Thursday, August 17, 2006

நேசம் - நிஜம் - காதல்


மாலைப் பேருந்தில் வீட்டை நோக்கி, முன்னிருக்கை நடுத்தர வயது ஆசாமிகளின் பேச்சுவார்த்தை காதிலும் மனதிலும்...."நீ யாரையாவது லவ் பண்ணீருக்கியா?" அடுத்தவன் வெறுமையாய் சிரிக்க, "தப்பிச்சே" என்றான் கேட்டவன். திருமணங்களில் காதல்னா என்ன? அது எங்கே இருக்கு? எப்படி வருது? எங்க போய் முடியுது? ,கூழாங்கற்களாய் மனதில் சரிந்த கேள்விகளை நோக்கியதே இந்தப் பதிவு.

"எதிர்பார்ப்புகள் இல்லாமல் வருவது காதல்", சரி இந்த இலக்கணத்தோடான மனதை எங்கே தேடுவதாம்? அவன் என்னை மட்டுமே நேசிக்க வேண்டுமென்கிற எதிர்பார்ப்பிலேயே இந்த காதல் இலக்கணம் பொய்த்து விடுகிறதே?.சில விஷயங்களை உணர்வுகளால் மட்டுமே அணுபவிக்கவும் கொண்டாடவும் முடியும் அந்த வகையில்தான் என்னுடைய காதல் சேர்த்தி என நினைக்கிறேன். வார்த்தைகள் பொய்த்துப் போய் நினைவுகளும் நிஜங்களும் என்னைக் கொண்டாடும் உணர்வுகள்தான் காதலாய் இருக்க முடியுமோ?

கல்யாணம் பண்ணிக் கொண்டவர்கள் எல்லாம் தங்கள் இனையை காதலித்துக் கொண்டிருக்கிறோம் என்பது எவ்வளவு சரியாக இருக்க முடியும்?. என் பார்வையில் எல்லா தம்பதியரிடமும் காமம் மிகுந்திருக்கும் அளவிற்கு காதல் மிகுந்திருக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி.எனக்குத் தெரிந்து சமுதாய நிர்பந்தங்களுக்காய் குடும்ப கட்டுக்குள் உழலும் தம்பதியர்தான் பெரும்பான்மையினர்.
எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்தான் திருமணத்தின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கிறது.எதிர்பார்ப்புகளுடன் கூடிய திருமண உறவில் இந்தக் காதலின் விளைவுகள் எத்தகையது? ஆதரவாய் சாய்ந்து கொள்ள தோளும், அதைக் கொடுக்கும் பக்குவமும் இல்லாத போதுதான் அதன் விளைவுகள் குடும்ப கட்டமைப்பை மீறி பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்த்து வரை எதிரொலிக்கிறது.
வெற்றிகளைக் சேர்ந்து கொண்டாடத் தெரிந்த தம்பதியர் தோல்வியென வரும் போது தோளோடு தோள் நின்று எதிர்கொள்ளாது ஒருவரை ஒருவர் காயப்படுத்தி காதலையும் குடும்பத்தையும் தெரிந்தே அழிப்பது வேதனையான வேதனை.

பொருளாதார தேவைகளுக்கு இருவரும் போராடும் குடும்பங்களில் ஆண்களை விட பெண்களுக்கே தன் இனையின் ஆதரவும், அங்கீகாரமும், அருகாமையும் அதிகமாய் தேவைப்ப்டுகிறது.ஏனெனில் பொருளாதார பங்களிப்பையும் தாண்டி பெண்களின் பங்கு குடும்ப நிர்வாகம் முதல் குழந்தை வளர்ப்பு வரை நீள்வதை யாரும் மறுக்கமுடியாது.சகிப்புத்தன்மை, பரஸ்பர அங்கீகாரம், ஒத்த முடிவெடுக்கும் பாங்கு, பிரச்சினைகளை ஒரு சேர எதிர்கொள்ளும் நம்பகத்தன்மை இத்தனையும் தருவது காதல்தானே!

இதெல்லாம் தன் இனையிடம் கிடைக்காமல் ஏமாற்றமும், இயலாமையும் சூழ புழுங்கும் ஆனோ பெண்ணோ வெளியில் சின்னதாய் ஒரு ஆறுதல் கிடைத்தாலும் கொம்பினைச் சுற்றும் கொடியாய் பற்றிக் கொள்வது இயல்புதானே! பிறகு அழுது ஆர்ப்பாட்டம் செய்வதால் யாருக்கு பயன்? இதை தவிர்க்க ஒரே வழி, உங்கள் இனையை ஆதரிப்பதுதான். எல்லா வகையிலும்.
திருமணமாவர்களே உங்கள் காதலைக் கொண்டாடுங்கள்.

உன்மடியில் நானுறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ...


21 comments:

சதயம் said...

மங்கை

வாழ்த்துக்கள்...வலைப் பதிவிற்கு உங்களை வரவேற்கிறேன். எனக்கு உங்கள் கருத்துக்களில் சில இடங்களில் மாறுபாடு இருந்தாலும் அருமையான சிந்தனையோட்டம்.

தொடர்ந்து எழுதுங்கள்....

மங்கை said...

சதயம்

பொறுமையா படிச்சு encourage பன்னினதுக்கு ரொம்ப நன்றி...
எந்த கருத்தில உடன்பாடு இல்லைங்கறதையும் சொல்லாம்ல!

கருப்பு said...

ஜயராமனின் தலித்-கிறித்துவர்கள் பதிவில் உங்கள் பின்னூட்டத்தினைப் பார்த்தேன். நன்றாக எழுதி இருந்தீர்கள்.

ஜயராமனின் திருகுதாளங்களை நான் எனது வலைப்பதிவில் போட்டு வாங்கி இருக்கிறேன்.

நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள் மங்கை.

http://karuppupaiyan.blogspot.com

ரவி said...

மங்கை..

உங்களை வரவேற்க்கிறேன்..
வலைப்பதிவு உலகிற்க்கு....ஆரம்பமே கலக்கல்..உங்கள் பின்னூட்டத்திருந்து நீங்கள் இன்னும் பல தரமான வாதங்களை எடுத்து வைப்பீர் என்று தெரிகிறது...

Please Remove Word Verification

மங்கை said...

வந்து வாழ்த்தியதற்க்கு நன்றி.. இன்னும் நான் தமிழ்மனத்தில் "preschool" level ல தான் இருக்கேன், இப்பதான் என் குருநாத சுவாமிகள் கிட்டே பயிற்சி எடுத்துட்டு இருக்கேன். எழுத்தானிய பிடிக்க ஆரம்பிச்சிரிக்கேன்.. இனி தான் பழகனும்

உங்கள் பதிவையும் படித்தேன் , நல்ல பதிவு.. நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை , ஆனால் இந்த
dalit opression எல்லா சாதியனரும் செய்வது தான்..பார்ப்பனர் மட்டும் அல்ல. அதனால் பாதிக்கப் படுபவர்களின் நலனையும் , அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிதையும், அதற்கான தீர்வையும் தமிழ்மன அன்பர்கள் யோசித்து செயல்பட்டால், நம் எல்லோருக்கும் ஒரு திருப்தி இருக்கும் என என்னுகிறேன். நம் நேரத்தையும் , அறிவையும் மற்றவர்கள் செய்யும் குற்றத்தை சுட்டி காட்ட மட்டும் பயன் படுத்தாமல்..நாம் இத்தனை பேர் இருக்கிறோம், ஏதாவது உருப்படியாக செய்யாலாமே...அதே எழுத்தின் மூலம்..
வருகைக்கு மிக்க நன்றி...
மங்கை

மங்கை said...

மிக்க நன்றி ரவி அவர்களே...

Chellamuthu Kuppusamy said...

மங்கை. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வலைப்பதிவு உலகிற்கு வரவேற்புகள்.

ஆங்காங்கே சில எழுத்துப் பிழைகள் தென்படுகின்றன. போகப் போகச் சரியாகிவிடுமென எதிர்பார்க்கலாம்.

சதயம் said...

இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்

மங்கை said...

சதயம் அவர்களுக்கும் இனிய சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்.

மங்கை

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் மங்கை.

மங்கை said...

நன்றி மதி

கானா பிரபா said...

வணக்கம் மங்கை

தங்களின் சிந்தைனைகள் பின்னூட்டமாய் இருந்து வலைப்பதிவாக விரிந்ததையிட்டு மகிழ்வடையுன் அன்பர்கள் நானும் ஒருவன். சிந்திக்கத் தூண்டும் பதிவு. வாழ்த்துக்கள்.

ஜொள்ளுப்பாண்டி said...

வாங்க மங்கை :))

மங்கை said...

நன்றி பிரபா, ஜொபா

மங்கை

Anu said...

too good mangai
indha understanding irundha
ella marriageum success dan

மங்கை said...

ஆமாம் அனிதா..முற்றிலும் உண்மை

நன்றி

E said...

சுகமான சிந்தனையுடனான அழகான வரிகள்

வெள்ளை மனசு

திருவடியான் said...

மங்கை... அழகான கருத்துக்கள்... உங்கள் எழுத்தைப் பார்த்தபின் எனக்கும் தோணுகிறது, இதைப் பற்றி நிறைய எழுத... அனுபவம் இருக்கிறதே... நான் பட்டு பெற்ற பெற்றுக் கொண்டிருக்கிற... எழுதுவேன்...

திருவடியான்

மங்கை said...

நன்றி திருவடியான் அவர்களே..
வாழ்கையில் அனைவருக்கும் இந்த அனுபவப்பாடம் இருக்கும்.. நினைத்து பார்த்து, சுவைத்து எழுத நம் வாழ்க்கை அனுபவங்களே போதும்...

உங்களின் அனுபவங்களையும் எழுதுங்கள்

நன்றி
மங்கை

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//வெற்றிகளைக் சேர்ந்து கொண்டாடத் தெரிந்த தம்பதியர் தோல்வியென வரும் போது தோளோடு தோள் நின்று எதிர்கொள்ளாது ஒருவரை ஒருவர் காயப்படுத்தி காதலையும் குடும்பத்தையும் தெரிந்தே அழிப்பது வேதனையான வேதனை.//

அது இருவருக்குமிடையேயான புரிதல் தன்மை மற்றும் பக்குவத்தைப் பொறுத்தது..

எழுத்தில் நல்ல முதிர்ச்சி தெரிகின்றது.

மங்கை said...

// அது இருவருக்குமிடையேயான புரிதல் தன்மை மற்றும் பக்குவத்தைப் பொறுத்தது..//

சிலருக்கு இந்த பக்குவம் இயற்கையிலேயே இருக்கு.. சிலருக்கு பட்ட பின்னால வருது..

நன்றி நிலவு நன்பன்