Saturday, February 07, 2009

விக்கி ராய் - குப்பையில் கிடைத்த மாணிக்கம்


தெருவோர நிஜங்களில், கிடைத்த வாய்ப்பை பயன் படுத்தி வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஒரு இளைஞனை பற்றி குறிப்பிட்டு இருந்தேன். அவர் பெயர் விக்கி. வீட்டை விட்டு ஓடி வந்து, தெருவில் வாழ்ந்து இன்று ஒரு தொண்டு நிறுவனத்தால் வழிகாட்டப்பட்டு ஒரு நல்ல நிலைக்கு வந்து இருக்கிறார்.

கொல்கத்தா மாநிலத்தின் புரூலியா என்ற இடத்தில் பிறந்த விக்கியின் வீட்டில் 6 குழந்தைகள். 6 பேருக்கான இடமோ, உணவோ இல்லாத சூழ்நிலை. தையல் வேலை பார்த்து வந்த தந்தைக்கு, அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது என்ற கவலை எப்பொழுதும். ரொட்டியும், ஊறுகாயுமே அன்றாட உணவாக இருந்து வந்தது. சில சமயம் அதுவும் இருக்காது.

7 ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த விக்கிக்கு பள்ளியும் அலுத்து போனது. சதா அடித்துக் கொண்டிருக்கும் ஆசிரியரால் படிப்பின் மேல் வெறுப்பு வந்தது. வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும், தானும் வசதியாக வாழவேண்டும் என்ற வெறி மட்டும் மனதில். ஆனால் படிப்பு ஏறவில்லை. வீட்டை விட்டு ஓட திட்டமிட்டு, அம்மா சிமென்ட் வாங்க கொடுத்த 800 ரூபாயை கொண்டு தில்லிக்கு ரயிலேரிவிட்டார். விக்கியின் அனுபவங்களை அவரே சொல்கிறார்.

" தில்லிக்கு டிக்கெட் வாங்கி உட்கார்ந்த பின் அளவில்லா ஆனந்த மடைந்தேன். ரயில் புறப்பட்டவுடன் முகத்தில் அடித்த சிலு சிலு காற்று எனக்கு புத்துணர்சியை கொடுத்தது.



ஆனால் அந்த உணர்வுகள் மட்டுமே ஆனந்தமான ஒன்று என்ற உண்மை தில்லியில் இறங்கின அடுத்த நிமிடம் உணர்ந்து கொண்டேன். பாஷை தெரியாத ஊர், ஏன் என்று கேட்க ஆள் இல்லை, அம்மாவின் பாசத்திற்கும், அப்பாவின் பரிவிற்கும், அடுத்த வேலை உணவிற்கு வழி இல்லாவிடினும் என் உறவுகள் எனக்கு கொடுத்த பாதுகாப்பிற்கும் மனம் ஏங்கியது. என்னை நானே தேற்றிக் கொண்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன். என்னைப் போன்ற சிறுவர்களுடன் சேர்ந்து தெருவோரத்தில் கிடக்கும் பழைய பாட்டில்களை சேகரித்து, நாளொன்றிற்கு 100ல் இருந்து 150 ரூபாய் வரை சம்பாதித்தேன்.



ஆனால் அதுவும் அவ்வளவு சுலபமான ஒன்றாக இல்லை. ஏரியா தாதாக்கள் அடித்து துன்புறுத்தி பணத்தை பரித்துக் கொண்டார்கள். என் மேல் பரிதாபப்பட்டு அங்கு இருந்த ஒரு ஹோட்டல் முதலாளி் பாத்திரம் கழுவும் வேலையை கொடுத்தார். 50 ரூபாய் கொடுத்து, நாள் முழுக்க மலைபோல் குவிந்து கிடக்கும் பாத்திரங்கள் கழுவ சொன்னார். உணவோ, ஓய்வோ இல்லாமல் என் கைகள் புண்ணாகும் வரை வேலை செய்தேன். அந்த சமையத்தில் அங்கு உணவு அருந்த வந்த பெண்மணி ஒருவர், சலாம் பாலக் ட்ரஸ்ட் என்ற அமைப்பை பற்றி சொன்னார். கடவுள் கிருபையால் அங்கே என்னை ஏற்றுக் கொண்டார்கள். சின்ன சின்ன கைவேலைப் பாடுகள் செய்ய கற்றுக் கொண்டேன்.



அப்பொழுது தான் எனக்கு வாழ்க்கையில் முன்னேற முதல் வாய்ப்பு அமைந்தது. அதை என் இரண்டு கைகளாலும் இருக்க பிடித்து கொண்டேன். ட்ரஸ்டில் இருக்கும் குழந்தைகளை புகைப்படம் எடுக்க பிரிட்டிஷ்காரர் ஒருவர் வந்திருந்தார். அவருக்கு ட்ரஸ்டை சுத்திக் காட்டும் பொறுப்பு எனக்கு ஒதுக்கப்பட்டது. அது எனக்கு மிகவும் பெறுமையாக இருந்தது. ட்ரஸ்டில் மட்டுமில்லாமல் வெளியே தெருவில் வாழும் குழந்தைகளையும் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டார். என்னுடன் தெருவில் வாழ்ந்த சிறுவர்களிடம் அழைத்து சென்றேன். எனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் சிறுவர்கள் எதிரில் பேசியது எனக்கு பெருமையாக இருந்தது. அவரிடம் புகைப்படக்கலை பற்றி பேசி பேசி எனக்கும் அதில் ஆர்வம் வந்தது. இதற்கிடையில் நான் பத்தாம் வகுப்பு தேர்வெழுதி நல்ல மதிப்பெண்களில் தேறினேன். எனக்கு18 வயதானபடியால் ட்ரஸ்டை விட்டு வெளியே வந்தாக வேண்டிய சூழ்நிலை. அங்கு 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை தான் வைத்துக் கொள்வார்கள்.



வெளியே வந்தால் எனக்காக ஒரு வேலை தேடவேண்டும். பிரிட்டிஷ்காரர் அவரின் நண்பர் ஒருவரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் ஒரு பேஷன் போட்டோகிராபர். எனக்கிருக்கும் ஆர்வத்தை உணர்ந்து அவர் எங்கு சென்றாலும் என்னையும் அழைத்து சென்றார். நிறைய கற்றுக் கொண்டேன். சென்னை, பங்களூர், மும்பை, கொல்கத்தா, லடக், கேஷ்மீர் என பல ஊர்களுக்கு சென்றேன். நான் சென்ற ஊர்களுக்கான பயணச்சீட்டுகளையும், விமானமானால் 'போர்டிங்க் பாஸும்' இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.மறக்க முடியாத நினைவுகள், அனுபவங்கள் அவை.

ஒரு பழைய கேமராவை வைத்து தெருக்குழந்தைளை படம் பிடித்தேன்.



நான் எடுத்த புகைப்படங்கள் பிரிட்டிஷ் ஹைகமிஷனின் ஆதரவில் ஒரு கண்காட்சியாக வைக்கப்பட்டது. நான் எடுத்த கருப்பு வெள்ளைப் படங்கள், குழந்தைகள் மீதான வன்முறையை எடுத்து காட்டியது. குழந்தைகள் மீதான உரிமை மீறல்களை கருத்தாக கொண்டு படங்கள் எடுத்தேன். என் இந்த வளர்ச்சியை என் தாய் தந்தையர் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவர்களும் வந்தார்கள். அவர்களின் முகத்தில் நான் பார்த்த பெருமிதமும்,

ஆனந்தக் கண்ணீரும் நான் கடந்து வந்த பாதையை எனக்கு நினைவு கூறியது. அந்த புகைப்படக்கண்காட்சி மூலம் எனக்கு கிடைத்த 10,000 ரூபாயில் ஒரு கேமரா வாங்கினேன், என்னை வளர்த்த ட்ரஸ்டிற்கு உதவித்தொகை வழங்கினேன்.

எனக்கும் ஒரு் கனவு இருக்கிறது. ஒரு ஆப்பில் கம்ப்யூட்டர் வாங்க வேண்டும், 12.5 megapixel கேமரா வாங்கவேண்டும். கண்டிப்பாக வாங்குவேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது".

விக்கிக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீகாரம், அமெரிக்காவில் இருக்கும் World Trade Centre" ன் கட்டுமானப்பணிகளை புகைப்படம் எடுக்க தேந்தெடுக்கப்படிருக்கிறார்.

முனைப்பும், ஆர்வமும் இருந்தால் இந்த உலகத்தில் யார் வேண்டுமானாலும் எந்த இடத்தையும் அடையலாம் என்பதற்கு விக்கி தான் சாட்சி. தனக்கு கிடைத்த முதல் சம்பாத்தியத்தின் ஒரு பகுதியை தன்னை ஆளாக்கிய நிறுவனத்திற்கு கொடுத்த அந்த மனித நேயம் இன்னும் பல வெற்றிகளை காண வேண்டும்.

மேலே உள்ள படங்கள் அனைத்தும் விக்கி எடுத்தது ...

28 comments:

யட்சன்... said...

me the first..a...

:)

யட்சன்... said...

சூப்பர்...

தொடரட்டும் தன்னம்பிக்கை பதிவுகள்...

வாழ்த்துகள்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

யட்சன் இது சீட்டிங்க் ஆமாம் சொல்லிட்டேன்.. :)

விக்கி ராய்க்கு வாழ்த்துக்கள்..

மங்கை said...

//யட்சன்... said...
சூப்பர்...தொடரட்டும் தன்னம்பிக்கை பதிவுகள்...வாழ்த்துகள்...//


:-) நன்றி

மங்கை said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
யட்சன் இது சீட்டிங்க் ஆமாம் சொல்லிட்டேன்.. ///

:-)))

அபி அப்பா said...

அட பாவமே! நான் சாதம் குழைந்துவிடும்ன்னு ஓடிப்போனேன்! வந்து மெதுவா பின்னூட்டம் போடலாம்ன்னு! இந்த யட்சன் மூக்கு எப்படித்தான் வியர்க்குது!

Compassion Unlimitted said...

indha nijam,than nambikkaiyin oru edutthukkaattu..aanaal Vaazhkayil,verum thannambikkai mattum irundhal podhuma ?
arumayaana post
Neran kidaikkum podhu ennudaya post pakkam vaanga
TC
CU

கோபிநாத் said...

விக்கி ராய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ;)

\\முனைப்பும், ஆர்வமும் இருந்தால் இந்த உலகத்தில் யார் வேண்டுமானாலும் எந்த இடத்தையும் அடையலாம் என்பதற்கு விக்கி தான் சாட்சி. தனக்கு கிடைத்த முதல் சம்பாத்தியத்தின் ஒரு பகுதியை தன்னை ஆளாக்கிய நிறுவனத்திற்கு கொடுத்த அந்த மனித நேயம் இன்னும் பல வெற்றிகளை காண வேண்டும்.\\

உண்மையான வார்த்தைகள்...!

sakthi said...

அன்புள்ள மங்கை மேடம் ,
மிக அருமையான பதிவு .காலத்தை குறை கூறாமல் தன்னம்பிக்கை உடன் வாழ உள்ளோரும் படிக்கவேண்டிய எழுத்துக்கள் .வாழ்த்துக்கள் ,,,,

மங்கை said...

அபி அப்பா... பதிவை படிச்சீங்களா இல்லையா..

நன்றி சியூ..கோபி, சக்தி

Poornima Saravana kumar said...

//தனக்கு கிடைத்த முதல் சம்பாத்தியத்தின் ஒரு பகுதியை தன்னை ஆளாக்கிய நிறுவனத்திற்கு கொடுத்த அந்த மனித நேயம் இன்னும் பல வெற்றிகளை காண வேண்டும்.//

intha nalla ennam ondre avarai nangu vaala vaikkum!!
vaaltukkal vikki:)

நாகை சிவா said...

தொடரட்டும் இது போன்ற பதிவுகள்.

இதே போல் இன்னும் பலரும் வாழ்வில் முன்னேற வேண்டும்.

தமிழ் அமுதன் said...

வீட்டைவிட்டு ஓடிபோகின்றவர்கள் பெரும்பாலும் தீய வழியில் விழுந்து விடுகின்றனர்.
அவர்களை திருத்தும் தொண்டு நிறுவனங்களை போற்ற வேண்டும்.


தொடரட்டும் உங்கள் சத்தான பதிவுகள்!!!

மங்கை said...

நன்றி பூர்ணிமா..சிவா

மங்கை said...

அமுதன்...சரியா சொன்னீங்க..அந்த பணி மகத்தானது...கடினமானது கூட.. நன்றி

Ravi said...

எல்லோருக்கும் விக்கி போன்றோரின் முயற்சியும், வெற்றியும் நிச்சயமாக போற்றத்தக்கதுதான். முயற்சியின் பலன், உழைப்பின் பலன், அந்த முயற்சியும், உழைப்பும் பாராட்டஹ்தக்கது, கவனிக்கத்தக்கது.ஆனால் அதைவிட முக்கியம் இது போன்ற பதிவுகளின் மூலம் நாம் ஆராய வேண்டியது, சிந்திக்க வேண்டியது: என்ன காரணங்களினால் விக்கி வீட்டை விட்டு வெளியேறினார்? அத்தகைய செயல்பாட்டை தூண்டும் சமூக காரணிகள் என்ன? அதை நிவர்த்தி செய்வது எப்படி? இன்னொரு விக்கி வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும், என்று தனிப்பட்ட முறையிலில்லாமல், சமூக ரீதியாக சிந்திப்பது, என்பதுதான் என்று நினைக்கிறேன்.

-ரவி

butterfly Surya said...

வாழ்த்துக்கள்.

RAMYA said...

தன்னம்பிக்கை இருந்தால் போதும்
வானமே எல்லை என்பதற்கு
விக்கி ராய் ஒரு நல்ல முன்
உதாரணம்.

தன்னம்பிக்கைக்கு தாங்கள்
கொடுத்துள்ள அங்கீகாரம்
மிகவும் சிறப்பானது.

தொடரட்டும் உங்கள் பணி
வாழ்த்துக்கள் !!!

மங்கை said...

Ravi said...
ஆனால் சிந்திக்க வேண்டியது: என்ன காரணங்களினால் விக்கி வீட்டை விட்டு வெளியேறினார்? அத்தகைய செயல்பாட்டை தூண்டும் சமூக காரணிகள் என்ன? அதை நிவர்த்தி செய்வது எப்படி? இன்னொரு விக்கி வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும், என்று தனிப்பட்ட முறையிலில்லாமல், சமூக ரீதியாக சிந்திப்பது, என்பதுதான் என்று நினைக்கிறேன்.


சரியா சொன்னீங்க ரவி...அது தான் என் எண்ணமும்..

நன்றி

மங்கை said...

வண்ணத்துபூச்சியார் said...

வாழ்த்துக்கள்.



RAMYA said...

//தன்னம்பிக்கைக்கு தாங்கள்
கொடுத்துள்ள அங்கீகாரம்
மிகவும் சிறப்பானது.

தொடரட்டும் உங்கள் பணி
வாழ்த்துக்கள் !!!//

நன்றி வண்ணத்துபூச்சியார், ரம்யா

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

Raji said...

Mangai....after a long time I am writing to you. A very beautiful post. all of us have to learn a lot from Vikki. Making use of the oppurtunity is very important. Mangai, I have come to India for 7 to 10 months. I am at coimbatore, doing a volunteer work for village children. would like to mail you. send me your email address. mine is raji.kumaraswamy@gmail.com

லதானந்த் said...

கொங்கு நாட்டான் என்ற முறையில் மங்கைக்குக் கூடுதல் வாழ்த்துக்கள்

பாச மலர் / Paasa Malar said...

விக்கிக்கு வாழ்த்துகள்...இது போல நல்ல தகவல்கள் தரும் மங்கைக்கும்தான்..

butterfly Surya said...

மங்கை.. இது போன்ற அரிய பதிவுகளை அனைவருக்கும் படிக்க வேண்டி தமிலிஷ் பக்கத்தில் இட்டேன்.

ஒட்டுகளும் குவிந்துள்ளன.

வாழ்த்துகள்.

மங்கை said...

ராஜி நன்றி....:-)

லதானந்த்..கோவைக்காரர்னா இரட்டிப்பு சந்தோஷம் தான்..நன்றி...:-)

மங்கை said...

நன்றி மலர்...

//வண்ணத்துபூச்சியார் said...

மங்கை.. இது போன்ற அரிய பதிவுகளை அனைவருக்கும் படிக்க வேண்டி தமிலிஷ் பக்கத்தில் இட்டேன்.///

இந்த முறை சேர்க்க மறந்துட்டேன்.. மிக்க நன்றி

butterfly Surya said...

நன்றி. நிறைய எழுதவும்.

அடுத்த பதிவு எப்போ..???

நம்ப வீட்டுக்கு பக்கமும் வந்து போங்கோ..