தலைப்பு பார்த்துட்டு இவ என்ன பிலாசப்பி (கவுண்ட மனி ஸ்டைல் Philosophy ன் உச்சரிப்பு) பேச வந்துட்டானு திட்ட வந்துட்டீங்க இல்ல?. ..நோ டென்ஷன் ப்ளீஸ். நாம அந்த தப்பெல்லாம் பண்ண மாட்டோம். இது வேறு. நான் யாருன்னு தெரிஞ்சுக்க இமையமலையா போகனும்? நீங்க சொல்ல மாட்டீங்களாக்கும்.
சூப்பர் ஸ்டார் சில நாட்களுக்கு முன்னால தன்னை மராத்தின்னும் ஒத்துக மாட்டேங்குறாங்க, கன்னடக்காரர்னும் ஒத்துக்க மாட்டேங்குறாங்க, தமிழன் அப்படின்னும் ஒத்துக்க மாட்டேங்குறாங்கன்னு ஒரே பீலிங்கஸ் விட்டார். நியாபகம் இருக்கா.?.. அது மாதிரி தானுங்க நானும் இப்ப ஒரெ ஃபீலிங்கஸ்ல இருக்கேன்.
இன்னைக்கு எங்க கல்லூரியில ஒரு கருத்தரங்கு நடந்தது. அதுக்கு வந்து இருந்த அசாம் காரர் ஒருத்தர்க்கு என்னை அறிமுகப் படுத்தினார் நம்ம குசும்பு சீதாராமன். அவர் பேர் டோர்ஜீ (Dorjee) . இவர் அறிமுகப் படுத்தினாலே ஏதாவது வில்லங்க புடிச்ச கேசா தான் இருக்கும்னு எனக்கு தெரியும். அதே மாதிரி தான் ஆச்சு.
சில கேள்விகளுக்கு ஒரு பதில் குடுக்க முடியாது. அப்படியும் இருக்கலாம் இப்படியும் இருக்கலாம்னு சொல்ல தோனும். ஆனா அப்படிப்பட்ட கேள்விகள் ஒரே சமயத்துலயா வரனும்.
பரஸ்பர நலம் விசாரிப்புக்கு பின்னர் என் நெற்றியில் இருந்த விபூதிய காமிச்சு, "நீங்க தமிழா'' னார். தலைய ஆட்டி ஆமான்னு சொல்ல வாய திறக்குறதுக்கு முன்னால அவர் "இல்ல தெலுங்கா" னார். அதுக்கும் சிரிச்சுட்டே தலைய ஆட்டினேன். தமிழ்நாடா ஆந்திராவான்னு கேட்டிருந்தா தமிழ்நாடுன்னு சொல்லி இருப்பேன்.
தமிழா, தெலுங்கானு கேட்டதுனால, (என்னமோ ஹரிச்சந்திரனுக்கு பக்கத்து வீடுன்னு நினப்பு) ரெண்டுத்துக்கும் தலைய ஆட்டிட்டேன்
ஆனா அதுக்கு மேல ஒன்னும் சொல்லலை. அவர் எப்படி புரிஞ்சுட்டாரோ அப்படி இருக்கட்டும்னு சும்மா இருந்தேன். ஆனா மனுஷன் விடாம "அப்படின்னா" னார்.
நான் "அது அப்படித்தான்" அப்படின்னேன். அவர் உடனே "ஓ உங்க பெற்றோர்கள்ல ஒருத்தர் தெலுங்கு, இன்னொருத்தர் தமிழா'' னு ஒரு மகா கண்டு பிடிப்ப கண்டு பிடிச்சு கேட்டார்.
இதுக்கு மேல நாம வாய மூடீட்டி இருந்தா நல்லா இருக்காதுன்னு "நான் மற தமிழச்சி தான்.ஆனா என் தாய்மொழி தெலுங்கு. தமிழ்நாட்டுல தெலுங்கு பேசறவங்க நிறைய பேர் இருக்காங்க" ன்னு சொன்னா, மனுஷனுக்கு பதில்ல திருப்தி இல்லை. சரி போகட்டும்னு விட்டார்.
இதோடு அவரோட கேள்விக்கனைகள் நிக்கலை. இதற்குள்ள இன்னொரு தமிழ் பெண்ணும் வந்து சேர்ந்தாள். ரெண்டு பேர்கிட்டேயும், 'நீங்க எந்த ஊர்' னார். சொன்னோம்.
நாங்க சொன்னதைக் கேட்டு குசும்பர் வந்து, '' ஏன்டீம்மா, புக்காத்த சொல்லப்படாதோ, ரெண்டு பேரும் பொறந்த ஊரையே சொல்றேளே '' -
கேட்டவர்க்கு தமிழகத்துல சென்னைய தவிர வேற எந்த ஊரும் தெரியாது. அப்புறம் எது சொன்னா என்ன. பிறகு சீதாராமனே "அவங்க ஊர் அது இல்லை" அப்படீன்னு எங்களோட 'புக்காத்த' சொல்ல, டோர்ஜீ என்னை ஒரு மாதிரி பார்த்தார்.
அடுத்து "எய்ட்ஸ்ல நீங்க திட்டப்பணியில இருக்கீங்களா இல்லை களப்பணியில இருக்கீங்களா' னார். இரண்டும் செய்ய வேண்டி இருப்பதால "ரெண்டும் தான்" னேன். இவ கிட்ட எதுக்கும் 'ஒரு' பதில் கிடைக்காது போலன்னு டோர்ஜீ இடத்தை காலி பண்ணிட்டார்.
அப்புறம் மதியம், நானும் என்னோடு இருந்த தமிழ் பெண்ணும் சாப்டுட்டு இருந்தோம். கையில தட்டை எடுத்துட்டு அன்புத்தொல்லை மீண்டும் பக்கத்துல வந்தார், "நீங்க சைவமா அசைவமா?" னு கேட்டார்.
தோழி வேனும்னே ' ரெண்டும் தான். நான் சைவமும் சாப்பிடுவேன் அசைவமும் சாப்பிடுவேன்" னு சொல்ல, டோர்ஜீ " You guys are too naughty" னு சிரிச்சுட்டே தப்பிச்சா போதும்னு ஒரே ஓட்டமா ஓடிட்டார்.
28 comments:
செம காமெடி போங்க..
என் தம்பி இப்படித்தான் ஒரு தடவை டாக்டர்கிட்ட போனான்.. எப்பவாச்சும் வலிக்குதா அடிக்க்டி வ்லிக்குதாப்பான்னு கேட்டா..
கொஞ்சம் யோசிச்சிட்டு எப்பாவாச்சும் அடிக்கடி வலிக்குது டாக்டர்ன்னான்..
அந்த கதையா இருக்கு.. :)))))
கேள்வியின் நாயகனா இருப்பார் போலவே. கேட்க மட்டும் தான் தெரியும் டைப்பா?
ஸ்பெல்லிங் மிஸ்டேக்கே.. உன் பெயர் தான் மங்கையா? ;-)
எனக்கு தெலுங்கு கத்துக்கனும் சொல்லி தருவீங்களா....
தெலுங்குலயும் பதிவு போடனும்னு ஆசை...அதான்...
ஹி...ஹி...
என்னது நீங்க தெலுங்கா... சொல்லவே இல்லை :-). இவ்வளவு நாட்கள் ஒரு தெலுங்கருக்கா நான் பின்னூட்டம் போட்டு பதிவெலாம் படிச்சிருக்கேன் :-D.
இப்ப நான் டோர்ஜி வந்த வழியிலேயே போயிக்கிறேன்... தீ குச்சிய உரசிப் போட்டச்சில...
நல்ல சுவை :))
:) :)) (இது சிரிப்பா, புன்சிரிப்பா)
வலைப்பூல இப்ப ஒரு 'TAG' போயிகிட்டு இருக்கே.. அதில உங்களையும் (வம்புல) மாட்டிவிட்டுடாங்களானு நினைச்சேன்..! ;)
அடிக்கடி அப்பப்ப..:-)))
காட்டாறு..பதிவ மட்டும் படிக்கனும்.. இங்கன வந்து மிஸ்டேக் பாக்குற மிஸ்டேக் எல்லாம் பண்ணக்கூட்டாது ஆமா..
சொக்கரே..அதுக்கு என்ன ஒரு தொடர் போட்டுடவா...
ஆஹா தெகா சொ.செ.சூ வச்சுடனா
இப்படி ஒரு வில்லங்காமான கேள்வியும் கேட்கலாம்
நீங்கள் ஆரியார திராவிடரா?
வலைப்பதிவில் காணும் விஷயங்கள் பார்த்து இப்போவெல்ளம் எனக்கு இப்படித் தோன்ற ஆரம்பித்து விட்டது.
பாலா..எப்படியோ நீங்களாவது சிரிச்சீங்களே..அது வரைக்கும் சந்தோஷம்..
நன்றி சென்ஷி
தென்றல் நீங்க வேற...
மாட்டாம இருக்கறேனேன்னு சந்தோஷப் பட்டுட்டு இருக்கேன்...புதுசா இவள என்ன மொக்கை போட சொல்றதுன்னு நம்ம மக்கள்ஸ்கு ஒரு டவுட் வந்துருக்கும்..:-))))) நன்றி
வாங்க வாங்க வாங்க Mangai....
நமக்கு எல்லாம் ஒன்னு தானுங்கோவ்.. ஆரியனையும் திராவிடனையும் அடையாளம் கண்டு பிடிக்க தெரியாதுங்கோவ்...அப்படிப்பட்ட விஷயங்கள் கண்ணுலேயே படாதுங்கோவ்..
நன்றி Mangai
ரெண்டு நாள் லீவிலே வந்து தங்கிட்டு போங்கப்பான்ன சொன்ன போது சாயந்திரம் குசும்பனும் இதே தான் சொன்னான் "கொஞ்சம் நிறைய வேலையிருக்கு அவிஅப்பா":-))
மங்கை,
உங்கள் பதில் எனக்கு மிகவும் திருப்தி அளித்தது.
நான் அதே பெயரில் எழுதுவதில் உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று நீங்கள் என்று Mangai குறிப்பிட்டதில் புரிந்தது.
நன்றி
வாங்க (அபி அப்பாவா அவி அப்பாவா..:-))
உங்க காமெடி பதிவு பக்கமெல்லாம் நாங்க எங்க...
குசும்பனுக்கு வேலை இருந்தா என்ன நீங்க போயிட வேண்டியதுதானே
புரிதல் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். உங்களுக்கு தோணுவது எனக்கும் தோணும் என்று இல்லை...எனக்கு தோணுவது நீங்க ஒத்துக்கனும்னு இல்லை
Mangai..பெயர் மாற்றுவதும்...
மாற்றாததும் உங்கள் விருப்பம்...
வாழ்க அந்த டோர்ஜீ ;))
அவர் புண்ணியத்துல ஒரு பதிவு அதுக்கு :))
நான் எந்த காலத்திலங்க இடம் விட்டு போயிருக்கேன்! அதல்லாம் 10 வருஷம் ஆச்சு! யாராவது நம் இடத்துக்கு வந்தா உண்டு! வயசாச்சுல்ல! வந்தா நல்ல சாப்பாடு உண்டு நிச்சயமா!!!
ஆத்தா...
எனக்கு ஒரு கேள்வி இருக்கு....
நீங்க...நல்லவரா...கெட்டவரா?
ஹி...ஹி...
//நீங்க சைவமா அசைவமா?" னு கேட்டார்.//
ROFL!!!!
nicely written.
25
/தென்றல் நீங்க வேற...
மாட்டாம இருக்கறேனேன்னு சந்தோஷப் பட்டுட்டு இருக்கேன்.../
நான் கூப்பிடதான் 'சும்மா' கேட்டு பார்த்தேன்! ;)
//இவர் அறிமுகப் படுத்தினாலே ஏதாவது வில்லங்க புடிச்ச கேசா தான் இருக்கும்னு எனக்கு தெரியும். அதே மாதிரி தான் ஆச்சு.//
//தோழி வேனும்னே ' ரெண்டும் தான். நான் சைவமும் சாப்பிடுவேன் அசைவமும் சாப்பிடுவேன்" னு சொல்ல, டோர்ஜீ " You guys are too naughty" னு சிரிச்சுட்டே தப்பிச்சா போதும்னு ஒரே ஓட்டமா ஓடிட்டார்.//
ஹிஹி.. நோ கமெண்ட்ஸ். :P
இப்படியும் சிலர் இருக்காத்தான் செய்கிறார்கள்..
Post a Comment