனிந்துவிடும் கவலைபடாதீங்க சரியா! ஹ...ஹ...ஹாஅ...

மங்கை said...

பங்காளி சார்...

கேன்வாசிங்க் நீங்க பண்ணாம யாரு பண்ணுவா...

நீங்க தான நம்ம ஆ.பி.நா..:-))
அதுனால நீங்க தான பண்ணனும்

உங்களுக்கு இல்லாத ட்ரேட் சீக்ரட்டா..
தாராலாமா சொல்றேன்...

...

இருந்தாலும்...class க்கு லேட்டா வந்ததுக்கு punishment எல்லாம் குறைக்க மாட்டேன்... 10 ல ஒன்னு தான முடிஞ்சு இருக்கு...

மங்கை said...

பிரேம் அவர்களே

ஆவர் மதுரைய விட்டு வந்துக்கே புலம்பற ஆள்...

நன்றி

dondu(#11168674346665545885) said...

"நாங்கள் சேவை ஸ்தாபனம் ஆகவே எங்கள் மொழிபெயர்ப்பு வேலைகளை குறைந்த செலவிலாவது அல்லது இனாமாகவோ செய்து தர வேண்டும், அதே சமயம் மிக அதிக முன்னுரிமையிலே வேகமாகச் செய்துதரணும், ஏன்னாக்க பத்து நாளில் நான் வெளிநாட்டு டூர் நிதித் திரட்டலுக்காகப் போறேன் அங்கு ப்ரெசெண்டேஷனுக்கான பவர் பாயிண்ட் இது" என்று கூறிக் கொண்டு என்னிடம் ஒரு பேர்வழி வந்தார். ஆங்கிலத்திலிருந்து ஜெர்மனுக்கும் பிரெஞ்சுக்கும் மொழி பெயர்க்க வேண்டுமாம்.

இம்மாதிரி எத்தனை ஆட்களைப் பார்த்திருப்பேன். இவர் நிதி திரட்டுவாராம், அதற்கு நான் வழி செய்து தரவேண்டுமாம். அந்த நிதியை இவர் யாருக்கு பயன்படுத்துவார்னு என்னால் ஊகிக்க முடியாதா என்ன?

அவரிடம் நான் காட்டமாக பதிலளித்தேன். முதற்கண் இது குறைந்த பட்சம் 25 நாட்கள் எடுக்கும் வேலை, என்னிடம் ஏற்கனவே பல வேலைகள் உள்ளன, அவையும் நல்ல ரேட் தரும் வேலைகள், ஆகவே அவரது ஓசி வேலையில் எனக்கு நாட்டம் இல்லை என்று.

பணத்துக்கு பறக்கக் கூடாது என்றார். அவரிடம் நான் சாதா மனிதனாகவே இருந்து விட்டுப் போகிறேன் அவர் வேண்டுமானால் மகாத்மா காந்தியாக இருந்து கொள்ளட்டும் என்று கூறி விட்டேன்.

ஏமாந்தால் தலைக்கு மிளகாய் அரைத்து விடுவார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பங்காளி... said...

--//அவர் மதுரைய விட்டு வந்துக்கே புலம்பற ஆள்... //--

ஹி..ஹ்ஹி...நம்ம மங்கை என்ன சொல்ல வர்றாங்கன்னா..."பங்காளி ஒரு பாசக்கார பயபுள்ள, ஊர் மேல அம்புட்டு பாசம்னு" ...சரிதானே தாயீ!

மங்கை said...

நன்றி டோண்டு சார்...

பங்காளி அவர்களே..அதே தான்..:-))

நீங்க தான் மதுரைன்னு சொன்னா போதும் excited ஆயிடுவீங்களே..:-))

(இன்னும் 8 பாக்கி இருக்கு)

பங்காளி... said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

vaalthukkal Mangai...

Anonymous said...

தங்களின் மனவருத்தம் புரிகிறது. எல்லா மதங்களிலும் அந்த மதத்தை அதிதீவிரமாகப் பின்பற்றுவதாய் சொல்லுபவர்களின் நடத்தை வருத்தத்திற்குரியதுதான். ஆயினும் இந்த நடத்தையில்

இந்திய பண்பாட்டை மதிக்கின்ற கத்தோலிக்கர்களும் ஈடுபடும்போது வேதனை ஏற்படுகின்றது.

மற்ற குழுவினரை விட அதிக அளவில் கத்தோலிக்கர்களிடமே பழக நேர்ந்ததில் அவர்களது நடத்தையும் வேதனை தருவதாகவே அமைந்தது.

ஒன்றிரண்டு அனுபவங்களைச் சொல்லலாம்.

நான் படித்த பள்ளியில் எங்களுக்கு பாட்டனி ஆசிரியராக அமைந்தவர் கத்தோலிக்கரான ஆரோக்கியசாமி (அது கிருத்துவ பள்ளியில்லை). பயலாஜியும் சில சமயங்களில் எடுப்பார்.

பள்ளியில் ஹிந்து, இஸ்லாமிய தெய்வங்களையும், பெரியோர்களையும், பழக்கங்களையும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்வார். பாட்டனிக்கும் பட்டாணிக்கும் (இஸ்லாமியர்களின் ஒரு பிரிவு,

சாப்பிடுகின்ற பட்டாணி) என்ன சம்பந்தம் என்பது போன்ற கேள்விகள் இருக்கும். ஏதோ இரட்டுற மொழிதலில் புலமை பெற்றவர்போல எக்காளம். மாணவர்களுக்கு புரியவில்லை என்று

அவரே நினைத்துக்கொண்டு விளக்கமும் அளிப்பார். நல்ல வேளையாக இஸ்லாமிய சகோதரர் யாரும் வகுப்பில் இல்லை. துலுக்கனுக்கும், மத்தவனுக்கும் என்ன வித்தியாசம்? என்று

கேள்வி வரும். மாணவர்கள் அமைதி காப்போம் வழக்கம்போல. "மீசையை வைத்துக்கொண்டு தாடி எடுப்பானுங்க மத்தவஞ்ச. தாடி வச்சுக்கிட்டு மீசைய எடுப்பானுங்க துலுக்கனுங்க" என்று

விளக்கம் சொல்லுவார்.

திடீரென்று சூரிய நமஸ்காரம்னா என்னா தெரியுமா? என்பார். "ஒரு வெள்ளைக்காரி இந்த இந்துக்களெல்லாம் சூரிய நமஸ்காரம் செய்வார்களாமே, பாக்கனும்னு ஏரோப்ளேன் பிடிச்சு காசிக்கு

வந்தாளாம். காலங்காத்தால கங்கை கரையில வரிசையா சொம்பை வைச்சுக்கிட்டு அவன் அவன் முக்கிக்கிட்டு, முனகிக்கிட்டு இருந்தாஞ்சளாம். ஓ இந்த கண்றாவிதான் சூரிய

நமஸ்காரம்னு புரிஞ்சிக்கிட்டு உடனேயே ஓடிப்போய்ட்டாளாம்" என்பார்.

திடீரென்று ஒரு நாள் தமிழ் மீடியம் படித்த மாணவர்களுக்கு தமிழிலும், ஆங்கில மீடியம் படிப்பவர்களுக்கு ஆங்கிலத்திலும் பைபிள் விநியோகித்தார். எங்கள் வகுப்பிற்கு மட்டுமில்லை.

பள்ளியில் அத்தனை வகுப்புக்களுக்கும். பெட்டி பெட்டியாக வேனில் வந்திறங்கியது பைபிள். அந்த சிறுவயதில் அதை வைத்து என்ன செய்வது என்பது தெரியவில்லை. பெரும்பாலான

மாணவர்கள் இந்துக்கள் என்பதால் அதை மரியாதையாக வைத்திருக்கவே செய்தனர். வீட்டிற்கு எடுத்துச் சென்றோம். பின்னர் அது எங்கோ தொலைந்தது. மலைப் பிரசங்கம் போன்ற

அருமையான விஷயங்களை பின்னாட்களில் ஆங்கில பைபிளில்தான் படித்து மகிழ்ந்தேன்.

சர்ச்சிற்கு எதிர்புறமாக ஒரு இஸ்லாமியர் யுனானி வைத்தியம் செய்வார். பைல்ஸ் வியாதியுள்ளோர் பலர் அவரிடம் சென்று வந்தனர். அந்த வைத்தியத்தையும், இஸ்லாத்தையும், அந்த

வைத்தியர் பெண்களுக்கும் மூல வியாதிக்காக செய்யும் வைத்தியம் பற்றியும் (புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்) கொச்சையாகப் பேசுவார். அது ஆண்களும் பெண்களும் படித்த பள்ளி.

பாலைவன காட்டுமிராண்டிகள் திருந்த மாட்டார்கள், அடுத்தவர்களையும் திருத்தவிடாமல் தங்கள் காட்டுமிராண்டி கலாச்சாரத்தை பரப்புவார்கள் என்பார்.

ஒரு நாள் வகுப்பில் ப்ராமின் ஸ்டூடண்ட்ஸ் யார் யார் என்று கேட்டார். இரண்டு பேர்தான் இருந்தனர். அவர்கள் இருவரும் கை தூக்கினர். நீ சைவமா, அசைவமா என்று கேட்டார். அதில்

ஒருவன் என் நண்பன். கொஞ்சம் முன்யோசனை இல்லாத துடுக்குத்தனம் செய்பவன். அவன்தான் பதில் சொன்னான் "சைவம்". உடனே அந்த ஆசிரியர் "நீ பால் சாப்பிடுவியா?" என்று

கேட்டார்.

ம்

தயிர்?

ம்

வெண்ண்ண்ணை? (பிழையில்லை. அவர் அவ்வளவு அழுத்தம் கொடுத்துக் கேட்டார்.)

வகுப்பில் எல்லாரும் சிரித்தனர்.

சாப்பிடுவோம் சார்.

பால் எதிலேருந்து வருது தெரியுமா? பசுவோட ரத்தத்திலருந்து. இப்ப சொல்லு "ரத்தத்தை குடிக்கிற நீ சைவமா, அசைவமா?" என்றார்.

என் நண்பன் முட்டாள்தனமாய் "அப்பா, தாய்ப்பால் குடிக்கிறவங்கள்ளாம் மனுசக்கறி சாப்பிடுகிறவங்களா சார்?" என்று எதிர் கேள்வி கேட்க வகுப்பு சடாரென்று அமைதியானது.

"வாடா இங்கே நாயே" என்று அழைத்த அவர், அவனை முறைத்து பார்த்தார். "உன்னை அடிச்சா ஆண்டவன் என்ன மன்னிக்கமாட்டார். அதனால இப்படியே விடறேன்" என்று சொல்லிவிட்டு

வகுப்பிலிருந்து வெளியேறி விட்டார். அதன் பின்னால் அவன் நண்பன் நான் என்று யாரோ ஒரு நல்லவன் போட்டுக்கொடுக்க, எனக்கும் அவ்வப்போது வேட்டு விழும்.

திருத்திய பரிட்சை பேப்பர்களை ஒருமுறை என் முகத்தில் விட்டெறிந்தார். அந்த இரு பார்ப்பன மாணவர்களின் பேப்பர்களை திருத்தாமல் அப்படியே மற்ற மாணவர்கள் மூலம் கொடுப்பார்.

அதிகம் கல்வி அறியாத என் தந்தையிடம் என்னை ஒரு மக்கு என்று சொல்லி அவரை வேதனைப்படுத்தினார். "அப்பன் ஆயி பெர இத்தனை நாளா காப்பாத்தின. பெரியவனாய்ட்டதால

கெட்டுப்போய்ட்டயோன்னு எனக்கு கவலையாருக்கு தம்பி" என்று என் தந்தை கண்கலங்க கேட்டது இன்றும் எனக்கு வலிக்கிறது. என் நண்பர்களிடம் நான் அழ அவர்கள் வந்து ஆறுதல்

சொன்னபின் கொஞ்சம் நம்பினார். இருந்தாலும், "மாதா, பிதா, குரு, தெய்வம்" என்று பயிற்றுவிக்கப்பட்ட இந்திய மரபில் வந்ததாலேயோ என்னவோ என் ஒவ்வொரு செயலையும் தவறாக

அர்த்தம் கொடுத்து அஞ்சிக்கொண்டே இருந்தார் அந்த அப்பாவி தந்தை. அவரை மட்டும் சொல்லி என்ன தவறு? அதே மரபில் வந்ததாலேயே எனக்கு துன்பங்கள் ஏற்படும்போதெல்லாம்

ஞாபகத்திற்கு வருவது ஆரோக்கியசாமி சார் திருத்திய பேப்பர்களை என்முன் விட்டெறிந்த போது சொன்ன பின்வரும் வார்த்தைகள்தான்.

"நீ நாசமாத்தான் போவ"

மங்கை said...

மானமிகு மனிதன்..

உங்கள் நீன்ட பின்னூட்டத்திற்கு நன்றி..

உங்கள் மனதில் பதிந்து கிடக்கும் வலியை என்னால் உணர முடிகிறது.. இதே நபர் ஆணுறையை பற்றி பேசக் கூடாது என்று சொன்ன பொழுது அதற்கு அவர் கொடுத்த விளக்கம் என்னை அதிர்ச்சுகுள்ளாக்கியது.. அதை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என நினைத்தேன் ஆனால் இப்பொழுது இங்கே சொல்கிறேன்.. ஆணுறை பற்றி பேசும் நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் ஆணுறை உபயோகப் படுத்த சொல்லி அறிவுறை கூறுவீர்களா என்று கேட்டார்.
ஒரு பொருப்புள்ள பேராசிரியர் பேசும் பேச்சா இது...

உங்களின் இந்த வருத்தத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன்..
தமிழ்மணத்திற்கு புதிதாக வந்திருக்கிறீர்களா..Welcome