Friday, June 15, 2007

என் முதல் முயற்சி- படிச்சு பாருங்க

பூ ங் கா

தத்தித் தளிர்நடையிடும்
பேச்சறியாப் பிள்ளைப்பருவமோ
நண்பருடன் கூடிக்களிக்கும்
வெயிலறியா விளையாட்டுப்பருவமோ
இன்றென்ன செய்தார்கள்
செல்லக் கண்மணிகளென்று
குறைபடுவது போல் தெரிந்தாலும்
புகழ்ந்திருக்கும் நடுவயதுப்பருவமோ
நேற்றென இன்றென நாளையென
பேசிப்பேசி ஓயும்
நடைதளர்ந்த முதிர்ப்பருவமோ
நாற்சுவரின் சிறையிலிருந்து வெளியேறி
திறந்தவெளியில்
பொழுதெல்லாம் இனிதாக்கிச்
சுதந்திரமும் சந்தோஷமுமாய்.

என்னங்க.. கவிதை நல்லா இருக்கா?..இது கஷ்டப்பட்டு நான் எழுதினேன்

அப்படீன்னு சொன்னா நம்பவா போறீங்க...இது நம்ம லட்சுமி அன்புடன் கவிதைப் போட்டிக்கு எழுதின காட்சி கவிதையின் வரிகள்.

அம்மணிக்கு இரண்டாம் பரிசு..

சுதந்திரமும் சந்தோஷமுமாய் ஊர் சுத்தீட்டு இருக்கும் (ஹ்ம்ம்ம்) அம்மணிக்கு வாழ்த்துக்கள்

இங்க க்ளிக்கி படக் கவிதைய பாருங்க

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

15 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி நன்றி மங்கை.

சிவபாலன் said...

லட்சுமி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..

தொடர்ந்து இது போல் கல்க்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

இங்கே கொடுத்த மங்கைக்கு நன்றி

மங்கை said...

வாங்க லட்சுமி...

என்ன ஆசை எல்லாம் தீர்ந்ததா.. இல்ல இன்னும் பாக்கி இருக்கா... சென்னை போய் 'அன்பர்கள்' எல்லார்த்தையும் பார்க்க ஆர்வமா இருக்கீங்களோ?..சீக்கிரம் வந்து சேருங்க அம்மணி...

இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துக்கள்...

நன்றி சிவபாலன்

பங்காளி... said...

என்ன...என்ன இதெல்லாம்...

தலை சுத்துது....ஹி...ஹி...

குட்டிபிசாசு said...

எல்லாம் நல்லா இருக்குபா!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சிவபாலன் குட்டிப்பிசாசு நன்றி..

பங்காளி ஏஏன் ஏன் உங்களுக்கு தலைசுத்துது??

மங்கை said...

அதானே எதுக்கு தலை சுத்துது..

BP இருக்கோ?...

காட்டாறு said...

யக்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!!!!!!!!!!! கலக்கிட்டீகளே........... இந்நேரம் ஊருல போய் இருக்கீகளே............ உங்களுக்கு பரிசு கெடச்சதுக்கு எங்களுக்கும் சந்தோசம்! மிக மிக சந்தோசம்! கையும் ஓடல.. (அதானே ஏன் ஓடுது)... காலும் ஓடல.... அதனால நீங்க ஓடோடி வந்திருங்க... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கோம்.

பின்குறிப்பு:
நம்ம முத்து லெட்சுமி யக்காவுக்காக பதிவு எழுதின மங்கைக்கு ஒரு பெரிய ஓஓஓஓஓஓ........... நன்றிங்க மங்கை!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காட்டாறு ரொம்ப ரொம்ப நன்றிப்பா...

இம்மாதக்கடைசிவரை சுற்றுப்பயணம் தான்..

குட்டிபிசாசு said...

மங்கை,

போட்டோல கையெடுத்து கும்பிட்டாலும் விடமாட்டேன்!! ஒழுங்கா வந்து நம்ம பாசக்காரகுடும்ப இடுகை ய படிங்க!!

பத்மா அர்விந்த் said...

மங்கை
என்னுடைய பதிவில் உங்களை அழைத்திருக்கிறேன். பதிவிட்டால் மகிழ்ச்சி அடைவேன்.http://reallogic.org/thenthuli/?p=233

சென்ஷி said...

//அப்படீன்னு சொன்னா நம்பவா போறீங்க...இது நம்ம லட்சுமி அன்புடன் கவிதைப் போட்டிக்கு எழுதின காட்சி கவிதையின் வரிகள்.//

அக்கா,

அது லட்சுமியா, இல்ல முத்து லட்சுமியா ?

சென்ஷி

மங்கை said...

//அக்கா,அது லட்சுமியா, இல்ல முத்து லட்சுமியா //

என்னப்பா..சென்ஷிப்பா?...ஊர விட்டு போர தகிரியமா..

வா வா..உனக்கு உண்டு லட்சுமி கிட்ட...

சேதுக்கரசி said...

வாழ்த்துக்கள் முத்துலட்சுமி! அம்மணி ஊர்ல இல்லைன்னு அவங்களுக்காகப் பதிவிட்ட மங்கைக்கு நன்றி! :-)

பெருசு said...

யக்கோவ், தூங்காம என்ன செய்யறீங்க.
காப்பித்தண்ணி ஏதாச்சும் குடிச்சீங்களா இல்லியா??