இங்க எங்க கல்லூரியில திருநெல்வேலிகாரர் ஒருத்தர் ஆயுர்வேதத்தில எதோ ஆராய்ச்சி பண்ணீட்டு இருக்கார். வயசில மூத்தவர்,ரொம்ப நகைச்சுவையா பேசுவார். கிண்டலும் கேலியுமா அவர் பேசறது இங்க ரொம்ப பிரபலம். அதுவும் இந்த சர்தார்ஜி மற்றும் பீஹாரீஸ் சிக்கினா அவருக்கு கொண்டாட்டம்தான். மனுசன் யார பத்தியும் எத பத்தியும், கவலப்படாம பின்னி எடுத்துருவார்.
போன செவ்வாய்கிழமை, விரிவுரையாளர் ஒருத்தர் வேகமா எங்கிட்ட வந்து "இருந்தாலும் சீதாராமன் ரொம்ப கின்டல் பன்றார். சொல்லி வைய்ங்க" னு சொலீட்டு, விவரம் எதுவும் சொல்லாம கோவமா சாமியாடிட்டு போய்ட்டார்.ஆஹா நம்ம ஆள் எதோ வாயடிச்சிருபார்னு தோனிச்சு. உடனே அவர ஃபோன்ல கூப்ட்டு "சார் ஜீதெந்தர் கோவமா போறார், என்ன ஆச்சுன்னு" கேட்டேன். அதுக்கு அவர் சாகவாசமா"அந்த பய அங்குட்டு வந்து சொல்றத எங்கிடயே சொல்லாம்ல...முட்டாப் பய' னார். அப்பிடி என்னதான் சொன்னீங்கன்னு கேட்டேன். எல்லாம் Monkey Matters தான், வேற ஒன்னும் இல்லைன்னு சொலீட்டு ஃபோன வைச்சிட்டார். எனக்கோ ஒன்னும் புரியலை, இருந்தாலும் நமக்கு எதுக்கு வம்புன்னு அந்த விரிவுரையாளர்ட்ட நான் ஒன்னும் கேட்டுக்கலை.
ஆனா நம்ம ஆளு விடுவாரா?.. அடுத்த நாள் மீண்டும் போன் பண்ணி என்ன சொன்னான் அந்த மடையன் னு கேட்டார். சார் உங்க விளையாட்டுக்கு நான் வரலை ...அவர்ட்ட நான் ஒன்னும் கேக்கலைனேன்.
அது எப்படி உன்ன விட முடியும். இன்னைக்கு பேப்பர்ரல முதல் பக்கத்தில நியூஸ் படின்னார்.
தில்லியில குரங்குகள் அட்டகாசம் பற்றி போட்டிருந்தாங்க. படிச்சியானு கேடுட்டு " இன்னைக்கு என் கார் சர்வீசுக்கு விட்டுருந்தேன். இந்த பயல என் கூட கொஞ்சம் மினிஸ்ட்ரி வரைக்கும் வர முடியுமானு கேட்டா, எனக்கு வேலை இருக்குனு சொல்றான். அப்பிடி என்னதான் வேலை செய்றான்னு பார்த்தா பொழுதன்னிக்கும் ஸ்டூண்ட்ஸ் கிட்ட கடலை போடுட்டு இருக்கான்.
இது என்ன சார் அநியாயம், வர்ரதும் வராததும் அவர் விருப்பம்தானேன்னு சொன்னேன்.நான் போறதே அவன் டிபார்ட்மெட்ன்ட் வேலையாதான்,அதான் டென்ஷன்ல அப்பிடி சொன்னேன்,அதுவும் அவன் சம்சாரத்துக்கு முன்னாடி தான் சொன்னேன். அவளுக்கு நான் அப்படி சொன்னதுல ஒரே சந்தோஷம். நீ வேனா அவகிட்ட கேட்டுப்பார்னு வேற பெருமை பேசினார். ஜிதேந்தர் மனைவி பெங்காலி. ஜீதெந்தர் பஞ்சாபி. அதானால அந்த பொண்ண நம்ம ஆளு அவர் கட்சியில சேர்த்துட்டு அலும்பு பண்ணீட்டு இருக்கார்.
தில்லியில குரங்குகள் அட்டகாசம் ரொம்ப ஜாஸ்தியானதுனால, அரசு ஒரு முறை 300 குரங்குகளை பிடிச்சு மத்தியப்பிரதேசத்துல இருக்குற காட்டுக்கு அனுபிச்சாங்க. இப்ப மீண்டும் குரங்குகளின் எண்ணிக்கை ரொம்ப ஜாஸ்தியானதுனால, மத்தியப்பிரதேசத்துக்கு குரங்குகளை அனுப்ப சொல்லி கோர்ட் உத்தரவு போட்டிருக்கு. ஆனா மத்தியப்பிரதேச அரசாங்கமும், வனத்துறை அதிகாரிங்களும் தில்லி குரங்குகள் ரொம்ப லொல்லு பன்னுதுக, சமாளிக்க முடியலைனு அதுனால குரங்குகளை அனுப்பவேண்டாம்னு சொல்லிட்டாங்க.
சரி நம்ம ஆள் இதுக்கு என்ன சொன்னார்னு பார்போம்.அந்த விரிவுரையாளர் வரலைன்னு சொன்னதுனால இவர் கோவத்தில அவர் கிட்ட " யோவ், அதான் மத்தியப்பிரதேச அரசாங்கம் தில்லி குரங்குகள வேண்டாம்னு சொலீடுச்சில்ல, அதனால நீ தைரியமா வெளியே வரலாம், உன்னை யாரும் பிடிக்க மாட்டாங்கன்னு சொல்லி வெறுப்பேத்தியிருக்கார். பாவம் அந்த மனுசன் நொந்து போய்ட்டார். நம்ம ஆள பத்தி எல்லார்க்கும் தெரிஞ்சதுனால இவரும் நேர்ல ஒன்னும் காட்டிக்கில.. சிரிச்சுட்டே பேசாம இருந்து இருந்துட்டு இங்க வந்து புலம்பீட்டு போய்ட்டார்.
ஆனா இங்க இந்த குரங்கு தொந்தரவு ரொம்ப ஜாஸ்தி தான் (படத்த பார்த்தா தெரியும்). ராமாயணப் போர்ல வாணரப் படைகள் வர்ர மாதிரி படை படையா வருதுக. இப்ப மத்தியப்பிரதேச அரசாங்கம் வேண்டாம்னு சொன்னதுனால குரங்குகள தெஜிகிஸ்தான் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யறாங்களாம். குரங்குகள் எண்ணிக்கை அதிகம் ஆனதுனால எல்லா மாநில அரசையும் குரங்குகளை தத்து எடுத்துக்க சொல்லி கேட்டுட்டு இருக்காங்க. ஆனா தில்லி குரங்குகளை தத்து எடுக்க எந்த மாநில அரசும் முன் வரலை.
:-))))
57 comments:
உங்கள் பதிவு சூப்பர்.
வலைப்பதிவில் நெம்பர் ஒன்...
ஆப்பு
இந்த வாரம் படித்து விட்டீர்களா?
யார் அந்த நேசக்குமார்?
அரசியல் சமூக விழ்ப்புணர்வு வலைப்பூவிதழ்!!!
சிரிக்க சிரிக்க்க எழுதிருக்கீங்க...நல்லா வந்திருக்கு....இந்த மாதிரி அடிக்கடி எழுதலாம்ல....
Manitha Kurangu Patri Ethavathu Thagaval Unda ?
பங்காளி..
எல்லா உங்க மாதிரி சீனியர்ஸ் பார்த்துதான்...
நன்றி..
ரவி
தகவலா?.. அது தான பதிவு போட்டு இருக்கு
:-)))
//குரங்குகள தெஜிகிஸ்தான் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யறாங்களாம்//
எதுக்கு? அங்கே எதுக்காக வாங்குறாங்கன்னு கொஞ்சம் விசாரியுங்க.
பாவம், நம்மூருக் குரங்குகள்.
துளசி
தெஜிகிஸ்தான் அரசாங்கமே கேட்டிருக்காம்..
ஆனா குரங்குளை ஏற்றுமதி பண்றதுக்கும் தடை இருக்குன்னு படிச்சேன்...
இதுல யார் பாவம்னு தெரியலை..
ஹி..ஹி..
தமிழ்நாட்டுக்கு அனுப்ப சொல்லாமே....:-)
என்னங்க சிவா
நீங்க தமிழ் நாட்டுல இல்லைனு இப்படி சொல்றீங்களா...
பாவம் நம்ம மக்கள்ஸ்....
:-))))
என்னது சீனியரா...நானா?
அய்யஹோ இது அடுக்குமா...பால்மணம் மாறாத பங்காளியை சீனியர் எனச்சொலவதா...நாடு தாங்குமா?
ஹி..ஹி...அதாவது என்ன சொல்ல வர்றேன்னா நாங்கல்லாம் சூப்பர் ஜூனியர்...ஹி..ஹி...
விவரம் தான்....
ஏன் குரங்க வச்சு இப்படி கும்மி அடிக்கிறீங்க!
குரங்கு குரங்குன்னு
சொறிஞ்சிகினு போனா
அங்க ரெண்டு குரங்கு
மாங்கா தின்னுச்சாம்
கவிஞர் காத்துவாயன்.
கும்பலா சேர்ந்து நின்னு கும்மியடிக்க சிறந்த இடம் எது?
1) ஒயிலாட்டம்
2) கரகாட்டம்
3) கோலாட்டம்
4) பின்னூட்டம்
காதும் காதும் நோக்கியா
கண்ணும் கண்ணும் மயோப்பியா
சிரங்கும் சிரங்கும் வீங்கியா
குரங்கும் குரங்கும் மங்கியா
கவிஞர் காத்துவாயன்
குரங்கை படம் பிடித்து
வலைக்குள் தினம் வைத்து
குலைவை பாடுவோரை
மாலைக்குள் கண்டித்து
ஐ.நா சபையில் ஆர்ப்பரித்து
அம்பலப்படுத்துவேன் என எச்சரிக்கிறேன்.
சுப்புரமணிய சாமி
தைவான்ல சொன்னா காசு கொடுத்து வாங்கிகிட்டு போவாங்க....
ஐயா சாமி
யாரது...போதும்
பதிவ படிச்சதுக்கே இப்படியா...
வீட்டுக்கு இரு மரங்களை வளர்ப்போம்
காட்டுக்கு பல குரங்குகளை காப்போம்
குரங்கட்டக்காரன்
குரங்கு ஆட்டம் போட ஆரம்பிச்சா நிறுத்தாது. நீங்களா நிப்பாட்டினாதான் உண்டு.
குரங்கு கைல கெடச்ச வலைப்பூ இன்னிக்கி இதுதான்....
ஏதோ ஒன்னு தப்பிச்சு Garden City போயிடுச்சு போல இருக்கு..
:-)))))
மேடம்,
உங்க பதிவைப் படித்ததும் இரு ஆண்டுகளுக்கு முன் டிரான்ஸ்-யமுனா பகுதியான ஷாதராவில்(கிழக்கு தில்லி), "குரங்கு மனிதன்" என்ற ஒரு விலங்கு மாடியில் தூங்குபவர்களைத் தாக்கியது நினைவுக்கு வருகிறது. அந்த விலங்கு தூங்கறவங்களைக் கடிச்சிட்டோ இல்ல பொறாண்டிட்டோ ஓடிடுமாம். அது உண்மையிலேயே குரங்கா இல்லை வேறு எதாவது ஒரு விலங்கான்னு இது வரைக்கும் யாராலயும் கண்டு பிடிக்க முடியலை. அந்த விலங்கை இருட்டு நேரத்துல பாத்தவங்க கொடுத்த விவரம் படி படம் எல்லாம் வரைஞ்சி டைம்ஸ் ஆப் இந்தியால அப்போ போட்டுருந்தாங்க. அது குரங்கு மாதிரியும் இல்லாம மனுஷன் மாதிரியும் இல்லாம வித்தியாசமா இருந்தது.
//ஆனா தில்லி குரங்குகளை தத்து எடுக்க எந்த மாநில அரசும் முன் வரலை.
:-))))//
தில்லி எருமை மாதிரி தில்லி குரங்கும் ஒரு வேளை ஃபேமஸ் ஆகிடுமோ?
:)
உங்க திருநெல்வேலி நண்பரைக் கேட்டதாகச் சொல்லுங்க :D
Garden city பின்னூட்டம் எல்லாம் வருமா வராதா.
"அது குரங்கு மாதிரியும் இல்லாம மனுஷன் மாதிரியும் இல்லாம வித்தியாசமா இருந்தது"
ஒரு வேளை Etiயா இருக்குமோ?
"அது குரங்கு மாதிரியும் இல்லாம மனுஷன் மாதிரியும் இல்லாம"
அந்தப் படம் கைப்புள்ள சாயல்ல இருந்திச்சே.....
//ஒரு வேளை Etiயா இருக்குமோ? //
சூப்பருங்க அனானி...உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி. Yeti எனும் பனி குரங்கு மனிதன் டிபெட்டில் மட்டும் இருப்பதாகப் படித்திருக்கிறேன். அதோட இந்த குரங்கு பத்தி பத்திரிகையில எழுதும் போது ஒரு வேளை Yeti ஆக இருக்குமோ என்று கூட யோசித்தார்கள். ஞாபகப் படுத்தியதற்கு ரொம்ப நன்றி.
ÌÃíÌìÌõ ¿ÁìÌõ ´§Ã Óý§É¡÷¾¡ý. ¬ŠðȦġ¦À¡Ä¢Š. «¾É¡Ä ¿õÁ Óý§É¡÷¸Ç ¸¡ì¸¡ ¿¡Á¾¡ý ¿¼ÅÊ쨸 ±Îì¸Ûõ. §ÅòÐ ¸¢Ã¸òÐÅ¡º¢Â¡ ÅÕÅ¡ý. «ôÒÈõ ¦À¡ò¾¡õ குரங்குக்கும் நமக்கும் ஒரே முன்னோர்தான். ஆஸ்ட்றலொபொலிஸ். அதனால நம்ம முன்னோர்கள காக்கா நாமதான் நடவடிக்கை எடுக்கனும். வேத்து கிரகத்துவாசியா வருவான். அப்புறம் பொத்தாம் பொதுவா குரங்குன்னு சொல்லக்கூடாது. குரங்குல நாலு வகை இருக்கு.
ஒரங்குட்டான், சிம்பன்ஸி, கொரில்லா, இன்னொன்னு கூகிளிக்குங்க.....
ஒரங்குட்டான் மலாய்லேர்ந்து வந்த பேரு. ஓராங் அஸ்லின்னா காட்டுவாசி / ஆதிவாசி..
வாங்க கைப்ஸ்
வண்டு கடி சரி ஆயிடுச்சா..
இப்ப வேற யாரையோ கடிச்சுடுச்சு போல இருக்கு...
இல்ல வண்டு கடி effect இன்னும் இருக்கோ...
//குரங்குக்கும் நமக்கும் ஒரே முன்னோர்தான். ஆஸ்ட்றலொபொலிஸ். அதனால நம்ம முன்னோர்கள காக்கா நாமதான் நடவடிக்கை எடுக்கனும். வேத்து கிரகத்துவாசியா வருவான். அப்புறம் பொத்தாம் பொதுவா குரங்குன்னு சொல்லக்கூடாது. குரங்குல நாலு வகை இருக்கு.
ஒரங்குட்டான், சிம்பன்ஸி, கொரில்லா, இன்னொன்னு கூகிளிக்குங்க....//
சூப்பர் தகவல்கள் குரங்கு நேசன். நன்றி. ஆமா! செண்பகமே செண்பகமேன்னு பாட்டெல்லாம் கூட பாடுவீங்களா?
Garden Cityன்னா பெங்களூர் மட்டும் இல்லீங்க. ChristChurch, Shanghai இதெல்லாம்தான். நீங்க யாரையோ தாக்குற மாதிரி இருக்கு.
அப்பாடா... பத்த வச்சாச்சு.....
//வண்டு கடி சரி ஆயிடுச்சா..
இப்ப வேற யாரையோ கடிச்சுடுச்சு போல இருக்கு...
இல்ல வண்டு கடி effect இன்னும் இருக்கோ... //
இப்ப பரவால்லை. வண்டைப் பத்தி வேற கேட்டுட்டீங்களா? யாராச்சும் வண்டுநேசன் வரப் போறாங்க பாருங்க.
:)
சிரங்க புடிச்சி ப்ளஸ்டர் போட்டு ஆறச்சொல்லுற உலகம்.....
குரங்க புடிச்சி வீதில வச்சி ஆடச்சொல்லுற உலகம்....
ஏங்க... செண்டு வச்சிரிந்திங்களா? ஏன் வண்டு உங்கள கடிச்சிது?
குரங்கு மனம் வேண்டும்..... இறைவனிடம் கேட்டேன்.....
மரத்தில் தாவ ஒன்று...... நிலத்தில் தவழ ஒன்று......
குரங்கு மனமே உறங்கு....
இங்கே பிறழ்ந்தவன் கட்டளை உறங்கு....
குரங்ககமே குரங்கமேன்னுதான் பாடுவேன்....
குரங்கு சைவமா? அசைவமா?
பூனை சைவமா? அசைவமா?
பால் சைவமா? அசைவமா?
சரியா பதில் சொன்னா ஒரு குரங்குக் குட்டி பரிசு
ஹை...இந்த விள்ளாட்டு நல்லா இருக்கே...என்னயும் ஆட்டைல சேத்துக்குவீங்களா?
பங்காளி
என்ன பார்த்தா கின்டலா இருக்கா...
இன்னும் 5 comment publish பண்ணாம வச்சுரிக்கேன்...இன்னைக்கு நான் தான் கிடச்சனா...
என்ன பார்த்து ஆடுரா ராமா சொல்ற மாதிரி இருக்கு.. :-)))
வாங்க.... வாங்க.....
இந்த மரத்துக்கும் அந்த மரத்துக்கும் தாவி தாவி வெள்ளாடலாமா.
மங்கை,
சும்மா பங்காளி பகையாளி எல்லாம் பார்க்காம எல்லாரைய்ம் ஆட்டத்துல சேத்துக்குங்க....
காசா பணமா குரங்காட்டம்தானே....
"Manitha Kurangu Patri Ethavathu Thagaval Unda ?"
ஏன் உங்கள பத்தி தனி பதிவா போடனுமா?
"தமிழ்நாட்டுக்கு அனுப்ப சொல்லாமே....:-) "
ஏன் உங்களுக்கு கம்பெனிக்கு ஆள் வேணுமா? பரவை பக்கம் போனீங்கன்னா முனியம்மா பாட்டு பாடும் அத வச்சி பொழுத போக்கிக்குங்க.....
ஹா ஹா நல்ல நகைச்சுவை...
தில்லியில மனுசங்க தான் சேட்டை பண்ணுவாங்கன்னு நினச்சுட்டு இருந்தேன்
தில்லியில மட்டுமா குரங்குகள் அட்டகாசம்..
பாருங்க எங்க எல்லாம் ஆட்டம் போடுதுன்னு
கபடி.... கபடி.....
இன்னிக்கு இங்கனயே கபடி ஆடலாமா இல்ல வேற எங்காவது ஆடலாமன்னு யோசிச்சிகிட்டே இருக்கேன்....
தெய்வமே..உங்க கால் எங்கன இருக்கு..
போதும் ராசா..
நல்ல பம்பல்தான்!
vaanga vaanga
too late
ஆஹா!... நல்ல நகைச்சுவைதான்.
ஹா ஹா ஹா... பின்னூட்ட குரங்காட்டம் பொறுத்தமா இருந்தது. லேட்டா வந்து மறுமொழி தந்துட்டேனா? நான் உங்களுக்கெல்லாம் ஜூனியராக்கும். தமிழ்மணத்துல இக்கால கட்டத்துல காலெடுத்து வைக்கலையாக்கும். :-)
செம கும்மியா இருக்கு.
ஜமாய்ங்க.........
அம்மாடியோவ் - இவ்வளவு மறுமொழிகளா - கும்மியா - கும்முறவங்க இவ்ளோ பேரா - தாங்காது சாமி - நான் இதுக்கெல்லாம் புதுசு
மங்கையா இது எழுதினது???நம்ப முடியலையே...சிரிக்க சிரிக்க எழுதி இருக்கீங்க..
இப்ப தான் உங்க பதிவு எல்லாம் ஒவ்வொன்னா படிச்சுட்டு வரேன்...
எதுக்குமே பின்னூட்டம் போடாத நான் இதற்கு போட தோனுச்சு...நல்லா இருக்குங்க.. ஏன் இப்ப எல்லாம் நீங்க எழுதறதே இல்லை
Post a Comment