இசை: கே வி மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்.
ஆண்:மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணே
மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன, அன்பு காணிக்கைதான் கண்ணே
பெண்:கற்பனையில் வரும் கதைகளிலேநான் கேடடதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே, நினைத்ததில்லை கண்ணா
ஆண்:தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் - அதில்தேவதை போலே நீயாட
பெண்:பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட
ஆண்:கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட
பெண்:கைவளையும் மைவிழியும் கட்டியணைத்துக் கவி பாட (மயக்க)
ஆண்: ஆடி வரும் வண்ண நீரோடை உன்னை பாத பூசை செய்து வர
பெண்:ஓடி வரும் வண்ண ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர
ஆண்:மல்லிகைக் காற்று மெல்லிடை மீது மந்திரம் போட்டு தாலாட்ட
பெண்:வள்ளி மலைத் தேன் அள்ளி எழுந்தவண்ண இதழ் உன்னை நீராட்ட (மயக்க)ஆண்:அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுகிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்
பெண்:கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்துமது அருந்தாமல் விட மாட்டேன்
ஆண்:உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொடமாட்டேன்
உன் உள்ளமும் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தரமாட்டேன் (மயக்க)
8 comments:
வாவ்...
ர்ர்ரொம்ப நாளாச்சி இந்த பாட்ட கேட்டு....
ம்..நல்ல பாட்டுதான் அது இதுன்னு உவமை எல்லாம் ஆட பாட ன்னு இருந்தாலும்
\\ அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுகிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்
பெண்:கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்துமது அருந்தாமல் விட மாட்டேன்
ஆண்:உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொடமாட்டேன்
உன் உள்ளமும் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தரமாட்டேன் (மயக்க)//
இதான் பாடலில் எனக்கு ரொம்ப பிடிச்சது .
அப்பறம் அந்த காலத்தில் பாடலைக்கேட்டாலே இது சிவாஜிக்காக பாடியதுன்னு சொல்லமுடியறாப்பல டிஎமெஸ் பாடியது..இப்பல்லாம் யாரு ஹீரோன்னாலும் ஒரே குரல் தான்.
சொக்கரே நன்றி
டாக்டரம்மா கோவைல ஹூட் பண்ணாங்கன்னு நீங்க சொல்லி தான் தெரியும்...
லட்சுமி
டிஎம்எஸ் சிவாஜி காம்பினேஷன் மாதிரி எதுவும் இல்லை
பாட்டு கேட்டாச்சு பாத்தாச்சு மங்கை ரொம்ப நாள் கழிச்சு..
அப்படியா செய்தி !!
பாட்டு பாடுகிற மங்கைக்கு பரிசளித்தார்களா ?
எதற்காக பரிசளித்தார்கள் ?
எங்கே பரிசளித்தார்கள் ?
மங்கை தன் தோழியரோடு சென்று பரிசளிக்கும்
நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் இடம்.
http://arthamullavalaipathivugal.blogspot.com
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
என்ன அம்மணி
உறைச்சுறுச்சா..அட்லாஸ்ட் ரிடயர்டா
சந்தோஷம்... ஹி ஹி ஹி
அக்கா,
உயர்ந்த மனிதன் என்ற படத்தில் வாணிஸ்ரீ பாடுவது போல் நடித்த, "நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா" என்ற பாடலை அடுத்த பதிவில் ஒளி, ஒலி பரப்புவீர்களா..
இவண்...
சென்ஷி
வாணிஸ்ரீ ரசிகர் மன்றம் வெட்டி செயலாளர்...
10 வது குறுக்கு சந்து
ஷார்ஜா
சகோதரி, அடியேனுக்கு மிகவும் பிடித்தமான பாடல்களில் முதல் பாடல் இது.பாடலின் நடு வரிகள் ஆடியோவில் இருக்காது. படத்தில் மட்டுமே இருக்கும்.வரிகளை பதிவிட்டதற்கு நன்றிகள்.
Post a Comment