Friday, June 29, 2007

குரங்காட்டிகள்


ப்ரீ ஸ்கூல் (Pre-school) வழக்கத்துக்கு வந்த புதுசுல பல எதிர்ப்புகள் வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்பவே உளவியல் நிபுணர்கள் இரண்டரை வயது குழந்தைகளை இப்படி பள்ளிக்கு அனுப்பறது நல்லதே இல்லைனு கருத்து சொல்லியிருந்தாலும், நாளுக்கு நாள் ப்ரீ ஸ்கூல் பல புதுமைகளுடன் இன்னைக்கு வரைக்கும் முளைச்சுட்டுதான் இருக்கு.

நாமும் இது அவசியமான ஒன்னுதான்னு ஏத்துகிட்டு குழந்தைகளை அங்க அனுப்ப ஆரம்பிச்சிட்டோம். இது கூட பரவாயில்லைங்க. நான்கு நாட்களுக்கு முன்னால டீவீயில பார்த்த ஒரு நிகழ்ச்சி. நம்ம மக்கள் உணர்வுகளையும் சுய புத்தியையும் சுத்தமா உபயோப் படுத்தறதில்லைனு முடிவு பண்ணிட்டாங்களானு தோனுச்சு. இப்படியுமா பெண்கள் இருப்பாங்க?.

சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் 'Child Genius' ஆகனும்னு கங்கனம் கட்டி அதற்கான முயற்சியில தீவிரமா இறங்கிட்டாங்க. லிட்டில் ஜெம்ஸ் னு ஒரு ஸ்கூல், சென்னைல, குழந்தைகள் தொட்டில்ல இருக்கும் போதே சொல்லிகுடுக்க ஆரம்பிச்சுடறாங்களாம். இவங்களைப் பொறுத்தவரை 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொன்னதை உள் வாங்கும் சக்தி அதிகமா இருக்குமாம். அதனால 3 மாத குழந்தைகள்ல இருந்து நாம சொல்லி குடுக்க ஆரம்பிச்சா கண்டிப்பா அந்த குழந்தை பெரிய ஜீனியஸா வர காரண்டி தராங்களாம்.

Flash-cards முறையை உபயோகித்து சொல்லிக்குடுக்குறாங்க. மூணு மாச குழந்தைகிட்ட ஒரு ரெட் அட்டையில ஆப்பிள்னு எழுதி காமிச்சா, அது பேச ஆரம்பிக்கும் போது மீண்டும் கேட்டா, இத நியாபகம் வச்சு கரீட்டா சொல்லிடுமாம். அடக்கடவுளே, இந்த லூசுகளை எல்லாம் என்ன பண்ண.




குழந்தைகள் என்ன பாவம் பண்ணாங்களோ, நம்ம சமுதாயத்தில பிறக்குறதுக்கு. இதுல ஒரு லட்சியத் தாய் சொல்றாங்க என் குழந்தை மற்ற பொம்மைகளை விட இந்த அட்டைகள் கொடுத்தா தான் ரொம்ப ஆர்வமா விளையாடுறான். குழந்தைகள் எத கொடுத்தாலும் ஆர்வமாத்தான் விளையாடும். முக்கியமா பேப்பர், அட்டை போன்றவை கிழித்தா சத்தம் வர்ரதுனால, பொதுவா எல்லாக் குழந்தைகளும் பேப்பர்னா ரொம்ப ஆர்வமா விளையாடுவது வழக்கம். இது மாதிரி விஷயங்களை தெரிந்து கொள்ள யாருக்கும் விருப்பம் இல்லை.
மற்றொரு லட்சியத்தாய் இரண்டு ஃபோட்டாக்களை 5 மாச குழந்தை கிட்ட காமிச்சு, '' இதுல அப்துல் கலாம் எது?" அப்படீன்னு கேட்க, அந்த குழந்தையும் தெரிஞ்சு காமிச்சதா இல்லை அகஸ்மாத்தா கலாம் அவர்கள் படத்துல கை வச்சுதான்னு தெரியலை.

இவங்களைப் பொருத்த வரைக்கும் இது ஒரு "uncommon opportunity’ யாம். அத அவங்க உபயோகப் படுத்திக்கிறாங்களாம். இவங்க லட்சிய வேட்கைக்கு ஒரு அளவே இல்லாம போச்சு.

இந்த மாதிரி அதிபுத்திசாலிக இனிமேல் குழந்தை வயத்துல இருக்கப்பவே சொல்லிக் குடுக்க ஆரம்பிச்சுறுவாங்க போல இருக்கேனு நினச்சேன். நினச்சுட்டு இருக்கப்பவே ஒருத்தர் பேசினார். ஏதோ டீவில பார்த்தாராம், வயத்துல இருக்கும் குழந்தையை கூட நாம் ஜீனியஸ் ஆக்கலாம்னு. அதனால கர்ப்பமா இருக்குற அவர் மனைவி இப்ப இங்க வந்துட்டு இருக்காங்களாம். தலைய எங்க போய் முட்டிக்கறதுன்னு தெரியலை.

இந்த ஸ்கூல் நடத்தீட்டு இருக்குற 'அம்மா' சொல்றாங்க, இவங்க சொல்லி குடுக்குற முறையை தொடர்ந்து சொல்லிக் குடுத்தா, 16 வயசுல கத்துக்க வேண்டிய விஷயங்களை 5 வயசுலயே குழந்தை ரொம்ப சுலபமா கத்துக்குமாம்.

சமீபத்தில் நம்ம மணப்பாறை டாக்டரின் மகன் சிசேரியன் செய்ததும் விளைவாய் அவனது பெற்றோர் இன்று கம்பி எண்ணும் அவலமும், நமது சமூகம் முழுக்க இப்படிப்பட்ட பெற்றோரால்தான் நிரம்பியிருக்கிறது என்பதை எடுத்து காட்டுகிறது.

உளவியல் ரீதியாக தற்போதுள்ள இளம் பெற்றோர் ஒருவகையான வெறியுடன் அலைகின்றனர் என்று சொன்னால் மிகையில்லை. போட்டிகள் நிறைந்த உலகத்தில் தங்களால் சாதிக்க முடியாமல் போன கனவுகளை தங்களின் பிள்ளைகளைக் கொண்டு சாதித்துவிட துடிக்கு வக்கிரம் என்றுதான் சொல்லுவேன்.

அடிப்படையில் நாம் அனைவரும் மறந்துவிடும் ஒரு சாதாரண விஷயம், குழந்தைகளுக்கு அந்தந்த வயதுக்கேற்பவே புரிந்து கொள்ளும் சக்தியும் இருக்கும்....இதை எந்த மாயமந்திரத்தாலும், கூர்தீட்டும் பயிற்சியாலும் அதிகரித்துவிட முடியாது. குழந்தைகள் புரிந்து கொள்ளும் எல்லையில் அது குறித்தான நுணுக்கங்களையும், அதை ஆராயும் ஆர்வத்தினை உருவாக்குவதே சிறந்த உத்தியாக இருக்கும். ஆர்வம் வளரும் பட்சத்தில் குழந்தைகளே அதன் அடுத்த படிகளை நோக்கி உற்சாகமாய் நகர்வார்கள்.

அக்கறையான பெற்றோர், தங்களின் குழந்தையின் நிறை குறைகளை நேர்மையாக மதிப்பிடவும், குழந்தையின் விருப்பத்தினையும், ஆர்வத்தினையும் கண்டறிந்து அந்த துறையில் அவன் உயரங்களை அடைய ஊக்குவிக்க வேண்டும். ஆனால் நம்மில் எத்தனை பேர் இதை செய்கிறோம், தங்களின் சொந்த விறுப்பு வெறுப்புகள் மற்றும் சமூக, பொருளாதார அளவுகோலில் தன்னிச்சையாய் தீர்மாணித்து அதிபுத்திசாலி களாக்குகிறேன் என வற்புறுத்தலும், திணித்தலுமான உளவியல் சித்திரவதைகளும்தான் தொடர்ந்து நடக்கின்றன.

குழந்தைகளின் மீது திணிக்கப்படும் இவ்வகையான அத்துமீறல்கள் அதி புத்திசாலிகளை உருவாக்கிடும் என நினைப்பது அடிமுட்டாள்தனம். நாம் உருவாக்கும் வேலையை விட்டுவிட்டு அவர்களை உருக்குலைக்கும் வேலையை செய்கிறோம் என்பதை அறியாமலே பல பெற்றோர் மேலும் தீவிரமாக உழைத்துக்கொண்டிருக்கின்றனர். சமயங்களில் குழந்தைகள் ஒத்துழைத்துவிட்டால் பெற்றோர் நிதாணமிழந்து விடுவது மணப்பாறை மருத்துவர் விஷயத்தில் கண்கூடு.

குழந்தைகள் திருப்பி கேள்வி கேட்க தெரியாதுங்கிற தைரியத்துல அவங்களை கினி பிக்ஸ் மாதிரி நம்ம மக்கள் உபயோக படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. குழந்தைகளை குழந்தைகளா இருக்கவே விடறதில்லை. குழந்தைப் பருவமும் இப்ப குறைஞ்சிட்டே வருவது வேதனை அளிக்கும் உண்மை.... ஹ்ம்ம்..அந்த மழலை, சிரிப்பு, குறும்பு, விளையாட்டு இது எல்லாம் அந்த அந்த வயசுல ரசிக்காம எப்ப ரசிக்க முடியும்.


50 comments:

ILA (a) இளா said...

:(

வடுவூர் குமார் said...

குழந்தையை குழந்தையாக பார்க்க மறுக்கிறோம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஏங்க ஏங்க இப்படி...அவங்க அப்படி செய்யறது தப்புன்னாலும் இந்த நேரத்துல யா இந்த பதிவப்போடனும்..


தினம் தினம் அக்கா அப்பா வெளிய (தப்பிச்சு) போயிடறாங்க இவகிட்ட நான் மட்டும் ஏன் கிடந்து கஷ்டப்படனும்ன்னு பள்ளிக்கூடம் போயே தீருவேன்னு பய அடம்பிடிச்சுட்டு இருக்கற நேரத்துல அனுப்பினா நீங்க திட்டுவீங்களோ ன்னு பயப்பட வச்சிட்டீங்களே!

கபீரன்பன் said...

குரங்காட்டிகள் என்றால் குழந்தைகளை குரங்குகள் என்பதாகிவிடும். உண்மையிலே பிறரைப் பார்த்து நகல் செய்யத்துடிக்கும் பெரியவர்கள்தான் குரங்கு குணம் உடையவர்கள். "சிந்தையற்ற மந்திகள்" என்று தலைப்பிட்டிருக்கலாமோ ! :-)))

பங்காளி... said...

டைப் டைப்பா கதை சொல்லி காசுபார்க்கும் கல்வி வியாபாரிகள்தான் இத்தனைக்கும் மூல காரணம்னு நினைக்கிறேன்.

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

///உளவியல் ரீதியாக தற்போதுள்ள இளம் பெற்றோர் ஒருவகையான வெறியுடன் அலைகின்றனர் என்று சொன்னால் மிகையில்லை. போட்டிகள் நிறைந்த உலகத்தில் தங்களால் சாதிக்க முடியாமல் போன கனவுகளை தங்களின் பிள்ளைகளைக் கொண்டு சாதித்துவிட துடிக்கு வக்கிரம் என்றுதான் சொல்லுவேன்.///

உண்மை. மிகப்பெரிய மனோவியல் குற்றவாளிகளாக நடுத்தர வர்க்க பெற்றோர்கள் மாறிக்கொண்டிருக்கிறார்கள்...

குற்றாலீஸ்வரன் என்கிற சிறுவன் நீச்சலில் சாதனை படைத்தவுடன்... தமிழகத்தில் பல பள்ளிகள் நீச்சல் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தன.
மயிலாடுதுறையில் ஒரு மாணவன் கரத்தேயில் சாதனை படைத்தவுடன்... உடனே அடுத்த கல்வியாண்டில் எல்லா பள்ளிகளும் இங்கு கரத்தே கற்றுக்கொடுக்கப்படும் என்று விளம்பரம் செய்தார்கள்.
அப்புறம் செஸ், கணிணி, சமீபகாலமாக "அபாக்ஸ் மெண்டல் அரித்மேட்டிக்" இப்படி என்ன என்ன இருக்கோ அத்தனையும் பட்டியலிட்டு கல்வியை வியாபாரமாக்கிட்டு இருக்காங்க... இதுக்கு காரணம் பொற்றோர்களின் முட்டாள்தனம் தான்,

என்னோட நண்பர் ரொம்ப தீவிரமாக இதை எதிர்த்துக்கிட்டு இருந்தார் இப்போ ஊருக்கு போனபோது பார்த்தேன் அவரோட மூன்று வயது மகளுக்கு பரத நாட்டிய பயிற்சிக்கு அனுப்பிக்கிட்டு இருக்கிறார். ஏன்ய்யா? இப்படி என்று கேட்டால்...
நமக்கு கிடைக்காதது நம்ம பிள்ளைகளுக்காவது கிடைக்கட்டுமேன்னுட்டு போய்கிட்டுருக்கிறார்.
"கல்வி சிந்தனையை தூண்ட தான்... அது உங்களை சாதனையாளனாக்காதுன்னு சொன்னா... உன் தத்துவத்தை கொண்டு போய் குப்பையில போடு..." போட்டி உலகத்தில் என் குழந்தை மட்டும் பின் தங்கி போயிருமுன்னு சொல்லிட்டார்.

Unknown said...

Mangai,

Very Good Analysis. Each Article in your blog carries a good message and leaves the reader to think. Keep it up.

Vasikar Nagarajan

ஜி said...

நல்லதொரு ஆராய்வு. அப்படியே குழந்தைகளுக்கு எந்த வயதில் எது எது ஏற்றதுன்னும் கொஞ்சம் சொல்லிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் :))

R.Ganesan said...

நூற்றுக்கு நூறு உண்மை. எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைமை தற்போது. ஒரு பெரும் மாற்றம் தேவையெனில் ஒரு பெரும் அழிவும் நிச்சயம்., ஆனால் அதை அழிவு என்பதை விட ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பம் என்ற நிலையிலிருந்து எதிர்பார்ப்பவர்களில் நானும் ஒருவன்

வெங்கட்ராமன் said...

நல்ல பதிவுங்க.

உண்மைலயே நம்ம வருங்கால சந்ததிய சீரழிக்கிற விஷயத்த பத்தி அழகா சொல்லி இருக்கீங்க.

சென்னையை சேர்ந்த திரு.அரை லூசு மற்றும் திருமதி.அரை லூசுவின் 2 வயது மகன் வருங்கால முழு லூசு பல்வேறு நாடுகளின் கொடிகளை சரியாக அடையாளம் காட்டுகிறான்

என்பது போன்ற செய்திகளில் பார்க்கும் போது எனக்கு வரும் கோபததை அழகாக பதிவாக கொடுத்துள்ளீர்கள் நன்றி.

நாகை சிவா said...

இதை பற்றி நானே ஒரு பதிவு போடனும் என்று இருந்தேன்.

7 1/2 வயதில் 10 பாஸ்
12 வயதில் டீகிரி படிப்பது

இது யாரோ ஒருவர் செய்தா நல்லா இருக்கும். ஆனால் இதை பார்த்து எல்லாரும் செய்ய ஆரம்பித்தால் என்ன ஆகும்.

14 வயதில் ஒரு சச்சின் தான் நமக்கு கிடைத்தார் அது வரம், அதுக்காக எல்லாரு தன் பிள்ளை 14 வயதில் சச்சினாக வேண்டும் என ஆசைப்பட்டால் அது சாபம்....

நமக்கு எல்லாம் வரமாக இருந்த குழந்தை பருவம், இப்பொழுது வரகின்ற குழந்தைகளுக்கு சாபமாக இருக்கிறது.... என்னத்த சொல்ல...

லக்ஷ்மி said...

நீங்கள் சொல்வது சரியே மங்கை. இந்த சம்மர் கேம்ப் அப்படின்னு ஒரு கொடுமை இருக்கு பாருங்க - குழந்தைங்க பள்ளி நாட்களை விட இந்த கோடை விடுமுறையில்தான் அதிகம் கஷ்டப்படுகிறார்கள். அந்த ரெண்டு மாத இடைவெளியில் என்னவெல்லாம் வகுப்புகள் தெரியுமா - நீச்சல், செஸ், அபாகஸ், மென்டல் அரித்மேட்டிக், வேதிக் அரித்மேட்டிக்,பிரெஞ்சுலேர்ந்து ஜப்பனீஸ் வரை பல மொழி வகுப்புகள் (இந்த எல்லா அயல் நாட்டு மொழிகளையும் 30லேர்ந்து 40 நாளைக்குள்ள கத்துக்கொடுத்துடுவாங்களாம்.. கொடுமைடா சாமி) இதெல்லாம் போதாதுன்னு இப்போ கொஞ்ச நாளா மத ரீதியிலான போதனை வகுப்புகள் வேற இந்த ரெண்டுமாத விடுமுறைய குறிவைத்து நிறைய இடங்களில் ஆரம்பிக்கப் படுது. நம்முடைய பள்ளி விடுமுறை காலங்களை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் - உறவினர் வீட்டுக்கு போறது குறிப்பா பாட்டி தாத்தா வீடுகள் கிராமத்தில் அமைந்த பிள்ளைகளின் இளம் பருவம் நிச்சயமா ஒரு நிலாக்காலம்தான். அதெல்லாம் இந்த குழந்தைகளுக்கு கிடையவே கிடையாது என்பது எவ்வளவு பெரிய கொடுமை? என்ன இழக்கறோம்ன்றது அந்த பிஞ்சுகளுக்கு தெரியாமலே போவதுதான் இன்னும் கொடுமை. என் அக்காவின் பையன் 9ஆம் வகுப்பு படிக்கிறான். இந்த விடுமுறையிலிருந்தே IIT entrnace examக்கு கோச்சிங் போகிறானாம். இன்னும் 4 வருஷம் இருக்கேடா என்றால் இதுவே லேட் சித்தி என்கிறான். என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை.

Unknown said...

குரங்காட்டிகள் என்னும் தலைப்பு எங்கள் தலை தெக்கிக்காட்டான் அவர்களை குறிப்பது போல் உள்ளது (படிக்கும் போது தலை டாப்ஸ்லிப்பில் அந்த வேலைதான் பார்த்தார். யானைக்கே ராங் சிக்னல் கொடுத்து தப்பி வந்த சம்பவம் எல்லாம் உண்டு) எனவே அதை உடனடியாக மாற்ற வேண்டும் இல்லாவிட்டால் உங்கள் பதிவுக்கு ஆயிரம் பின்னூட்டங்கள் போட்டு அசுர சாதனை படைப்போம்"

Thekkikattan|தெகா said...

அருமையா வந்திருக்கு மங்கை. அந்த மாதிரி பொற்றொர்களை சைக்கோ அனாலிசிஸ்க்கு அனுப்பணுமின்னு நினைக்கிறேன் :-). தொல்லை விட்டாச் சரின்னு கொண்டு போயி தள்ளி விட்டு வந்துடறது போல.

எனக்கு ஒரு ஐடியா அந்த அரை லூசுகளை ஏதாவது ஒரு மொழி கத்துக்கச் சொல்லி ஊக்குவிக்கலாம், இல்லைன்னா மேல படிச்சா ஊக்கத் தொகை ஏதாவது தாரதா சொல்லி அதுகளின் மூட மாத்தி, குழந்தைகளின் மீது வைத்துத் திணிக்கும் தனது கையாலாகத தனத்தை பெரிசுகளின் மீதே வைத்து திணிக்கலாம்.

முதலில் குழந்தை பொத்துக்க போறதுகளுக்கு முறையான குழந்தை வளர்ப்பு பற்றியும், மனோ நிலைகளைப் பற்றி அறிந்து கொள்ளும் வண்ணம் படிப்பறிவும் தேவை. இல்லைன்னா, குறைந்தப் பட்சம் குழந்தைகளின் உணர்வுகளுக்காகவது மதிப்பு கொடுக்க அந்த ஆறாவது அறிவையும், மனிதத் தன்மையையும் பயன் படுத்தணும்.

இது தொடர்பான நம்முடைய பதிவையையும் சொன்று பாருங்க, வாசக அன்பர்களே.

"குழந்தைகளும் தனித்துவத்தன்மை பேணலும்...

http://thekkikattan.blogspot.com/2006/11/blog-post.html

Thekkikattan|தெகா said...

குழந்தைப் பருவமும் இப்ப குறைஞ்சிட்டே வருவது வேதனை அளிக்கும் உண்மை.... ஹ்ம்ம்..அந்த மழலை, சிரிப்பு, குறும்பு, விளையாட்டு இது எல்லாம் அந்த அந்த வயசுல ரசிக்காம எப்ப ரசிக்க முடியும். //

ஓ! இதுக்குப் பேறுதான் பிஞ்சிலேயே வெம்ப வைக்கிறது (அ) பழுக்க வைக்கிறதா? பாவம் எத்தனை phaseகளை தவற விட்டுட்டு தாவிப் போயி அம்மா, அப்பாவின் பாரத்தை சுமக்கப் போகுதுகள். :((

மங்கை said...

இளா, குமார், நன்றி

லட்சுமி..கண்டிப்பா அங்க வந்து திட்டுவேன்...தலைவர என்கிட்ட விட்டுடுங்க..நான் பார்த்துக்குறேன்

கபீரன்பன்..ஹ்ம்ம்ம்..நீங்க சொல்றதும் சரிதான்.

பங்காளி, பாரி அரசு..
சரியா சொன்னீங்க...கல்விய வியாபாரம் ஆக்கீட்டு இருக்குற சிலர் பண்றதது தான் இதெல்லாம்

மங்கை said...

Vasikar,ஜி, gansu, நன்றி


//சென்னையை சேர்ந்த திரு.அரை லூசு மற்றும் திருமதி.அரை லூசுவின் 2 வயது மகன் வருங்கால முழு லூசு பல்வேறு நாடுகளின் கொடிகளை சரியாக அடையாளம் காட்டுகிறான் ///

பாவம் பையன ஏனுங்க லூசுங்கரீங்க.. :-))


வாங்க புலி..எங்க பதுங்கி இருந்தீங்க இத்தன நாள்...
ஆமாங்க குழந்தைகள் நம்ம கிட்ட இருக்குறதே சாபம் தான்

மங்கை said...

லக்ஷ்மி சரியா சொன்னீங்க...

கோடை விடு முறை எப்ப வரும்னு நாம காத்துட்டு இருப்போம்.. ஆனா இப்ப பெற்றோர்கள் இந்த கோடை விடுமுறையில தங்களோட ஆசைகளை எல்லாம் இப்படி தீர்த்துகுறாங்க... அபேகஸ் பற்றி நானும் கேள்விபட்டேன்..கொடுமை அது எல்லாம்... எந்த அளவுக்கு குழந்தைகள் பாதிக்கப் படறாங்கன்னு தெரியாம இருக்கிறாங்க.....

மங்கை said...

///உங்கள் பதிவுக்கு ஆயிரம் பின்னூட்டங்கள் போட்டு அசுர சாதனை படைப்போம்" ////

ஹி ஹி..மகேந்திரன்...தண்டனைய பார்த்தா தலைப்ப மாத்த சொல்ற மாதிரி இல்லையே....தண்டனை பரிசா இல்ல தெரியுது..நீங்க வேற என்னமோ சொல்ல வரீங்கன்னு நினைக்குறேன்...சரி சரி தலைப்பு மாத்தலை..:-))))

மிளகாய் said...

பின்னூட்டம் ரொம்ப கம்மியாருக்கே...எங்களுக்கு கும்மியடிக்க அனுமதி கிடைக்குமா?

மங்கை said...

தெகா நீங்களே அந்த பயிற்சிக்கு ஒரு மாட்யூல் தயார் பண்ணுங்க...:-)))

மங்கை said...

சிவப்பு மிளகாய் தான் ருசி ஜாஸ்தி.. நல்லா கும்மி அடிங்க பங்காளி...

வெங்கட்ராமன் said...

*********************************
//சென்னையை சேர்ந்த திரு.அரை லூசு மற்றும் திருமதி.அரை லூசுவின் 2 வயது மகன் வருங்கால முழு லூசு பல்வேறு நாடுகளின் கொடிகளை சரியாக அடையாளம் காட்டுகிறான் ///

பாவம் பையன ஏனுங்க லூசுங்கரீங்க.. :-))
*********************************

இந்த மாதிரி பெத்தவங்ககிட்ட மாட்டுனா வருங்காலத்துல புள்ளைங்க லூசா தான் ஆகும்னு அதனால் தான் வருங்கால லூசுன்னு சொன்னேன்.

நல்ல கவனிங்க வருங்கால லூசுன்னு தான் சொன்னேன்,

ஜீவி said...

மெக்காலே திட்டக் கல்வி முறையும், அந்த கல்வி முறை அடிப்படையிலே உழன்று படித்து, பயிண்று, பாஸ் பண்ணி
பணம் அழுது, வேலைக்கு வந்து அழுததை தவணை முறையில் மீட்க, பல்வேறு விறுப்பு வெறுப்புகக்ளிடையே பாடம் பயிற்று
விக்கும் ஆசிரிய பெருமக்களும், ச்சீ.. எந்த வயதில் குந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பினால் என்ன..
எனக்குத் தெரிந்து, கணவன்-மனைவி (அவர்களின் பெற்றோகர்கள்) அவர்களோடு வசிக்காத பட்சத்தில்
தாங்கள் வேலைக்குப் போகும் அவசியத்தில் 'மழலைக்
குழந்தைகளை'ப் பாதுகாப்பான இடத்தில் விட்டுச்சென்றோம்
மாலையில் கூட்டிச் செல்லலாம் என்கின்ற அடிப்படையில்
இந்த மாதிரிப் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்களே தவிர
அதற்கு வேறு விசேஷ காரணமுமில்லை...

Anonymous said...

புரிஞ்சிடுச்சிடோய் வாங்க எல்லாரும் இந்த பதிவில கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுக்கலாம்

Anonymous said...

//தெகா நீங்களே அந்த பயிற்சிக்கு ஒரு மாட்யூல் தயார் பண்ணுங்க...:-))) //

அய்யய்யோ பத்தவச்சுட்டீங்களேக்கா என்னால இனி பின்னூட்டம் போட முடியாது

Anonymous said...

//பின்னூட்டம் ரொம்ப கம்மியாருக்கே...எங்களுக்கு கும்மியடிக்க அனுமதி கிடைக்குமா?//

யாருப்பா அது இதெல்லாம் நம்ம வீடு அடிச்சி ஆடுங்கப்பா

Anonymous said...

எனக்கொரு டிகிரி வேணும் வாங்கி தருவீங்களா?

காட்டாறு said...

ஒன்னு மட்டும் நிச்சயம். இப்பிடியே பயித்தியம் புடிச்சி அலைஞ்சாங்கன்னா, இந்த செய்தி (http://milakaai.blogspot.com/2007/06/blog-post_2754.html_ செய்தியா இருக்காது. நடைமுறையா இருக்கும்.

மங்கை said...

ஆஹா..கும்மி ஆரம்பம் ஆனது கூட தெரியாம இருந்துட்டெனே..

ஸ்கூலுக்கு போகாதவரே..நம்ம எதுக்கு டிகிரி தேடி போகனும்..வேனும்னா அது வரட்டும் நம்ம கிட்ட..:-))

காட்டாறு said...

//ஜீவி said...
எனக்குத் தெரிந்து, கணவன்-மனைவி (அவர்களின் பெற்றோகர்கள்) அவர்களோடு வசிக்காத பட்சத்தில்
தாங்கள் வேலைக்குப் போகும் அவசியத்தில் 'மழலைக்
குழந்தைகளை'ப் பாதுகாப்பான இடத்தில் விட்டுச்சென்றோம்
மாலையில் கூட்டிச் செல்லலாம் என்கின்ற அடிப்படையில்
இந்த மாதிரிப் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்களே தவிர
அதற்கு வேறு விசேஷ காரணமுமில்லை...
//

ஜீவி எனக்கு தங்கள் கருத்தில் முற்றிலும் உடன்பாடு இல்லீங்க... இன்ன வயதில் இன்ன இன்ன செய்தால் ஆரோக்கியமின்னு இருக்குதுங்க. இருவரும் சம்பாதிக்கனுமின்னு குழந்தைகள் காப்பகத்தில் விடு. அதை விட்டுட்டு... 3 மாதத்தில் படிப்பு சொல்லிக் கொடுப்பதும், விளையாட்டை விளையாட்டாய் இல்லாமல், வெற்றி பெற வேண்டும், சச்சின் மாதிரி வர வேண்டும் என பிஞ்சி மனதில் அழுத்தம் கொண்டு வருவதும் எந்த விதத்தில் சரி?

காட்டாறு said...

// பங்காளி... said...
டைப் டைப்பா கதை சொல்லி காசுபார்க்கும் கல்வி வியாபாரிகள்தான் இத்தனைக்கும் மூல காரணம்னு நினைக்கிறேன்.
//
பங்காளி, மத்தவர்கள் மேல் குறை சொல்வதே நம் வழக்கமா போச்சி. வியாபாரிகளை உருவாக்குவது நாம் தானே. Demand/Supply equation தானே. நாம் நம் குழந்தைகள் அவனைப் போல் இருக்க வேண்டும்; இவளைப் போல் மின்ன வேண்டுமின்னு அறியாத, புரியாத வயதில் திணிக்க அல்லவா பார்க்கிறோம்?

காட்டாறு said...

நாம செய்றதெல்லாம் செய்துட்டு... இப்போ இருக்குற குழந்தைகளுக்கு மன அழுத்தமெல்லாம் வருதுப்பா... இந்த வயதில் (அப்போ மட்டும் வயது தெரிந்துவிடும் நமக்கு), என்ன கவலை இருக்கமுடியுமின்னு கால் மேல கால போட்டு... வாய் வலிக்காம சொல்லிடுறோம்.

மங்கை, நல்ல பதிவுங்க. இதை படித்த பின்பாவது நாம் நம் குழந்தைகளை குழந்தைகளாக பார்ப்போம். பாரியின் நண்பர் சொன்னது போல தன் குழந்தை பின் தங்கிவிடும் என்ற எண்ணத்தை வேறு விதமாக செயலாற்ற பார்ப்போம்.

Sridhar Harisekaran said...

அருமையா எழுதுனிங்க... இந்தியால இருகிற பாடத்திட்டம் இந்த மாதிரி பெற்றவங்களை செய்ய வைக்குது. உங்களுக்கு நட்சத்திரம் தந்ததுக்கு வாழ்த்துக்கள்.

முதல்ல உங்க 'பல்ப்' பதிவை படிச்சேன். உங்களுக்கு நட்சத்திரம் தந்தது தப்போனு தோணிச்சு. ஆனா, இந்த பதிவுல பின்னி எடுத்திட்டீங்க.. வாழ்த்துக்கள்..

மங்கை said...

ராசாத்தீ..வா வா..
நீயே எல்லார்த்துக்கும் பதில் சொல்லிட்டெ... ச்ச்சமத்து.... டேங்க்ஸ்

ஸ்ரீதர்..பல்ப் பதிவு பார்த்து அப்படி நினச்சீங்களா...ஏங்க அவ்வ்வ்வ்ளோ மோசமாவா இருக்கு...:-))

சோமி said...

குழந்தைகளும் நாமும் என்ற புத்தகம் எனக்கு வாசிக்க கிடைத்தது.அது ஒரு ஆங்கிலப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பு தமிழில் விக்க்னேஸ்வரன் மொழிபெயர்த்திருகிறார்.குழந்தை வளர்புக்குக்கான அருமையான புத்தகம். மற்றம்படி எனக்கு அனுபவமில்லாத விசயமென்பதால் அதிகம் பேச முடியாது.

நாகை சிவா said...

//வாங்க புலி..எங்க பதுங்கி இருந்தீங்க இத்தன நாள்... //

:-)))

வர வேண்டிய நேரம் வந்துருச்சு... பாய்ந்து வந்தாச்சு...

எல்லா பதிவும் படிச்சாச்சு... நான் நொறுக்கிய நிகழ்வுகள் பதிவில் போட்ட பின்னூட்டத்துக்கு ஏதும் பதில் இருக்கா?

மங்கை said...

//மற்றம்படி எனக்கு அனுபவமில்லாத விசயமென்பதால் அதிகம் பேச முடியாது//

சோமி..:-))
இதுக்கு அனுபவம் எதுக்குப்பா
கண்ணுக்கு முன்னாடி நடந்துட்டு இருக்கு...குழந்தைகளை இப்படி நடத்துவது சரியல்ல சொல்ல அனுபவம் தேவை இல்லை...

மங்கை said...

வாங்க டெல்ஃபின்...சரியா சொன்னீங்க

சென்ஷி said...

எங்க அக்கா பொண்ண ரெண்ட‌ரை வயசுலயே L.K.G. ஸ்கூல்ல சேத்தாச்சு. அது இப்போ 6 வது படிக்க வைக்க வேற ஸ்கூல்க்கு போனா அன்டர் ஏஜ்ன்னு சொல்லி மெட்ராஸ்ல கையெழுத்து வாங்கிட்டு வாங்கன்னு நிர்வாகத்துல சொன்னாங்க. இல்லாட்டி 10வது படிக்கும்போது பரிட்சை எழுத கஷ்டமாயிடுமாம். அலையறதுக்கு நேரம் இல்லாததால பழைய ஸ்கூல்லயே 6வது சேத்தச்சு. எங்க அம்மா புது ஸ்கூல்ல சேக்க முடியாதுன்னு சொன்னதும் கேட்ட முதல் கேள்வியே, 6 வயசுல ஒரு பையன் டிகிரி முடிச்சதா நியுஸ்ல சொன்னாங்க. என்னமோ நம்ம குழந்தைய சேத்துக்க மாட்டேங்கிறானுங்க என்றார். நான் அப்போது அதற்கு பதில் சொல்ல தெரியல. இப்போ நினைச்சு பாத்தா தோணுது. பாவம் அந்த பையன். இளமைய தொலைச்சுட்டு என்ன பாடுபடுறானோ?

சென்ஷி

தருமி said...

உருவாக்கும் வேலையை விட்டுவிட்டு அவர்களை உருக்குலைக்கும் வேலையை செய்கிறோம்//

ஏதோ நம்மளால முடிஞ்சது !! :(

கோபிநாத் said...

அருமையான பதிவுக்கா....கடைசி படம் பதிவுக்கு மிகவும் அழகாக இருக்கு ;)))

மங்கை said...

சென்ஷி..எடுத்து சொல்லுங்க.. உக்ன்க அம்மா விஷயத்துல அறியாமை தான் காரணம்...

மங்கை said...

தருமி ஐயா..வாத்தியாருக்கு இது தான் முடியும்..குழந்தைகளுக்கு முடியனுமே
:-)))

மங்கை said...

நன்றி கோபி..எனக்கு அந்த படம் பிடிச்சது

ramachandranusha(உஷா) said...

ஆஹா, நமக்கு இஷ்டமான மேட்டர் ஆச்சே! மங்கை தலைப்பு சூப்பர் :-) ஆமாங்க, மூணு மாச குழந்தைக்கு இந்திய ஜனாதிபதி பேரூ எல்லாம் எதுக்கு? அதை விட கூத்து பிரக்னட் ஆனவங்களுக்கு, பிரகலாதன் மாதிரி வயிற்றுக்குள் இருக்கும் பிள்ளைங்களுக்கும் ஜி. கே சொல்லிக் கொடுக்கிறார்களாம்
போன வருஷம் சென்னையில தெரிஞ்ச பையன், ஐ ஐ டி எண்டரஸ்க்கு படிச்சிக்கிட்டு இருந்துச்சு. இது என்ன ஸ்பெஷல்னு கேக்குறீங்களா . அந்த பையன் விழுந்து விழுந்து படிச்சது, ஐ ஐ டி எண்டரஸ் எழுத கோச்சிங் செண்டல்ல சேர,அங்க ஒரு
எண்ட்ரன்ஸ் டெஸ்ட் எழுதணுமாம் :-)))
இப்படி ஊரூ பிள்ளைங்கள, கிண்டல் அடிச்ச பலன், இங்கிட்டு வந்து எம் பையன், ஒவ்வொரு பிள்ளைங்களும் ஓடுகிற ஓட்டத்தைப் பார்த்து பயந்துப் போய் இருக்கான்.

மங்கை said...

வாங்க உஷா..

இப்படித்தா இங்கேயும் (தில்லி) நடக்குது.. இப்ப பொண்ணு +2 போறா
இங்க ஸ்கூல்ல இருக்குற கோச்சிங்க் கிளாஸ்ல சேர்க்கறதுக்கு நுழைவுத்தேர்வு.
ஸ்கூல்ல சேர்ரதுக்கு தனியா எழுதியாச்சு.. ஆனா கோச்சிங்க கிளாஸ்சுக்கு தனியா எழுதனுமாம்... இது கூட நான் பெரிசு படுத்தலை. ஆனா நாம தெற்குல இருந்து வந்து இருக்கோம்னு...இந்த கோச்சிங்க கிளாஸ் எல்லாம் உங்களால cope பண்ண முடியுமான்னு கேட்டு கடுப்படிச்சிட்டாங்க..என் பொண்ணு நான் இங்க படிக்க மாட்டேன்னு சொல்லிட்டா...இப்படி வேற கூத்து நடக்குது..ஹ்ம்ம்

Santhosh said...

மங்கை,
இந்த வாரம் விகடன்ல ஞானி இதையே தான் சொல்லி இருக்குறாரு. சாதனை போதையில் சில இளம் பிஞ்சுகளை எப்படி வாட்டி வதைக்கிறார்கள் அப்படின்னு சொல்லி இருப்பாரு. மக்களே குழந்தைகளை குழந்தைகளாக வளரவிடுங்க. சாதனை வெறி பிடித்த இந்த சமுதாயம் அவர்களையும் விட்டு வைக்கவில்லை என்பது தான் கொடுமை :(.

தென்றல் said...

/ஹ்ம்ம்..அந்த மழலை, சிரிப்பு, குறும்பு, விளையாட்டு இது எல்லாம் அந்த அந்த வயசுல ரசிக்காம எப்ப ரசிக்க முடியும்.
/
சரியா சொன்னீங்க, மங்கை!

/காட்டாறு said...
நாம செய்றதெல்லாம் செய்துட்டு...
/
பிரச்சனையே இங்கதான்!ம்ம்ம்....

நாமக்கல் சிபி said...

http://pithatralgal.blogspot.com/2008/11/319.html