
Of woman are we born, of woman conceived,
To woman engaged, to woman married.
Woman we befriend, by woman do civilizations continue.
When a woman dies, a woman is sought for.
It is through woman that order is maintained.
Then why call her inferior from whom
all great ones are born?
Woman is born of woman;
None is born but of woman.
-
குரு நானக்நதிகளை பெண் தெய்வங்களாக வழிபட்டு பெண்ணுக்கு பெருமை சேர்க்கும் நம் நாட்டில், ஐந்து ஆறுகள் ஓடுவதாலேயே பஞ்சாப் என்ற பெயர் பெற்ற இந்த மாநிலத்தில் மனதை உலுக்கும் ஒரு சம்பவம்.நேற்றய Times of India நாளிதலில் வந்த செய்தி என்னை இன்னும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா நகரத்தில், ஒரு கிணற்றில் கலைக்கபட்ட பெண் சிசு கருக்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு நர்ஸிங் ஹோமுக்கு பின்புறம் இருந்த ஒரு கிணற்றிலிருந்து கருகலைப்பு செய்யப்பட்ட 15 கருக்களை எடுத்திருக்கிறார்கள். (The Tribune என்னும் நாளிதள் இதையே 100 என்கிறது).
ஆண் பெண் விகிதாசார வேறுபாடு அதிகம் உள்ள மாநிலங்கலில் ஒன்று பஞ்சாப் மாநிலம் (1000:762)(tamilnadu 1000:920).இந்தியாவோட அதிக பணக்கார மாநிலமான பஞ்சாபில், பெண் சிசு கொலையை தங்கள் மத தர்மத்துக்கும் நம்பிக்கைகும் எதிராக கருதும் சீக்கியிர்களிடைய தான் இது நடந்திருக்கிறது. படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற பாகுபாடில்லாமல் இந்த கொடுமையை செய்து வருகிறார்கள்.
சரி செய்தியை பார்போம். மேலே குறிப்பிட்ட நர்ஸிங் ஹோமில் வேலை பார்த்து வந்த ஒரு தாய் (dai) எதோ ஒரு காரணத்தால் வேலையை விட்டு துரத்தப்படிருக்கிறார். அவர் கொடுத்த தகவலின் பேரில், நேரில் சென்று பார்த்த மாநில சுகாதார அதிகாரிகள் கருகலைப்பு செய்த 15 கருக்கள் கிணற்றில் இருந்ததாக கூறுகிறார்கள். கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 35 கருக்கலைப்பு செய்து அதை இந்த கிணற்றில் வீசியிருக்கிறார்கள். சாஹிப் நர்ஸ்சிங் ஹோம் என்னும் அந்த மருத்தவமனை, டாக்டர்.ப்ரீத்தம் சிங் மற்றும் அவரது மனைவி டாக்டர். அமர்ஜித் கெளர் ஆகியோரால் நடத்தப்பட்டு வருகிறது. காவல் துறையினர் அங்கு சென்று கருக்கலைப்புக்கு பயன் படுத்தப்பட்ட சாதனங்கள், மருந்ததுகள் ஆகியவைகளை கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த மருத்துவமனைக்கு, கருக்கலைப்பு செய்ய சட்டப்படி அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிபிடத்தக்கது.
THE PRE-NATAL DIAGNOSTIC TECHNIQUES (REGULATION AND PREVENTION OF MISUSE) ACT என்று ஒரு கடுமையான சட்டம் அமலில் இருந்து வருகிறது.சட்டம் கடுமையானதாக இருந்தாலும் மிக பலவீனமாகத்தான் இது அமுல் படுத்தபடுகிறது. இந்த சட்டத்தின் படி, அரசால் கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கப்பட்ட மருத்தவமனைகளுக்கு தான் கருகலைப்பு சாதனங்களை விற்க வேண்டும். ஆனால் இந்த சாதனங்களை உற்பத்தி செய்பவர்கள் இந்த சட்டத்தை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
ஸ்கேன் மூலம் குழந்தை ஆணா பெண்ணா என்று கூறுவது சட்டப்படி குற்றம் என்றாலும், இங்கு இருக்கும் மருத்துவர்கள் மிகவும் புத்திசாலிகள். நேரடியாக சொல்லாமல் அவர்கள் சில code words மூலம் எப்படியாவது குழந்தை ஆணா பெண்ணா என்பதை கூறிவிடுவார்கள். இதோ அவர்கள் உபயோகப்படுத்தும் சில வாக்கியங்கள், ஆணாக இருந்தால் " your baby is fine and will play football" பெண்ணாக இருந்தால் "you are in the pink of health" அல்லது "your child is like a doll".
பெருகி வரும் பெண் சிசு கொலையின் தீவிரத்தை உணர்ந்த சீக்கிய மத குருக்கள் விளிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடு பட்டு வருகிறார்கள்.இது போல பெண் சிசுக்களை அழிப்பவர்களை
"குடிமார்" (Kudimaar)என்று அழைக்கும் வழக்கம் சீக்கிய மத வழக்கத்திலேயே இருந்து வருகிறது. பெண் சிசுவை அழிக்கும் செயல் மத கொள்கைக்கு எதிரானது என்று தெரிந்து இருந்தும் பல சீக்கிய பெண்களே இந்த கொடுமையை செய்து வருகிறார்கள்.
வடமாநிலங்களில் தான் பென் சிசுவதை அதிகமாக காணப்படுகிறது. அனால் வடமாநிலங்கலில் இருப்பவர்களோ தென்மாநிலங்கள் இன்னும் "socially conservative" ஆக இருப்பதாக கூறிக்கொண்டு திரிகிறார்கள்.CNNIBN தொலைக்காட்சியில் தேர்தலின் போது நடந்த ஒரு கலந்துரையாடலில் சர்தேசாய் இப்படி ஒரு கருத்தை சொன்னார். அதுவும் இந்த கலந்துரையாடல் சென்னை லயலோ கல்லூரியில் நடை பெற்றுக் கொண்டிருந்த்தது. ஆடம்பர வாழ்க்கை வாழ்வதும்
கலாச்சாரத்தை மறந்து ஆட்டம் போடுவதும், ஆண் குழந்தை பெற்றால் தான் ஒரு பெண் குடும்ப வாழ்க்கைக்கு தகுதி உடையவள் ஆகிறாள் என்று பெரும் படிப்பு படித்தவர்களே (?)கருதுவது தான் இவர்களை பொருத்தவரை நாகரீகம். (இங்க ரொம்ப நாளா இருந்து வரும் சில தமிழர்கள் கூட நம்ம தமிழ்நாட்டை பத்தி இப்படித்தான் நினைச்சிட்டு இருக்காங்க. இந்த கொடுமையை எங்க போய் சொல்ல.. அப்ப வரும் பாருங்க கோபம்...ஹ்ம்ம்..)
அரசாங்கம் செய்யும் விழிப்புணர்வு முயற்சிகளை கடைநிலையிலுள்ள மக்கள் வரை சென்றடைந்தாலும் மேல் குடி மக்களிடையேயும் இந்த பாவச் செயல் தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது. பெண் சிசு கொலையை தடுக்க வேண்டும் என்றால் ,இதற்கான மூல காரணத்தை அலசி அராய்ந்து அதற்கான தீர்வு காணவேண்டும். சமுதாயத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களும், அரசியல் வாதிகள் உட்பட அனவருக்கும் பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்தவேண்டும்.
Doctors are selling their soul for greed.