Thursday, June 28, 2007

இன்னைக்கு நான் பல்ப் ஆன கதை

இன்னைக்கு கல்லூரியில் நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சி...

இப்ப அட்மிஷன் நேரம்ங்கிறதுனால கல்லூரியில் எப்பவும் கூட்டம். இன்னைக்கு நல்ல மழை வேற. மழை பெய்தா யாரும் கேபின்குள்ள உட்கார மாட்டோம்..எழுந்து வெளியே வந்து இயற்கைய ரசிசுட்டு இருப்போம். அப்படி வெளியே வந்து நின்னுட்டு இருந்தேன் அப்ப அட்மிஷனுக்கு வந்த ஒருத்தர் அகுகில் வந்து நீங்க தமிழா ன்னு கேட்டார். நான் ஆமான்னு சொல்லவே.... அக்கா பொண்ணு அட்மிஷ்னுக்காக வந்தோம்..இந்த கல்லூரி எப்படி...படிப்பு எப்படின்னு விசாரிச்சுட்டு இருந்தார். பின்ன..நீங்க எந்த ஊரு ன்னு கேட்டார். கோவைன்னு சொன்னேன்.

அப்புறம் பேச்சு விளையாட்டு, படிப்புன்னு அவர் படிச்ச காலத்துக்கு போய்.. நான் ஓட்டப்பந்தைய வீரர்...லாங்க் ஜம்ப் சேம்பியன்னு அவர் ஒரே அறுவை. எனக்கு கொஞ்ச நேரத்துல போர் அடிக்க ஆரம்பிச்சுறுச்சு. அவர் கூட வந்த பெண்கள் வேற என்னை விடற மாதிரி இல்லை...அவர் ரொம்ப அளக்க ஆரம்பிக்கவே..காசா பணமா நாமும் சொல்லி வைப்போம்..கொஞ்சம் பொழுது போகட்டும்னு நானும் சொல்லி வச்சேன். நான் கூட பேஸ்கெட் பால் பிளேயர் சொன்னேன்... என்னுடன் வேலை செய்யும் திருச்சியியை சேர்ந்த பெண் நான் ஷாட் புட்ல அப்ப ஸ்டேட் சாம்பியனாக்கும்னு அவள் பங்குக்கு அவளும் எடுத்து விட்டாள்.

நாங்க பேச பேச அவர் "என்ன மருத முழி எல்லாம் சொல்லி முடிச்சாச்சா"" ன்னு கேட்டார். எனக்கு ஷாக்.. இந்த 'மருத முழி' பேர எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கேன்னு. கொசுவத்தி சுத்தி சுத்தி பார்த்தேன்.. ஆஹா இது நமக்கு ஸ்கூல ப்ரெண்ட்ஸ் வச்ச செல்லப் பேர் ஆச்சேன்னு பொரி தட்டுச்சு.. மனசு பட படக்கவே....முழி முழின்னு முழிச்சேன். அவர் ''என்ன என்னை தெரியலையா?, இதுக்கு மேல என்னால ஓட்ட முடியாது..நான் தான் ஷங்கர்.... 10 ஆம் வகுப்பு வரை உன் கூட படிச்சேன்.. என்னை உனக்கு அடையாளம் தெரியாதுன்னு எனக்கு தெரியும்....ஆனா உண்ண எனக்கு அடையாளம் தெரிஞ்சது..இருந்தாலும் நீ எப்படி தில்லியிலன்னு ஒரு சந்தேகம்...அதான் டெஸ்ட் பண்ணேன்'' னு சொல்லவே..ஆஹா....நம்ம நிலமை இப்படி ஆயுடுச்சேன்னு நினச்சுட்டேன்.

அவருடன் இருந்த பெண்கள் ''உங்களை பார்த்த உடனே கண்டு பிடிச்சுட்டார், நாங்க தான் கோவைல இருக்கவுங்க இங்க எப்படி..நீ யாராவது கிட்ட ஏதாவது கேட்டு வாங்கிக் கட்டிக்க போறே'' ன்னு சொல்லிகிட்டு இருந்தோம், ஆனா அந்த 'மருத முழி' பேர சரியாத்தான் வச்சு இருக்காங்க..நல்லா முழிக்கரீங்க'' னு சொல்லி சிரியோ சிரின்னு சிரிக்கிறாங்க.

ஷங்கர் என்கிட்ட 'நீ பேஸ்கெட் பால் சாம்பியனா...என்ன என்ன கதை எல்லாம் விடறீங்கப்பா'' ன்னு சொல்லி தர்மசங்கடத்துல தள்ளிட்டார். ஆனா இத்தனை வருஷங்கள் கழித்து ஒருத்தர பார்க்குறது சந்தோஷமாவும், ஆச்சிரியமாவும் இருந்துச்சு...ஹ்ம்ம்

41 comments:

காட்டாறு said...

நான் தான் முதலா??? நம்பவே முடியலப்பா....
ஏனுங்க... நீங்க முழிச்ச முழியில தான் ஆரும் வரலையோ?
எங்க இன்னோரு மொற ஒரு முழி முழிங்க பார்ப்போம். ;-)

Santhosh said...

//ஆனா அந்த 'மருத முழி' பேர சரியாத்தான் வச்சு இருக்காங்க..நல்லா முழிக்கரீங்க'' னு சொல்லி சிரியோ சிரின்னு சிரிக்கிறாங்க.//

:))

மங்கை said...

//எங்க இன்னோரு மொற ஒரு முழி முழிங்க பார்ப்போம். ;-)//

கிண்டலு????? ஹ்ம்ம்... என் முழியே முழிக்குற மாதிரி தான் இருக்கும்


வாங்க சந்தோஷ்...

பங்காளி... said...

காலைல ஏத்துன பாரத்தை சாயங்காலமே இறக்கியாச்சா...நைஸ், இப்படித்தான் இருக்கனும்..ம்ம்ம்ம்

ஆனாலும் இம்புட்டு அப்பாவியா இருக்கியளே...ஹி..ஹி...

காட்டாறு said...

// பங்காளி... said...
ஆனாலும் இம்புட்டு அப்பாவியா இருக்கியளே...ஹி..ஹி...
//

பீலா விட்டதுக்கு அப்பாவின்னு பேரா? ஏனுங்க பங்காளி நீங்க?

மங்கை said...

பங்காளி...பாரத்தி இறக்கி ரொம்ப நாள் ஆச்சு...

ராசாத்தீதீதீதீதீ...ஏஞ்சாமி இந்த போஓஓறாமை...ஏதோ ஒருத்தர் சொல்ரார்..லூசுல விட்டுட்டு போவியா..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஏனுங்க அம்மணி ஒரு சந்தேகமெனக்கு.. இந்த பல்புன்னா பளீர்ன்னு எரியுமே அதானே...நீங்க சொல்லறது பாத்தா ட்யூப்லைட் மாதிரி இல்ல தெரியுது... :)

மங்கை said...

//நீங்க சொல்லறது பாத்தா ட்யூப்லைட் மாதிரி இல்ல தெரியுது...//

அதான் பங்காளி பாலீஷ்ட் சொல்லி இருக்காரே..இதுல நீங்க 'விளக்கமா' சொல்றீங்களாக்கும்

தென்றல் said...

/... ஆஹா இது நமக்கு ஸ்கூல ப்ரெண்ட்ஸ் வச்ச செல்லப் பேர் ஆச்சேன்னு பொரி தட்டுச்சு.. மனசு பட படக்கவே....முழி முழின்னு முழிச்சேன்./

ஹா...ஹா..
.... ஹா...ஹா..
....... ஹா...ஹா..

[ஏலே... என்ன சிரிக்க விடுங்கப்பா..]

அதில்லங்க மங்கை... 'முழி முழின்னு முழிச்சேன்'னு சொன்னீங்களா.. கொஞ்சம் கற்பனை பண்ணி பார்த்தேன்... ;)

மங்கை said...

/அதில்லங்க மங்கை... 'முழி முழின்னு முழிச்சேன்'னு சொன்னீங்களா.. கொஞ்சம் கற்பனை பண்ணி பார்த்தேன்... ;) ////

ஆஹா..இது தான் சொ.செ.சூ.. :-))
நன்றி தென்றல்

Anonymous said...

முழி சரி அதென்ன மருத முழி???

- தீவு -

சோமி said...

நல்ல அனுபவம்....அதுசரி நீங்க மெய்யாலுமே பாஸ்கேட் பால் பிளையர் இல்லிங்களா? ஏனுங்க 'மருத' முழி ன்னா என்ன என்னங்க? மருத மரத்துக்கும் அதுக்கும் ஏதும் தொடர்பிருக்குதுங்களா?

Santhosh said...

//கிண்டலு????? ஹ்ம்ம்... என் முழியே முழிக்குற மாதிரி தான் இருக்கும்//
அப்ப முழிக்கும் பொழுது என்ன பண்ணுவிங்க.. நெத்தியில எழுதி ஒட்டிகுவிங்களா, இப்ப நான் பாக்கலை முழிக்கிறேன் அப்படின்னு :))... (எதுநாலும் பேசி தீத்துகலாம் ஆளை வெச்சி அடிச்சிடாதிங்க.. நான் பாவம்..)

வவ்வால் said...

இன்றைக்கு பல்ப் பியுஸ் ஆன கதை என்றல்லவா தலைப்பு வைத்து இருக்க வேண்டும்! :-))
(சொந்த ஊரு மதுரையா அதான் மருத முழியா? )

பங்காளி... said...

வவ்வால்...

அவங்க மதுரை மங்கையில்லை..."கோயமுத்தூர் வீரலட்சுமி"...ஹி.ஹி...

கோவில்பட்டி வீரலட்சுமிகள் கோவிக்கப்டாது...

மங்கை said...

சோமி, சந்தோஷ், பங்காளி, அனானி

.//நெத்தியில எழுதி ஒட்டிகுவிங்களா, இப்ப நான் பாக்கலை முழிக்கிறேன் அப்படின்னு :))///

:-)))))

நன்றி

அந்த பெயர்க் காரணம் எல்லாம் தெரியலைங்க..ஆனா திரு திருன்னு முழிச்சா..எங்க ஊர்ல மருத முழின்னு சொல்லு வாங்க...ஒரு வேளை, மருத காரகவுக எல்லாம் அப்படித்தான் முழிப்பியளோ..

//கோவில்பட்டி வீரலட்சுமிகள் கோவிக்கப்டாது...///

வீரலட்சுமிகளுக்கு சிரிப்போ சிரிப்பு ..

மங்கை said...

//அதுசரி நீங்க மெய்யாலுமே பாஸ்கேட் பால் பிளையர் இல்லிங்களா?/

பாஸ்கட் விளையாடினா பிளேயர் தானே
'நானும்' விளையாடி இருக்கேன்..:-)))

தமிழ்நதி said...

அந்த 'மருத முழி'யைப் பார்க்க முடியாதா...? முத்துலட்சுமி வந்தபோது கேட்டிருக்கலாம். ம்... நீங்கள் பரவாயில்லை. சில நாட்கள் சந்திக்காது போனால் எனக்குப் பழகியவர்கள் பெயரே மறந்துவிடும். கேட்கவும் தயக்கம்... ஒரு மாதிரி வரவழைத்துவிடுவேன். ஏனென்றால் இடையிடையில் பெயர் சொல்லி அழைத்துப் பேசாவிட்டால் பேசியதுபோலவே இருக்காது. 'மருத முழி'யின் போட்டோவை தனிமடலிட முடியுமா..? :)

மங்கை said...

ஹி ஹி...நதி

எனக்கென்ன.. நான் போட்டோவ அனுப்பிடறேன் முழிய பார்த்து பயக்காம இருந்தா சரி...

பொன்ஸ்~~Poorna said...

அந்தப் பொருத்தமான பேரையே புனைப்பெயரா வச்சி எழுதிருக்கலாமே அம்மணி? ;)

தமிழ்நதிக்கு அனுப்பசொல எனக்கும் ஒரு காப்பி ;)

இலவசக்கொத்தனார் said...

:))

enRenRum-anbudan.BALA said...

மங்கை,
இப்பதிவை ரசித்தேன் !
//ஆனா அந்த 'மருத முழி' பேர சரியாத்தான் வச்சு இருக்காங்க..நல்லா முழிக்கரீங்க'' னு சொல்லி சிரியோ சிரின்னு சிரிக்கிறாங்க.
//
:))))))))))))))))))

நாகை சிவா said...

பொது வாழ்க்கையில் இது எல்லாம் ரொம்ப சாதாரணம் விடுங்க...

Anonymous said...

:)))

ஏதோ நம்ம பங்குக்கு :)
http://www.desipundit.com/2007/06/29/bulb/

மங்கை said...

பொன்ஸ் பெயர் மாற்றம் பண்ணீருவோமா... நீங்க விருந்துக்கு ஏற்பாடு பண்ணுங்க...கெடா வெட்டி ஜாமாய்ச்சுறுவோம்..:-)))

கொத்தனாரே வாங்க..அடிக்கடி..:-))

பாலா முதல் வருகைக்கு நன்றி..

சிவா, டுபுக்கு நன்றி..
பட்டம் எல்லாம் குடுத்துட்டீங்க..:-))

சென்ஷி said...

//பொன்ஸ்~~Poorna said...
அந்தப் பொருத்தமான பேரையே புனைப்பெயரா வச்சி எழுதிருக்கலாமே அம்மணி? ;)//

ரிப்பீட்டே :))

அபி அப்பா said...

தலைப்பே தப்பு! "இன்னைக்கும் பல்பு ஆன கதை"ன்னு இருந்திருக்கனும்! ஏன்னா உங்க தேசிய சந்திப்புல பல்புன்னா பளிச்சுன்னு எரியும்ன்னு விவாதிச்சுட்டு இனிமே அதுக்கு பேர் டியூப்லைட்ன்னு செப்பனும்ன்னு செப்பிட்டு இப்போ பல்புன்னு செப்புனா ஸாரி சொதப்புனா எப்டி? ஸோ இன்னிக்கு முத்துலெஷமி பல்பு(ஞாபகம் வச்சு அதை சுட்டிகாட்டியமைக்கு) நீங்க .....சொல்ல மாட்டேன்:-)))

(கோவிக்காதீங்க ஏகப்பட்ட சிரிப்பான் போட்டுட்டேன்)

முத்துகுமரன் said...

//ஒரு வேளை, மருத காரகவுக எல்லாம் அப்படித்தான் முழிப்பியளோ.. //

இல்லீங்களே :-).

ஆமா மருதைகாரர்களுக்கு கற்பனை வளம் அதிகம்னு ஒரு பேச்சு இருக்கு :-)

மங்கை said...

அய்யா சென்ஷி.... இந்த 'ரிப்பீட்டே'
விட மாட்டியா நீ...

அபி அப்பா...வந்ததும் ஆரம்பிச்சுட்டீங்களா...எப்படான்னு இருந்தீங்களாக்கும்?

அப்புறம் ஒரு விஷயம் உங்க கிட்ட கேக்கோனும்...
எப்படி 'பொறுப்பா' நடந்துக்குறதுன்னு உங்க கிட்ட தான் கேட்டு தெரிஞ்சக்கனும்னு.. தங்கமணி..அம்மா எல்லாம் சொன்னாங்களாமே... அது பத்தி ஒரு பதிவு போட்டீங்கன்னா உதவியா இருக்கும்..:-))))

நானும் ஏகப்ப்ப்ப்பட்ட சிரிப்பான் போட்டுட்டேன்...:-))

வாங்க முத்துக்குமரன்...

முழிச்சுட்டே கற்பனை பண்ணுவீங்களா

அபி அப்பா said...

//அபி அப்பா...வந்ததும் ஆரம்பிச்சுட்டீங்களா...எப்படான்னு இருந்தீங்களாக்கும்?

அப்புறம் ஒரு விஷயம் உங்க கிட்ட கேக்கோனும்...
எப்படி 'பொறுப்பா' நடந்துக்குறதுன்னு உங்க கிட்ட தான் கேட்டு தெரிஞ்சக்கனும்னு.. தங்கமணி..அம்மா எல்லாம் சொன்னாங்களாமே... அது பத்தி ஒரு பதிவு போட்டீங்கன்னா உதவியா இருக்கும்..:-))))//

பதிவு எதுக்கு மங்கைஜி!

இப்போ கூட டெல்பின் பதிவிலே ஒரு பின்னூட்டம் போட்டேன் பாருங்க! நான் 18 வயதில் என் கல்லூரி பருவத்தில் எப்படி இருந்தேனோ அப்படியேதான் இந்த 39 வயதிலும் இருக்கேன். காரணம் நான் எதையுமே சீரியசாக எடுத்துகொண்டது கிடையாது! எதையும் உணர்ச்சிபூர்வமாக எடுத்துப்பது கிடையாது, எந்த விஷயத்தையும் அறிவு பூர்வமாக அனுகுவேன்! அது சிலருக்கு பொறுப்பற்ற தனமாக தெரியும். நான் உங்களைப்போல் பல லஷ்சங்கள் ஒரு துரோகியால் நஷ்டப்பட்டு நடுத்தெருவில் நின்ற போது கூட ஒரு சொட்டு கண்ணீர் விட்டது இல்லை. அது போல் எனக்கு வாய்த்த தங்கமணி(தங்கமான மணி)"சரி நாம் ஜெயிச்ச பின்ன மயிலாடுதுறை பக்கம் வரலாம். அதுவரை கல்யாணம் காட்சி எதுக்கும் போக கூட வேண்டாம் என கங்கணம் கட்டிகிட்டு, நான் திரும்ம்பவும் மனிதனாக ஆன பின்ன மயிலாடுதுறை பக்கம் வந்தோம். நான் மட்டும் அப்போ உணர்ச்சிபூர்வ முடிவு எடுத்திருந்தால் தற்கொலைதான் தீர்வாக இருந்திருக்கும். ஆனால் அறிவுபூர்வமாக சிந்தித்தேன், முயன்றேன் ஜெயித்தேன்....அப்போதுகூட சிலர் "என்னது இவ்வளவு ஆகியும் இத்தனை கடன் இருந்தும் சிரிச்சுகிட்டு இருக்கானே...பொறுப்பில்லாதவன்"ன்னு சொன்னது என் காதிலும் கேட்டது. வெளிப்பார்வைக்கு அப்படித்தான் நான்....ஆனால் உள்ளே அப்படியில்லீங் அம்மனி!!

கோபிநாத் said...

\\வெளிப்பார்வைக்கு அப்படித்தான் நான்....ஆனால் உள்ளே அப்படியில்லீங் அம்மனி!! \\

ஆஹா...தலைவா என்ன ஆச்சு? only சிரி...சிரி..தான் ஓகே ;))))

அபி அப்பா said...

யோவ் கோபிதம்பி! ரூட்ட மாத்தாதய்யா, இது சத்தியமா காமடி பின்னூட்டம் தான்யா! நம்பு! ஹய்யோ நான் வேண்டுமானா தூக்கிடவா இந்த பின்னூட்டத்த! 2 நாளா இப்டிதான் நடக்குது, வேணும்னா முத்துலெஷ்மிகிட்ட கேளுப்பா!

கோபி! இந்த பின்னூட்டம் ஆக்சுவலா மங்கஜியின் அந்த ஏமாந்த(ஏமாற்றப்பட்ட) கட்டுரைக்கான பின்னூட்டம். அது மங்கஜிக்கு புரியும்! இந்த பதில் அவங்களுக்கு ஆறுதலா இருக்கும் என நினைத்து இந்த பதிவில் இப்படி போட்டேன். எல்லாரும் அந்த பதிவிலே வந்து"ஐயோ பாவம் நீங்க ஐயோ பாவம் நீங்க"ன்னு சொல்லி அவங்க ஊக்கம் குறைந்து விட்டால் என்ன செய்வது என்பதற்காகவே என் அனுபவத்தை அவங்களுக்கு சொல்லி நான் எப்படி மீண்டு வந்தேன் என சொல்லவே இந்த பின்னூட்டம் 2 நாள் ரிலாக்ஸ்க்கு பின்ன இங்க போட்டேன்! இப்ப புரியுதா? கோபிதம்பி! உனக்கே தெரியுமப்பா நான் எப்படின்னு, நான் எந்த காலத்தில் எப்போது கோவிச்சுக்கிட்டேன்:-))))))))))))))

Jazeela said...

மருத மலை மாமுனி தெரியும், இது என்ன புதுசா மருத முழி. அந்த முழிய எனக்கும்தான் கொஞ்சம் அனுப்பி வையுங்களேன் ;-)

அபி அப்பா said...

// ஜெஸிலா said...
மருத மலை மாமுனி தெரியும், இது என்ன புதுசா மருத முழி. அந்த முழிய எனக்கும்தான் கொஞ்சம் அனுப்பி வையுங்களேன் ;-) //

ஆமாமா மேத்தாவிருது வாங்கினதுல கண்திருஷ்டி அதிகமாகியிருக்கும். வாசல்ல மாட்டத்தான கேக்கறீங்க:-)))))

கவிதா | Kavitha said...

//ஷங்கர் என்கிட்ட 'நீ பேஸ்கெட் பால் சாம்பியனா...என்ன என்ன கதை எல்லாம் விடறீங்கப்பா'' ன்னு சொல்லி//

நமக்கு தேவையா??????????? !!! :)))))))) ஏன் மங்கை இப்படி பல்பு வாங்கறீங்க.....

மங்கை said...

அபி அப்பா...

கும்மிக்காக உங்களைப் பத்தி அப்படி சொன்னேன்..வேற ஒன்னும் இல்லை..

நானும் பழசு எல்லாம் மறந்து ரொம்ப நாள் ஆச்சு....

//அது சிலருக்கு பொறுப்பற்ற தனமாக தெரியும்///

இல்லப்பா அபி அப்பா..நான் அப்படி நினைக்க மாட்டேன்..உங்கள கலாய்க்க சொன்ன வார்த்தைகள்...கண்டுக்காதீங்க
கண்டுக்கமாட்டீங்க....

வேனா நான் பலமா சிரிச்சிடறேன்
:-)))))))))))))))))))))))))))))

மங்கை said...

//அந்த முழிய எனக்கும்தான் கொஞ்சம் அனுப்பி வையுங்களேன்//

டாக்டரம்மா..நீங்களுமா...விட்டா சென்னை மக்கள்ஸ் உங்க ஊர் பூரா போஸ்டர் ஒட்டீருவீங்க போல இருக்கே...

மங்கை said...

கவிதா..கொஞ்சம் பீலா விட்டுப்பாக்கலாம்னு ஆசைதான்... சொதப்பல்ஸ் ஆயுடுச்சு..:-))))

அபி அப்பா said...

//இல்லப்பா அபி அப்பா..நான் அப்படி நினைக்க மாட்டேன்..உங்கள கலாய்க்க சொன்ன வார்த்தைகள்...கண்டுக்காதீங்க
கண்டுக்கமாட்டீங்க....

வேனா நான் பலமா சிரிச்சிடறேன்
:-))))))))))))))))))))))))))))) //

ஹய்யோ! கோபி இப்டி திசை திருப்பிட்டியே! இல்லீங்க நான் தான் விளக்கம் சொன்னேனே! இந்த பின்னூட்டம் அந்த பதிவுக்கு! ஆனாலும் நீங்க பலமா சிரிக்க கூடாது! பொண்ணு பார்த்துச்சுன்னா தூக்கத்துல அலரும்ல:-))

மங்கை said...

யாரும் திசை திருப்பலை..நீங்க கண்டுக்கம்மாட்டீங்கன்னு தெரியும் தானே சொல்லி இருக்கேன்..

யாரு அலருன்னா நமக்கு என்ன..அதுக்காக நாம சிரிக்காம இருக்க முடியுமா....நான் அப்படித்தான் சிரிப்பேன்...

அபி அப்பா said...

சரீ, சைக்கிள் கேப்புல நான் ஒரு பதிவு போட்டேனே, வந்து எட்டி பார்க்கலியே நீங்க! என்னா போங்க!!