Monday, August 27, 2007

''Couvade syndrome'' - ஆண்களுக்கு வரும் மசக்கை

(டிஸ்கி - டாக்டரம்மா....நான் சொல்ற மேட்டர்ல தப்பிருந்தா கண்டுக்காம ஒரு ஸ்மைலி மட்டும் போட்டு விட்டுடுங்க.....சபையில் கால வாரி விட்டறாதீங்க.)

மாப்பிள்ளைகளெல்லாம் ஒரு உம்மைய சொல்லோனும். ..பொய் சொல்லாம, வெக்கப் படாம சொல்லனும். Yester year மாப்பிள்ளைகளுக்கெல்லாம் டைம் தர்ரேன் யோசிச்சு சொல்லுங்க.

இது தான் மேட்டர். தங்கமணி கருவுற்றிருக்கும்போது, இந்த மார்னிங்க் சிக்னஸ் னு சொல்லுவாங்களே அது உங்களுக்கும் இருந்துச்சா..

அட அமாங்க நெசமாத்தான். மனைவி கர்பமா இருக்கும் போது, மூனாவது வாரத்துல இருந்து கணவனுக்கும் இது மாதிரி '' morning sickness'' வரும்னு ஒரு கருத்து இருக்கு. இதுக்கு பேர் ''Couvade syndrome''. Couvade (to hatch) ஒரு ஃப்ரென்ச் வார்த்தை. ( இது தான் எங்களுக்கு தெரியுமேனு சொல்றவுங்க, உங்களுக்கு இப்படி இருந்துச்சானு மட்டும் சொல்லுங்க)

இது மேலை நாடுகள்ல தான் நிறைய இருக்குன்னு ஆராய்ச்சிகள் சொல்லுது. அது எப்படி??....அப்ப நம்ம ஊர்ல ரங்கமணிக எல்லாம் தங்கமணிகள் மேல அக்கறை இல்லையா என்ன?...நீங்க தான் சாமி சொல்லோனும்.

Now jokes apart..இப்ப இந்த சின்றோம் இன் அறிகுறி என்னன்னு பார்க்கலாம். எடை கூடுதல், வயிறு குமட்டல், தூக்கம், அதிகமான பசி போன்ற மாற்றங்கள் கணவனுக்கு ஏற்படுமாம்.

இப்படி ஒன்னு இருக்குறத பலர் ஒத்துகறதில்லை. ஆனா ஆதாரத்துக்கு ஆராய்ச்சி முடிவுகள் பல இருக்கு. இதுல முக்கியமான விஷயம் பல நாட்கள் குழந்தைகள் இல்லாம இருந்து பிறகு இந்த பாக்கியம் கிடைத்த ஆண்களுக்கு இது மாதிரி பெரும்பாலும் நடக்கும்னு ஆராய்ச்சி சொல்லுது.

மனைவிக்கு கர்பகாலத்துல ஏற்படுற சில கஷ்டங்களைப் பார்த்து ஆண்களுக்கு மனசுல ஏற்படுற கலக்கம் தான் இதுக்கு அடிப்படை காரணம்னு கருதப்பட்டாலும்..இன்னும் நிறைய காரணங்கள் இருக்கு.

இந்த சிம்பதி பெயின் (Sympathy pain) உளவியல் சம்பந்தப்பட்ட ஒன்றாக இருந்தாலும் ஹார்மோன் மாற்றங்களும் இருக்கத்தான் செய்கிறது என்றும் சில ஆராய்ச்சிகள் சொல்லுது. உளவியல் அல்லாமல் உடலியல் மாற்றங்களினால் மட்டுமே ஏற்படக்கூடிய அறிகுறிகளும் பலருக்கு ஏற்படறதுனால இதுல ஹார்மோன்களுக்கும் பங்கு இருக்குன்னு சொல்றாங்க. தன்னோட வாரிசுங்குற ஒரு பெருமை, தானும் இதுல பங்கெடுத்துக்கனும்னு ஆசை இது போல பல காரணங்கள்.

ஆராய்ச்சியில கலந்துக்கிட்ட கணவன்மார்கள் '' எங்களுக்கும் இது மாதிரி மாற்றங்கள் ஏற்பட்டது பெருமையா இருக்குது'' ன்னு சொல்லி இருக்காங்க. இது மனைவிமார்களுக்கு தெரிய வரும்போது ரொம்ப சந்தோஷப் பட்டாங்களாம்.



இது பல ஆராய்ச்சியில நிருபனம் ஆகியிருந்தாலும் இதற்கான சரியான காரணம் ஒரு முடிவுக்கு வராமதான் இருக்கு.

39 comments:

சிவபாலன் said...

இது எப்படி என்றால் ஒருத்தருக்கு கொட்டாவி வந்தால் அருகில் இருக்கும் மற்றவரும் வருகிறது அல்லவா? அது மாதிரி இதுவும் சொல்லலாம்...

எனக்கு ரொம்ப நாள் ஆனதால் மறந்துவிட்டது..

ஆனால் இதை மறுப்பதற்கில்லை.. Hi Hi Hi..


----------


மங்கை,

சூப்பர் பதிவு! கலக்கிடீங்க.. எப்படி இப்படி எல்லாம்..

ஆமா நம்ம சாருக்கு எப்படி இருந்தது என பதிவில் சொல்லவே இல்லையே.. Ha Ha Ha..

காட்டாறு said...

//ஆராய்ச்சியில கலந்துக்கிட்ட கணவன்மார்கள் '' எங்களுக்கும் இது மாதிரி மாற்றங்கள் ஏற்பட்டது பெருமையா இருக்குது'' ன்னு சொல்லி இருக்காங்க. இது மனைவிமார்களுக்கு தெரிய வரும்போது ரொம்ப சந்தோஷப் பட்டாங்களாம்.
//
ஆஹா... நம்மூட்டு ஆளுங்களுக்கு மனசை தொறந்து சொல்லணுமின்னாலே அழுகாச்சியா வந்துருமே. ;-)

காட்டாறு said...

சிவபாலன் சொன்ன மாதிரி... ஏனுங்கோவ் நம்ம சாரின் அனுபவாத்தைப் பத்தி எழுதல.

இலவசக்கொத்தனார் said...

அப்படி ஒண்ணும் இருந்ததா ஞாபகம் இல்லையே.... (தங்கமணி பதிவெல்லாம் படிக்க மாட்டாங்க. தைரியமா உண்மையைச் சொல்லலாமுல்ல!!)

மங்கை said...

சிவா..

கேள்வி கேட்டா பதில் மட்டும் சொல்லோனுமாக்கும்..திருப்பி கேள்வியெல்லாம் கேட்க கூடாது..:-))

///எனக்கு ரொம்ப நாள் ஆனதால் மறந்துவிட்டது..
ஆனால் இதை மறுப்பதற்கில்லை.. Hi Hi Hi..//

இது என்ன?...மறந்துருச்சு...ஆனா மறுப்பதிற்கில்லை...ஹ்ம்ம் ஒத்துக்குங்க சாமி..:-))

மங்கை said...

தாயே...

உணக்கு இருக்கு இரு... உன்னை அப்புறம் கவனிச்சுக்குறேன்..

ஆனாலும் ஒரு உண்மைய சொல்லிட்டே
:-))

மங்கை said...

டாக்டரம்மா..

நீங்களுமா...சொ.செ.சூ வச்சுட்டனே

//அது மனைவி கர்ப்பமாக இருக்கும்போது அவங்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்து, கணவன்மார்களும் சேர்ந்து சாப்பிடுவதால்தான்//

இவ்வளவு தானா...ஆஹா.... ச்சப்புன்னு ஆக்கிடீங்களே.. அதானே பார்த்தேன்...என்னடானு..:-))

மங்கை said...

இது தான் மனைவியோடு சேர்ந்து கனவான்களும் (கணவர்களும்) உண்டாவதின்........ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச... குண்டாவதின் ரகசியமா

டாக்டரம்மா டேங்க்ஸ்..:-))

கண்மணி/kanmani said...

மங்கை டாக்டர் சொல்ற மாதிரி பொண்ணுங்க தாய் வீட்டுக்குப் போயிடறதாலே ஆண்களுக்கு தங்களுடைய சொந்த கைச் சமையல் இல்லாட்டி ஹோட்டல் சாப்பாட்டால் வாந்தி மயக்கம் வரலாம்...ஹாஹாஅஹா;))
ஒத்துக்க மாட்டாங்களே

மங்கை said...

//இலவசக்கொத்தனார் said...
அப்படி ஒண்ணும் இருந்ததா ஞாபகம் இல்லையே.... (தங்கமணி பதிவெல்லாம் படிக்க மாட்டாங்க. தைரியமா உண்மையைச் சொல்லலாமுல்ல!!)//

கொத்தனாரே இப்ப தான் ஒவ்வொரு உண்மையா வருது...:-))..என்ன வேனாலும் சொல்லலாம்..

மங்கை said...

கண்மணி

கரெக்டா சொல்லிட்டீங்களே... பாருங்க எல்லாரும் சேர்ந்து என்ன கும்ம போறாங்க..:-)))

காட்டாறு said...

இதோ இங்கே பாருங்க மங்கை...
http://www.sympathypain.com/

எப்படி ஒருத்தர் புட்டு புட்டு வச்சிருக்காருன்னு பார்த்தீங்களா? நம்ம பதிவுலகில் யாராவது எழுதுவாங்களா இது போல் (தங்கமணிட்ட அடி வாங்காமத் தான்!)?

பங்காளி... said...

என்னை மாதிரி ச்சின்ன பசங்களுக்கு கூட புரியற மாதிரி எளுதிருக்கீங்க...

ஆமா...தெரியாமத்தான் கேக்றேன்...இந்த மாதிரி மேட்டர் எல்லாம் எங்க புடிக்கிறீங்க...

நல்லாருக்கு மங்கை...ஆடிக்கொன்னு..அம்மாவாசைக்கொன்னுன்னு எளுதாம அடிக்கடி எளுதுங்க...

வவ்வால் said...

நான் வழக்கமா குவாட்டர் அடிப்பேன் எக்ஸ்ட்ராவா ரெண்டு லார்ஜ் சேத்து அடிச்சா இப்படி தான் கொமட்டும், அதுக்கும் இதுக்கும் எதுனா சம்பந்தம் இருக்கா(பம்மல்.கே.சம்பந்தம் விசிடி இருக்கா கேட்கலை)இத்தினிக்கும் நான் ஒண்டிக்கட்டைங்கோ!

Anonymous said...

மங்கை, இத நானும் கேள்விப்பட்டிருக்கேன். மனைவிய எல்லாரும் கவனிச்சுக்கராங்க. நம்மள கண்டுக்கவே மாட்டெங்கிறாங்கன்னு ஒரு சைக்காலஜிக்கல் விளைவோ

Anandha Loganathan said...

ஞாபகம் எதுவும் இல்லை. அவங்க ஒரு இட்லி சாப்பிட்டுவிட்டு அதுக்கு 4 தடவை வாந்தி எடுத்தா அதை கவனிக்க தான் முடியும். நமக்கு எற்படுகிற மாற்றத்தை எல்லாம் கவனிக்க டைம் இல்லீங்கோ.

துளசி கோபால் said...

இது உண்மையாத்தான் இருக்கும்.
இல்லேன்னா 'குறத்தி புள்ளை பெத்தா குறவன் பத்தியம் இருப்பான்' என்ற பழமொழி
எப்படி வந்துருக்கும்?

Unknown said...

//மனைவிக்கு கர்பகாலத்துல ஏற்படுற சில கஷ்டங்களைப் பார்த்து ஆண்களுக்கு மனசுல ஏற்படுற கலக்கம் தான் இதுக்கு அடிப்படை காரணம்னு கருதப்பட்டாலும்//

ஆமா ஆமா, எனக்கும் அந்த அறிகுறி இருந்துச்சு :)

தங்கமணி, என் பின்னூட்டத்த கண்டிப்பா படிக்கும்கிற நம்பிக்கைதான்!!

உண்மையான பதில்: எனக்கு அந்த மாதிரி ஆனதா நியாபகம் இல்லைங்க.

//'குறத்தி புள்ளை பெத்தா குறவன் பத்தியம் இருப்பான்'//

நான் என் கிராமத்துல அடிக்கடி கேட்ருக்கேன்.

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

இதனால் சகல பெண்களும் அறிய வேண்டியது...
ஆண்களும் இளகிய மனம் கொண்டவர்கள் :)
பெரியவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று வேடிக்கை பார்க்கிறேன் :)
ஓரு வருகை பதிவு மட்டும்

மங்கை said...

//என்னை மாதிரி ச்சின்ன பசங்களுக்கு கூட புரியற மாதிரி எளுதிருக்கீங்க...//

இதை நீங்க சொல்றதுக்கு இன்னொரு வாய்ப்ப நானே ஏற்படுத்தி குடுட்டேன்..

மங்கை said...

காட்டாறு..உனக்கு என்ன நீ சொல்லுவே

மங்கை said...

வவ்வால் said...

//நான் வழக்கமா குவாட்டர் அடிப்பேன் இத்தினிக்கும் நான் ஒண்டிக்கட்டைங்கோ//

இது மசக்கை வந்தா சரி ஆயிடும். வீட்ல அம்மா சொல்லி ஏற்பாடு பண்ணுங்க

//சின்ன அம்மிணி said...
மங்கை, இத நானும் கேள்விப்பட்டிருக்கேன். மனைவிய எல்லாரும் கவனிச்சுக்கராங்க. நம்மள கண்டுக்கவே மாட்டெங்கிறாங்கன்னு ஒரு சைக்காலஜிக்கல் விளைவோ///

சின்ன அம்மினி,...சரியா சொன்னீங்க இதுவும் ஒரு முக்கியமான காரணம்

மங்கை said...

anandha loganathan

நீங்க சொன்ன காரணத்தையும் ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.. வேலைப் பளு, நேரமின்மையினால் ஆண்களுக்கு அவர்களிடம் ஏறபடும் மாற்றத்தை கவனிக்க நேரம் இல்லைனு
நன்றி

மங்கை said...

துளசி..

ஆஹா..எப்படி இப்படி பழமொழி எல்லாம் நியாபகம் வச்சுட்டு இருக்கீங்க :-)))).. அப்ப இருக்கும்னு சொல்றீங்க.. குட் குட்

மங்கை said...

//தஞ்சாவூரான் said...
ஆமா ஆமா, எனக்கும் அந்த அறிகுறி இருந்துச்சு :)
தங்கமணி, என் பின்னூட்டத்த கண்டிப்பா படிக்கும்கிற நம்பிக்கைதான்//

இப்படித்தான் தங்கமணி வெள்ளந்தியா இருந்து லூசு மாதிரி ஏமாந்து போறாங்கப்பா..:-)))

மங்கை said...

//பாரி.அரசு said...
பெரியவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று வேடிக்கை பார்க்கிறேன் :)
ஓரு வருகை பதிவு மட்டும்//

எத்தன நாளைக்கு...ஒரு நாளைக்கு நீங்களும் இப்படி பொய் சொல்லுவீங்க
:-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாரத்தில நாலு நாள் கோதுமை தோசை தான் ப்ரேக்பாஸ்ட் அதை சாப்பிட்டாத்தான் புரட்டாம இருக்கும் விதியேன்னு அதையே சாப்பிட்டும் மனுசன் வளைகாப்புக்கு ஊருக்கு விடப்போகும் போது குண்டடிச்சிட்டாங்க அப்ப அந்த சிண்ட்ரோம் இருந்திருக்கும் போல... :)

மங்கை said...

லட்சுமி..அப்படிப் போடுங்க... உண்மை வெளியே வருது..

அபி அப்பா said...

intha thatavai sariyaa kavanikkalai athanala aduththa thatavai kavanichu solren:-)

விஜயன் said...

//தங்கமணி கருவுற்றிருக்கும்போது, இந்த மார்னிங்க் சிக்னஸ் னு சொல்லுவாங்களே அது உங்களுக்கும் இருந்துச்சா..//

கஷ்டப் பட்டு யோசிச்சு? பார்த்தும்
ஹூம்...தெரியலையே...

ஆனா அவங்க சரியா சாப்பிடாம, வாந்தி எடுக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கும் (தங்கமணி இப்ப ஓகேயா?)

//அப்ப நம்ம ஊர்ல ரங்கமணிக எல்லாம் தங்கமணிகள் மேல அக்கறை இல்லையா என்ன?//

இப்படியெல்லாம் வெளிப்படையா சொல்லக் கூடாது.

//Now jokes apart//

oh. sorry

பதிவு மிகவும் தகவலுடையதாக இருந்தது

Unknown said...

நமக்கொல்லாம் அப்டி ஆனதில்லை.

'ஏண்டா இப்படி இருக்கே. பொண்டாட்டி புளி சாப்பிடறாளோ' ன்னு சொல்வாங்க.

அது இதனாலதானோ?
நான் வேற என்னவோன்னு நினைச்சிருந்தேன்.

ramachandranusha(உஷா) said...

யக்கா, வெள்ளைகாரங்க கண்டுப்பிடிப்பு, அவுங்களுக்குத்தான் வொர்க் அவுட் ஆகும். நம்மாளுங்க... ஹூம்..

கோவை ராஜா said...

மங்கை,
உண்மை தாங்க!
கேட்டா தப்பா எடுக்க கூடாது,
வெளியூர் போகும் போது, பஸ்ல யாராவது கர்பிணி தாய்மர்கள் நின்னுட்டு வர்றத பார்தாலும், அதுவும், நம்ப ரோடு இருக்கிற லட்சணத்துல?
அடி வயித்த புறட்டும், அதுக்கு என்ன காரணம்???

கோவை ராஜா said...

மங்கை,
உண்மை தாங்க!
கேட்டா தப்பா எடுக்க கூடாது,
வெளியூர் போகும் போது, பஸ்ல யாராவது கர்பிணி தாய்மர்கள் நின்னுட்டு வர்றத பார்தாலும், அதுவும், நம்ப ரோடு இருக்கிற லட்சணத்துல?
அடி வயித்த புறட்டும், அதுக்கு என்ன காரணம்???

வல்லிசிம்ஹன் said...

Mangai,
Ippo oru nikazcchi paarththuk kittuthaan irukken:))
Ithila enna adhisayamnaa
wife niRaiya saappittaa husbandum niRaiya saappiduRAr.

avangga vomit paNNA ivaru stomach uruLuthu:))))

Pregnant ladies 'MIL ukkum Ethaavathu seyyumoo???????????
cchummaa ketten.:))))))

அபி அப்பா said...

//Pregnant ladies 'MIL ukkum Ethaavathu seyyumoo???????????
cchummaa ketten.:)))))) //

ஆமா வல்லிம்மா! கட்டில்ல விரல் இடிச்சுகுமாம்:-)

வல்லிசிம்ஹன் said...

Abi Appaa too much. three much.:)))
thank you for the clarification:)))0

Thekkikattan|தெகா said...

ஆஹா, இது எங்கேயோ அன்மையில் பேசிக்கொண்ட விசயம் மாதிரி தெரிகிறதே :-))

சென்ஷி said...

இதுவும் ஒரு நல்ல பதிவு..