Monday, March 22, 2010

Catch them young..?????

மேல் நிலை பள்ளிகளில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு அடிப்படை பாலியல் அறிவினை கற்பிக்க முயற்சிகள் நடந்ததும் அப்போது வந்த எதிர்ப்புகளும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

உளவியல் மட்டும் சமூகவியலாளர்கள் நீண்ட விவாதம் மற்றும் அராய்ச்சிக்குப் பின்னரே இந்த வளர் இளம் பருவ கல்விக்கான தேவையின் அவசியத்தை உறுதி செய்து செயல்படுத்த முடிவெடுத்தனர்.
நமது குழந்தைகள் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்சனைகளும் அதை அவர்கள் எதிர்கொள்ளும் வழியினையும் ஒரு பயிற்சி வகுப்பாக தொகுத்து இறுதி செய்தனர். இது முழுக்க நமது கலாச்சாரம் சமுதாய பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை மனதில் கொண்டே திட்டமிடப்பட்டது.

மேற்கூறிய வளர் இளம் பருவ கல்வி என்பது அந்த பருவத்திற்கே உரிய உடல் கூறு, பொதுவான ஆரோக்கியம் பாலுணர்வு சிந்தனைகள், உடல் அளவில் ஏற்படும் மாற்றங்கள், தவறான பழக்கங்கள், செயல்கள்,தீர்மானங்கள் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள், நோய்கள், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அதன் தொடர்ச்சியாக பதின்ம பருவத்தில் உடலுறவும், கர்ப்பம் தரித்தலும் ஆபத்தான ஒன்று என்பதை இந்த கல்வி எடுத்து கூறுகிறது. இத்தனை விசாலமான பார்வையுடன் திட்டமிட்ட போதும், வழக்கம் போல நம் கலாச்சார காவலர்கள் அலறி அடித்து ஓடு வந்து அதை முழுமையாக நிறைவேற்ற விடாமல் வெற்றிகரமாக நிறுத்தி விட்டனர்.

சரி இது இப்படி இருக்க நான் சமீபத்தில் படித்த ஒரு தெய்தி, இது டூ மச், த்ரீமச்னு நினைக்கத் தோன்றியது. மேற்கூறிய விழிப்புணர்வு கல்வியி்ல் ஆணுறை பற்றிய குறிப்பும் இடம் பெறுகிறது. மறுக்கவில்லை. ஆனால் இப்ப இந்த பதிவில் சொல்ல வந்த விஷயம் என்னன்னா சுவிட்சர்லாந்தில், காண்டம் தயாரிக்கும்
நிறுவனம் ஒன்று, உலகில் முதன்முறையாக 12 வயது சிறுவர்கள் பயன்படுத்தும் அளவில் சிறிய காண்டங்களைத் அறிமுகப் படுத்தியிருக்கிறது.

நான் 15 ஆண்டு காலமாக ஊர் ஊராக சென்று ஆணுறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவள் தான். இருந்தாலும் இந்த செய்தியை படித்தவுடன் என்னால் அதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை, ஒரே அடியாக இது தேவையில்லாத ஒன்று என்று ஒதுக்கவும் முடியவில்லை.

இதற்கு அந்த நிறுவனம் கொடுக்கும் விளக்கம், "சிறுவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை உணர்வதில்லை. அதன் விளைவுகள் பற்றியும் அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்கள் உடல் உறவு வைத்துக் கொள்ளும் டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பம் ஆனால், அது அவர்கள் பிரச்சனை என்று நினைக்கிறார்கள்".


இங்கிலாந்தில் 12 லிருந்து 14 வயது சிறுவர்கள் இப்போது உடலுறவில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது, இதனால் டீன் ஏஜ் கர்ப்பமும், முறையற்ற கருக்கலைப்பும் அதிகரித்துள்ளது. இந்த காரணங்களை முன் நிறுத்தி சிறிய அளவிலான காண்டங்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் டீன் கர்ப்பம், பாலியல் நோய்கள் போன்றவை அதிகரித்து உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது.
இந்த நிலவரத்தை மனதில் கொண்டு அந்த அரசு சி-கார்ட் என்ற ஒரு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை வைத்து தானியங்கி காண்டம் இயந்திரங்களில் காண்டங்களை எடுத்துக் கொள்ளலாம். மத அமைப்புகள் இதை பலமாக எதிர்த்து வருகின்றன.


ஆராய்ச்சி முடிவுகள் ஏற்படுத்தும் தேவைகளினால் அரசும் மற்ற நிறுவனங்களும் மேற்கொள்ளும் முயற்சிகள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் அடிப்படை ஒழுக்கம் வாழ்க்கை குறித்த பொறுப்புணர்ச்சியும், சரியான கண்ணோட்டமும் இளைஞர்களுக்குள் வளர செய்வதே இந்த பிரச்சனைக்கு ஒரு சரியான தீர்வாக இருக்கும் என்பது என் கருத்து.

Monday, March 08, 2010

விருட்சங்களுக்கு வாழ்த்துக்கள்குஜராத் மாநிலம் பாவ்நகர் ரயில்நிலையத்தில் மற்ற எந்த இடத்திலும் காண இயலாத ஒரு காட்சியை காணலாம். பொதுவாக லக்கேஜ்களை தூக்க ஆண்கள் தான் சிவப்பு நிற சட்டை அணிந்து கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். பாவ்நகர் ரயில்நிலையத்தில் லக்கேஜ்களை தூக்க சிவப்பு நிற ஆடையில் பெண்களை பார்க்கலாம். சுமார் முப்பது பெண்கள் இங்கு கூலி வேலை பார்க்கிறார்கள். சிலர் தலைமுறை தலைமுறையாக இந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.


ஒரு நூற்றாண்டிற்கு முன்பு இந்த பகுதியை ஆண்டு வந்த ராஜா மஹாரானா கிருஷ்ன பிரதாப் சிங், பெண் போர்ட்டர்களை நியமித்து பெண்களுக்கு ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். அது இப்பொழுதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியும் போது, அந்த அரசனையும் பெண்களையும் வாழ்த்த தோன்றுகிறது.


முன்னோர்கள் போட்ட நம்பிக்கை என்ற விதை இன்று விருட்சமாக பெண்களான எங்களுக்குள் வளர்ந்து நிற்கிறது
.

பெண்களின் உழைப்பிற்கும் உணர்வுகளுக்கும் ஒரு அங்கீகாரம் கொடுப்போம்.

உழைக்கும் பெண்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

Wednesday, March 03, 2010

போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்கைய்யா


ஆன்மீகத்தில் தேடல், பசி, தாகம்,ஈரவெங்காயம் எல்லாம் அதிகரிச்சு போயிருச்சு.. இதுக்குன்னு ஒரு கூட்டம் சுத்தீட்டே இருக்கு..யாரு புதுசா காவி கட்டீட்டு வருவாங்கன்னு... புரியாத பாஷையில பேசுற ஆளாக்கு கிராக்கி ஜாஸ்தி..

யோகா, தியானத்தை சொல்லி குடுக்கறதுக்கு நல்ல மனுஷங்க எவ்வளோ பேர் இருக்காங்க..அவங்க கிட்ட போங்கய்யா..

ஆன்மீகத்தை ஊர் ஊரா, வீதி வீதியா கூவி விக்க ஆரம்பிச்சுட்டாங்க...அது தரம் பிரித்து வாங்க நமக்கு பத்தாது...

அதுனால.. போங்க போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்க..(டேங்ஸ் வடிவேலு)...நாலு வார்த்தை நல்ல வார்த்தை சொல்லி வளர்த்துங்க.. அது போதும்...


(படத்துல காஸ்ட்யூம் பாருங்க..ஹ்ம்ம்ம்)