Tuesday, July 03, 2007

எட்டுனதும் எட்டாததும்

மீண்டும் நான் தானுங்கோவ்....தலை எழுத்து தான்...என்ன பண்ண...இந்த செயின் ஆட்டத்த கொஞ்ச நாளைக்கு நிறுத்து சொல்லுங்கப்பா...நமக்கே மேல் மாடி காலி.

நாலு பேர் நம்மள கூப்டுட்டாங்க, அந்த மரியாதைக்காக இந்த பதிவு.. நன்றி எல்லாம் சொல்ல மாட்டேன் பத்மா, கவிதா, உஷா, சந்தோஷ் :-))

1) பரதநாட்டியம்.

ஸ்கூல்ல படிக்கும் போது பரத நாட்டியம் கத்துக்கனும்னு ஆசை. எங்க ஸ்கூல்லேயே கத்துக்கலாம்னு டான்ஸ் மாஸ்டர் கிட்ட போய் கேட்டா, பொண்ணு ஒல்லியா இருக்குன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டார். ஆனா அழுது, புரண்டு எப்படியோ சேர்ந்துட்டேன் . டான்ஸ் டிராமால நிறைய நகை எல்லாம் போட்டு ராணி வேஷம், சாமி வேஷம் போடனும்னு ஆசை. ஸ்கூல் டேல கலந்துக்கலாம்னா நாம Don Quixsot மாதிரி இருந்ததுனால எந்த வேஷமும் ஒத்து வரலை. இருந்தாலும் பாவம்னு ஒரு வேஷத்த குடுத்தாங்க. என்ன வேஷம்?... தெரிஞ்சக்கனும்னு ரொம்ப ஆவலா இருக்கீங்க இல்ல.. இருங்க இருங்க...

இந்திய வரலாற்றில் தனக்குன்னு ஒரு 'தனி இடத்த' பிடிச்சு இருக்குற ஒரே கதாபாத்திரம். அதாங்க 'சாமரம்' வீசுர பொண்ணு. அதுவும் ராணி யாரு தெரியுங்களா, நம்ம எனிமி. வந்ததே எனக்கு கோபம். என்ன ஆனாலும் சரி நான் சாமரம் வீச மாட்டேன்னு சொல்லிட்டேன். டேன்ஸ் மாஸ்டர் இவ கூட பெரிய வம்பா போச்சேன்னு , ''சரி சரி வள்ளித் திருமணத்துல முருகர் கிழவனா வருவாரே அந்த வேஷம் தான் குடுக்க முடியும். வேனும்னா பண்ணு , இல்லன்னா ஓடிப் போ'' ன்னு சொல்லிட்டார். எனிமிக்கு சாமரம் வீசரதுக்கு இது எவ்வளவோ பெட்டர்னு கிழவன் வேஷம் போட்டேன். எப்படியோ மேடை ஏறி எனிமிய விட ஒசத்தியான பாத்திரத்துல நடிச்சு சாதனை புரிஞ்சுட்டேன்.

2) சைக்கிள் யாத்திரை.
NCCல சேர்ந்து கோவைல இருந்து திருமூர்த்தி மலைக்கு சைக்கிள் யாத்திரை போனது சுவாரஸ்யமான விஷயம். எல்லா காலேஜ் பொண்ணுகளும் சேர்ந்து போனோம். ஜூலை மாசம் வேற, பொள்ளாச்சி தாண்டின பிறகு ஒரே மழை. எங்க க்ரூப் ஒரு 6 பேர் மட்டும் பின்னாடி மாட்டிக்கிட்டோம். எங்க கூடவே ஒரு ட்ரக் வந்துட்டு இருந்துச்சு. அதுல இருந்த NCC ஆபீஸர், ''இதுக்கு தான் கிருஷ்னம்மாள் காலேஜ் பொண்ணுகளே வேண்டாம்னு சொல்றது, இனி அரை மணி நேரத்துல உடுமைலைல இருக்கனும்'' னு மிரட்டீட்டு போயிட்டார். . நாங்க கோவத்துல 'சார் அரை மணி நேரத்துல இருக்கோம் பாருங்க' ன்னு சவால் விட்டுட்டோம். ஆனா எப்படி போறதுன்னு தெரியலை.. இன்னும் ரொம்ப தூரம் இருக்கு. கால் வலியில சைக்கிள் மிதிக்கவே முடியலை. ஆனாலும் போயிட்டோம். எப்படி?.எத்தன லாரி போகுது அந்த ரோட்ல.. :-)) ..எங்கள பார்த்த அபீஸர், எப்படிம்மா இவ்வளோ சீக்கிரம் வந்தீங்க, நிஜமாவே சாதனை தான்னு ஒரே பாராட்டு மழை.


3) நம்ம தமிழ் புலமை.

தமிழ்ல எழுதறப்போ இந்த ழ ல எப்பவும் நமக்கு பிரச்சனை தான். வல்லினமா, மெல்லினமா இடையினமான்னு கேக்க தெரியாது. ஸ்கூல படிக்கும் போது அண்ணா கிட்ட, "எந்த ள/ல?... School க்கு வர்ர ள வா இல்ல lizard க்கு வர்ர ல வான்னு கேட்டு, அவர டென்ஷன் படுத்திய புத்திசாலி. நீங்க எல்லாம் என்ன பாவம் பண்ணீங்களோ, நானும் தமிழ்ல எழுதி, அத நீங்க எல்லாம் படிச்சி, 2006 ஆம் ஆண்டு Indi blogs லிஸ்ட்ல வேற நம்ம பிளாக் வந்ததும் எனக்கு ஹார்ட் ஆட்டாக் வந்துடுச்சு. எனக்கு சாதனை..உங்களுக்கு வேதனை.

4) எழுத வந்ததே பெரிய விஷயம் இதுல போன வாரம் நட்சத்திரம் வேற. எழுத வந்த புதுசுல நாம் எல்லாம் எந்த காலத்துல நட்சத்திரம் ஆகப் போறோம்னு நினச்சதுண்டு.

இப்ப நம்ம மேட்டர்

5) பிரதீபா திட்டம்- ஆசியாவிலேயெ முதல் முறையா பெண் மதத் தலைவர்களுக்கு பயிற்சி கொடுத்து எய்ட்ஸ் விழிப்புணர்வுல ஈடுபடுத்துற ஒரு திட்டத்த ஆரம்பிச்சு இருக்கேன். பொது மக்களுக்கு மருத்துவ சேவை செய்யும் 250 பெண்களை அடையாளம் கண்டு, பயிற்சி குடுத்து இருக்கேன். இந்த வருஷ கடைசிக்குள்ள இன்னும் 250 பெண்களை அடையாளம் கண்டு பயிற்சி கொடுக்கனும்.

6) எச்ஐவி/ எய்ட்ஸ் பற்றிய குறும்படம்- சமீபத்துல சந்தோஷத்தை கொடுத்தது, நான் ரொம்ப நாளா எதிர் பார்த்திருந்த ஒரு திட்டம், UNICEF மூலமா கிடைச்சு இருக்கு. எச்ஐவியால பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஒரு குறும்படம் தயாரிக்க எனக்கு வாய்ப்பு கிடைச்சு இருக்கு. அதற்கான பணியும் துவங்கியாச்சு.

7) எட்டாத ஆசை ஒன்னு இருக்குங்க. பாடனும்னு எனக்கு ஆசை....அட இருங்க இருங்க..ஓடாதீங்க...ரிலேக்ஸ். முதல்ல என் கினி பிக் லட்சுமி கிட்ட பாடி காமிச்சுட்டு அப்புறம் தான் உங்க கிட்ட வருவேன். அதுனால யாரும் ஓட வேண்டாம்.

இன்னும் என்னத்த சேர்த்தறது..டான்ஸ்ல இருந்து உடான்ஸ் வரைக்கும் எல்லாத்தையும் சேர்த்தாச்சு.....அவ்ளோ தாங்க...பொழச்சு போங்க.

37 comments:

அபி அப்பா said...

வாங் அம்ணி!

அபி அப்பா said...

அப்ப நீங்களும் ஏழு ஸ்வரம்தானா! அதவிடுங்க, நீங்க சைக்கிள் ஓட்டினதுக்கே இத்தினி பில்டப்பா, நான் ஹெலிகாப்டர், பிளேன்,ட்ரெயின் எல்லாம் ஓட்டுவேன். அது ஒரு கனா காலம். இப்ப என் பொண்ணு ஓட்டறா. ஹும்:-))

Chinna Ammini said...

நானுங்கூட தான் பாடுவேன். கேட்டுட்டு ஓடறதும் ஓடாததும் அவங்கவங்க இஷ்டம்

Chinna Ammini said...

அபி அப்பா, மங்கை சைக்கிள் ஓட்டுனது எத்தன கிலோமீட்டர்னு சொல்ல மறந்துட்டாங்க. பஸ்ல கார்ல போனாலே 2 மணிநேரம்மாகும் திருமூர்த்தி மலைக்குப்போக‌

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா 7 போட்டுட்டீங்களா...அதானே நாமெல்லாம் என்னைக்கு அடுத்தவங்க பேச்சை க் கேட்டுருக்கோம்..அது என்ன என்னை சோதனை எலி ஆக்கிட்டீங்க..பாட்டை கேட்க நான் தானா..சரி சரி இப்படியே ஒருத்தருக்கொருத்தர்..உதவி யா இருக்கலாம் .

குசும்பன் said...

அதுல இருந்த NCC ஆபீஸர், ''இதுக்கு தான் கிருஷ்னம்மாள் காலேஜ் பொண்ணுகளே வேண்டாம்னு சொல்றது, இனி அரை மணி நேரத்துல உடுமைலைல இருக்கனும்'' னு மிரட்டீட்டு போயிட்டார். .
எப்படி?.எத்தன லாரி போகு
து அந்த ரோட்ல.. :-)) ..

அந்த NCC ஆபிசர் நான் தான் என்னையே ஏம்மாத்திட்டீங்களா, அதுக்கு தண்டனையா...திரும்ப ஒரு பத்து தடவை திருமலைய சுத்திவாங்க...

நல்ல 7 போட்டு இருக்கீங்க

வல்லிசிம்ஹன் said...

எட்டிப் போட்டுட்டீங்களா.

ஹப்பா.....

சாதனைப் பெண்கள் வரிசையா வராங்க.
அருணா பதிவிலதான் பின்னூட்டம் ஏற மாட்டேங்குது.
உங்களுக்கு வாழ்த்துக்கள் மங்கை.
எனக்குத் தெரியாத உங்கள் உலகை அறிமுகம் செய்ததற்கு மிக நன்றி. லாரிலேயேதிருமூர்த்தி போய்ட்டீங்களா.

நாங்க கூட அன்னிக்கு அணைக்கட்டு பாக்க வந்திருந்தோம்.நீங்க அந்த ரெட்டைசடை போட்டு காக்கி யூனிஃபார்ம் போட்டு இருந்தீங்களோ.:)))))))

Anonymous said...

குரும்படத்துக்கு இசையமைக்க நான் ரெடி, நீங்க ரெடியா?

அயன் உலகம் said...

அது என்ன அது எட்டு போட சொன்னா ஏழு போட்டு இருக்கீங்க...

இந்தா இப்போ நான் freshaa உங்களை எட்டு போட அழைக்கல சரியா?

http://ayanulagam.wordpress.com/2007/07/03/8game/

Aruna Srinivasan said...

//எப்படி?.எத்தன லாரி போகுது அந்த ரோட்ல.. :-)) ..//

:-) :-) அதானே..!!

//ஸ்கூல படிக்கும் போது அண்ணா கிட்ட, "எந்த ள/ல?... School க்கு வர்ர ள வா இல்ல lizard க்கு வர்ர ல வான்னு கேட்டு, அவர டென்ஷன் படுத்திய புத்திசாலி.//

இப்போ எனக்கு நிஜமாவே சந்தேகம் ஸ்கூல் - 'ல' வும் 'பல்லி' 'ல' வும் ஒண்ணேதானே !! உங்கள் டென்ஷன் ஏறுதா பார்க்கலாம் :-)

கோபிநாத் said...

எல்லா அக்காவும் சும்மா பாட்டு, டான்ஸ்ன்னு கலக்குறிங்க ;)))

உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;))

Anonymous said...

//6) எச்ஐவி/ எய்ட்ஸ் பற்றிய குறும்படம்- சமீபத்துல சந்தோஷத்தை கொடுத்தது, நான் ரொம்ப நாளா எதிர் பார்த்திருந்த ஒரு திட்டம், UNICEF மூலமா கிடைச்சு இருக்கு. எச்ஐவியால பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஒரு குறும்படம் தயாரிக்க எனக்கு வாய்ப்பு கிடைச்சு இருக்கு. அதற்கான பணியும் துவங்கியாச்சு. //

பிரமிப்பூட்டும் செய்தி..
மேலும் பல எல்லைகள் கடந்து செல்ல வாழ்த்துக்கள் சகோதரி...


சென்ஷி

Thekkikattan|தெகா said...

:-))) நல்ல சிரிச்சு வைச்சேன். பரவாயில்ல ரொம்ப்ப பர்சனலாக போகமல் ஜெண்டிலாக முடிச்சிக்கிட்டீங்க... நான் மாட்டீக்கிட்டேனே... ஓட்டை வாய வச்சுக்கிட்டு :-)) என் எட்டுல...

Anonymous said...

சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டுன பாக்கி இருக்கே....ம்ம்ம், எப்ப தர்றதா உத்தேசம்.

Santhosh said...

என்னங்க எட்டு போட சொன்னா ஏழோட முடிச்சிடிங்க.. ஆனாலும் நல்ல ஏழு தான்..

Santhosh said...

//6) எச்ஐவி/ எய்ட்ஸ் பற்றிய குறும்படம்- சமீபத்துல சந்தோஷத்தை கொடுத்தது, நான் ரொம்ப நாளா எதிர் பார்த்திருந்த ஒரு திட்டம், UNICEF மூலமா கிடைச்சு இருக்கு. எச்ஐவியால பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஒரு குறும்படம் தயாரிக்க எனக்கு வாய்ப்பு கிடைச்சு இருக்கு. அதற்கான பணியும் துவங்கியாச்சு. //

நல்ல முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் ..

Santhosh said...

///எட்டாத ஆசை ஒன்னு இருக்குங்க. பாடனும்னு எனக்கு ஆசை....அட இருங்க இருங்க..ஓடாதீங்க...ரிலேக்ஸ். முதல்ல என் கினி பிக் லட்சுமி கிட்ட பாடி காமிச்சுட்டு அப்புறம் தான் உங்க கிட்ட வருவேன். அதுனால யாரும் ஓட வேண்டாம்.//
நீங்க மட்டும் இல்ல ஒரு கூட்டமே இப்படி கிளம்பி இருக்கு.. mic பாவம் speaker பாவம் காது பாவம்.. :))..

மங்கை said...

அபி அப்பா...

நீங்க மாயவரத்துல கப்பல் ஓட்டுனவர் இல்ல?...நாங்க எல்லாம் எம்மாத்திரம்


வாங்க சின்ன அம்மினி..
அதான எத்தன கிமி சொல்லாம விட்டு பாருங்க.. இவங்க பிளேன் ஓட்டுனதையெல்லாம் நம்ம லிஸ்ட சேர்க்கறாங்க

ஓ நீங்களும் பாடுறதுல நம்ம கேஸா..குட் குட்

லட்சுமி
//சரி சரி இப்படியே ஒருத்தருக்கொருத்தர்..உதவி யா இருக்கலாம்//

ஹி ஹி..ரங்கமனிக ஓடாம இருந்தா சரி

மங்கை said...

குசும்பன்.
நாங்க மலைய சுத்தனுமா
அதுக்கெல்லாம் வேற ஆள பாருங்க:-))

மங்கை said...

வல்லிம்மா
//நாங்க கூட அன்னிக்கு அணைக்கட்டு பாக்க வந்திருந்தோம்.நீங்க அந்த ரெட்டைசடை போட்டு காக்கி யூனிஃபார்ம் போட்டு இருந்தீங்களோ.:)))))))//

அதே அதே..குச்சி ஐஸ்க்ரீம் கையில இல்லம்மா?..:-)))))

ரொமப் நன்றிம்மா

மங்கை said...

எட்டியவரே

என்னை பாட வைப்பீங்களா??...அப்ப நீங்க தான் என்னோட ஆஸ்தான இசை அமைப்பாளர். எனக்காக
ஃப்ரீயா தான் பண்ணுவீங்க..:-)))

மங்கை said...

கார்த்தி...அந்த ஏழு போடறுக்குள்ளேயே ஹ்ம்ம்ம்ம்...

மங்கை said...

அருணா

என்னோட தமிழ் புலமை பத்தி உங்களுக்கு தெரியாது... இதுக்கெல்லாம் நாங்க அசைய மாட்டோம்..:-))))

மங்கை said...

நன்றி கோபி... சென்ஷி

மங்கை said...

வாங்க தெகா

அதான் தெரிஞ்ச விஷயமாச்சே..:-))

நீங்களாவது சிரிச்சீங்களே...:-))).

மங்கை said...

//ஆல் இன் ஆல் அழகுராஜா said...
சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டுன பாக்கி இருக்கே....ம்ம்ம், எப்ப தர்றதா உத்தேசம். ////

ராஜா

என் கூட வந்த பொண்ண பார்த்து ஜொள்ளு விட்டுட்டு ..நீங்க தான வேண்டாம்னு சொன்னீங்க..:-)))

மங்கை said...

வாங்க சந்தோஷ்..நன்றி

யாரு பாவம்னா எங்களுக்கு என்ன... நாங்க பாடிட்டேதான் இருப்போம்..

காட்டாறு said...

ராசாத்தீ.... எட்டா ஏழா போட்டே சாதிச்சிட்டியேம்மா.... அது சரி முத்துலெட்சுமி யக்கா வந்ததும் வராததுமா பாடி ஓட வச்சிருவீங்கன்னு பார்த்தா... அவங்க ரெடியா வரிஞ்சி கட்டிட்டு இருக்காங்க... எங்க பாடு திண்டாட்டமோய். ;-)

ramachandranusha(உஷா) said...

மங்கை, ஸ்டார் வாரம் அருமையாய் இருந்தது. எட்டில் நீங்கள் செய்துக் கொண்டிருக்கும் சமூதாய பணிகள் பிரமிப்பூட்டும்படி இருக்கிறது. ஆனால் இனி செய்ய நினைத்திருக்கும் எட்டாத முயற்சி மட்டும் நிறைவேறுமா என்பது சந்தேகம். ஏன் என்றாலும் எனக்கு
அந்த விபரீத ஆசையுண்டு :-)

மங்கை said...

ராசாத்தீ...லட்சுமிக்கு அடுத்து நீ தான்
ஓட எல்லாம் பார்க்காத..பாடித்தான் தீருவேன்..அது நீங்க கேட்டு தான் ஆகனும்..:-))

மங்கை said...

உஷா..இல்ல உஷா...பாடீறதுன்னு முடிவு பண்ணிட்டேன்... உங்களுக்கெல்லாம் வேற வழி இல்லை...:-))

delphine said...

aids programme க்கு நீ்ங்க எடுக்கிற சிரத்தை ..எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு மங்கை...அதுவும் அந்த மீனா... பாவம்..

பரதநாட்டியம்....
நான் கற்றுக்கொண்டேன்...
மலைப்பாக இருக்குது இப்போது நினைத்தாலும்..

ஜே கே | J K said...

முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

மங்கை said...

வாங்க டெல்ஃபின்....நன்றி...நீங்களும் பரத நாட்டியம் கத்துட்டீங்களா...குட் குட்

நன்றி JK

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

:)

oru chinna information.
la, La, zha ellaamae idaiyinam-thaan. vallinam, mellinam illai.

வவ்வால் said...

நீங்க 8 க்கு பதிலா 7 போட்டாலும் உங்க பதிவு 8ஸ் தான் , அதான் எய்ட்ஸ் பத்தி படம் காட்டப்போறிங்களே( அதில எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் டயலாக் இருக்கா)

காரூரன் said...

மங்கை,

இந்த எட்டு விளையாட்டு, ரொரன்ரோவிலிருந்து டெல்லி வரைக்கும் வரவச்சிருக்கு, பொது நலம் சம்பந்தமான விழிப்புணர்ச்சியூட்டுவதற்கு எனது வாழ்த்துக்கள்.