"தனியார் நிலங்களில் காடு வளர்ப்பு" என்ற திட்டத்தில், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மார்ச் வரை, ஒரு கோடி மரங்கள் நடப்பட்டு சாதனை படைக்கப்படுள்ளது. வரும் ஆண்டு 3 கோடி மரங்கள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம், வனத்துறையின் கீழ் எல்லா மாவட்டத்திலும் செயல் படுத்தப்படுகிறது. தேக்கு, நாட்டு வேம்பு,மலை வேம்பு, சவுக்கு, தீக்குச்சி மரம், குமிழ், வாகை, முல்லில்லா மூங்கில் போன்ற மரக் கன்றுகள் இலவசமாக வழங்கப் படவுள்ளது. அடுத்த ஆண்டு மழைப்பருவத்தில் (செப்டெம்பர்- அக்டோபர்) நடவு செய்யலாம். விருப்பமுள்ளவர்கள் மாவட்ட வனத்துறை அலவலகத்தில் தங்கள் நிலம் சமபந்தப்பட்ட 10(1) அடங்கள் சமர்பித்து முன்பதிவு செய்ய வேண்டும். முன் பதிவின் அடிப்படையில் மட்டுமே செடிகள் வளர்க்கப்படுதால், இந்த முன் பதிவு அவசியமாகிறது.
இதற்கு நம்மிடம் குறைந்தது ஒரு ஹெக்டேர் (2.5 ஏக்கர்) நிலம் இருக்க வேண்டும். ஒரு விவசாயிக்கு 500 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது ( சவுக்கு மட்டும் 2000 நாத்துகள் வழங்கப்படுகிறது.). மேலும் பராமரிப்பு செலவில் ஒரு பகுதி மானியமாக வழங்கப்படுகிறது.
தங்களின் நிலத்தின் மண்ணை ஆய்வு செய்து, கார அமிலத்தன்மையை பொருத்தும், நீரின் வகையை பொருத்தும், அருகில் மரங்களின் தேவை (Demand) மற்றும் விற்பனை (Marketing) வசதியை பொருத்தும், காலத்தின் அளவைப் பொருத்தும் (மரங்களின் கால அளவு) தாங்கள் பயிர் செய்ய விரும்பும் மர வகைகளை முடிவு செய்யவும். (பொதுவாக சவுக்கு 3 அல்லது 4 ஆண்டுகளிலும் மற்ற வகைகள் 7 முதல் 20 ஆண்டுகளிலும் வெட்டலாம்).
சுமார் ஒரு வருடத்திற்கு முன்னால் வர்த்தகம் பதிவின் மூலம் தீக்குச்சி மரத்தை பற்றி தெரிந்து கொண்டேன். பிறகு திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் போகும் பாதையில் இருக்கும் வனத்துறை அலுவலகத்திற்கு சென்று இந்த மரத்தை பற்றிய விபரங்களை அறிந்தேன். அங்கு இருந்த வனத்துறை அதிகாரி மிகப் பொறுமையுடன் மகிழ்ச்சியுடன் விவரங்களை அளித்தார். அதன் படி கடந்த 5 மாதங்களின் செயல்பாட்டில் கீழே படத்தில் உள்ள மரங்கள் கோவில்பட்டி அருகே பயிரிட்டிருக்கிறேன்.
இந்த மரத்தின் பெயர் பெருமரம் அல்லது பீமாட்டி(ailanthus). பொதுவாக தீக்குச்சி மரம் என்று அழைக்கபடுகிறது. இந்த மரத்தை நான் தேர்ந்தெடுத்தற்கு முக்கியமான சில காரணங்கள்
1) மார்கெட்டிங்க் - கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி போன்ற இடங்களில் அதிகமாக தீக்குச்சி ஆலைகள் இருப்பதால்.
2) 7 ஆண்டுகளில் வெட்டலாம்.
3) இந்த வகை மரங்களுக்கு எப்பொழுதும் நல்ல demand' இருப்பதால் நல்ல விலை கிடைக்கிறது.
ஒரு ஏக்கருக்கு 200 மரங்கள் வளர்க்கலாம். இடைவெளி - 14 x 14 அடி இந்த வகை மரத்துக்கு நீர் தேங்காத செம்மண் நிலமாக இருப்பது அவசியம். முதல் மூன்று ஆண்டுகளில் ஊடு பயிர் செய்யலாம்.( பாசிப்பயிர், உளுந்து, எள்..)
இந்த அறிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
மரங்களை பயிர் செய்து நாட்டிற்கும் வீட்டிற்கும் பயன் சேர்ப்போம்.
மேலும் விபரங்களை பெற- 9942456605
21 comments:
பயனுள்ள தகவல்கள்!
மிக்க நன்றி!
http://letsplanttrees.blogspot.com/
மங்கை,
அருமையான வேலை செஞ்சிருக்கீங்க. யூகாலிப்டஸ், சவுக்கு போன்ற தண்ணீரை உறிஞ்சி மேலும் வறட்டுக் காற்றை உமிழவும், மென்மேலும் நிலத்தடி நீர் இன்னும் ஆழத்திற்கும் போகவும் வழிவாகை செய்யும் பொழுது தீக்குச்சி மரம் நல்ல பசுமையாக பெரும் இலைகளுடன் இருப்பதால் குளுமை கண்டிப்பாக கிட்டும்.
அதே சமயத்தில் நமக்கு வேண்டிய பணப்பயிராகவும் கிட்டுகிறது. தரிசு நிலங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்தான்னு நினைக்கிறேன்.
பதிவுக்கும் அந்த புகைப்படங்களுக்கும் நன்றி, மங்கை.
சத்தம் போடாம சாதிச்சிட்டு இருக்கீங்க...
வாழ்த்துகள்...
நல்ல தகவல்களுடன் போன் நம்பரையும் கொடுத்து அசத்திட்டிங்க!
அட கலக்கல் அக்கா.. :-))
மரங்கள் பற்றி பல நல்ல தகவல்கள் வலைப்பூக்களில் வர ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது. நல்ல ஆரம்பம் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
ஆகா..!!
நல்ல விஷயம்...நல்ல தகவல் ;)
கலக்குறிங்க ;)
மங்கை,
பணம் வருதோ இல்லையோ , நீங்கள் இயற்கைக்கு கொடுக்க வேண்டிய பாக்கியைக் கொடுத்துவிட்டீர்கள் இந்த முயற்சிமூலம்.
மிகவும் நல்ல முயற்சி. அதுவும் தரிசு நிலங்களைத் (சாத்தூர்,கோவில்பட்டி...) தேர்ந்தெடுத்தமைக்கு.
தகவலுக்கு...
http://goodnewsindia.com/pointreturn/online/what-is-pointreturn/
நன்றி சிபி...
உங்க பதிவும் ஒரு நல்ல முயற்சி...
நன்றி தெகா...யூகலிப்டஸ் பற்றி எனக்கு இப்ப தான் கேள்விப்படறேன்.. ஹ்ம்ம்ம்...
யட்சன் ஐயா...
உங்க பதிவு தானே தூண்டுகோள் ...சத்தமில்லாமல் நல்ல காரியம் பண்றது நீங்க தான்..நன்றி...:-)
நன்றி அமுதன்...சென்ஷி..கோபி
வின்சென்ட்..மிக்க நன்றி...உங்க கிட்ட இன்னும் நிறைய விஷ்யங்கள் தெரிஞ்வுக்கனும்
நன்றி கல்வெட்டு..
அதே அதே...சந்தோசமா இருக்கு...
நல்ல பதிவு மங்கை..
ஒரு சின்ன சந்தேகம். மானியம் வேற தருகிறார்கள் என்று சொன்னீங்க. அதை கொடுக்க அல்லது அதை பெற ஏதும் கோல்மால் வேலை நடக்குதா? அல்லது முறையான வழியில் நடக்குகிறதா? என்பதை சொன்னால் இன்னும் நல்லா இருக்கும்
சிவா...இப்படியெல்லாம் ஆராய்ச்சி நடத்த கூடாது...
அப்புறம் ஒரு விஷயம்..ஆசை இருக்கலாம் பேராசை கூடாது தம்பி...ஹா ஹா
பயனுள்ள தகவல்.. நன்றி :)
இப்பத்தான் சிபி தெகாஜி மரங்கள் நடுவைதை பற்றிய ஒரு பதிவு போட்டார்கள்..
//சத்தம் போடாம சாதிச்சிட்டு இருக்கீங்க...
வாழ்த்துகள்...
//
ரீப்பீட்டு..
ம்ம் எனக்கு மட்டும் நீங்க இன்னும் ஃபிரியா ஆகலையா? :(
அட இத்தனை பெரிசாகிடுச்சா மரம்.. அசத்துங்க..
Hi,
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.
இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
nTamil குழுவிநர்
கவிதா...
நன்றி...
நன்றி லட்சுமி & nTamil
நல்ல பதிவு மங்கை..
Nandru Mangai. Nalla vishayam thaan. Tharisu nilam iruppavangalukku oru varaprasaadam.
Post a Comment