Monday, January 26, 2009

தெருவோர நிஜங்கள்......

முன் குறிப்பு- Slum Dog Millionaire னு ஒரு படம்... எல்லாரும் கேள்விபட்டிருப்பீங்க.. உலக அளவில் சிறப்பான விருதுகளை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கும் ஒரு படம்... பத்து ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்படிருக்கிறது...இந்திய மண்ணில் இருக்கும் சேரிகளின் உண்மை நிலைமையை எடுத்து சொல்லும் ஒரு நல்ல முயற்சி..

ஆனால் நம்மில் சிலர், தாங்கள் மட்டுமே
இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சில ஜென்மங்கள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ஏதோ இல்லாத ஒன்றை சொல்லியிருப்பதாக குதிக்கிறார்கள். இந்திய நிலைமையை சொல்லி காசாக்கும் முயற்சி இது என்று நினைப்பவர்கள் சிலர்....ஒரு பிரிடிஷ்காரன் வந்து நம் நாட்டின் நிலைமையை சொல்ல அனுமதிக்க கூடாது என்றெல்லாம் பிரச்சினையை கிளப்புகின்றனர்.

சேரிகளில் இந்த நிலைமை இல்லை என்பதை நிரூபிக்க முடியுமா இவர்களால்??.. இல்லை அப்படி இருந்தால் வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு வாய் கிழிய பேசும் இவர்கள் ஏதாவது செய்யப் போகிறார்காளா???... கோவமும் ஆதங்கமும் தலைக்கு ஏறுகிறது.... இதில் தில்லி வாழ் மக்களை சொல்லவே வேண்டாம்.... கெட்டு குட்டிச்சுவரான கலாச்சாரம், உணர்வுகளை ஒதுக்கி படோபகார வாழ்க்கையில் லயித்துப்போயிருக்கும் திமிர் பிடித்த அயோக்கியர்கள்....

இந்த பதிவு இந்தப் படத்தை பற்றியதில்லை... ஆனால் இந்தப் படத்தில் வரும் சிறார்களைப் போல தெருவில் வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மை கதாபாத்திரங்கள் பற்றியது.


ஒவ்வொரு முறை தில்லி ரயில் நிறுத்தத்தில் ரயில் ஏறும் போதும் இறங்கும் போதும் கண்களை உறுத்தும் சில காட்சிகள். அங்கு குப்பை பொறுக்கும் குழந்தைகள், நாம் அசுத்தம் செய்த ரயில் பெட்டியை சுத்தம் செய்து அதற்கு காசு கேட்கும் பாலகர்கள், சுத்தம் செய்ய வரும் போது குப்பையை கால்களால் இந்தக் குழந்தைகளின் மீதே தள்ளிவிட்டு, அவர்கள் காசு கேட்டால் விரட்டி அடிக்கும் இறக்கமில்லா பெண் ஜென்மங்கள்....பிச்சை எடுக்கும் வயது வந்த பெண்களின் கிழிந்த ஆடைகளினூடே பார்த்து கண்களால் கற்பழிக்கும் காமப் பார்வைகள், ....ம்ம்ம்ம்... இதில் எதுவுமே பாதிக்காமல் கர்மமே கண்ணாயிரமாய் பழைய பாட்டில்களை சேகரித்துக் கொண்டும், பாக்கு பாக்கெட் சரங்களை விற்றுக் கொண்டும், பிச்சை எடுத்துக் கொண்டும் இருக்கும் என்னற்ற குழந்தைகளை பார்க்கும் போது மனது சில நிமிடங்களேனும் நொறுங்காமல் போகாது.


இவ்வாறு தெருவில் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை நம் நாட்டில் தான் அதிகம். ஒரு வேளை உணவிற்காக செய்யக் கூடாத வேலைகளை செய்து, குழந்தை பருவம் என்ற ஒன்றை நினைவில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, தங்கள் வயதிற்கு கொஞ்சமும் பொறுத்தமில்லாத பெரியவர்களின் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்... இல்லை... வாழ வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெரியவர்களின் உலகத்தில் போட்டி போட்டு வாழ பழகிக்கொள்ளும் இவர்களுக்கு, குழந்தை பருவத்திற்கே உண்டான பிரத்யேக குணாதிசியங்கள் அறவே இல்லாமல் போய்விடுகிறது என்பது தான் கொடுமை.

இந்தக் குழந்தைகள் ஏரியா தாதாக்களாலும், ரவுடிகளாலும் பாலியல் பலாத்காரத்திற்கும் உட்படுத்தப் படுகிறார்கள். இதில் ஆண் குழந்தைகளும் விதிவிலக்கில்லை. ஓரினச்சேர்க்கை இளைஞர்களால் இந்தச் சிறுவர்கள் பயன்படுத்தப் படுகிறார்கள். இவர்களுக்கு ஓரினச்சேர்க்கை உணர்வுகள் பெரும்பாலும் இருப்பதில்லையென்றாலும், பணத்திற்காக அதையும் செய்ய தயங்குவதில்லை. நாளடைவில் இவர்களுக்கும் இதுவே பிடித்து விடுகிறது. முடிந்தால் இதைப் பற்றி இன்னொரு தனிப்பதிவு போடுகிறேன்.

தில்லியில் மட்டும் 1,00,000 தெருக் குழந்தைகள் இருக்கிறார்களாம். ராஜஸ்தான், பீஹார், கொல்கத்தா போன்ற நகரங்களில் இருந்து பிழைக்க வந்த ஆதிவாசி இனத்தை சேர்ந்தவர்கள் அதிகம். இவர்களில், பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுப்பட்டிருப்பார்கள். குழந்தைகள் பிச்சை எடுப்பது, ரோட்டோரத்தில் இருக்கும் பழைய பாட்டில் பேப்பர் போன்றவற்றை சேகரிப்பது, சிக்னலில் பொருட்களை விற்பது போன்ற வேலைகளை செய்து நாளொன்றுக்கு 100ல் இருந்து 150 வரை சம்பாதிக்கிறார்கள்.

தெருவில் வாழந்தாலும் இவர்களுக்கும் லட்சியங்கள், ஆசைகள், கனவுகள் உண்டு. ஒரு சின்ன மூலதனத்தை போட்டு, அதை சில நிமிடங்களுக்கே தெருவில் சந்திக்கும் மக்களிடம் விற்று காசாக்கும் திறமை கொண்ட இவர்களுக்கு கல்வியறிவும், நல்வழிகாட்டுதலும் அமைந்துவிட்டால்??... ம்ம்ம் இதை உணர்ந்த சில தொண்டு நிறுவனங்கள் இவர்களுக்கென்று மாலை நேர வகுப்புகள் நடத்தி வருகின்றன. இதை சரியான முறையில் பயன் படுத்தி வாழ்க்கையில் முன்னேறி இருக்கும் குழந்தைகளும் உண்டு.

ரோஹித் என்னும் 13 வயது அழகான பாலகன். பீஹார் மாநிலத்தை சேர்ந்த இவன், 2 வருடம் முன்பு அப்பா அடித்தற்காக வீட்டை விட்டு ஓடி வந்தவன். இன்று தில்லி ரயில்வே நிறுத்ததில் தேங்காய் கீற்றுகளை விற்று நாளொன்றிற்கு 150 ல் இருந்து 200 ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறான்.ரோஹித்துக்கு டாக்டர் ஆகி இவனைப் போன்ற ஆதரவில்லா குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டுமாம். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவற்றகர்களே ஆதரவு இல்லையா?... ம்ம்ம்ம்.. மாலை நேர வகுப்பில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறான்.

இந்த தொண்டு நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளில் என்னை மிகவும் கவர்ந்தது, இந்த குழந்தைகளுக்கென்று துவங்கி இருக்கும் வங்கி. பட்டர்ஃப்ளை என்ற தொண்டு நிறுவனத்தின் கண்கானிப்பில் இருக்கும் இந்த வங்கிக்கு தில்லியில் 12 கிளைகளும், சுமார் 2000 குழந்தைகள் உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த வங்கிகள் இந்தக் குழந்தைகளாலேயே பராமரிக்கப் படுகிறது. 6 மாதத்திற்கொரு முறை இவர்களே ஒரு மேளாளரை தேர்ந்தெடுக்கிறார்கள். இதில் பாராட்டப்படவேண்டிய ஒரு விஷயம், ஃபோர்னோகிராபியின் மூலம் ஈட்டிய பணம், திருட்டு வழியில் ஈட்டிய பணம், போதை பொருட்கள் விற்று ஈட்டிய பணம் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. பல குழந்தைகள் இது போல தீய வழியில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். தங்கள் நண்பர்களை நல்வழிப் படுத்த இவர்களே போட்டுக்கொண்ட கட்டுப்பாடுகளில் இதுவும் ஒன்று.

தினமும் மாலையில் வங்கியில் இருக்கும் பணம், அங்கீகரிக்கப்பட்ட ஒரு வங்கியில் தொண்டு நிறுவன கண்கானிப்பாளரால் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த சேமிப்பு பழக்கத்தினால், புகைபிடித்தல், அடிக்கடி சினிமாவுக்கு செலவு செய்தல், குடிப்பழக்கம் போன்ற வேண்டாத பழக்கவழக்கங்கள் குறைந்திருப்பதாக இக்குழந்தைகளே பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார்கள்.

படிப்பு பிடிக்காமல் விட்டை விட்டு ஓடிவந்த அஜய்க்கு மேனேஜர் வேலை மிகவும் பிடித்தமான வேலை. உடையை அழகாக 'டக்கின்' செய்து, சர்டில் மேல் பட்டனை போட்டு, தலையை கோதி, ஒரு எக்ஸக்யூடிவ் ரேஞ்சுக்கு ஸ்டைலாக "கவுண்டரில்" அவன் உட்கார்ந்து இருக்கும் அழகே தனி. ..:-)))...புதியதாக வரும் கஸ்டமர்களின் பெயரை கேட்பதும், அவர்களுக்கு விதிமுறைகளை எடுத்து சொல்வதும், கறாராக நடந்து கொள்வதும்....பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும்.

இந்தக் குழந்தைகளுக்குத்தான் எத்தனை பொறுப்புணர்ச்சி. தினமும் பணத்தை சரியாக கணக்கு பார்த்து வாங்கி, 'கஸ்டமர்களின்' பாஸ் புத்தகத்தில் வரவு வைத்து, அதை தொண்டு நிறுவன அதிகாரிகளிடம் கொடுத்து, தங்களைப் போன்று கஷ்டப்பட்டு பணம் ஈட்டும் நண்பர்களுக்கு உண்மையாக நடந்து கொள்கிறார்கள் என்பது நாம் எல்லோரும் கவனிக்க வேண்டிய விஷயம்.

கிடைத்த வாய்பை பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற இவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சி பாராட்டப்பட வேண்டியவை. இவர்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகளாக மாற நாம் உளமாற வாழ்த்துவோம்.

இவர்களைப் போல தெருவில் வாழ்ந்து் 'சலாம்பாலக் ட்ரஸ்டால்' வழிகாட்டப்பட்டு, இன்று ஒரு பெரிய போட்டோகிராபர் ஆகியிறுக்கும் விக்கி என்ற இளைஞனைப் பற்றி அடுத்த பதிவில் போர்போம்.

49 comments:

Compassion Unlimitted said...

Migavum positve aana vishayatthai koori irukkirreergal..Kuppai ena samoogam odhukkum kuzhandai galil oli vidum vairangal pudaindu kidakkiradhu..Jolikkumaaga..
vaazhthukkal
TC
CU

கபீஷ் said...

Very good post!!! Keep the good work. Thanks for the useful information

கவிதா | Kavitha said...

நாம் அசுத்தம் செய்த ரயில் பெட்டியை சுத்தம் செய்து அதற்கு காசு கேட்கும் பாலகர்கள், சுத்தம் செய்ய வரும் போது குப்பையை கால்களால் இந்தக் குழந்தைகளின் மீதே தள்ளிவிட்டு, அவர்கள் காசு கேட்டால் விரட்டி அடிக்கும் இறக்கமில்லா பெண் ஜென்மங்கள்....பிச்சை எடுக்கும் வயது வந்த பெண்களின் கிழிந்த ஆடைகளினூடே பார்த்து கண்களால் கற்பழிக்கும் காமப் பார்வைகள்,//

மங்கைஜி, நல்ல பதிவு ஆதங்கம் சரியே..!! நானும் பார்த்திருக்கிறேன்..

* ரயில்வே'க்கு இவர்களால் ஃபிரி சர்வீஸ்
*தென்னிந்திய ரயில்களைவிட வட இந்தியாவில் அதிகம் பார்க்க முடிகிறது
*பல குழந்தைகள் தங்கள் அணிந்திருக்கும் கிழிந்த சட்டையை கழட்டி அதனாலேயே துடைப்பார்கள். அதை பார்க்கும் போது நம் இதயமும் அவர்களை சட்டையை போல ஆகிவிடுகிறது

ramachandranusha(உஷா) said...

மங்கை வழப்படி நல்ல பதிவு. ஆனால் மனதை கனக்க வைக்கிறது.

கவிதா | Kavitha said...

இவ்வாறு தெருவில் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை நம் நாட்டில் தான் அதிகம்.//

திருவான்மயூர் சிக்னலில் நரிகுறவர்கள் குடும்பங்கள் சாலையின் பக்கங்களில் தங்கியிருக்கின்றனர். அந்த சிக்னலில் நிற்கும் போது எல்லாம் அந்த குழந்தைகள் 5, 10 வயதிற்குள் இருக்கும், ஆண் குழந்தைகளுக்கு ஆடையே இருக்காது..

வெயிலிலும், மழையிலும் அவர்கள் அங்கே தான்..... சாலையே வீடு.. நடுரோடில் சில சமயம் அந்த குழந்தைகள் வந்து வாகனங்களுக்கு நடுவில் வந்து விளையாடும். .அத்தனை சின்ன குழந்தைகள்.. :(

ஒவ்வொரு முறையும் அங்கு சிக்னலில் நிற்கும் போது பார்வை அவர்களை தேடும்.. :(

யட்சன்... said...

சமூகத்தின் புதிய எல்லைகளையும், அதன் நிதர்சனங்களையும் தமிழ் பதிவுலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது உங்களுடைய பதிவுகள் என்றால் மிகையில்லை.

வாழ்த்துகள்....


தமிழ்மண விருதுக்கான தெரிவுகளில் உங்கள் பதிவெதையும் பார்க்க முடியவில்லை...

என்ன காரணம்?

Thekkikattan|தெகா said...

மங்கை இந்த மாதிரியான நேரத்தில் இது போன்ற ஒரு பதிவு அவசியமென நான் நினைக்கிறேன்.

அந்தப் படத்தை நானும் பார்த்தேன், அதில் வரும் காட்சிகளை கண்ணுரும் பொழுது அவைகளை பார்த்து மரத்துப் பழகிய நமக்கு அத்துடனே வாழவும் பழகிக் கொண்டோம் side by side. ஆனால், வீட்டிற்குள் இருக்கும் அசுத்தத்தை படம் பிடித்து இதனூடகத்தான் நாம் வாழ்கிறோம் என்று படம் பிடித்து காட்டியவுடன், வானத்தில் தவழ்ந்து வாழும் ஒரு சிலருக்கு கீழே என்ன இருக்கிறது என்பதனை பார்க்க வைக்கிறார்களே என்ற வேகத்தில் ஏதேதோ சாக்கு போக்குகளை கூறிக் கொள்கிறார்கள்.

எல்லா நாடுகளிலும் எல்லாமும் இருக்கிறதுதான், இருந்தாலும் கண்ணை உறுத்துவது போல எங்கும் நீக்கமர நம்மூரில் நிறைந்திருப்பது போல காணக் கிடைப்பதில்லையே!

சத்யஜித் ரே எப்பொழுதோ நம்மூர் வறுமையை, தீண்டாமையை, அழகு காட்சிகளின் மூலமாக உலகிற்கு காண வைத்தார் பாதேர் பாஞ்சாலியின் மூலமாக நான்கு பத்தாண்டுகளும் ஆகிவிட்டது என்ன பெரிய மாற்றத்தை நாம் சந்தித்து விட்டோம், அதில் விரிந்த காட்சிகளிலிருந்து.....

நம் நாட்டு அரசியல் வாதிகளின் தன் நல மேபாட்டுக் கொள்கைகளை கொண்டவர்களிடத்தே இது போன்ற உண்மைகளை உலகரங்கில் துயிலுரித்து காட்டுவதின் மூலமே சில "தன்மானம்" கொண்ட நல்லவர்களாவது ஏதாவது செய்வதற்கு இது போன்ற positive antagonistic proddings நம்மை உசிப்பேத்தி சில நல்ல விளைவுகள் விடிய வைத்தால் சரியே!!

இது போன்ற தொண்டு நிறுவனங்களே அது போன்ற விடிதல்களுக்கு முடிவு. சும்மா, வெள்ளை சட்டை, பேண்ட் போட்டுக்கிட்டா தன்னைச் சுற்றி எந்த திறந்த நிலை சாக்கடையுமே இல்லேன்னு சிறு பிள்ளைத் தனமா வெட்டி வம்பு பேசரதில எந்த பயனுமில்லை.

Poornima Saravana kumar said...

நெஞ்சை உருக்கும் ஒரு பதிவு.. படித்து முடித்ததும் மனம் ஏதும் செய்யத் துடிக்கிறது..

சென்ஷி said...

//கிடைத்த வாய்பை பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற இவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சி பாராட்டப்பட வேண்டியவை. இவர்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகளாக மாற நாம் உளமாற வாழ்த்துவோம்.//

வாழ்த்துக்களில் நானும் இணைகின்றேன் அக்கா...

ALIF AHAMED said...

good post !!

மங்கை said...

நன்றி சி யூ...

இவங்க கிட்ட இருக்குற பொட்டன்ஷியலை நல்ல சேனல்ல திருப்பிவிட்டா..இவுங்க எங்கேயோ போயிடுவாங்க..ம்ம்

நன்றி கபீஷ்

மங்கை said...

ஆமா கவிதா.. போட்டுட்டு இருக்குற சட்டையை களட்டி தான் பெரும்பாலும் துடைப்பாங்க...

நன்றி உஷா..ரொம்ப நாளா கானலை??..:-)

மங்கை said...

யட்சன்...

//சமூகத்தின் புதிய எல்லைகளையும், அதன் நிதர்சனங்களையும் தமிழ் பதிவுலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது உங்களுடைய பதிவுகள் என்றால் மிகையில்லை.///


இது மாதிரி நண்பர்கள் அங்கீகாரம் இருக்கும்போது வேற விருது வேனுமா???.. மிக்க நன்றி...

மங்கை said...

தெகா

அதை அப்படியே ஒரு பதிவா போடலாம் போல இருக்கு...போடுங்க..:)

மங்கை said...

நன்றி சென்ஷி, பூர்ணிமா

Unknown said...

இவர்களின் பாசிடிவ் பக்கத்தைக் காட்டும் பதிவுக்கு நன்றி. வேறு வழி இல்லாமல் இந்த வாழ்க்கையை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் (படத்தில் குருடாக்கப்பட்ட சிறுவன், ஜமாலிடம் சொல்லுவது - "உனக்கும் எனக்கும் அதிருஷ்டம் தான் வேறுபாடு").

வழக்கம் போல் நல்ல பதிவு!

//இவங்க கிட்ட இருக்குற பொட்டன்ஷியலை// உண்மை!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம் ரே படத்தையும் இப்படி ஏழ்மையை வெளிச்சம் போட்டுக்காட்டிட்டார்ன்னு திட்டியதா கேள்விப்பட்டிருக்கேன்..
இருக்கறத சொன்னா ஏன் கோவம் வரனும்ன்னு தெரியல..

கொஞ்ச நாளா பிச்சைக்காரங்களைக்காணொம்ன்னு சிலர் பெருமைப்படறாங்க.. எங்க போயிருப்பாங்க கொஞ்ச நாள் காமன் வெல்த் கேம்ஸ் க்காக ஒளிச்சு வச்சிருப்பாங்க.. என்ன பெரிசா மில்லியனராவா ஆகியிருக்கப்போறாங்க அவங்க.. :(

கோபிநாத் said...

நிஜங்கள் எப்போதும் கனமாக தான் இருக்கும் போல!!

அந்த சிறுவர்களுக்கு வாழ்த்துக்கள் ;)

Unknown said...

ஒரு வெளங்காவெட்டியின் இலக்கிய யாத்திரைசத்தமில்லாமல் ஒரு இடி.......காட்டில் மழைநிஜார் போட்ட மனிதனின் பேஜார்

பத்மா அர்விந்த் said...

தேவையான கோபம் மங்கை. கோப்பையை குழந்தைகளுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று அனில் கபூர் பேசியதற்கு பதிலாக வந்த வருமானத்தில் ஒரு பகுதியை அந்த குழந்தைகளுக்காக செலவிடுவேன் என்று முன்வந்திருந்திருக்கலாம்.
கென்யா, மொஸாம்பிக், தாய்லாந்து, அமெரிக்காவிலும் கூட இது போல வாய்ப்பில்லாத குழந்தைகளும் குழந்தைகளை வேலை வாங்குவதும் நடக்கவே செய்கிறது.

நாடோடிப் பையன் said...

Very thoughtful post.
Whenever I hear about the sufferings of little kids, my heart goes out for them. Very sad!

Sabarinathan Arthanari said...

நல்ல பதிவு!

வாழ்த்துக்கள் நண்பரே!!

தமிழ் அமுதன் said...

சமூக அவலங்களை நன்றாக அலசி,ஆதாரத்துடனும், அக்கறையுடனும்

வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள்! உங்களை போன்றவர்களின் பதிவுகளை

இந்த அரசு கவனித்து, உங்கள் ஆலோசனைகளை ஏற்று நடக்க வேண்டும்.

Anonymous said...

கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டுல இந்த மாதிரி சின்ன குழந்தைகள் பிச்சை எடுக்கும். காசு குடுத்து என்கரெஜ் பண்ணறதா இல்லா குடுக்காம விட்டு அவங்கள கஷ்டப்படுத்தறதா, இது மாதிரி கேள்விகளுக்கு விடை சொல்லறது கஷ்டமா இருக்கு.

கிருத்திகா ஸ்ரீதர் said...

இது தொந்தரவோ சந்தோஷமோ தெரியாது ஆனாலும் என் பங்களிப்பு. இங்கு சென்று காணவும். http://authoor.blogspot.com/2009/01/blog-post_26.html

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள் சிறுவர்களுக்கும் உங்களுக்கும்..

நாகை சிவா said...

அழுத்தமான கருத்துக்கள் மங்கை.

இங்க ஒரு விசயம்!. சில சமயங்களில் இது போன்ற குழந்தைகள் ரயிலை சுத்தம் செய்தும், அல்லது கை கால்களை துணியால் கட்டிக் கொண்டு பிச்சை கேட்கும் போதும் நான் மறுத்து விடுவேன். இதனால் எனக்கும் என் நணபர்களுக்கும் பல கருத்து மோதல் ஏற்பட்டு உள்ளது. நீ தர மறுக்கும் ஒரு ரூபாய் யால் அவன் ஒரு பயங்கரவாதி ஆகும் வாய்ப்பு உள்ளது என்பது அவர்கள் வாதம். அவன் பயங்கரவாதி ஆனாலும் பரவாயில்லை கடைசி வரைக்கும் பிச்சை எடுக்கும் சோம்பேறியாக இருக்க நான் ஒரு காரணமாக இருக்க விரும்பவில்லை என் வாதம். இதில் யார் சரி யார் தவறு என்று தெரியவில்லை.

அதை தவிர்த்து புத்தகங்கள், உணவு பண்டங்கள் விற்கும் குழந்தைகளை ஊக்குவிக்க கூடாது என்ற போதிலும் அவன் அவனால் முடிந்த அளவு உழைத்து சாப்பிடு விரும்புகிறார்கள் என்ற அளவில் வாங்குவது உண்டு. அது கூட தவறு தான் என்று சில நேரங்களில் எண்ணத் தோன்றும். பசி என்று கேட்டுபவர்களுக்கும் யாதுச்சும் உணவாக வாங்கி தர தவறியது இல்லை. அதையும் பிச்சை எடுப்பதையும் ஒன்றாக பார்க்க வில்லை.

பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சிறந்த முறையில் செய்கிறார்கள் என்ற போதிலும் இது பத்தாது என்பது தான் என் எண்ணம்.

மங்கை said...

கெக்கே பிக்குணி நன்றி


லட்சுமி

//என்ன பெரிசா மில்லியனராவா ஆகியிருக்கப்போறாங்க அவங்க///

:-)..அதானே..

மங்கை said...

கோபி நன்றி

புதுகைச் சாரல் என்னாது...ஒன்னுமே புரியலை...

பத்மா
ம்ம்ம்...வாங்க...ரொம்ப நாள் ஆச்சு..:-).. இந்தப் படம் மூலம் சில தொண்டு நிறுவணங்கள் முன் வந்திருக்காங்க.. படம் எடுத்தவங்களும் ஏதாவது செய்வாங்கன்னு நம்பிக்கை இருக்கு

மங்கை said...

நாடோடிப் பையன், Sabarinathan Arthanari நன்றி


ஜீவன்

//இந்த அரசு கவனித்து, உங்கள் ஆலோசனைகளை ஏற்று நடக்க வேண்டும்//

ஆஹா அமுதன்....ஏன் நல்லா இருக்குறது பிடிக்கலையா..:-) நான் எல்லாம் ஒன்னுமே இல்லை.. என்னைவிட நல்லா சிந்திக்குறவுங்களும்.. அதை செயல்படுத்துறவுங்களும் இருக்காங்க அமுதன்...

மங்கை said...

சின்ன அம்மிணி, கிருத்திகா.. பாச மலர்

நன்றி

மங்கை said...

நாகை சிவா said...

நன்றி சிவா..

நீங்க சொல்றது முற்றிலும் உண்மை.. இந்தக் குழந்தைகளை படிக்க வைக்கறதும் அவ்வளவு சுலபம் இல்லை.. அதுக்காக அப்படியே விடவும் முடியாது இல்லையா... அதற்குத்தான் இது மாதிரி சில திட்டங்கள்..

உ தா சில வீடுகளில் இங்க பார்த்தீங்கன்னா...வீட்ல வேலைக்கும் இருப்பாங்க.. அதே சமயம் படிச்சுட்டும் இருப்பாங்க... அது பரவாயில்லை இல்லையா.. அப்படி பார்த்துக்கிறவங்களும் உண்டு.. குடும்பத்துக்கு வருமானம்.. குழந்தைக்கு படிப்பு...

அது மாதிரி.. இது மாதிரி குழந்தைகள் சம்பாதிச்சு பழகுனவுங்க.. விட மாட்டாங்க... சில கல்லூரி மாணவர்கல் வாரத்திற்கு ஒரு முறை இந்தியா கேட் பக்கம் போய் உட்கார்ந்து சொல்லி குடுப்பாங்க.. அவர்களும் ஆர்வமா படிப்பாங்க... இது மாதிரி ஆல்டர்நேடிவ் ஸ்ட்ரேடஜீஸ் பார்க்க வேண்டியது தான்.. என்ன பண்ண.. அது ஒழுங்கா நடந்தாலே போது சிவா.. சில நாட்களில் அந்த குழந்தையே பிச்சை எடுப்பதும், குப்பை பொறுக்குவதும் விட்டுடும்..ம்ம்

அப்பாவி தமிழன் said...

sariyakach sonnerkal

பத்மா அர்விந்த் said...

Mangai
I had sent an email requesting names and contact info for some AIDS organization for funding. I had forwarded an email from State NJ . Did you receive that?

sa said...

சமூக அக்கறையோடு நீங்கள் எழுதும் பதிவுகளுக்கு நன்றி. தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி

Dr.Rudhran said...

good post, well written. best wishes

மங்கை said...

நன்றி விஜி...

மங்கை said...

டாக்டர்.ருத்ரன்...

என் சந்தோஷத்துக்கு அளவே இல்லை... நன்றி

sakthi said...

மங்கை மேடம் ,
மனதை கனக்க வைதது விட்டது .நாமு ம் ஒரு காரணமா ??
கோவை சக்தி

அமிர்தவர்ஷினி அம்மா said...

நெஞ்சை கனக்கச் செய்யும் பதிவு
தி.நகர் ரயில்வே ஸ்டேசனில் இப்படிதான்

1 வயதுக்கும் குறைவான குழந்தை, அதை வைத்து பிச்சை எடுக்கும் 10 வயதிற்குள்ளான சிறுவன்

15 வயது பெண், தலையில் ரத்தகாயத்துடன் இருக்கும் பெண் குழந்தையை படுக்க வைத்து பிச்சை எடுக்கிறாள்

ஈரக்குலையே அந்து போகிறது என்பார்களே, அது மாதிரி தான் இருக்கிறது இது போன்று பார்க்க நேரிடும்போது.

இப்படி எழுதிதான் ஆற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது

அபி அப்பா said...

நான் இந்த பதிவை படிக்கும் முன்னே கருத்து கூற வேண்டாம் என இருந்தேன்!

ஏன்னா மனம் அத்தனை கனத்து போனது!

ஆனால் டாக்டர்..ருத்ரன்கருத்து சொன்ன பிறகு இப்பதான் பார்த்தேன்!

வெல்டன் மங்கை! நல்ல பதிவு!

ஆனா எனக்கும் நாகைசிவா சொன்ன மாதிரி சில சந்தேகங்கள் இருக்கு!

அது தவிர தமிழ் நாட்டில் "பிச்சைகாரர் மறு வாழ்வு சங்கம்" என்று கலைஞரால் 1974ன்னு நினைகிறேன்! ஒரு சட்டம் உண்டு!

அதிலே மனு செய்தால் அவர்களை கூப்பிட்டு போய் கூடை பின்னுவது போன்ற விஷயங்கள் கத்து கொடுத்து பின்னே அரசு கேரண்டி போட்டு பேங்க் லோனும் வாங்கி கொடுப்பார்கள்!

அதை கூட செய்ய முடியாதவர்கள் அரசு முதுநிலை காப்பகத்துக்கு அனுப்ப படுவார்கள்

நாம் செய்ய வேண்டிய உதவி அட்லீஸ்ட் 100 பேருக்கு அந்த "தாசில்தார்" கொடுமையை செஞ்சு தரனும், அத்தனையே!


நீ என்னடா கிழிச்சேன்னு கேட்பவர்களை என் மெயில் ஐடி கொடுத்து அனுப்பவும்!

மங்கை said...

சக்தி, அ. அம்மா, அபிஅப்பா.. நன்றி

ஆதவா said...

உலகம் முழுக்க இந்தமாதிரி சிறார்கள் இருக்கிறார்கள்... இவர்களை வைத்து கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாதவர்கள் பணம் பார்க்கிறார்கள்...

தில்லியில் மட்டும் 1,00,000 தெருக் குழந்தைகள் இருக்கிறார்களாம்.

அப்பா.................. அப்படியென்றால் நாடுமுழுக்க?????? நினைக்கவே வேதனை..

ஆதரவற்றவர்களுக்கு ஆதரவற்றகர்களே ஆதரவு இல்லையா?.

அப்படித்தான் ஆகிவிட்டது... நாமும் கூட எழுதுகிறொமே தவிர, ஆதரவாக இருக்கிறோமா என்று யோசித்தோமானால் இல்லை என்றே பதில் வருகிறது.....

நல்ல தேவையான பதிவு இது...

butterfly Surya said...

தேவையான பதிவு..

மங்கை said...

ஆதவன்...வண்ணத்துபூச்சியார் நன்றி

தேவன் மாயம் said...

அன்பின் மங்கை,
நான் தேவா,
ஒருவார வலச்சர் ஆசிரியர்.
உங்கள் எழுத்துக்கள் பிரமாதம்!
வலையில் எழுதினால் உங்களைப்போல் எழுதவேண்டும்.உங்களின் பதிவுகளை
என் நண்பர்கள் பார்வைக்கு வைக்கிறேன்
இன்று காலை 10.30 மணிக்கு,
மிக்க ந்ன்றி.
தேவா..
http://blogintamil.blogspot.com/
நன்றி..

Sinthu said...

நீங்கள் சொன்னது உண்மை தான். அந்த படத்தில் சொன்ன விடயங்கள் யாவும் உண்மையும் கசப்பும் நிறைந்தவை.. ஆனால் வாழ்க்கை என்பது கேட்கப் பட்ட எல்லா கேள்விகளுக்கும் விடையாக வந்தது...( எல்லா கேள்விகளுக்குமே விடை வருமா? - அதிஷ்ட சாலிகளுக்கு மட்டுமே.)
தேவா அண்ணாவின் வலைப் பூவிலிருந்து கண்டு பிடித்தேன்....

மங்கை said...

நன்றி தேவா..மிக்க நன்றி...

நன்றி சிந்து..

அடைமழைக்காலம் said...

Nice...