Saturday, May 19, 2007

அடென்ஷன் ப்ளீஸ் டென்ஷன் பார்ட்டீஸ்






எளிய உடற்பயிற்சிகள் நடை, கைக்கிளிங்க்..(இது எல்லாம் யாரு பண்ணுவான்னு கேக்குறவுங்க...கலர் பார்த்துட்டே கூட இது எல்லாம் பண்ணலாம்) அல்லது விளையாட்டு.

உணவில் நார்சத்து, புரதச்சத்து நிறைந்த சமச்சீரான உணவு வகைகளை உட்கொண்டு, அதிக கலோரிகளை குறைக்கலாம், லாம் இல்லை..குறைக்கனும்

நண்பர்களுடன் சிறிது நேரம் மனம் விட்டு பேசுதல், பெற்றோர்கள், கணவன் அல்லது மனைவியுடன், குழந்தைகளுடன் தங்கள் நேரத்தை பகிர்ந்துகொள்ளும் போது மன அமைதி கிடைப்பதால் மனஅழுத்தம் குறைகின்றது.

முக்கியமா டென்ஷன் ஆகாதீங்க...நீங்க டென்ஷன் ஆகி வீட்ல இருக்குறவுங்களையும் டென்ஷன் ஆக்காதீங்க..

புகை பிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்க்கவும்.

கொஞ்சம் வெயிட் ஜாஸ்தியா இருந்தா உணவு முறை மற்றும் உடற் பயிற்சிகளை கடைபிடித்து உடல் எடையை குறைத்துக்கொள்வதால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.

சிலர் நாங்க எல்லாம் " Pure Non-Veg" னு சொல்லுவாங்களே, அவங்க எல்லாம் தங்கமணி சொல்றத கேட்டு பெரிய மனசு பண்ணுங்க சாமி...

இது எல்லாம் உயர் ரத்த அழுத்ததை தடுக்க, ஒருவேலை இருந்தா, கம்மி பண்ண...

சரி இப்ப எதுக்கு இது எல்லாம்னு பார்க்கறீங்களா....டென்ஷன் ஆகாதீங்க மக்களே..

17ஆம் தேதி Hypertension Day

இது எல்லாம் உங்களுக்கு தெரியும்னு எனக்கும் தெரியும்.... எதோ நண்பியா நியாபகப் படுத்தறேன் ..அந்த்தே

  • Non-modifiable Risk Factors - தடுக்க முடியாத காரணிகள்- வயது, மரபு வழி காரணிகள்.

  • Modifiable Risk Factors- தடுக்க கூடிய காரணிகள். இது நம்ம கையில தாங்க இருக்கு.

நீங்க எல்லாம் ஆரோக்கியமா, பல்லாண்டு பல்லாண்டு சந்தோஷமா வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்குறேன்

(தலைப்பு.- அப்ப தான் வந்து படிப்பீங்கன்னுதான்.....என்ன?... நாங்க எல்லாம் டென்ஷன் பார்ட்டீஸான்னு டென்ஷன் ஆகாதீங்க..:-)))))).

31 comments:

MyFriend said...

பதிவை படிக்க டைம் இல்லாததுனால ஒரு ஸ்மைலி போட்டுட்டு கிளம்புறேன்.

:-)

அபி அப்பா said...

நான் தான் இப்போ டென்ஷன்ல இருக்கேன்! ஊருக்கு போக ஆசை வந்திடுச்சு, அதுதவிர என்னென்னவோ நாள் நகரமாட்டேங்குது...பச்..

மங்கை said...

நீங்க தான் 'கூல் பார்ட்டி' ஆச்சே மை ஃபிரெண்ட்..:-)..

புரியுது அபி அப்பா..டென்ஷன் ஆகாதீங்க...இனி கவுண்ட் டவுன் ஆரம்பிச்சுறுங்க...சரியா போகும்..:-)

துளசி கோபால் said...

ஹைப்பர்டென்ஷனுக்கு இதோ ரெண்டு டிக்கெட்டு
ஏதோ..எங்க பங்குக்கு நம்மூட்டுலே இருந்து:-)

MyFriend said...

ஐஸ்க்ரீம் ஐஸ்க்ரீம்...

[இந்த கடைக்கு பக்கதுல ஒரு ஐஸ்க்ரீம் கடை திறந்தா நல்லா சம்பாரிக்கலாம் போலிருக்கே!] ;-)

அபி அப்பா said...

அனு இங்க வந்து ஐஸ்கிரீம் விக்க வந்தாச்சா! அண்னாச்சி ஏகப்பட்ட ரென்சன்ல இருக்கேன்:-)))

பங்காளி... said...

தங்கமணி சொல்றத கரீக்ட்டா வீட்ல மட்டும் ஃபாலோ பண்றம்ல...ஹி..ஹி...

அபி அப்பா said...

இன்றைய ஸ்பெஷல்: வெண்டைகாய் மோர்குழம்பு, உருளை கிழங்கு மசியல்,பொன்னிபச்சரிசி சாதம், அப்பளம்(சுட்டது)...அவ்வளவே! சரி அதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம்...சும்மா "டென்ஷன்" குறக்கத்தான்:-))

கோபிநாத் said...

\\நண்பர்களுடன் சிறிது நேரம் மனம் விட்டு பேசுதல், \\

இதை தான் எங்க பாசகார குடும்பம் கும்மின்னு சொல்லுவாங்க ;))


\\நீங்க எல்லாம் ஆரோக்கியமா, பல்லாண்டு பல்லாண்டு சந்தோஷமா வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்குறேன்\\\

ரொம்ப நன்றி மங்கைக்கா ;)))

மங்கை said...

துளசி...நீங்களுமா?...நீங்க மல்டி கிளப் மெம்பர் போல இருக்கே?..:-)

மை ஃபிரெண்ட்.. இந்த கடைக்கு பக்கத்துல கடை போட்டிங்கன்னா
முதலுக்கே மோசம் வந்துரும்..:-)..

கோபிநாத் said...

\\அபி அப்பா said...
இன்றைய ஸ்பெஷல்: வெண்டைகாய் மோர்குழம்பு, உருளை கிழங்கு மசியல்,பொன்னிபச்சரிசி சாதம், அப்பளம்(சுட்டது)...அவ்வளவே! சரி அதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம்...சும்மா "டென்ஷன்" குறக்கத்தான்:-))\\

என்ன கொடுமை சரவணா ;(((

மங்கை said...

//பங்காளி... said...
தங்கமணி சொல்றத கரீக்ட்டா வீட்ல மட்டும் ஃபாலோ பண்றம்ல...ஹி..ஹி...//

இந்த பொருப்பு பொருப்பு ன்னு ஒன்னு இருக்கே அது தெரியுமா சார் உங்களுக்கு?...

கடை ஓனர எல்லாரையும் குஷி படுத்தற பார்ட்டி போல இருக்கு நீங்க..:-)

மங்கை said...

கோபி..

அபி அப்பாவ சீக்கிரம் அனுப்பி வச்சுறுங்க,..பாருங்க...ரெசிப்பி எல்லாம் சொல்லி பொலம்ப ஆரம்பிச்சுட்டார்..:-)

அபி அப்பா said...

இல்லீங்க! நெசமாவே நம்ம சமையல் இங்கே பிரசித்தம். சாப்பிட்டு பார்த்தவங்க கோபி,தம்மி,அய்யனார்...கொஞ்சமா சாப்பிட்டாலும் வக்கனையா கொட்டிப்பேன், நமக்கு பொழுதுபோக்கே சமையல் தான்!!

இராம்/Raam said...

மங்கை,

சனிக்கிழமையெல்லாம் வந்து வேலை பார்க்க சொல்லி கொடுமை படுத்துறாங்க.... இதுனாலே வர்ற டென்சனை எப்பிடி போக்கிறது??? ;-)

இராம்/Raam said...

\\அபி அப்பா said...
இன்றைய ஸ்பெஷல்: வெண்டைகாய் மோர்குழம்பு, உருளை கிழங்கு மசியல்,பொன்னிபச்சரிசி சாதம், அப்பளம்(சுட்டது)...அவ்வளவே! சரி அதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம்...சும்மா "டென்ஷன்" குறக்கத்தான்:-))\\

இம்புட்டு'ஆ............... :((

இங்கன வெல்லசாம்பார் கொடுப்பானுக, அதை சாப்பிட்டா சோறு'ன்னு ஒன்னு இருக்கு, அதெயெல்லாம் சாப்பிடனுகிறதே வெறுத்து போயிரும்... :(

மங்கை said...

சந்தோஷம் அபி அப்பா... நண்பர்களுக்கெல்லாம் தினமும் வருந்து தானா...

ராம்..

இன்னைக்கு வந்ததுனால தான எனக்கு கமென்ட் போட்டீங்க...

நோ டென்ஷன் தம்பி... கடலை போடுட்டே வேலை செயுங்கப்பா.:-)

ALIF AHAMED said...

1.ஆக்சுவலி இது எனக்கான பதிவு இல்லை


2.உங்க பதிவுக்கு வந்தா சிரிப்பான் போடமுடிவதில்லை

3.நெட்டுக்கு (தமிழ்மணதுக்கு) வருவதே சிரிக்கதான்

4.அதனால பின்னுட்டம் போடுவதில்லை
ஆனா
படிக்காம இருப்பதில்லை

5.அடென்ஷன் பார்ட்டீஸ்" டென்ஷன் இல்ல


6.ஐய்யயோ சிரிப்பான் போட மறந்துட்டேன்


:)
:)

மங்கை said...

//உங்க பதிவுக்கு வந்தா சிரிப்பான் போடமுடிவதில்லை//

படிக்கிறேன்னு சொல்றீங்க இல்ல.. அதுவே திருப்தி அளிக்குது....

நன்றி மின்னல்..:-)

பெருசு said...

//கலர் பார்த்துட்டே //

யக்கோவ் !இது எந்த ஊரு பாஷை.
பசங்க இன்னமும் உபயோகப்படுத்தறாங்களா?.

குட்டிபிசாசு said...

மங்கை,
ரிலாக்ஸ் பண்ண ஒன்னு சொல்ல மறந்துடிங்க.

கண்மணி அக்காவோட அம்பூஜம் மாமி கதை.ஹி..ஹி..

வாழ்த்துக்கள்.

மங்கை said...

பெருசு...

எனக்கு வயசாரிச்சுன்னு சொல்றீங்களாக்கும்..:-))

out of dated words ஆ இதெல்லாம்..

சரி 'கலர்' பார்க்குற பார்ட்டீஸ் வந்து சொல்லட்டும்..:-))

மங்கை said...

//குட்டிபிசாசு said...
மங்கை கண்மணி அக்காவோட அம்பூஜம் மாமி கதை.ஹி..ஹி..//

குட்டி பிசாசு எனக்கு ரொம்ப பிடிச்ச, அடிக்கடி உபயோக்கும் வார்த்தை வீட்ல..:-)))

நன்றி குட்டி பிசாசு..:-))

கண்மணி/kanmani said...

இதனால் சகலரும் அறிவது என்னன்னா கண்மணியக்கா செம டென்ஷன் பார்ட்டி ஹைபர் டென்சிவ் அண்டர் மெடிகேஷன் ஹஹஹஹாஹஹா
என்ன பண்றது மத்தவங்க டென்ஷ்னையாவது குறைப்போமேன்னுதான் இப்படி...ஹி..ஹிஹிஹி..ஹி..யா எழுதறேன்.

மங்கை said...

//இதனால் சகலரும் அறிவது என்னன்னா கண்மணியக்கா செம டென்ஷன் பார்ட்டி ஹைபர் டென்சிவ் அண்டர் மெடிகேஷன்//

நிஜமாவா?...ச்சும்மா ச்சும்மா தானே?

குட்டிபிசாசு said...

நன்றி மங்கை,

என்னை என்னோட அம்மா சின்னவயசுல குட்டிபிசாசுனு தான் கூப்பிடுவாங்க.

மங்கை said...

உங்களையுமா?..:-)...

குட்டிபிசாசு said...

நான் சின்ன வயசுல ரொம்ப வால்தனம் பண்ணுவேன் ( இப்பவும் அப்படித்தான்), அதனால தான் குட்டிபிசாசுனு கூப்பிடுவாங்க!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ நண்பர்களுடன் சிறிது நேரம் மனம் விட்டு பேசுதல், //
enna nan adikadi pesarathukku illaathathaala tensionaa?

தென்றல் said...

/17ஆம் தேதி Hypertension Day இது எல்லாம் உங்களுக்கு தெரியும்னு எனக்கும் தெரியும்.... எதோ நண்பியா நியாபகப் படுத்தறேன்/

தகவலுக்கு நன்றி, மங்கை!

மங்கை said...

ஆஹா..லட்சுமி...
அப்படித்தான் போல இருக்கு
ஆனா பாருங்க ஃபோன் ஃபிரீயா இருக்குன்னு..எங்க ஆஃபீஸ்ல எல்லாரும் டென்ஷன் இல்லாம இருக்காங்க....எனக்கு தான் டென்ஷன்.. எப்படி அவங்கள அப்படி விடலாம்.. சீக்கிறம் வந்துறுப்பா..:-))

வாங்க தென்றல்...நன்றி