Tuesday, May 01, 2007

இன்னைக்கு எனக்கு விசேஷமான நாள்...

இன்னைக்கு எனக்கு ரொம்ப முக்கியமான நாள். +2 முடிச்சு காலேஜ்ல சேர்ந்தப்ப ஆரம்பிச்சது இந்த பிரச்சனை. மருத்துவர் கிட்ட போனப்ப, +2 டென்ஷன் பொண்ணுக்கு, இந்த வயசில எல்லார்கும் ஏற்படறதுதான், சில பயிற்சிகள் எடுத்தா சமாளிச்சரலாம்னு ஒரெ அட்வைஸ். நமக்கு பரிட்சை டென்ஷனா?அப்படி ஒன்னு இருந்தா நாம உருப்பட்டிருப்பமே. அதெல்லாம் இல்லைன்னு நமக்கு தெரியும்..டாக்டர்க்கு தான் தெரியலை.

சரி, சரி என்ன பிரச்சனைனு பார்க்கறீங்களா...அதாங்க ஆஸ்துமா.. இன்னைக்கு சர்வதேச ஆஸ்துமா நாள்...(எது எல்லாம் தான் கொண்டாடறதுன்னு விவஸ்தை இல்லாம போச்சுன்னு நினைக்கரீங்க இல்ல,, என்ன பன்ன எங்க கிட்ட இருக்குற விஷயத்த தான கொண்டாட முடியும்).. கோவைல இருந்து எங்க டாக்டர் எனக்கு வருஷா வருஷம் மே ஒன்னாம் தேதி, நான் எங்க இருந்தாலும் ஒரு மெயில், இல்லைனா ஒரு போன் கால் போடுவார்...அந்த அளவுக்கு ஒரு காலத்தில நாம அவருக்கு ரெகுலர் கிராக்கி...:-)))

கிரேக்க சொல்லான ஆஸ்துமா, மூச்சுத்தினறல்ன்னு பொருள் கொண்டது. சுவாசக் குழாய்கள் சுருங்கி, மூச்சு விடுவதற்கு கஷ்டமாக இருக்கும் ஒரு நிலைமை. மூச்செடுக்கும் போது பூனை கத்தறமாதிரி ஒரு சத்தம் கேட்கும். நெஞ்சில இறுக்கம இருக்கும், சளி, கபம் அதிக அளவில உற்பத்தி ஆகும்.

ஆஸ்துமா பற்றின ஒரு விழிப்புணர்வ எற்படுத்தி, ஆஸ்துமாவால அவதிப்படற குழந்தைகள், பெரியவங்களுக்கு இந்த நோய கட்டுக்குள்ள வைத்திருக்கிறதுக்கு பயிற்சி முகாம் மாதிரி சமுதாய மருத்துவத்துறை இந்த நாள்ல நடத்துறது வழக்கம்.

ஆஸ்துமாவால கஷ்டப்படறவுங்களுக்கு தான் தெரியும் அது எத்தனை கொடுமைன்னு. அந்த சமயத்தில யார் என்ன கேட்டாலும் கோவம் கோவமா வரும். யார் கிட்டேயும் பேச பிடிக்காது, நேரா படுக்க முடியாது, நடக்க முடியாது, முதுகு வலி அப்படீன்னு அன்றாட வேலைகளை செய்ய முடியாம நம்மள ஆட்டி படைக்கும்.

சமீப காலங்கள்ல பெண்கள் அதிக அளவில பாதிக்கப்படறாங்க. மன அழுத்தம், உணர்ச்சு வசப்படுதல், அலுவலகங்களில் இருக்கும் பிரச்சனைனு பல காரணங்கள் இருக்கலாம். மகப்பேறுகாலத்துலேயும் ஏற்படலாம். கருவுற்றிக்கும் போது அதிகமா ஆப்பிள் சாப்டா குழந்தைக்கு ஆஸ்துமா வராம தடுக்கலாம்னு ஒரு ஆராய்ச்சியில கண்டுபிடிச்சிருக்காங்க. இத எல்லாரும் நினைவில வச்சுகுங்க நண்பர்களே.

பெருசா பயந்துக்க வேண்டியதில்லைனாலும் ஆஸ்துமாவை குணமாக்க முடியாது!.. ஆனா இந்த நோய் நம்மை பாதிக்காதபடி கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதன் தன்மையை புரிந்து கொண்டு நமக்கு எந்த விஷயம் அலர்ஜியோ அத தடுத்து வருவது, உடற்பயிற்சி, யோகா, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருத்தல், உணர்ச்சிவசப்படாமல் இருத்தல் போன்றவை, இந்நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

முக்கியமா ஆஸ்துமாவினால அவதிப்படவரது குடும்பத்தினரையும் சிகிச்சையில சம்பந்தப்படுத்தி அவர்களுக்கும் புரியவைக்கவேண்டும். ஏன்னா ஒரு நிலையான தீர்வு இல்லைங்கிறதுனால ஆஸ்துமாவுடன் தான் வாழ வேண்டும். இது சாத்தியமான ஒன்றுதானாலும் , நெருக்கமானவர்கள், குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பு முக்கியமானது. அந்த மாதிரி நேரங்கள்ல கண்டிப்பா ஒருவர் உதவிக்கு தேவை. அன்பா பேச, சின்ன உதவிகளை செய்ய முதுகை அளுத்தி விட, மஸாஜ் செய்யன்னு குடும்ப உறுப்பினர்கள் இருந்தா அவதிப்படறவுங்களுக்கு ரொமப உதவியா இருக்கும்.

ஆஸ்துமா நோயாளிகள் பெரும்பாலும் மறுத்துவமனையில இருக்குறவரைக்கும் தான் மறுத்துவர் சொல்வதை கேட்பாங்க. வீட்டுக்கு வந்துட்டாலோ, மூச்சு விடுவது சீராயிடுச்சுனாலோ, அத பத்தி யோசிக்கிறது இல்லை. என்னையும் சேர்த்து தான் சொல்றேன். அந்த பிரச்சனை இல்லாதப்ப அத கட்டுக்கள் வைத்திருக்க என்ன பண்ணலாம்னு யோசிக்கிறது புத்திசாலித்தனம்னு நமக்கு தெரியறது இல்லை. பெரும்பாலனவங்க தனக்கு ஆஸ்துமான்னு ஒத்துக்கறதே இல்லை...அது எதோ ஒரு பெரிய வியாதின்னு ஒரு பயம்..எனக்கு அது வராதுன்னு சொல்லிட்டே தகுந்த சிகிச்சை எதுத்துக்காம அத கண்டுக்காம இருந்து அவஸ்தை படுவது அதிகம்.


மருந்துகள் விட சில கருவிகள் ரொம்ப உதவியா இருக்கும். ஸ்டீராய்ட் கலந்த இன்ஹேலர்கள் தான் எங்களுகெல்லாம் வரப்பிராசாதம். இராட்சனோட உயிர் ஒரு கிளிக்குள்ள தான் இருக்குன்னு விட்டலாச்சாரியார் படத்துல சொல்ற மாதிரி, எங்க உயிர் இந்த நாலு இன்ச் இன்ஹேலர்தான் இருக்கு...:-)). சில சமயம் அது மறந்துட்டோம்னு தெரிஞ்சா போதும், உடனே மூச்சு விடறதுக்கு கஷ்டமா இருக்கும். அது இல்லைங்கிற அந்த ஒரு உணர்வே காரணியாயிடும் அப்போ. அதிகமா சிரிச்சாலும் பிரச்சனை, அழுதாலும் பிரச்சனை. ஹ்ம்ம்ம்.

அதிக வெய்யில், ஹுயுமிடிட்டி, தூசுடன் அடிக்கும் காற்று, மாசு, இதெல்லாம் எனக்கு அலர்ஜி. ஆனா இது எல்லாம் தான் தில்லின்னு இங்க வந்தப்புறம் தான் எனக்கு தெரிஞ்சது.
இத பற்றி மேலும் தெரிஞ்சுக்கிறதுக்கு எஸ் கே ஐயா தான் உதவனும். அடுத்த தொடர்க்கு ஏற்பாடு பண்ணுங்க ஐயா.

38 comments:

அபி அப்பா said...

நல்ல விஷயமா எழுதறீங்க வாழ்த்துக்கள்!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இது எல்லாம் சேர்ந்தது தான் தில்லின்னு தெரிஞ்சுகிட்டீங்களா? ஆனா
குளிர்காலம் நல்லாருக்கும்ன்னு நினைக்கிறேன்..அப்ப தொந்திரவு இருக்காதே...எங்க தாத்தா மாமியார் இந்த பிரச்சனையால் அவஸ்தை படறவங்க..தாத்தாவுக்கு வயது 90 க்கு மேல..அத்தைக்கு வய்து 60 க்கு மேல..

வேதாத்திரி மகரிஷியின் எளிய முறை மூச்சு ப் பயிற்சிகள் செய்வது சுலபம்.நேரமும் குறைவு . தீர்வும் கிடைக்கலாம்.

பங்காளி... said...

சரி ஆய்டும்ல..ஆய்டனும்....ஆய்டும்

ம்ம்ம்ம்....

அபி அப்பா said...

இன்னைக்கு விஷெஷமான நாள் தான்! ஆமாம் சென்ஷி தம்பிக்கு பிறந்த நாள்!

சென்ஷி said...

அய்யோ அபி அப்பா.. உன்ன நம்பி. :)

துளசி கோபால் said...

என் விசேஷம் உங்களுக்குமா?

அடிச் சக்கை. இதுதான் 'குடும்ப உறவு':-)))))

இங்கே குளிர் காலம் கூடவே நொசநொசன்னு மழை எல்லாம் சேர்ந்துக்கிட்டு
நம்மளை ஆட்டுது. இன்ஹேலரும் இடுப்புமா( எத்தனை நாளைக்குத்தான் கை ன்னு சொல்றது?)
அடுப்பு ரூம்லே உக்கார்ந்துருக்கேன்:-)))))

கோபிநாத் said...

\\"இன்னைக்கு எனக்கு விசேஷமான நாள்..."\\

உங்க பதிவின் மூலம் பல பேருக்கு உதவியாக இருந்த நாள் ;-)))

கோபிநாத் said...

\\அபி அப்பா said...
இன்னைக்கு விஷெஷமான நாள் தான்! ஆமாம் சென்ஷி தம்பிக்கு பிறந்த நாள்!\\

எல....அப்படியா...வாழ்த்துக்கள் ;-)))

பத்மா அர்விந்த் said...

Allergy which is hypersensitivity can due course result in Asthma. same way second hand smoking results in asthma among kids.please read:http://reallogic.org/thenthuli/?p=79
http://reallogic.org/thenthuli/?p=14
Lets work toward reducing atleat indoor pollution.

மங்கை said...

நன்றி அபி அப்பா..

லட்சுமி

குளிர்காலம்...மூனு மாசம் தானே லட்சுமி...அப்ப வெய்யில் இருக்காதூ, ஆனா தூசு இருந்துட்டே தான இருக்கு..

யோகா உதவும்னு தெரியும்..ஆனா பொறுமைங்கிறது நம்ம அகராதியில இல்லையே..நன்றி லட்சுமி

மங்கை said...

பங்காளி... said...

//சரி ஆய்டும்ல.. ஆய்டனும்.ஆய்டும்/

கடவுளே சொல்லிட்டீங்க அப்புறம் என்ன..

இப்படியே 20 வருஷமா இருந்து பழக்கீறுச்சு...பாருங்க.. நான் எங்க மறந்துடுவனோன்னு இன்னைக்கு பூரா அது என்ன பிரியவே இல்லை..:-))

நன்றி பங்காளி

மங்கை said...

சென்ஷி பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

தகவல் கொடுத்தற்கு நன்றி அபி அப்பா

சென்ஷி said...

நன்றி அக்கா :)

மங்கை said...

வாங்க துளசி..

நாம எல்லாரும் கிளப் மெம்பர்ஸ்...

எனக்கு குளிர் ஒன்னும் செய்யறதில்லை வெய்யில் தான்.. நான் தில்லி போறேன்னு சொன்னப்ப..கோவைல எல்லாரும் என்ன ஒரு மாதிரி பார்த்தாங்க...இதுவும் பழகிவிடும்னு நினைக்குறேன்..

//இன்ஹேலரும் இடுப்புமா//

ஹை..நல்லா ரைமிங்கா இருக்கே.. இதுவே நானும் ஃபாலோ பண்றேன்..

மங்கை said...

நன்றி கோபி...

நன்றி பத்மா..

பதிவ படிச்சேன்... வீட்ல இந்த பிரச்சனை இல்ல பத்மா..சிகரெட் குடிக்கிறவுங்க யாரும் இல்ல. ஆனா இங்க என்ன தான் ஸ்கிரீன் எல்லாம் போட்டு, ஜன்னல் திறக்காம இருந்தாலும் தூசு ரொம்ப வருது..அதுவும் இப்ப ஒரு வாரமா டஸ்ட் ஸ்டார்ம்.. வழக்கத்த விட 4, 5 டிகிரி வெயில் ஜாஸ்தி...கேக்கவே வேண்டாம்...ஹ்ம்ம்ம்

பங்காளி... said...

//கடவுளே சொல்லிட்டீங்க அப்புறம் என்ன.. //

இதுல காமெடி கீமெடி எதுவும் இல்லையே....ஹி..ஹி

சென்ஷி said...

//பதிவ படிச்சேன்... வீட்ல இந்த பிரச்சனை இல்ல பத்மா..சிகரெட் குடிக்கிறவுங்க யாரும் இல்ல. ஆனா இங்க என்ன தான் ஸ்கிரீன் எல்லாம் போட்டு, ஜன்னல் திறக்காம இருந்தாலும் தூசு ரொம்ப வருது..அதுவும் இப்ப ஒரு வாரமா டஸ்ட் ஸ்டார்ம்.. வழக்கத்த விட 4, 5 டிகிரி வெயில் ஜாஸ்தி...கேக்கவே வேண்டாம்...ஹ்ம்ம்ம்//

எனக்கு இப்பவே மூச்சு முட்டுது :(

மங்கை said...

//இதுல காமெடி கீமெடி எதுவும் இல்லையே....ஹி..ஹி///

நோ காமெடி..நோ கீமெடி... கடவுள் கிட்ட காமெடி பண்ணலாமா...தப்பு தப்பு..

தீர்மானமா சரி ஆயுடும்னு சொல்லிடீங்களே...

✪சிந்தாநதி said...

பெரும்பாலும் அலர்ஜியினால் உருவாகிற இந்த நோய்க்கு நிரந்தர தீர்வு இல்லை என்பது வருந்தத் தக்க விஷயம்.

மூச்சுப் பயிற்சி ஓரளவு நிவாரணம் தரும் என்று ஒருமுறை மருத்துவர் ஒருவரும் எழுதி இருந்தார்.

ஈரப்பதம், அதீக குளிர், தூசி இவைதானே இதற்கு காரணமாகின்றன? மேலும் குறிப்பிட்ட சில வாசனைகளும் பாதிப்பை அதிகமாக்கும் என்று கூறப் படுவதுண்டு.

மங்கை said...

//ஈரப்பதம், அதீக குளிர், தூசி இவைதானே இதற்கு காரணமாகின்றன//

இது நபருக்கு நபர் மாறுபடும் சிந்தாநதி
எனக்கு மழையில நனைந்தாலும் ஒன்னும் ஆகாது...ஆனா வெயில் தான் பிரச்சனை..எங்க ஊர் வெயிலே ஆகாது...தில்லி வெயில்?..ஹ்ம்ம்

சிலருக்கு பூக்களில் இருக்கும் மகரந்தம்.. ஸ்வீட்.. டென்ஷன்.. தூசு.. சில வாசனை திரவியங்கள்..

இந்த இடத்தில எனக்கு ஒரு மருத்துவர் மருத்துவ முகாம்ல சொன்னது நியாபகம் வருது..

''சிலருக்கு சில நபர்கள் கூட அலர்ஜியா இருக்கலாம்... மாமியார பார்த்தா மருமகளுக்கும்,
மாமியார்க்கு, மருமகள பார்த்தா அலர்ஜியும் ஆகலாம்.."

:-)))

VSK said...

நீங்களே ரொம்ப அழகா, அனைவருக்கும் பயன்படும் விதத்தில் சொல்லியிருக்கீங்க, மங்கை அவர்களே!

இது சம்பந்தமான சில மருத்துவக் குறிப்புகளை விரைவில் பதிகிறேன்.

மிக்க நன்றி.

மங்கை said...

SK ஐயா..

நன்றி...எல்லாம் அனுபவம் தான்..:-))

இருந்தாலும் மருத்துவர் சொல்ல வேண்டிய விஷயங்கள் இன்னும் இருக்கு இல்ல...

காட்டாறு said...

விசேஷமான நாள பகிர்ந்துகிட்டதுல சந்தோசம் தான். ஆனா பாருங்க, இதுல ஒரு விஷயம் மட்டும் விடுபட்டுருச்சி. நம்மளோட சோம்பேறித்தனத்துனால நாம ஒழுங்கா மூச்சுப் பயிற்சி செய்யாததால கட்டுப் படுத்த முடியலன்றது.... ஆமாங்க, மூச்சி பயிற்சி ஒழுங்கா செய்தோம்ன்னா, தூசினால வர்ற ஆஸ்துமா,போயே போச். இது ஆரம்ப நிலைல இருக்கும் போது, திரும்ப வர சந்தர்ப்பங்கள் குறைவு.

காட்டாறு said...

//கருவுற்றிக்கும் போது அதிகமா ஆப்பிள் சாப்டா குழந்தைக்கு ஆஸ்துமா வராம தடுக்கலாம்னு ஒரு ஆராய்ச்சியில கண்டுபிடிச்சிருக்காங்க. இத எல்லாரும் நினைவில வச்சுகுங்க நண்பர்களே.//

என் தோழி கருவுற்றிருந்த போது இரும்பு சத்துக்காக ஆப்பிள், பேரீச்சை சாப்பிட சொன்ன போது, அவள் கூறினாள்; ஆப்பிள் சாப்பிட்டா குழந்தை கருத்துவிடும் என்று. என்ன சொல்றீங்க இப்போ/

மங்கை said...

//ஆப்பிள் சாப்பிட்டா குழந்தை கருத்துவிடும் என்று//

காட்டாறு...சந்தோஷமான விஷயம் தானே

//என்ன சொல்றீங்க இப்போ///

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலர்..;-))

வேற என்ன சொல்ல...இத நான் கேள்விபட்டது இல்லை...:-))

பங்காளி... said...

எங்க அம்மா...ஆப்பிள் சாப்ட ரகசியத்தை எனக்கு தெரியவைத்த காட்டாறு அவர்களுக்கு நன்றி..நன்றி...

மங்கை said...

கருப்பு'சாமி' வாங்க வாங்க..:-))

கண்மணி/kanmani said...

நம்முடைய [வியாதி]தொல்லைன்னாலும் பலர் இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க பதிவு போடும் நீங்கள் ரியலி கிரேட்.

மங்கை said...

கண்மணி..

பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க

இந்த பிரச்சனை ரொம்ப பழகீறுச்சு.. wheezing வர்ரதுக்கு ஒரு நாளைக்கு முன்னாடியே நமக்கு தெறிஞ்சுறும்..:-))

ஃப்ரெண்டு மாதிரி...:-))

ஆனா..யாருக்கும் வரக் கூடாது கண்மணி.. ஒரு மாதிரி நம்மள முடக்கி எதுவும் யோசிக்க கூட விடாத ஒரு நிலமைய உண்டு பண்ணும்..
எப்படி சொல்றதுன்னு தெரியலை...

பங்காளி... said...

யார் கருப்பு...

நாங்கல்லாம் மாநிறமாக்கும்...என்ன இந்த ஊரு வெயிலுக்கு கொஞ்சம் கலர் கம்மியாயிருச்சி...ஹி..ஹி...

மங்கை said...

பங்காளி..

உங்க ஊர் எதுங்க சார்...

அத முதல்ல தெளிவு பண்ணீடுங்க..:-))

Thekkikattan|தெகா said...

மங்கை,

உயிர் காப்பான் தோழன்ங்கிற மாதிரி "inhaler" புகைப்படம் சகிதமாய் வந்து நன்றி சொல்லிட்டீங்க.

நானும் உங்க கோசுதான், ஆனா என்ன இப்ப எல்லாம் அடிக்கடி பூனை குட்டி நெஞ்சாங் கூட்டுக்குள்ளயிருந்து கத்தறதில்லை. அது அனேகமா இந்த மூச்சுப் பயிற்சி அப்பப்ப பண்றதால இருக்குமோ...

மங்கை said...

//உயிர் காப்பான் தோழன்ங்கிற மாதிரி "inhaler" புகைப்படம் சகிதமாய் வந்து நன்றி சொல்லிட்டீங்க.//

அது தான உண்மை தெகா..இன்ஹேலர் இல்லைன்னா நினச்சு பாருங்க..ஹ்ம்ம்..

அன்னைக்கு நிஜமாவே இன்ஹேலர் டாக்ஸியில கீழ விழுந்துறுச்சு... காலேஜ் பக்கத்துல மருந்து கடையும் இல்லை...ம்ம்ம்...நான் பட்ட பாடு.. கூட வேலை செய்யறவர் போய் வாங்கீட்டு வந்தார்

ஒரு சமயத்தில ஏன் தான் பதிவ போட்டோம்னு ஆயுடுச்சு..

அமிர்தவர்ஷினி அம்மா said...

பெரும்பாலனவங்க தனக்கு ஆஸ்துமான்னு ஒத்துக்கறதே இல்லை...அது எதோ ஒரு பெரிய வியாதின்னு ஒரு பயம்..


அதென்னமோ சரிதான்
நான் கூட இது இருக்குன்னு சுலபத்துல ஒத்துக்கல ஆரம்ப கட்டத்துல. லங்க்ஸ் படம் போட்ட சிரப் லாம் வீட்டுல மறைவாதான் வெச்சுப்பேன். ஏன்னா வீட்டுக்கு வர்றவங்க விசாரிப்பாங்களோன்னு
இப்ப இல்ல.

தமிழ் அஞ்சல் said...

அருமையான பதிவு. எனது ஒரு ஆண்டு தேடலில் இன்றுதான் ஒவ்வாமை குறித்த ஒரு பதிவை கண்டிருக்கிறேன். மாற்று மருத்துவ முறைகளில் (immune system) ஐ வலுப்படுத்தினால் சில ஆண்டுகளில் இதை குணமாக்கலாம் என்கிறார்கள்/ தங்களது பதிலை எதிர்பார்க்கிறேன்.

மங்கை said...

நன்றி திருப்பூர் மணி...

ஒவ்வாமை குறித்த எழுதுக்கள் ஆங்கிலத்தில் நிறையவே இருக்கிறது..தமிழிலும் இன்னும் தேடினால் கிடைக்கலாம்.. மிக்க நன்றி

தமிழ் அஞ்சல் said...

மிக்க நன்றி மங்கை ! உங்கள் எளிய நடையிலான பதிவுகளுக்கு பாராட்டுக்கள் !

Vidhoosh said...

அபி அப்பா லிங்க் கொடுத்தார். நல்ல பகிர்வு. ஆனா வருத்தப் படவே கூடாதுங்க. பல்லு போனா சொல்லுதான் போச்சு, ஆனா அதுக்கா சிரிக்காம இருக்க முடியுமா.. பளிச்சுன்னு சிரிச்சுகிட்டே இருங்க - சும்மா கல கல கலன்னு ஆகிடும் லைஃப். :)))