Thursday, November 18, 2010

கொல்கத்தா துர்கா பூஜை...நான்-1

நான் வட இந்திய மாநிலங்கள் பலவற்றிற்கு பயணம் செய்திருந்தாலும், இப்போது சொல்ல வரும் இந்த பயணம் கொஞ்சம் வித்தியாசமானது. இது வரையில் பயணங்கள் பெரும்பாலும் துறை சார்ந்த அலுவலக பயணமாகவே இருந்திருக்கிறது. முதல்முறையாக உற்றார் உறவினர் சூழ அமைந்த இந்தப் பயணம் என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.இந்திய நாட்டின் இந்தப் பகுதி எப்பொழுதும் ஏதாவது ஒர் பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு பகுதி. பெரிதாக மற்றவர்களால் சுற்றி பார்க்கப்படாத ஒரு பகுதி.  கோவையில் இருந்து கொல்கொத்தாவிற்கு, அதுவும் ஒரு திருவிழாவில் பங்கேற்க...

ஆம், துர்கா பூஜை என பிரபலமாய் கொண்டாடப் படும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்ளத்தான் இந்த பயணம்.உணர்வு ரீதியாக நான் மிகவும் எதிர்பார்த்த ஒரு பயணம் இது. எனது தந்தையார் தேசிய கவி, தாகூரின் மிகப் பெரிய ரசிகர். அந்த கலைஞனின் பெயரையே அண்ணனுக்கு வைத்து, தாகூரின் படைப்புகளில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களை பெண் பிள்ளைகளுக்கு வைத்தார். ''ரக்தகரபி'' தந்த மயக்கத்தில் அதில் வரும் நாயகியின் பெயரைத்தான் எனக்கு சூட்டியிருக்கிறார்.என் தந்தையார் மிகவும் நேசித்த ஒரு கலைஞனின் மண்ணிற்கு, அவன் உருவாக்கிய பாத்திரங்கள் உலவிய அந்த மண்ணிற்கு போகிறேன் என்கிற பரவசமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய பயணம் இது.

நூற்றாண்டுகளை கடந்த கட்டிடங்கள், குறுகலான நெரிசல் மிகுந்த காங்கிரீட் சாலைகள், குறுக்கும் நெடுக்குமாய் நகர்ந்து கொண்டிருக்கும் ட்ராம் வண்டிகள், மஞ்சள் நிற அம்பாஸிடர் டாக்சிகள்,ஆர்பாட்டம் எதுவும் இல்லாமல் நகரின் நடுவே அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் அகண்ட கங்கை


என  பழமை பூசிய முகத்துடன் வரவேற்றது கொல்கத்தா.சட்டெனெ இருபது வருடங்கள் பின்னோக்கி போய்விட்டதைப் போல ஒரு உணர்வு தோன்றியதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.
 
திரும்புகிற பக்கமெல்லாம் வண்ண வண்ண விளக்குகள், விதவிதமான வீதியோர சிற்றுண்டிச் சாலைகள், சிவப்பு, வெள்ளை, அல்லது மஞ்சள் நிற பருத்திப் புடவையுடுத்திய, பெரிய கண்களும் பளிச்சென பொட்டும் வைத்த அழகிய பெங்காலி பெண்கள்.ஆங்காங்கே அமைக்கப் பட்டிருந்த தற்காலிக வழிபாட்டு கூடங்கள்,அவற்றில் அமைக்கப் பட்டிருந்த வண்ண வண்ண தோரணங்கள்,ஆர்பாட்டமான இசை,பாடல்,ஆடல்கள் என திருவிழா களைகட்ட வயதெல்லாம் மறந்து சிறுமியாய் மாறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதுதான் உண்மை.


 இந்த தற்காலிக வழிபாட்டு கூடங்களைப் பற்றி இங்கே சொல்லியே ஆக வேண்டும். ஆளாளுக்கு போட்டி போட்டு கொண்டு செலவு செய்து அலங்கரித்து வைத்திருந்தனர்.தங்களின் அரசியல் செல்வாக்கு மற்றும் பணபலத்தினை பறைசாற்றும் விதமாக சில வழிபாட்டு கூடங்களில் பணம் தண்ணீராக இறைக்கப் பட்டிருந்தது. பல இடங்களில் அலங்கார செலவுகள் மட்டுமே கோடிகளை தாண்டியிருப்பதாக கூறக் கேட்டேன்.ஒவ்வொரு வழிபாட்டுக் கூடமும் ஒரு கருத்தியலை(Theme) அடிப்படையாக கொண்டு வடிவமைத்திருந்தனர்.தங்கள் பகுதி வழிபாட்டு கூடங்கள் குறித்த
பெருமையும்,அலட்டல்களும், பீற்றல்களும் மக்களிடம் வழிந்தோடியதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இதில் சில அரசியல் வாதிகளின் கூடாரங்களும் அடக்கம்.

நவராத்திரி நாடெங்கும் கொண்டாடப் பட்டாலும், வங்காளிகள் அளவுக்கு இத்தனை தீவிரமான கொண்டாட்டத்தை நாட்டின் மற்ற பகுதிகளில் காண இயலாது.இது அவர்களின் உணர்வுகளோடு கலந்த ஒரு விழாவாகவே கருதுகிறார்கள். ஒன்பது நாட்களும் புத்தாடை உடுத்தி, விதவிதமாய் பலகாரங்கள் செய்து விருந்து வைத்து கொண்டாடி மகிழ்கின்றனர்.

இத்தனை தீவிரமான கொண்டாட்டங்களுக்கு பின்னால் புராண கதை ஒன்றையும் கூறுகிறார்கள். பதிவு நீளமாய் போகிறது எனவே அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

22 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அப்படிப்போடுங்க.. நான் 3 வயசுல பாத்த ஊரு ..இப்ப பாக்க ஆசப்படும் ஊரு..எழுதுங்க ..
அழகான வர்ணனை..
ஊருபொண்ணுங்க வேற கண் கவரும் அழகிகளாச்சே..

தமிழ் அமுதன் said...

கொல்கொத்தா என்றாலே...ஒரு நெரிசலான குப்பையான நகரம் என்றுதான் இதுவரை அறிந்து இருக்கிறேன்..! ஆனால் இந்த பதிவு அந்த எண்ணத்தை மாற்றிவிட்டது..!

கொல்கொத்தாவை சுற்றி பார்க்க ஆர்வத்தை தூண்டுகிறது பதிவு..!

அழகான..பகிர்வு...!

தமிழ் அமுதன் said...

///ஊருபொண்ணுங்க வேற கண் கவரும் அழகிகளாச்சே..///


ஆஹா... இது வேறயா.. ஒரு வாட்டி அவசியம் போகணும்...!;)

கோபிநாத் said...

அட அட புது அவதராம் எடுத்துயிருக்கிங்க போல..நல்ல ஆரம்பம்...கண்டிப்பாக தொடருங்கள் ;)

எங்க டீச்சர் வந்து மாணவிக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க ;))

கோமதி அரசு said...

கொல்கத்தா அழகிய ஊர்.
ராமகிருஷ்ணர் மடம்,காளி கோவில் எல்லாம் நல்லா இருக்கும்.

எல்லாவற்றையும் எழுதுங்கள்.

ADHI VENKAT said...

உங்கள் பயணக் கட்டுரை அருமையாக இருக்கிறது. பெங்காலிகளுக்கு பக்தி அதிகம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். தொடருங்கள் ஆவலாய் இருக்கிறோம். ரசகுல்லாவும், பெங்கால் காட்டன் புடவையும் நினைவூற்றுகின்றன.

காட்டாறு said...

புது அவதாரமா? நடத்துங்க. போட்டோ நல்லா இருக்குடா. நீ எடுத்தவையா இவை?

பெயர் காரணம் சூப்பர்! அப்போ உனக்கு தாகூரின் வரலாறு எல்லாம் தெரியுமே. அடுத்த வரும் வகுப்புகள் அதை சார்ந்து வருமா?

Compassion Unlimitted said...

Naan pirandhu Valarndha ooru ..nostalgic aakki vitteergale..aarambame padu Jor..kaathhu irukkirom

TC
CU

Unknown said...

எங்க இருந்து காப்பி அடிச்சது... அல்லது எந்த மண்டபம்...

Thekkikattan|தெகா said...

நன்றாக அனுபவித்து எழுதியிருக்கீங்க. வித்தியாசமா இருக்கு எழுத்து நடை. எனக்கு மேலே ஏதோ ஒண்ணு புகைஞ்சிருக்கு.

இதே வேலயா திரியறாங்கப்பா.

ஆமா, அந்தாளுக்கு என்ன பிரச்சினை?

துளசி கோபால் said...

ஆஹா......ஆரம்பிச்சுட்டீங்களா!!!!!


அழகா வந்துருக்கு! சரித்திரப் பிரசித்தி பெற்ற ஊராச்சே! வெள்ளைக்காரன் அங்கே வந்து உக்காந்துக்கிட்டுச் சக்கைப்போடு போட்டானே!

ஆமாம்....அங்கே ஓடுவது ஹூப்ளி நதி இல்லையோ?கங்கையின் கிளைகளில் ஒன்னுதானே அது?


தொடரைத் தொடருகிறேன்.


இனிய பாராட்டுகள்!

வெங்கட் நாகராஜ் said...

எல்லோராலும் குப்பையான நகரமாய் பார்க்கப்பட்டாலும் கொல்கத்தா நகருக்கும் ஏதோ ஒரு அழகு இருக்கு போல இருக்கு. அலுவல் நிமித்தம் இரண்டொரு நாட்கள் தங்கியிருக்கிறேன். சுற்றிப் பார்க்க ஆவல். உங்கள் பதிவு மூலம் கொல்கத்தாவினை பார்க்கிறேன் முதலில். நன்றி சகோ.....

டுபாக்கூர் பதிவர் said...

அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்.

அவசரமில்லாத நடை நன்றாக இருக்கிறது. தொடருங்கள்!

மங்கை said...

நன்றி லட்சுமி...

உங்க அளவிற்கு ஆர்வத்தை ஏற்படுத்திக்க நான் முயற்சி செய்யறேன்.. :)

மங்கை said...

நன்றி அமுதன்... நெரிசலும் குப்பையும் உண்டு தான்... ஆனால் அதையும் தாண்டி ஒரு அழகு..ம்ம்

அவசியம் போங்க.. ஆனா அம்மணிய கூப்டுட்டு போங்க சாமியோவ்..

மங்கை said...

டீச்சர் இல்லாமையா கோபி... அதெல்லாம் வந்துட்டாங்க பாருங்க.. நன்றி கோபி..

நன்றி கோமதி அம்மா

//கோவை2தில்லி said...

ரசகுல்லாவும், பெங்கால் காட்டன் புடவையும் நினைவூற்றுகின்றன.//

அதைப் பற்றி தனியா வேனா உங்களுக்கு சொல்றேன்..:) இங்க போட்டா இந்த பொம்பளைகளே இப்படித்தாங்குற கூற்று உண்மையாயிடும்

மங்கை said...

காட்டாறு...

படங்கள் நான் எடுத்தது சிலது...சிலது ஓசி... நன்றி

சி யூ..

:)...நன்றி

மங்கை said...

நன்றி தெகா...நானும் எழுத பழகறேன். அட் லாஸ்ட்...:)

மங்கை said...

ஹை...துளசி

நான் பாஸாயிட்டனா...அது சொல்லுங்க முதல்ல... நீங்க தான் இதுல எங்க எல்லார்த்துக்கும் குரு

நன்றிக்கா

மங்கை said...

வெங்கட்..மிக்க நன்றி

டூ பா...நன்றி

மு.வேலன் said...

நல்ல அனுபவம். மேலும் பகிர்ந்துக்கொள்ளுங்கள். நன்றி.

ponmalai samy said...

very nice