Monday, May 18, 2009

ஜெர்சி கர்ல்- Jersy Girl-திரைப்பார்வை


ஜெர்சி கர்ல்... திரைப்பட விமர்சகர்களால் பல் வேறு விதமாக விமர்சிக்கப் பட்ட படம். மனைவியை இழந்த கணவனுக்கும், அவன் மகளுக்கும் இடையேயான பிணைப்பை பற்றிய ஒரு உருக்கமான படம்.

ஊடகத்துறையில் பிரபலமானஆலிவர் ட்விங்கி் (Ben Affleck) மனைவியை இழந்தவர்.
குழந்தை பேற்றின்போது மனைவி இறந்து விடுகிறார். மனைவி இழந்த துக்கத்தை மறக்க தன் வேலையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார். பிறந்த குழந்தையின் மேலும் அக்கறையில்லை. ஆலிவரின் தந்தை ஊரில் இருந்து வந்து குழந்தையை பார்த்துக் கொள்கிறார். மகனின் இந்தப் போக்கை திருத்த நினைத்து, ஒரு நாள் தன் ஊருக்கு கிளம்பிவிடுகிறார். மனைவியை இழந்த துக்கம் ஒரு பக்கம் அழுது கொண்டே இருக்கும் குழந்தை ஒரு(மறு) பக்கம், இதனால் மிகுந்த மன அழுத்தம் அடைந்து அடுத்த நாள் பணி செய்யும் இடத்தில் பிரபல நடிகர் வில் ஸ்மித்தை அறைந்து விடுகிறார். அனைவருக்கும் எதிரில் இது நடந்ததால், வேலையை இழக்க நேரிடுகிறது. அதுமட்டுமில்லாமல் அனைத்து நிறுவனங்களும் இவரை பிளேக் லிஸ்ட் செய்து விடுகிறது. இதனால் ஆலிவரின் தந்தை இருக்குமிடமான நீயூ ஜெர்ஸ்சிக்கே குழந்தையுடன் சென்று விடுகிறார். குழந்தையை பார்த்துக் கொள்வதில் அதிக அக்கறை காட்டுவதுடன் அதை முழுமனதுடன் நேர்த்தியாக செய்து வருகிறார்.

எவரும் அவருக்கு ஏற்ற வேலையை கொடுக்காத நிலையில், ஒரு அரசு நிறுவனத்தில் பணியில் சேர்கிறார். ஒரு நல்ல தந்தையாக இருப்பதை மட்டுமே மனதில் கொண்டு வேறு பெண்களை மனதிலும் நினைக்காமல், மனைவியின் நினைவுகளுனூடேயே 7 வருடங்கள் வாழ்ந்து வருகிறார்.


இந்த நிலையில் அருகில் இருக்கும் ஒரு வீடியோ/சீடி கடை
யில் பணி புரியும் ஒரு பெண் இவர்கள் குடும்பத்திற்கு நல்ல தோழியாக இருந்து வருகிறார்.

ஒரு பொதுப்பணியில் சிலருக்கு ஆதரவாக பேசி அவர்களுக்கு நியாயம் வாங்கி கொடுத்த பின், தன் கடந்தகால பணி அவருக்கு நினைவு வருகிறது. மீண்டும் நீயூயார்க் நகரம் செல்ல முயற்சி செய்கிறார். பழைய நண்பர் ஒருவர் மூலம் ஒரு நிறுவனத்திடம் நேர்காணலுக்கான தேதியை குறிக்கிறார். இது தந்தைக்கோ, மகளுக்கோ தோழிக்கோ யாருக்கும் பிடிக்கவில்லை. நியூஜெர்சியை விட்டு போக மகளுக்கு விருப்பமில்லை. நேர்கானலுக்கு செல்ல வேண்டிய அதே நாளில் தான் பள்ளியில் குழந்தையுடன் ஒரு போட்டியில் தானும் பங்கேர்க்க வேண்டும். இந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள இயலாமல் குழந்தை அழுகிறாள். விவாதத்தில் உணர்ச்சிவசப்பட்டு, கோவத்தில், உன்னாலும் உன் அம்மாவாலும் தான் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்று கூறிவிடுகிறார்.

இந்த வார்த்தைகளை எதிர்பாக்காத குழந்தை அழுதபடி தன் அறைக்குள் சென்றுவிடுகிறாள். அடுத்த நாள் தன் தவறை உணர்ந்து குழந்தையிடம் மன்னிப்பு கேட்கும் இடத்தில் அவருடன் சேர்ந்து நமக்கும் கண்கள் கலங்குகிறது. தொழிலின் மேல் தந்தைக்கு இருக்கும் ஆர்வத்தினாலேயே அப்படி நடந்து கொண்டார் என்பதை உணர்ந்து, நியூயார்க் செல்வதற்கு தன் சம்மதத்தை தெரிவிக்கிறாள்.

நியூயார்க் நகரில் நேர்காணலுக்காக காத்துக்கொண்டிருக்கும் போது 7 ஆண்டுகளுக்கு முன் இவர் அறைந்த வில் ஸ்மித்தை சந்திக்கிறார். ஆனால் வில் ஸ்மித்திற்கு இவர் யாரென்று அடையாளம் தெரியவில்லை. பேச்சு குழந்தை குடும்பம் என்று செல்கிறது. இந்த உரையாடலில் குழந்தையின் மகிழ்ச்சியை விட இந்த உலகத்தில் வேறொன்றும் பெரிதில்லை என்று நம்புகிறார்.

உடனே
நேர்காணலை புறக்கணித்துவிட்டு தன் குழந்தையுடன் பள்ளியில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ள விரைகிறார். கடைசி நிமிடத்தில் மேடையில் தோன்றி குழந்தையை, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறார்.

போட்டியில் வெற்றி பெற்ற பின் குழந்தை, தாத்தாவுடனே இருக்கப்போகிறோமா என்று கேட்க, ஆலிவரும் ஆமாம் என்கிறார்.

மகள்- " உனக்கு அந்த வேலை அவ்வளவு பிடித்தமான ஒன்றென்றால் அதை ஏன் ஏற்கவில்லை'.

ஆலிவர்-
எனக்கு அந்த வேலை பிடித்தமானது தான்.. ஆனால் யோசித்துப் பார்த்தால் என் வாழ்க்கையில் உனக்கு அப்பாவாக இருப்பதில் மட்டும் தான் நான் வெற்றியடைந்திருக்கிறேன்"

ஆலிவரின் இந்த பதில் தான் எனக்கு இந்த பதிவை எழுத தூண்டியது.


நியூயார்க் நகருக்கு தான் செல்லுவதாக மகன் கூறியதும்..தானும் அவர்கள் கூட வருவதாக ஆலிவரின் தந்தை கூறுவார். அந்த உரையாடல்..............

ஆலிவர்-அப்பா நீங்க கடைசி காலத்தில் தனியாக இருக்க விரும்பவீ்ங்கன்னு நினச்சேன்.

அப்பா - இருக்கலாம், அதே சமயம் நான் தனியாக சாக விரும்பவில்லை

32 comments:

சென்ஷி said...

மீ த ஃபர்ஷ்ட்டு :))

இருங்க. பதிவை படிச்சுட்டு வர்றேன்!

யட்சன்... said...

மீ த செகண்டு...

:)

என்னுடைய சேகரிப்பில் இருக்கும் படங்களில் இந்த படமும் ஒன்று....

அருமையான படம்...விரிவான பின்னூட்டம் விரைவில்ல்ல்ல்ல்ல்ல்

சென்ஷி said...

:))

மங்கை அக்கா பதிவுலக வரலாற்றுல மிகச்சிறப்பு வாய்ந்த பதிவு.

முதல் திரை விமர்சனம் இதுதான்!

கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க முயற்சிக்கிறேன்.

//ஆலிவர்-அப்பா நீங்க கடைசி காலத்தில் தனியாக இருக்க விரும்பவீ்ங்கன்னு நினச்சேன்.

அப்பா - இருக்கலாம், அதே சமயம் நான் தனியாக சாக விரும்பவில்லை //

:-))).

நல்ல அர்த்தப்பூர்வமான வசனம்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

நீங்கள் குறிப்பிட்ட அந்த இரண்டு உரையாடலும் அருமை....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ithu yaruppa mangaiya .. ada ada... super.. :))

சென்ஷி said...

//மகள்- " உனக்கு அந்த வேலை அவ்வளவு பிடித்தமான ஒன்றென்றால் அதை ஏன் ஏற்கவில்லை'.

ஆலிவர்- எனக்கு அந்த வேலை பிடித்தமானது தான்.. ஆனால் யோசித்துப் பார்த்தால் என் வாழ்க்கையில் உனக்கு அப்பாவாக இருப்பதில் மட்டும் தான் நான் வெற்றியடைந்திருக்கிறேன்"//

மீள்வாசிப்பில் அர்த்தம் புரிகிறது!

பகிர்விற்கு நன்றி அக்கா..

சென்ஷி said...

// முத்துலெட்சுமி/muthuletchumi said...

ithu yaruppa mangaiya .. ada ada... super.. :))//

ஆமாம்க்கா. அல்ரெடி பரிசோதனை முயற்சியா ஒரு கவிதை, ஒரு மொக்கை எழுதியிருக்காங்க. இப்ப விமர்சனத்துல பாஸ் ஆயாச்சு :))

இனிமே தைரியமா சொல்லிக்கலாம். மங்கை அக்காவும் ஒரு முழுப்பதிவர்ன்னு :))

தமிழ் அமுதன் said...

இவ்ளோ! சுருக்கமா ! ஒரு முழு படம் பார்த்த உணர்வ கொடுத்து இருக்கீங்க!

ரத்தின சுருக்கம்னு சொல்லுவாங்களே அது இதுதானோ?

///ஆலிவர்-அப்பா நீங்க கடைசி காலத்தில் தனியாக இருக்க விரும்பவீ்ங்கன்னு நினச்சேன்.
அப்பா - இருக்கலாம், அதே சமயம் நான் தனியாக சாக விரும்பவில்லை//

இந்த உரையாடல்ல நம்ம ஊரு செண்டிமெண்ட் தெரியுது!

படத்த பார்க்கணும்னு தோணுது! என்ன? வசனம் தான் புரியாது!

பின் குறிப்பு ;- நான் கடைசியா பார்த்த இங்கிலீஷ் படம் ''ஷோலே''

ஆயில்யன் said...

//சென்ஷி said...

// முத்துலெட்சுமி/muthuletchumi said...

ithu yaruppa mangaiya .. ada ada... super.. :))//

ஆமாம்க்கா. அல்ரெடி பரிசோதனை முயற்சியா ஒரு கவிதை, ஒரு மொக்கை எழுதியிருக்காங்க. இப்ப விமர்சனத்துல பாஸ் ஆயாச்சு :))

இனிமே தைரியமா சொல்லிக்கலாம். மங்கை அக்காவும் ஒரு முழுப்பதிவர்ன்னு :))
///

எஸ்ஸு! :)

மங்கை said...

சென்ஷி

ஆக

நானும் பதிவராயிட்டேன்...நானும் பதிவராயிட்டேன்...நானும் பதிவராயிட்டேன்...

நன்னி நன்னி...

இருந்தாலும்

//மங்கை அக்கா பதிவுலக வரலாற்றுல மிகச்சிறப்பு வாய்ந்த பதிவு.///

இது கொஞ்சம் ஓவர்

மங்கை said...

யட்சரே

///விரிவான பின்னூட்டம் விரைவில்ல்ல்ல்ல்ல்ல்///

விரைவில் எப்போஓஓஓஓஓஓஒ..

மங்கை said...

அ.அம்மா..லட்சுமி நன்றி..

நன்றி ஆயில்யன்

மங்கை said...

அமுதன்..

ஷோலே???.. ஹா ஹா... சினிமா வசனமாயிருந்தாலும் சூப்பர்..

அமுதன் இப்ப எல்லாம் சப் டைட்டில் வருது...

கோபிநாத் said...

ஆகா...சத்தமே இல்லமால் சூப்பர் படத்தை பத்தி பதிவு போட்டு கலக்கிட்டிங்க ;))

யட்சன் சார்..நோட் பண்ணிக்கோங்க!!!

கோபிநாத் said...

\\ஆலிவர்- எனக்கு அந்த வேலை பிடித்தமானது தான்.. ஆனால் யோசித்துப் பார்த்தால் என் வாழ்க்கையில் உனக்கு அப்பாவாக இருப்பதில் மட்டும் தான் நான் வெற்றியடைந்திருக்கிறேன்" \\

இந்த வசனத்துக்கே கண்டிப்பாக பார்த்துடுவோம்.

மாப்பி தேடுதல் படலத்தை ஆரம்பி ராசா ;))

வல்லிசிம்ஹன் said...

மங்கை அருமையான விமரிசனம்..நல்ல கதையும் கூட.
நம்பும்படி எடுத்திருக்கிறார்களே. அதைச் சொல்லவேண்டும்.
நன்றி,.உங்களை எழுதத் தூண்டிய இந்தப் படம் கிடைத்தால்
கட்டாயம் பார்க்கிறேன்.

மங்கை said...

கோபி...ரிபீட்டே போடுற மாதிரி... சீ டீ யும் மாப்பி தான் தேடனுமா

Thekkikattan|தெகா said...

விமர்சனம் நல்லா வந்திருக்கு!

இந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை, மங்கை; பார்த்திடுவோம்.

மங்கை said...

வல்லிம்மா வாங்க வாங்க... ரொம்ப நாள் ஆச்சு நீங்க இந்தப்பக்கம் வந்து...

நன்றி வல்லிம்மா... கண்டிப்பா பாருங்க.. உங்களுக்கும் பிடிக்கும்

மங்கை said...

நன்றி தெகா..பாருங்க

மங்கை said...

///அதன் விமர்சனம் இன்னும் அழகு...(மங்கை மாதிரி)..///

அதானே...அப்படி சொல்லுங்க...
:-))))))))))))))))))

டாக்டரம்மா...இதுக்கே உங்களுக்கு ட்ரீட் குடுக்கனும்...எங்க போலாம் சொல்லுங்க.. உங்களைத்தான் காணோம்னு பார்த்துட்டு இருந்தேன்...

மணிநரேன் said...

நீங்கள் குறிப்பிட்ட அந்த இரண்டு வசனங்களுமே திரைப்பார்வைக்கு ஒரு முழுமையை கொடுத்துவிட்டதாக உணர்கிறேன்... :)

harveena said...

In ur lines, i felt the movie,, excellent madam,, nice

காட்டாறு said...

Ay... Movie review. I remember Yatchan's post (Rasitha Pen Pathivarkal). Athukkahavaa Mangai intha post? Unmaiya sollunga.

Doc ennaiyum kootitu ponga. Naan ungalukku javvu mittai thaaren. ;-)

பாலராஜன்கீதா said...

UTVயின் உலகத் (தர) திரைப் படங்களில் மிகவும் இரசித்துப் பார்த்த ஒன்று. அந்தத் தொலைக்காட்சியில் பல படங்கள் மறு ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
இடுகைக்கு நன்றி.

மங்கை said...

//Ay... Movie review. I remember Yatchan's post (Rasitha Pen Pathivarkal). Athukkahavaa Mangai intha post? Unmaiya sollunga.///

லொல்லா

அதான் ரசித்த பெண் பதிவர்கள் வரிசையில நம்ம பேர் வந்துடுச்சில்ல இனி என்ன..

டாக்டரம்மாக்கு தான் ட்ரீட்... லொல்லு பண்றவுங்களுக்கெல்லாம் இல்லை..

மங்கை said...

//பாலராஜன்கீதா said...
UTVயின் உலகத் (தர) திரைப் படங்களில் மிகவும் இரசித்துப் பார்த்த ஒன்று. அந்தத் தொலைக்காட்சியில் பல படங்கள் மறு ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.//

நான் ஸ்டார் மூவீஸ்ல பார்த்தேன்.. நன்றி பா.கீதா

மங்கை said...

thanks veeena..:-)

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

இவ்ளோ! சுருக்கமா ! ஒரு முழு படம் பார்த்த உணர்வ கொடுத்து இருக்கீங்க!

ரத்தின சுருக்கம்னு சொல்லுவாங்களே அது இதுதானோ?
அருமை மங்கை அக்கா

///ஆக

நானும் பதிவராயிட்டேன்...நானும் பதிவராயிட்டேன்...நானும் பதிவராயிட்டேன்...///

ஹா ஹா ஹா :))
:))))))))))))))))))))))

மங்கை said...

வைகரைதென்றல்

நன்றி

Anonymous said...

Looks like a good movie.... but the entire story is here! Of late, I have not watched any movies.... hopefully I will be able to watch this one. So, the hero and the heroine (second) don't get married? If not, I am definitely watching this one :-)

Destination Infinity

RAGUNATHAN said...

கதையை படித்ததால் கண்கள் பனித்தன. நல்ல விமர்சனம் படித்ததால் இதயம் இனித்தது.

இதில் உள்குத்து எதுவும் இல்லை. :)