Monday, November 22, 2010

கொல்கத்தா துர்கா பூஜை...நான்-II


வங்காளத்துக்கும், துர்கா பூஜைக்கும் இடையே உள்ள தொடர்பாக வங்காளிகள் கூறும் புராணக் கதை இதுதான்....

தட்சன் என்கிற மன்னனுக்கு மகளாய் பிறந்த சக்தியானவள் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக சிவனை மணந்து கொள்ள, அதனால் தன்னுடைய தந்தைக்கும்,கணவனுக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகளினால் மனம் உடைந்து தன்னை மாய்த்துக் கொள்கிறாள். இதைத் தொடர்ந்து இறந்த மனைவியின் உடலை சுமந்து கொண்டு சிவன் கோரதாண்டவம் ஆடினாராம். அப்போது விஷ்ணு சிவனை சாந்தப்படுத்த, தனது சக்கராயுதத்தினை பிரயோகித்து சக்தியின் உடலை ஐம்பத்தியோரு கூறுகளாய் சிதறச் செய்தாராம். அவ்வாறு சிதறிய உடலின் பாகங்கள் விழுந்த இடங்களே தற்போதைய  ஐம்பத்தியோரு சக்தி பீடங்களாய் கருதப் படுகிறது.

பின்னர் மஹாவிஷ்ணு சக்தியை மீண்டும் உயிர்ப்பித்ததாகவும், அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் சக்தியும் அவரின் புதல்வர்களும்,புதல்விகளும் தாய் வீட்டிற்கு வரும் நிகழ்வே வங்காளத்தில் துர்காபூஜையாக கொண்டாடப் படுகிறது. சக்தியின் ஐம்பத்தியோரு சக்தி பீடங்களில் பதினாறு சக்தி பீடங்கள் வங்காளத்தில் இருப்பதாகவும் கூறக் கேட்டேன்.சக்தி வழிபாடு என்பது வங்காளிகளின் வாழ்க்கையின் ஆதாரமான ஒரு அங்கமாகவே இருக்கிறது.

                                                                                          
தற்காலிக வழிபாட்டுக் கூடங்களில் 
அமைக்கப் பட்டிருக்கும் துர்கையின் சிலைகள் ஒவ்வொன்றும் பிரம்மாண்டமாகவும், சிலிர்ப்பூட்டும் வகையில் உயிர்ப்புடன் அமைக்கப் பட்டிருக்கிறது. அன்னையின் முகத்தில் தவழும் உணர்ச்சியினை இன்னதென தெளிவாக கூற இயலாதவகையில் கலவையான உணர்வுகளை தருகிறது.எல்லாராலும் துர்கையின் சிலையினை செய்திட முடியாதென கூறுகிறார்கள்.இந்த சிலைகளை செய்வதற்கென விசேடமான சிற்பிகள் இருக்கிறார்களாம்.துர்கையின் சிலையோடு கூடவே, விநாயகர், கார்திகேயன், லக்ஷ்மி சரஸ்வதி ஆகியோரின் சிலைகளையும் அமைத்திருக்கின்றனர்.

நவராத்திரியின் முதல் நாளன்று, பூஜையறையில் மண் படுக்கை போன்ற ஒன்றில் பார்லி விதைகள் விதைக்கப்பட்டு, பாத்தாவது நாளில் அது முளைகட்டி வளர்ந்த பிறகு, விதையுடன் பறித்து பக்தர்களுக்கு அன்னையின் அருளுடன் கூடிய பிரசாதமாக வழங்கப்படுகிறது.

நவராத்திரி நாட்களில் ஊரெங்கும் தக் என்ற இசைக் கருவி எப்பொழுதும் எங்கும் ஒலித்துக் கொண்டே  இருக்கிறது.பெரிய பெரிய மத்தளங்களைப் போல் இருக்கும் இந்த இசை கருவியை வாசிக்கும் பொழுது மனமும் உடலும் ஒரு வித பரவசம் அடைவது உண்மை.இந்த பண்டிகை காலத்தில் விதவிதமான தின்பண்டங்கள் விசேட கவனத்துடன் தயாரிக்கப் பட்டு பூசையில் படைக்கப் பட்ட பின்னர் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கப் படுகிறது.

நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் சக்தியின் ஒவ்வொரு அம்சத்தை முன்னிறுத்தி வழிபாடுகள் நடை பெறுகிறது.முதல் நாள் குழந்தையின் அம்சமாகவும்,இரண்டாம் நாள் கன்னியின் அம்சமாகவும், மூன்றாம் நாள் பேரிளம் பெண்ணின் அம்சம் என தொடர்கிறது வழிபாடுகள்.கடைசி நாளான மஹாநவமியில் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு பாத பூசை செய்து, அன்னையின் ஒன்பது வடிவங்களாக வழிபடுகிறார்கள்.

இப்படி மாய்ந்து மாய்ந்து பெண்களைக் கொண்டாடும் இதே ஊரில்தான் பெண்களை போகப் பொருளாய் கருதி சீரழிக்கும் அவலமும் நடந்து கொண்டிருக்கிறது.பெண் குழந்தைகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிற்து.ஒரு பக்கம் பெண்குழந்தைகளை தெய்வமாய் பூஜித்து கொண்டிருக்கையில்  மறுபக்கம் ஈவிரக்கமில்லாமல் அத்தகைய குழந்தைகளை பாலியல் இச்சைக்கு பலியாக்குவது வேதனையான வேதனை..

(பதிவின் நீளம் கருதி பயண அனுபவங்களை அடுத்த பதிவில் தொடர்கிறேன்)

15 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உண்மைதான் மங்கை .. அந்த துர்கையின் முகம் பார்க்கும்போது பரவசம் தான்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பூஜிப்பதுக்கும்,நிந்திப்பதும் கொடுமைப்படுத்துவதற்கும் எல்லாத்துக்கும் பெண் தான் :(

டுபாக்கூர் பதிவர் said...

ரசகுல்லா பத்தி எழுதுங்க, அப்படியே கண்ணுக்கு குளிர்ச்சியான பெங்காலி ரசகுல்லாக்களின் படங்களையும் போடுங்க....உங்களுக்கு புண்ணியமாப் போகும்.

என் மாதிரி வயசு பசங்களும் உங்க ப்ளாக்கை படிப்பதால் இந்த கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டுகிறேன்...ஹி..ஹி...

ADHI VENKAT said...

படங்கள் அழகு. தகவல்கள் அருமை. சக்திப்பீடங்களை சென்று காண வேண்டும்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு சகோ. துர்க்காபூஜையின் போது இவர்கள் அமைக்கும் பந்தல்கள் எல்லாமுமே அவ்வளவு அழகு. தில்லியில் கூட சித்தரஞ்சன் பார்க் பகுதியில் போடும் பந்தல்களையும், பூஜைகளையும் ரசித்திருக்கிறேன்.

Unknown said...

way of presentation is very nice. you can try to write stories / articles too.

with regards,
buvana

Thekkikattan|தெகா said...

ஏதோ எழுத்து நடையில ஒரு வசீகரம் கூடியிருக்கோங்கோவ். அப்படியே படிக்கும் பொழுது சர்ர்னு ஓடுது... படிக்கிறதே தெரியாம.

அப்படி படிச்சிட்டே வரும் பொழுது, இந்த துர்க்கா காளி குலோசிங் பாராவில சொல்லியிருக்கிற விசயத்திற்கு சட்டுன்னு ஒரு தீர்வ சொல்ல மாட்டிங்கிதேன்னு தோணுவதை தவிர்க்க முடியல... என்னதான் நின்னு கொன்னாலும் அந்த பிஞ்சுகளுக்கு?!

தொடருங்க தொடருங்க!

கோபிநாத் said...

நன்றாக போயிக்கிட்டு இருக்கு தொடர் ;)

Unknown said...

அன்புள்ள மங்கை...

பத்திரிகையில் எழுதச் சொன்னதை பரிசீலனை செய்தீர்களா?..தயங்காமல் எழுதுங்கள் மங்கை

அருமையான தொடர்...அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்..

Unknown said...

இதோ இந்த கடைசி பத்தி தான் உங்களின் தனித்தன்மையை காட்டுகிறது.. இது தான் சமுதாய விழிப்புணர்வு...நன்றி

Chitra said...

(பதிவின் நீளம் கருதி பயண அனுபவங்களை அடுத்த பதிவில் தொடர்கிறேன்)


.... sure. Write soon.

(p.s. Thank you for explaining it very well in your comment for my post. I have replied to it.)

தமிழ் அமுதன் said...

துர்க்கா பூஜா பற்றிய தகவல்களுக்கு
நன்றி...!

அடுத்த பதிவுக்கு ஆவலுடன் வெயிட்டிங்...!

மங்கை said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி

mahi said...

dear mangai, pl write this year 2012 durga pooja events. tks

mahi said...

dear mangai, pl write this year 2012 durga pooja events. tks