Friday, October 15, 2010

நான் இந்த மாதிரியான சலசலப்புக்கெல்லாம் அஞ்சுகிறவ்ள் இல்லை!

கடந்த பத்து நாட்களில் இரண்டாவது முறையாக எனது வலைப் பதிவு ஹேக் செய்யப் பட்டிருக்கிறது. இரண்டு முறையும் பதிவினை மீட்டெடுத்து விட்டேன். அந்த தொடர் முயற்சியாளருக்கு எனது வாழ்த்துக்களும், அனுதாபங்களும்....

வாழ்த்துக்கள், வெற்றிகரமாய் எனது வலைப் பதிவுக்குள் நுழைந்து என் பெயரில் விடை பெறுவதாக பதிவு போட்டதற்கு, அனுதாபங்கள் அவரின் பிறழ்ந்த மனநிலையை நினைத்து....வாழ்க்கை என்பது இந்த பதிவோடு முடிவதில்லை நண்பரே, இதைத் தாண்டியது என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.

ஒரு வலைப் பதிவினை முடக்குவதால் என்னை முடக்கிவிட முடியும் என நினைப்பதில் அபத்தமானது.எனக்கு இதை விட பல முக்கியமான வேலைகள் இருக்கிறது.எனவே நீங்கள் தொடர்ந்து முயற்சியுங்கள்....உங்களால் இந்த வ்லைப் பதிவினை முடக்கிட முடிந்தால் இன்னொரு வலைப் பதிவு தொடக்க எனக்கு நேரமாகாது, அதையும் முடக்குங்கள்....நான் போய்க் கொண்டே இருப்பேன், நீங்கள் என் பின்னால் நாய்க் குட்டி மாதிரி தொடர்ந்து ஓடிவரலாம். அதுல் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை....

ஏனெனில் நான் இந்த மாதிரியான சலசலப்புக்கெல்லாம் அஞ்சுகிறவள் இல்லை.

40 comments:

ILA (a) இளா said...
This comment has been removed by the author.
ILA (a) இளா said...

போன பதிவ பார்த்தவுடனே நினைச்சேன், மடலிடலாமான்னு கூட நினைச்சேன். ஆனா மடலும் தாக்கப்பட்டிருக்கும்னு ... விடுங்க.. எல்லாம் நல்ல படியா நடக்கும்

தோழி said...

அரை நிர்வாண பெண்ணின் படத்துடன் விடைபெறுகிறேன் என்ற பதிவை உங்களிடம் இருந்து எதிர்பார்க்காத நான் மிகவும் குழம்பிப் போனேன்...

பத்து நாட்களில் இரண்டு முறை நடந்தும் அதை பொருட்படுத்தாத உங்களின் நிதானமும், ஆளுமையான நிறைந்த இந்த விளக்கமும் உங்கள் மீதான மரியாதையினை பல மடங்கு உயர்த்துகிறது...

Thekkikattan|தெகா said...

மங்கை, இந்தாளு இந்தளவிற்கு மனம் பிறழ்ந்து திரிவார் என்று நினைக்கவே இல்லை. இந்த மாதிரி அரைநிர்வாணம் படமெல்லாம் போட்டா பயந்துக்குவிங்களாமா, என்ன ஒரு நம்பிக்கை.

இந்த மாதிரி செஞ்சிக்கிட்டு திரியற நேரத்தில பிரோயோசனமா மண்டைக்குள்ளர குடையுற பூச்சிய எடுத்து வெளியில போட முயற்சி பண்ணலாம். நோ குட் ஃபார் ஹிஸ் ஹெல்த் :(

கல்வெட்டு said...

//கடந்த பத்து நாட்களில் இரண்டாவது முறையாக எனது வலைப் பதிவு ஹேக் செய்யப் பட்டிருக்கிறது. //

உங்களுக்கா என்ன கொடுமை இது??

:-((((

ப.கந்தசாமி said...

இப்படியெல்லாம் கூட நடக்குதுங்களா? அட, அநியாயமே!

Compassion Unlimitted said...

Oru varudatthirku munnal 3 maadangal naanum indha Hackingurkku maatti konden. Google has a complaint site adilum padhivu seyyden. Payani illai. Thanagave nindru vittadhu

Kavalai padatheergal

TC
CU

Bruno said...

//வாழ்க்கை என்பது இந்த பதிவோடு முடிவதில்லை நண்பரே, இதைத் தாண்டியது என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.//

நச் !!

எண்ணங்கள் 13189034291840215795 said...

அருமை பாராட்டுகள்..

இதே நிலைமை எனக்கும் ஏற்பட்டது சில கோழைகளால்..

அவர்களால் அதுதான் முடியும்..

வெற்றிகரமாக தொடருங்கள் பயணத்தை...

Umapathy said...

//ஒரு வலைப் பதிவினை முடக்குவதால் என்னை முடக்கிவிட முடியும் என நினைப்பதில் அபத்தமானது.எனக்கு இதை விட பல முக்கியமான வேலைகள் இருக்கிறது//

ஆனா அவங்களுக்கு இல்லையே
சைபர் கிரைம் அவங்கள புடிக்க

இந்த மொபைல் நம்பர் கொடுத்த பாஸ்வேர்டு மாத்தினா உங்களக்கு ஒரு எஸ் எம் எஸ் வரும்னு சொல்றாங்க
எதோ எனக்கு தெரிஞ்சது

சென்ஷி said...

:(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

புதுவேலையும் உடல்நிலையும் காரணமாக நீங்களே பதிவிடாமல் இருந்தீர்கள் இதுபோன்ற நெகட்டிவ் ஆட்கள் செய்கிற சின்னத்தனமான வேலைக்கு உங்கள் நேரத்தை செலவிடவந்ததே..

\\ஒரு வலைப் பதிவினை முடக்குவதால் என்னை முடக்கிவிட முடியும் என நினைப்பதில் அபத்தமானது.//
அழகாச் சொன்னீங்க.. இனியாவது அந்த சின்னமனுசனுக்கு புரியுதா பார்க்கலாம்..

தமிழ் அமுதன் said...

எதிர்ப்புகள்தான் நமக்கு முழு செயல் வேகத்தை கொடுக்கின்றன. அதற்காக எதிரிகளுக்கு நாம் நன்றி சொல்லலாம்.!

அதே சமயம்...!
வொர்த் இல்லலாத,மறைந்து தாக்கும் இதுபோன்ற அருவெருக்க தக்க சாக்கடை கொசுக்களை
எதிரி என சொல்ல கூட நா கூசுகிறது..!

எல் கே said...

பாஸ்வோர்டை கடினமாக வைக்கவும்

அபி அப்பா said...

கொடுமை:-(

கோபிநாத் said...

;(

Unknown said...

:(

துளசி கோபால் said...

அட ராமா......

இப்படியெல்லாமா.............:(

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அட! என்ன கொடுமையிது!

உண்மைத்தமிழன் said...

என்னம்மா இது? ஆச்சரியமா இருக்கு? உங்க தளத்தை ஏன் ஹேக் பண்றாங்க..? நல்ல கொடுமை..!

நிகழ்காலத்தில்... said...

எதுவாயினும் ஒதுக்கிவிட்டு நீங்கள் இயல்பாக இருப்பதற்கு பாராட்டுகள்.

மங்குனி அமைச்சர் said...

LK said...

பாஸ்வோர்டை கடினமாக வைக்கவும்
///

"வைரம்"ன்னு வைக்கலாமா ,அதுதான் ரொம்ப கடினமாதாம்

vinthaimanithan said...

இந்தப் பிரச்சினை உங்களுக்கு இப்போது... எதிர்காலத்தில் எல்லாருமே பாதிக்கப்படலாம். நிச்சயம் விழிப்புணர்வு தேவை.

பாஸ்வேர்ட் ஆப்ஷனில் மொபைல் எண் கொடுப்பது நல்ல உத்தி என்று நினைக்கிறேன்

a said...

மீண்டு (மீட்டு) வந்ததர்க்கு பாராட்டுக்கள்...

Unknown said...

mangai...

kelvipattean..bloggers silar sonnaanga.unga pathivu ethuvum naan padiththathillai.still i feel bad.enna oru aniyaayam.unga mobile ennna aaachu... two days munnaadi line kidaikkalai...Dont worry... ellorukkum eluthu thiramai vandhuduma..athukkaaha oruvarai indha alavirtku virattanuma...

Unknown said...

mangai...

kelvipattean..bloggers silar sonnaanga.unga pathivu ethuvum naan padiththathillai.still i feel bad.enna oru aniyaayam.unga mobile ennna aaachu... two days munnaadi line kidaikkalai...Dont worry... ellorukkum eluthu thiramai vandhuduma..athukkaaha oruvarai indha alavirtku virattanuma...

Unknown said...

என்ன இது???...:(...

sumana said...

very unfortunate...

வல்லிசிம்ஹன் said...

மிக வருத்தமாக இருக்கிறது மங்கை. யாருக்கு என்ன வருத்தம் உங்கள் மேல்.மீண்டு வந்ததற்கு வாழ்த்துகள்.

Unknown said...

பென்னேஸ்வரனின் தளத்தில் உங்கள் வலைத்தளத்தைப் பற்றி அறியப்பெற்றேன்...
அருமையான பதிவுகள்.அந்த நபரின் பின்னூட்டங்களை வரிசையாக வாசித்து வந்தேன்.. பதிவில் இருக்கும் கருத்தை பொருட்படுத்தாத அந்த ஈன ஜென்மத்தை நினைத்து நீங்கள் கவலைப்படவேண்டாம்... தொடர்ந்து இந்த தகவல்களை எங்களுக்கு பகிர்ந்து வாருங்கள்.. தரம் என்பது எழுத்தில்/வார்த்தைகளில் மட்டும் இருந்தால் போதாது...பதிவின் பயன்..பகிர்ந்து ஜொண்ட விடயம்... பதிந்தவரின் நோக்கு எல்லாம் சேர்ந்து தான் ஒரு படைப்பின் தரத்தை தரம் உள்ளவர்கள் நிர்னயிப்பார்கள்... பெரிதாக பின்னூட்டமோ பாராட்டுக்களோ வராவிடினும் நீங்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருவது உங்கள் நோக்கத்தை பறைசாற்றுகிறது...

வாழ்த்துக்கள் மங்கை...

உங்களின் வலைப்பதிவை அறிமுகப்படுத்திய பென்னேஸ்வரனுக்கு நன்றி

நீச்சல்காரன் said...

புதிய பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
முடிந்தால் அந்த பழைய இடுகையை திருத்திவிட்டு அழிக்கவும். காரணம் பழைய இடுகை ரீடரில் அப்படியே உள்ளது.

கோமதி அரசு said...

ஆரோக்கியமான பதிவுலகம் தேவை.

அன்னையின் அருள் மொழி தான் நினைவுக்கு வருகிறது.

//அடுத்தவர்களுடைய அறிவீனத்தைச் சட்டை செய்யாதே.உன்னுடையதை கவனி.//

நம் கருத்தை நாம் சொல்லிக் கொண்டு இருப்போம்.எதிர்ப்பவர்களை சட்டை செய்யாமல்.

ஹுஸைனம்மா said...

உங்கள் மன உறுதிக்குப் பாராட்டுகள்.

எப்படி ஹேக் செய்தார்கள், எப்படி மீட்டிர்கள் எனறு எழுதினால், தகவல் தேவைப்படும் சமயத்தில் உதவலாம்.

ஹுஸைனம்மா said...

உங்கள் மன உறுதிக்குப் பாராட்டுகள்.

எப்படி ஹேக் செய்தார்கள், எப்படி மீட்டிர்கள் எனறு எழுதினால், தகவல் தேவைப்படும் சமயத்தில் உதவலாம்.

மங்கை said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...

ஆடிக்கொரு பதிவை போடும்போதே இப்படி பண்றாங்க... தேமேனு என் அனுபவங்களை மட்டுமே பகிர்ந்து வருகிறேன்... இதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை....நான் படித்து பின்னூட்டம் போடுவது கூட கம்மி தான்... நான் என் எழுத்து திறமையை காட்டவோ...பாராட்டை பெறவோ எழுதவில்லை என்பது என் பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும்... என் பதிவை ஹாக் செய்யும் அளவிற்கு நான் பெரிய பதிவர் இல்லை.. இதற்காக இத்தனை மெனக்கட வேண்டாம் என்பதை அந்த நபருக்கு நான் சொல்லிக்கொள்கிறேன்..

Santhosh said...

//என் பதிவை ஹாக் செய்யும் அளவிற்கு நான் பெரிய பதிவர் இல்லை.. இதற்காக இத்தனை மெனக்கட வேண்டாம் என்பதை அந்த நபருக்கு நான் சொல்லிக்கொள்கிறேன்.. //
:)) பதிவை backup எடுத்து வெச்சுகோங்க..

Thanglish Payan said...

Hack pannitanga nu eppadi therinjukirathu?

Do they do any harms or delete our posts?

Ippadi ellama nadakkuthu?

barani said...

பாறாங்கல்லையே போட்டாலும் பார்வையால் அதைத் தள்ளி விட்டு முன்னேறும் பெண் தமிழ்ப்பெண் என்பதை மறவானேன்??

Tharik Ahamed said...
This comment has been removed by the author.
Tharik Ahamed said...

hai i m Tharik ahamed blogger site'a hack pannuvathu sulavam illai. blogger world famous website ethill arivaliyana engineer irukkaga.. so blogger hack panrathu kadinam.... onu pannalam.. password Strength low'a irukkum pothu password yadokka mudium. password enbathu : letter and number,caps irukka vandum.ethu pol iruthal password takeover panrathu kaistam. athai pol google account'la neegal account recovery option'la ungaludaiya other Email id use pannuga... so neegal password easy recover pannalam...

Thanks!!

By: Tharik ahamed
http://mobiletricks.in