Thursday, July 19, 2007

Memory Triggers


நம் மனதில் தோன்றும் பெரும்பாலான நினைவுகள் தானாகவோ ஏதேச்சையாகவோ ஏற்படுவதில்லை. No memory, however perfect, operates in a vacuum என்பது உளவியல் நிபுணர்களின் கருத்து. அந்த நினைவுகள் எழ நமக்கு தூண்டுகோளாக இருப்பது நாம் பார்க்கும் பொருளாகவோ, கேட்கும் சப்தமாகவோ, ஏதாவது சுவையோகவோ இருக்கலாம்.

நம் அன்றாட வாழ்வில் நாம் காணும் சில பொருட்கள், கேட்கும் பாடல்கள், குறிப்பிட்ட சத்தம், நறுமணம், நிகழ்வுகள் போன்றவை, நாம் மறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும், நம் ஆழ்மனத்தில் புதைந்து கிடக்கும், சில பல உணர்வுகளை வெளிக்கொணர்வது உண்டு. நம்மை அதிகமாக பாதித்த அல்லது சந்தோஷத்தை கொடுத்த சில நிகழ்வுகளுக்கு தொடர்புடைய விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். அதை நாம் மீண்டும் எதிர்கொண்டால் நம்மையே அறியாமல் நாம் பழைய நினைவுகளுக்கு சென்றுவிடுவோம்.

நம் மூளையில் இருக்கும் Amygdala என்னும் ஒரு விசஷே பகுதி, நமக்குள் எழும் உணர்ச்சிகளை பதித்து வைத்து அவற்றை கட்டுப்படுத்துகிறது. நாம் சுவாசிக்கும்போது, நறுமன நுண்அணுக்கள் Amygdala வுக்கு நேரடியாக செல்வதால், நறுமணத்தால் ஏற்படும் உணர்ச்சிகள், மற்ற புலன்களை விட அதிக சக்தி வாய்ந்தாக கருதப்படுகிறது. Memory Triggers எனப்படும் இந்த நினவு தூண்டல்களிலேயே, நறுமணத்தினால் ஏற்படும் உணர்வே அதிக தெளிவான, உணர்ச்சி பூர்வமான நினைவை உண்டு செய்பவை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இது நம் எல்லோருக்கும் ஏற்படும் ஒரு அனுபவம்.

அது போலத்தான் எனக்கு இந்த ரோஜா பூவின் நறுமணம். ரோஜாமணம். ஹ்ஹ்ம்..எனக்கு அப்பாவோட மரணத்தை நினைவு படுத்தும். அவர் மரணம் பம்பாயில் ஏற்பட்டதால் உடலை கோவைக்கு எடுத்து வர 24 மணி நேரம் ஆனது. இந்த 24 மணி நேரமும் அவர் படத்திற்கு போட்ட ரோஜா மாலை மற்றும் மலர் வளையங்களின் ஊடே உட்கார்ந்து கொண்டு இருந்ததால், அந்த ரோஜா மணம் என் துக்கத்துடன் கலந்துவிட்ட ஒன்றாகிவிட்டது. அத்ற்கு பின் எனக்கு ரோஜா வாசனை வந்தாலே மனம் பட பட என்று அடித்துக் கொள்ளும்.

பெங்களூர் NIMHANS இல் முதுநிலை பட்டப் படிப்பு பயிற்சியின் போது, ஒரு பெண் சிகிச்சைகாக வந்திருந்தாள். திருமணம் ஆகி 3 மாதம் ஆகியும் அந்த பெண் தாம்பத்திய உறவிற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும், இது உளவியல் சம்பத்தபட்ட ஒன்றாக கருதியும், அவள் ஆலோசனைக்காக அனுப்பப்பட்டாள்.

நாள் முழுக்க கணவனிடம் அன்பாக பேசி பழக முடிந்த அவளுக்கு இரவு நேரத்தில் மட்டும் அவரிடம் ஒரு வித வெறுப்புடனே நடந்து கொண்டிருக்கிறாள். உடல் ரீதியாக ஆரோக்கியமாகவே இருந்தாள் அவள். பத்து நாள் கலந்துரையாடலுக்கு பிறகு தான் தெரிய வந்தது அவளின் உண்மையான பிரச்சனை.

அவளுக்கு ஏதாவது கசப்பான அனுபவம் நடந்து இருக்கும் என்ற கோணத்தில் கேள்விகள் கேட்ட போது சில உண்மைகள் தெரிய வந்தது. பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது பெண்களிடம் அத்து மீறி பேசி தவறாக நடக்க முயன்ற அவளின் ஆசிரியர் உபயோகித்ததை போல ஒரு வாசனை திரவியத்தை கணவனும் உபயோகப் படுத்துகிறான். இதனால் அவன் அருகில் வரும் போதெல்லாம் அவளுக்கு அந்த ஆசிரியரும் அவர் நடந்து கொண்ட விதமும் நினைவிற்கு வர, அவளால் தாம்பத்திய உறவில் ஈடு பட முடியவில்லை. இதை அவளே உணர்ந்த பின்னர் அந்த நினைவுகளில் இருந்து வெளியே வர அவளுக்கு எளிதாக இருந்தது.

நறுமண நுண் அணுக்களின் சமிக்ஞையால் ஏற்படும் இது போல உணர்வுகள் 'Proustian Phenomenon' என்று அழைக்கப்படுகிறது.

சரி இப்போ உங்களுக்கு இது மாதிரி "Memory Triggers" ஏதாவது இருந்தா அத இங்க எழுதுங்க மக்களே. இல்லைன்னா தனிப் பதிவா போடுங்களேன்.

உதாரணத்துக்கு சில Memory triggrs..
பாப் கார்ன் வாசனை வந்தா, நமக்கு சின்ன வயசுல தியேட்டர்ல படம் பார்த்தது நினைவிற்கு வருதில்ல?....

பசும் புல்லின் மணம்.
புதுத் துணியின் மணம்.
ஏதாவது பாடல் வரிகள்/இசை/குறிப்பிட்ட சத்தம்.

குறிப்பிட்ட பொம்மை.

தமிழ் தாய் வாழ்த்து.

43 comments:

அபி அப்பா said...

எனக்கும் ஞாபக சக்திக்கும் ரொம்ம தூரம்ங்க!

துளசி கோபால் said...

ஒண்ணு ரெண்டுன்னா எழுதலாம்.

மனசுபூரா நிறைஞ்சு கிடக்குதே.......................


அதான் பதிவா வந்துக்கிட்டு இருக்கு:-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா துளசி சொன்னதே தான் ஒன்னா ரெண்டா ..
புத்தகவாசனை சின்ன வயசுப்பள்ளிக்கூடம்..
புதுத்துணி வாசனை தீபாவளி..
இப்படி நிறைய இருக்கே..

மங்கை said...

அபி அப்பா...இதென்ன வழக்கமான பின்னூடமா இல்லையே... நீங்க தான் போன ஜென்மத்தில நடந்தது கூட நியாபகத்தில வச்சுறுப்பீங்களாமே..

மங்கை said...

ஆஹா துளசி....
நீங்க நமஸ்தம் பண்ணுங்க...சீக்கிறம் போடுங்க

மங்கை said...

லெட்சுமி நீங்களும் எழுதுங்கப்பா... உங்களுக்கு கண்டிப்பா இது மாதிரி ஏதாவது இருக்கும்..எழுதுங்க அம்மனி

Thekkikattan|தெகா said...

நம் மூளையில் இருக்கும் Amygdala என்னும் ஒரு விசஷே பகுதி, நமக்குள் எழும் உணர்ச்சிகளை பதித்து வைத்து அவற்றை கட்டுப்படுத்துகிறது. நாம் சுவாசிக்கும்போது, நறுமன நுண்அணுக்கள் Amygdala வுக்கு நேரடியாக செல்வதால்,//

எனவே அப்படிப் பார்த்தால் இந்த பூஜைப் பொருட்களை கொண்டு பூஜிக்கும் பொழுது பக்தி பரவசத்தில் ஆழ்வது போன்ற பிறமை தட்டுவதும், பிறகு இந்த நெருப்பு மிதிக்கிறது, அலகு குத்திக்கிறது எல்லாம் சிறு வயசில பார்த்து ஆழ் மனசில பதிய வைச்சிட்டு பின்பு பொரு சமயத்தில் ஏதோச்சையாக அதனை கண்ணுரும் பொழுதோ அல்லது நுகரும் பொழுதோ அந்த மூளையின் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறது என்று கொள்ளலாமா?

சிவபாலன் said...

Wow! Very Nice post!

I do have some...

But it is very hard to list it down! Ha Ha Ha...

Thekkikattan|தெகா said...

என்னுடைய முன்னய பின்னூட்டத்தில் இந்த மூளையின் சிறிய பகுதியான Amygdala சொறுக மறந்து விட்டேன்...

இங்கே சொறுகி அதே பின்னூட்டம் :

எனவே அப்படிப் பார்த்தால் இந்த பூஜைப் பொருட்களை கொண்டு பூஜிக்கும் பொழுது பக்தி பரவசத்தில் ஆழ்வது போன்ற பிறமை தட்டுவதும், பிறகு இந்த நெருப்பு மிதிக்கிறது, அலகு குத்திக்கிறது எல்லாம் சிறு வயசில பார்த்து ஆழ் மனசில பதிய வைச்சிட்டு பின்பு பொரு சமயத்தில் ஏதோச்சையாக அதனை கண்ணுரும் பொழுதோ அல்லது நுகரும் பொழுதோ அந்த மூளையின் பகுதியான Amygdala பொறுப்பை ஏற்றுக் கொள்கிறது என்று கொள்ளலாமா?

மங்கை said...

இப்படி வெவகாரமான கேள்விகளதான் நீங்க கேப்பீங்க... நிங்க அங்க பதில் சொல்ற மாதிரி என்னையும் இங்க பதில் சொல்ல சொல்றீங்களா

மங்கை said...

சிவா லிஸ்ட் பண்ணுங்க...சீக்கிறம்

Thekkikattan|தெகா said...

ஆமாங்க மங்கை நீங்க சொன்ன அந்த புது மணப் பெண்ணின் சாயலில், தான் சிறுமியாக இருக்கும் பட்சதில் இப்படி பாலியல் வன்புற நேர்ந்தால் அவ்வாறு நிகழும் பொழுது நடந்த சம்பாஷனைகள், வாசம், பொருட்கள் இதில் எது வேண்டுமானாலும் பிரிதொரு சமயத்தில் காண, கேக்க நேரும் பொழுது Amygdala ஆதிக்கம் அதீதமாக அவர்களுக்கு நேருமாம்.

ஏனெனில் நாம் ஒரு விசயத்தை கேக்கும் பொழுது அதனை வார்த்தையாக வாங்கி, படமாக கண்டு மீண்டும் அதனை அதற்கு தொடர்பான வார்த்தையாக உபயோகப் படுத்துகிறோமாம். ஆனால், இது போன்ற வன்புறுத்தலுக்கு ஆளாகிப் போனவர்கள், வார்த்தையாக வாங்கி, படமாகவே கண்டு அது தனக்கு இப்பொழுது நிகழுவதாகவே தேக்கமுற்று fight or flight mode சென்று விடுகிறார்களாம்.

இது நடைபெறுவது disorderகளாக அவ் நிகழ்ச்சி பரிணமித்தவர்களுக்கு மட்டுமே...

ramachandranusha(உஷா) said...

மங்கை, எனக்கு வெகு சில முறை மிக உடம்பு சரியில்லாமல் போனப்பொழுது, படுத்திருக்கும்பொழுது கனவில் அல்லது அரைகுறை தூக்கத்தில் ஒரு மாதிரி திண்டு போல, மொத்தயான சோபா - எனக்கு சொல்ல தெரியவில்லை, திண்டு திண்டாய் தோன்றும். பயம் வரும். அதுக்காக சோபா அல்லது கோல் (ஹிந்தி திண்டு) பார்த்தால் எல்லாம் அந்த உணர்வு தோன்றாது. கடைகளில், நண்பர்கள், உறவுகள், சினிமா, டீவியில் எத்தனை வகையான சோபா பார்க்கிறோம், அப்பொழுது எல்லாம் எந்த பயமும்
தோன்றாது. இதை எழுதும்போதும், அந்த பயம் நினைவில் வருகிறது, ஆனால் பயம் வரவில்லை :-)

சிவபாலன் said...

Here my Memory Triggers

http://sivabalanblog.blogspot.com/2007/07/memory-triggers.html

பங்காளி... said...

என் மாதிரி மூளையில்லாதவங்களுக்கு இந்த கவலையெல்லாம் இல்லை....

அப்படியே ஏதாவது ட்ரிகர் ஆனா போன ஜென்மத்துல நடந்ததெல்லாம் நினைவுக்கு வருதேன்னு ஆனந்த கண்ணீர் விடாத குறைய சந்தோஷப்பட்டுக்கறதுதான் நம்ம வழக்கம்...ஹி..ஹி...

Thekkikattan|தெகா said...

உஷா,

நீங்கள் ஏதும் drug :-))))) அடிக்கமலேயே உங்களுக்கு hallocination நேர்ந்திருக்கிறது. எனக்கும் கன்னா பின்னாவென்று சுரம் அடித்த பொழுது நெல் மணியெல்லாம் லாரி சைஸுக்கு ஆனாதை இன்றும் இருபது வருடங்கள் கழித்தும் ஞாபகம் வைத்துக் கொள்வது போல...

காட்டாறு said...

ஏனுங்க நமக்கோ ஞாபக மறதி ஜாஸ்தி... அப்புறம் எங்கே போய் ட்ரிகறுது.... :-(

காட்டாறு said...

//சரி இப்போ உங்களுக்கு இது மாதிரி "Memory Triggers" ஏதாவது இருந்தா அத இங்க எழுதுங்க மக்களே. இல்லைன்னா தனிப் பதிவா போடுங்களேன்.
//
யக்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....... உங்களுக்கே இது ஞாயமா? அடுத்த தொடர ஆரம்பிச்சி வச்சிட்டீங்களே... இங்க பாருங்க சிவபாலன் நல்ல சிஷ்யரா ஓடிப் போய் ஒரு பதிவை எழுதிட்டாரு....

மங்கை said...

//ஆம்மா மங்கை நான் போட்ட பின்னூட்டத்தை காணோம்..தூக்கிட்டீங்களா?ம்ம்ம். சரி..
ரோஜா பூ வாசனை மிகவும் பிடித்த எனக்கு இப்பொழுது ரோஜா வாசனையும் பிடிக்கலை... அதோடு சேர்ந்து eau de cologne வாசனையும் பிடிக்காமல் போய் விட்டது..///

டாக்டரம்மா...நான் ஒன்னும் பண்ணலை....என்ன ஆச்சுன்னு தெரியலை...நன்றிங்கோவ்..
ரோஜா வாசனை பிடிக்காதது..நான் சொன்ன காரணம் தானா...ஹ்ம்ம்

Thekkikattan|தெகா said...

1) எனக்கு இந்த அகர் பத்தி வாசனை வந்தா சொர்க்கத்தில் மிதப்பதாக நினைக்கத் தோன்றும்... ஆழ்ந்து விடுவது அப்படியே

2) ச்சீப்பான பன்னீர் செண்ட் ஸ்மெல் எங்கயிருந்து மிதந்து வந்தாலும், என் செத்துப் போன தாத்தாவின் இறந்த நாள்...

3) பள்ளி நாட்களின் காலை 8.45 மணிக்கு ரோடியோவில் ஒலி பரப்பாகும் லைப்பாய், மற்றும் கோபல் பல்பொடி விளம்பரங்கள்... I hate it even now :-))

அவ்வளவுதான் இப்போதைக்கு ஞாபகத்தில நிக்குது.,,

காட்டாறு said...

//Thekkikattan|தெகா said...
1) எனக்கு இந்த அகர் பத்தி வாசனை வந்தா சொர்க்கத்தில் மிதப்பதாக நினைக்கத் தோன்றும்... ஆழ்ந்து விடுவது அப்படியே
//


சிவபாலன் பதிவுல கேட்ட அதே கேள்வி... அதென்னங்க தெகா அண்ணாச்சியோவ்வ்.... சொர்க்கத்தில் மிதக்கிறது?

Thekkikattan|தெகா said...

அதென்னங்க தெகா சொர்க்கத்தில் மிதக்கிறது? //

அதாங்க காட்டாறூஊஊ,

இந்த சொர்க்கத்தில நாம நினைக்கிறதெல்லாம் இருக்குமாமில்ல, எனக்கு எட்டுன வரைக்கும் என் சொர்க்கத்தில நிறைய பறவைகளோட, தென்னை மரங்களுக்குகிடையே, பில்ஸ் எல்லாம் மறந்திட்டு ஹாயாக கட்டில் போட்டு உறங்குவது போன்ற ஃபீலிங் அஃப் ஈத்தீயப்பாஸ் தான்... :-))

ஏண்டா கேட்டேம் இவனேன்னு இருக்குமே... :-D

மங்கை said...

உஷா...உங்களுக்கும் மரணம் தன் இயாபகம் வருதா...ஹ்ம்ம்...

மங்கை said...

பங்காளி

போன ஜென்மம் எல்லாம் நியாபகம் வந்தா..அதுக்கு பேர் வேற... நீங்க தப்பிக்க தான பார்ப்பீங்க ..

காட்டாறு said...

//Thekkikattan|தெகா said...
கட்டில் போட்டு உறங்குவது போன்ற ஃபீலிங் அஃப் ஈத்தீயப்பாஸ் தான்... :-))

ஏண்டா கேட்டேம் இவனேன்னு இருக்குமே... :-D

//

அங்கப் போயும் தூக்கம் தானா அண்ணாச்சி? இதுக்கு சொர்க்கம் தேவையா?


//ஏண்டா கேட்டேம் இவனேன்னு இருக்குமே... :-D

//
நெனப்பு தான்... ஓ... இது memory trigger பதிவோ? ;-)

மங்கை said...

காட்டு ஆறு...

ஒழுங்கா எழுதற வழியப் பாரு...

மங்கை said...

தெகா...அந்த சொர்கத்துல மிதக்கறது??
காட்டாறு கேட்டாச்சு..

எல்லார்க்கும் மரணம் குறித்த நினைவுகள் இருக்கும் போல.. ஹ்ம்ம்

காட்டாறு said...

மங்கை யக்கோவ்... நம்ம முதல் மறுமொழியப் பாருங்க... எதுக்கு கஷ்டம்... நானே CAP செய்திருக்கேன்.
//காட்டாறு said...
யக்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....... உங்களுக்கே இது ஞாயமா? அடுத்த தொடர ஆரம்பிச்சி வச்சிட்டீங்களே...
//

முரளிகண்ணன் said...

உங்கள் பெயரை கேட்டவுடன் நான் சிறுவயதில் கிராமத்தில் படித்த மங்கை என்னும் புத்தகம் நினைவுக்கு வருகிறது

கோபிநாத் said...

\\காட்டாறு said...
//சரி இப்போ உங்களுக்கு இது மாதிரி "Memory Triggers" ஏதாவது இருந்தா அத இங்க எழுதுங்க மக்களே. இல்லைன்னா தனிப் பதிவா போடுங்களேன்.
//
யக்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....... உங்களுக்கே இது ஞாயமா? அடுத்த தொடர ஆரம்பிச்சி வச்சிட்டீங்களே... இங்க பாருங்க சிவபாலன் நல்ல சிஷ்யரா ஓடிப் போய் ஒரு பதிவை எழுதிட்டாரு....\\

ரிப்பீட்டேய்...

ஆனா இதுல ஒரு ஜாலி இருக்கு.....எல்லோரும் தங்களோட மலரும் நினைவுகளை சொல்லுவங்க ;)))

மங்கை said...

//vathilai murali said...
உங்கள் பெயரை கேட்டவுடன் நான் சிறுவயதில் கிராமத்தில் படித்த மங்கை என்னும் புத்தகம் நினைவுக்கு வருகிறது///

அது சரி...:-)))

மங்கை said...

கோபி..என்ன எல்லாரும் தப்பிக்கறீங்க.
எழுதுங்கப்பா....டாபிக் எடுத்து குடுத்தாலும் எழுத மாட்டேங்கிறீங்க..

கோபிநாத் said...

\\காட்டாறு said...
மங்கை யக்கோவ்... நம்ம முதல் மறுமொழியப் பாருங்க... எதுக்கு கஷ்டம்... நானே CAP செய்திருக்கேன்.
//காட்டாறு said...
யக்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....... உங்களுக்கே இது ஞாயமா? அடுத்த தொடர ஆரம்பிச்சி வச்சிட்டீங்களே...
//\\

என்ன காட்டாறுக்கா இப்படி சொல்லிட்டிங்க......பாசக்கார குடும்பம் கும்மி அடிச்சி எவ்வளவு நாள் ஆச்சு....சீக்கிரம் ஒரு பதிவு போடுங்க...வந்து கலக்கிடுவோம் ;))))))

TBCD said...

எனக்கு..சிக்கன் பார்த்தா சிக்கன் 65 ஞாபகம் வருது..அது இந்த ஆட்டத்தில சேர்த்தியா..

Unknown said...

முதன்முறையாக தங்கள் பிளாக் பார்க்கிறேன். அருமையான பதிவு. இதைப் படிக்கும் போது வைரமுத்து எழுதிய 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவலில் வரும் 'பேயத்தேவர்' பாத்திரம் தான் நினைவுக்கு வந்தது.

இறந்து போன தன் மனைவியின் சேலையை வெள்ளாமைக்கு கூட போடாமல் தினமும் இரவில் உறங்கும் போது போர்த்திக்கொண்டு தூங்குவார் பேயத் தேவர். வெள்ளாமைக்கு போட்டால் அந்த சேலையில் உள்ள மனைவியின் வாசனை போய்விடுமாம். அப்படி தூங்கும் போது தன் மனைவி தன்னுடன் இருப்பதைப் போல் உணர்வார்.

இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது.

சில வருடங்களுக்கு முன் விசுவின் 'அரட்டை அரங்கத்தில்' ஒரு பெண் சொன்ன விஷயம் என் மனதில் பாதிப்பை எற்படுத்தி என்றும் என் நினைவை விட்டு நீங்கா வண்ணம் பதிந்து விட்டது.

அந்த பெண் சொன்னதை அப்படியே தருகிறேன்….

“நான் குழந்தையாய் இருந்த போது (1 வயது) என் அம்மா இறந்துட்டாங்க. நான் அம்மாவுக்காக ஏங்கி அழும்போதெல்லாம் என் அப்பா எங்க அம்மாவோட புடவையை எடுத்து தன் மேல போர்த்திக்கிட்டு, “அம்மா வந்திருக்கேண்டா செல்லம்” னு என்னை எடுத்து தன் மார்பில் அணைத்துக்கொண்டு கொஞ்சி முதுகில் தட்டிக்கொடுப்பார். நானும் அம்மாவின் ஸ்பரிசத்தை உணர்ந்து அழுவதை நிறுத்திவிடுவேன். எனக்காக எங்க அப்பா மறுமணம் கூட செஞ்சுக்காம அப்பாவா மட்டும் இல்லாம அம்மாவாகவும் இருந்து தாய்மையை காட்டி வாழ்ந்துகிட்டு இருக்கிறார்”

புடவை தான் அம்மா. புடவையின் ஸ்பரிசம் தான் அம்மாவின் தழுவல். இதை நன்கு புரிந்து கொண்டு அந்த குழந்தையை தேற்றிய அப்பாவை என்னவென்று சொல்லி போற்றுவது?

மூர்த்தி

Unknown said...

உங்கள் மின்னஞ்சல் கிடைக்காததினால் இந்தப் பின்னூட்டம்.

தில்லியில் இருந்து வரும் வடக்கு வாசல் இதழ் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

பார்க்க வில்லை என்றால் முகவரி கிடைத்ததும் அனுப்பி வைக்கிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த இதழை நடத்தி வருகிறேன்.

என்னுடைய வலைத்தளம் - http://sanimoolai.blogspot.com

உங்களுடைய பதிவுகள் மிகவும் சுவாரசியமாகவும் மிகவும் நேர்மையாகவும் இருக்கின்றன.

வாழ்த்துக்கள்.

உங்கள் படைப்புக்களை வடக்கு வாசல் இதழுக்கும் அனுப்பலாமே.

என்னுடைய மின்னஞ்சல் vadakkukvaasal@gmail.com

முடிந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

ராகவன் தம்பி

மங்கை said...

நன்றி TBCD...

மிக்க நன்றி மூர்த்தி அவர்களே...

//'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவலில் வரும் 'பேயத்தேவர்' பாத்திரம் தான் நினைவுக்கு வந்தது///

நானும் இப்பொழுதான் இதைப்பற்றி கேள்விப்பட்டேன்...நன்றி மூர்த்தி அவர்களே..

மங்கை said...

ராகவன் தம்பி..

என்ன இப்படி கேட்டுட்டீங்க..:-)))
வடக்கு வாசல்..சனி மூலை பத்தி தெரியாத தமிழ்காரங்க தில்லியில இருப்பாங்களா என்ன??...உங்க பதிவுல ஒரு பின்னூட்டம் கூட போட்டேனே..

நான் வடக்கு வாசல் ஆண்டு சந்தா செலுத்தி தவறாம படிச்சுட்டு வரேன்.. நோய்டாவுல நான் இருக்குற இடத்துல வேற தமிழ் புத்தங்கள் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்...

அதனால உங்க வடக்கு வாசல் தான் எங்களுக்கு ஒரே 'வழி' :-))

சென்ற முறை பம்பாய் டிஎம்ஸ் வந்திருந்தார் இல்ல?...அப்ப தான் முதல் சந்தா செலுத்தினேன்... இப்ப மீண்டும் புதுப்பிக்கனும்...

நன்றி ராகவன் அவர்களே...அடிக்கடி வாங்க..எங்க வலைப் பதிவு பக்கம் எல்லாம்...

வசந்த் said...

Hey Nandhu (Cbe??)

Is that you?
i am SV

கொங்கு கோபி said...

நல்ல பதிவுங்க...எல்லாரையும் யோசிக்க வைக்கறீங்க...எனக்கு நினைத்தாலே இனிக்கும் படத்தில வரும் "பாரதி கண்ணம்மா" கேட்டா எங்க ஊருல இருக்கும் வேலவன் டூரிங் டாக்கீஸ்-ல படம் பார்த்த காலங்கள் நெனவுக்கு வருதுங்க..மீதி எல்லாத்தையும்தான் பதிவுல போட்றோமே...:-)..

மங்கை said...

வாங்க கோபி...சீக்கிறம் ஒரு பதிவு போடுங்க...எனக்கும் இந்த தட்டை முறுக்கு வாசனை..டூரிங்க டாக்கீஸ் நீயாபகம் வரும்...

TBCD said...

கேள்விக்கு பதில் சொல்லல...
சொல்லுங்க....சொல்லுங்க....:)))))

சேத்தியா..இல்லியா..?

//*மங்கை said...

நன்றி TBCD...*//

மங்கை said...

சிக்கன் பார்த்தா சிக்கன் 65 நியாபகம்தான் வரும்...இதெல்லாம் ஆட்டத்துல இல்லை...