Friday, November 30, 2007

ஆதரவுக்கரம் நீட்டுவோம்- உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள்


நாளை உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள்

ஜூன் 5, 1981அன்று அமெரிக்காவைச் சேர்ந்த நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சி.டி.சி. ஆண் ஓரினச்சேர்க்கை கொண்டிருந்த 5 நபர்களிடம் ஒரு அரிய வகை நிமோனியாவை கண்டறிந்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையே எய்ட்ஸ் கண்டறியப்பட்டதற்கான முதல் ஆவணமாகும்.

முதல் எய்ட்ஸ் என்பது ஓரினச்சேர்க்கையோடு தொடர்புடைய நோய் எதிர்ப்பு குறைப்பாடு என்று அழைக்கப்பட்டது. ஓரினச்சேர்க்கை புற்று நோய் என்றும் இது கூறப்பட்டது. 1982ல் தான் இது சி.டி.சியால் எய்ட்ஸ் என பெயரிடப்பட்டது. இதன் பின், 3 ஆண்டுகளில், அதாவது 1984ல் எச்.ஐ.வி. எனப்படும் ஹியூமன் இம்யூனோ டெபிசியன்சி வைரஸ் பிரித்தறியப்பட்டது.

இந்தியாவில் எச்.ஐ.வி. பரவல்

எச்.ஐ.வியை தடுக்கும் நடவடிக்கைகளை எச்.ஐ.வியின் தொடக்கத்திலேயே முடுக்கிவிட்ட சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது பெருமைப் பட வேண்டிய விஷயம். தொடர்ந்து எச்.ஐ.வி. தடுப்பு முயற்சிகளை முனைப்புடன் செயல்படுத்தினாலும் உலக எச்.ஐ.வி/எய்ட்ஸ் தலைமையகமாக இந்தியா விளங்குகிறது. இந்தியரில் பெரும்பான்மையினருக்கு எச்.ஐ.வி. விழிப்புணர்வு மிகக்குறைவாகவே உள்ளது. இந்தியாவின் சமூக பொருளாதாரநிலை, சமூக கலாச்சார நம்பிக்கைகள்,செக்ஸ் மற்றும் பால் வேறுபாடுகள் குறித்த கருத்துக்கள், பெரிய அளவில் நிகழும் இடம் பெயரல்கள் (migration), சமூகத்தால் கீழே தள்ளப்பட்டிருக்கும் மக்களில் பெரும் பகுதியினர் எச்.ஐ.வி/ எய்ட்ஸ் பெறும் சூழ்நிலையில் உள்ளனர்.

இந்தியாவில் உள்ள எச்.ஐ.வியின் பொதுவான அம்சங்கள் என இவற்றைக் கூறலாம்.

எய்ட்ஸ் இளவயதினரையும் பாலுறவில் அதிகம் ஈடுபடும் வயதினரையுமே அதிகம் பாதிக்கிறது. இந்தியாவில்எச்.ஐ.வி. உள்ளவரில் 88.7 சதவீதத்தினர் 15முதல் 49 வயதுக்குட்பட்டவரே.


போதை ஊசி மூலமாக பெரும்பாலும் எச்.வி.ஐயைப் பெறும் வடகிழக்கு மாநிலங்களைத் தவிர, இந்தியாவில் பலருடன் உடலுறவு கொள்வதன்மூலமாகவே 85 சதவீதத்தினர் எச்.ஐ.வியைப் பெற்றுள்ளனர்.


எய்ட்ஸினால் உருவாகும் சந்தர்ப்பவாத நோய்களில் காசநோயே அதிகமாக எச்.ஐ.வி. இருப்பவரைத் தொற்றுகிறது. இதனால் எச்.ஐ.வியும் காசநோயும் சேர்ந்து பரவும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.


உலகெங்கும் பெரும்பாலும் நகர்ப்புறமக்களே எச்.ஐ.வியைப் பெறுகையில், இந்தியாவில் மட்டும் எச்.ஐ.வி.தொற்றியவரில் 60 சதவீதத்தினர் ஊரகப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.


தமக்கு எச்.ஐ.வி. வரவே வராது என்னும் மூட நம்பிக்கையை பெரும்பான்மையான இந்தியர்கள் கொண்டிருக்கிறார்கள்.


எச்.ஐ.வி/எய்ட்ஸ் பாதித்திருப்போருக்கான மனித உரிமைகள் அதிக அளவில்மக்களிடையே கொண்டு செல்லப்பட்டாலும் எச்.ஐ.வி. பாதித்திருப்போரை சமூகம் பார்க்கும் பார்வையிலும் நடத்தும் விதத்திலும் பெரிய மாறுபாடு ஏற்படவில்லை.


ஆண் பெண் பாகுபாடு, சமூகத்தில் பெண்களை சமமாக நடத்தாமலிருப்பது, பாதுகாப்பான செக்ஸ் என்பதில் பெண்கள் உரிமையின்றி இருப்பது ஆகியவை எச்.ஐ.வி. தடுப்பு நடவடிக் கைகளை பெரிதும் பாதிக்கிறது.


இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கிடை யேயும் மக்கள் சென்று வருவது பல்வேறு பிரிவுகளுக்கிடையே எச்.ஐ.வி. பரவகாரணமாக உள்ளது.


பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மாளான உதவிகள் செய்து, அன்புக் கரம் நீட்டி மனித காப்போம்

18 comments:

காட்டாறு said...

மேடம், நீங்க ஏற்கனவே ஒரு உதவி கேட்டீங்க. கொஞ்ச பேர் ரெடியா இருந்ததா சொல்ல கேள்வி. நீங்க ஆர்கனைஸ் பண்ணுவீங்கன்னு காத்திருக்கோம். இந்த விழிப்புணர்வு நாளிலிலே ஏதாவது எதிர்பார்க்கலாமா?

தென்றல் said...

/எய்ட்ஸ் இளவயதினரையும் பாலுறவில் அதிகம் ஈடுபடும் வயதினரையுமே அதிகம் பாதிக்கிறது. /

அமெரிக்காவில் 14 வயதான பெண்களில் ஐந்தில் ஒருவர் பாலுறவில் ஈடுபடுவதாக, என் மனைவி சொன்னபோது அதிர்ச்சியாகவே இருந்தது.

/நீங்க ஆர்கனைஸ் பண்ணுவீங்கன்னு காத்திருக்கோம்./
ஆமாங்க!

நினைவுபடுத்தியதற்கு நன்றி, காட்டாறு!

oru Elath thamilan said...

இது அமெரிக்க ஆய்வுகூடத்தில் இருந்து உருவாக்கப்பட்டதாக ஒரு பலமான செய்தி பரவுகிறது.

மங்கை said...

செய்துடுவோம் காட்டாறு...இவ்வ்ளோ பேர் காத்திருக்கீங்க...அடுத்த வாரமே சொல்றேன்..

நன்றி தென்றல்..

//oru Elath thamilan said...
இது அமெரிக்க ஆய்வுகூடத்தில் இருந்து உருவாக்கப்பட்டதாக ஒரு பலமான செய்தி பரவுகிறது///

ம்ம் நானும் படித்தேன்...எப்படி வந்ததோ..ஆனா வந்துடுச்சு... பாதிக்கப்பட்டவர்களை பற்றிய கவலை தான் எனக்கு...ம்ம்ம்

கண்மணி/kanmani said...

மங்கை ரொம்ப நாளா எனக்கொரு கேள்வி
தகாத/பாதுகாப்பற்ற உடலுறவு தவிர்த்து ஊசி மற்றும் இரத்தம் மூலம் வரக்கூடிய சாத்தியங்களுக்கு அப்பாவிகள் பலியாகிறார்களே.இதை முதலில் முழுவதுமாக தடுக்க முடிகிறதா?
ஊசியாவது டிஸ்போசிபில் வாங்கும் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
ஆனால் இரத்தம் வழங்குதலில்/பெறுதலில் சட்ட திட்டமிருந்தும் அலட்சியப் போக்கு காராணமாக தவறுகள் நடக்கிறதே

நாகை சிவா said...

//ஆதரவுக்கரம் நீட்டுவோம்- //

கண்டிப்பாக!

மங்கை said...

கண்மணி
முழுவதும் தடுக்க முடிகிறதான்னா, இல்லை...அதுனால தான் ஊசி போட வேண்டிய அவசியம் வர்ரப்போ disposable syrinjes உபயோகப்படுத்துங்கன்னு சொல்லப்படுது
இரத்தம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நன்றாக தெரிந்தவர்களின் இரத்தத்தை உபயோகப்படுத்தலாம்.. ஆனா இப்ப எல்லாம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்ற பாகுபாடு இல்லை..யாரையும் அப்படி நம்ப முடியாத காலகட்டம் இது...

இரத்தம் செலுத்துவதற்கு முன் தானம் செய்த இரத்ததில் எச்ஐவி கிருமி இருக்கிறதா என்று பரிசோதனை செய்த பின் தான் உபயோப்படுத்தறாங்க.. ஆனாலும் இந்த பரிசோதனை தான் சில சமயத்துல சரியான முறையில் செய்யப்படுவதில்லை...

அரசால அங்கீகரிக்கப்பட்ட இரத்த தான மையங்கள் தரக்கட்டுப் பாட்டுக்கு உற்படுத்தப் படுகிறது...இங்கேயும் சில தவறுகள் நடக்கத்தான் செய்கிறது... மருத்துவர்கள், டெக்னீஷியன்கள், ஏன் நாமும் கவனமாக இருக்க வேண்டும்..

delphine said...

ஆனால் இரத்தம் வழங்குதலில்/பெறுதலில் சட்ட திட்டமிருந்தும் அலட்சியப் போக்கு காராணமாக தவறுகள் நடக்கிறதே///
அதனால ரத்தம் வாங்கும் போதும் கொடுக்கும் போதும் நல்ல screening வசதிகள் உள்ள மருத்துவமனைகளிலிருந்து ரத்தம் பெறவோ கொடுக்கவோ செய்யவேண்டும் கண்மணி.... you should be very conscious and cautious about it.
மங்கை , as usual ஒரு நல்ல பதிவு. அந்த துறையில் இருப்பதால் மக்கள் படும் அவதி தங்களுக்கு தெரிகிறது...

மங்கை said...

நன்றி சிவா

மங்கை said...

வாங்க டாக்டரம்மா

நன்றி...இந்த screening பொருப்புடன்
செய்யப்பட்டா கண்டிப்பா பலரைக் இந்த கிருமியிடமிருந்து காப்பாற்றலாம்

மங்கை said...

கண்மணி இன்னொரு முறையும் இருக்கு

சில சமயம் யாருக்கு இரத்தம் செலுத்தப் படவேண்டுமோ அவர்களின் இரத்தமே அறுவை சிகிச்சைக்கு முன்பே எடுத்து வைக்கப்பட்டு செலுத்தப் படுகிறது...இதுக்கு
''Autologous blood transfusion '' என்று பெயர்... இது இப்ப பலர் பின்பற்ற ஆரம்பிச்சு இருக்காங்க.. ஆனா எமெர்ஜென்சி சமயங்கள இது கஷ்டம்...

டாக்டரம்மா அங்க இது மாதிரி நடக்குதா..PSGல நான் நிறைய பார்த்திருக்கேன்

Ravi said...

i am not an expert in this, இத்துறையில் இருப்பவர்களுக்கு பழைய செய்தியா இருக்கலாம், மங்கை சொன்ன மாதிரி எமர்ஜன்சி சமயத்தில் கஷ்டம்தான்...ஆனா இப்ப அமெரிக்காவுல orasure techonologiesனு ஒரு கம்பெனி 15-20 நிமிஷத்தில் செய்ற மாதிரி ஒரு டெஸ்ட் கொண்டுவந்திருக்காங்க. போன வாரம் ஒரு நண்பர்கூட எமெர்ஜென்சி ரூம் போயிரிருந்தப்ப இந்த டெஸ்ட் பத்தி சொன்னாங்க...இந்த டெஸ்ட்'க்கு ஆகும் செலவு பத்தி விசாரிச்சேன் பதில்: "the cost is not too high" (this is relative of course! இங்க cost'ம் நம்ம costம் வேற வேற). இது orasure டெஸ்ட் பத்தி centre for disease control websiteல வந்த செய்தி,

"Results of the test can be read in as little as 20 minutes....In the clinical studies by the manufacturer (OraSure Technologies, Inc.), the OraQuick test correctly identified 99.6% of people who were infected with HIV-1 (sensitivity) and 100% of people who were not infected with HIV-1 (specificity). The Food and Drug Administration expects clinical laboratories to obtain similar results."

வசந்த் said...

Madam

I heard about you through Meenakshi and Raja from Pollachi..(who is no more and you know him very well).. I am very proud to say that a person from Coimbatore helping so much to affected people like me..Yes madam i am also an HIV positive.

I wanted to start a Blog at that time only meenakshi told about you...

My another freind also told about you...you had come to our college it seems to talk on HIV...i missed that programme...

Now mam I am HIV positive for past 2 years..i attempted suicide but was saved... then i happend to meet Meenakshi through whom i got the courage...she used to talk a lot about you and your frend in Coimbatore..

Me too want to start a blog and write on HIV..please help me in doing so..now i am working in an NGO as a counsellor..

Meenakshi said you are helping her in getting funds also through your frends..she said some NRI people, reffered by you are comming and giving her money and toys for the children affected by HIV... that is really great mam...nowdays people only try to pocket the money they get....

here also i see people saying that they are ready to help...that shows the Goodwill that you have earned here....

I met your Professor also in PSG.. He said they all miss you so much at work..he said '' she is the one who will be available at anytime for anything''...He said '' as long as she was there i didnt worry about anything''..

somebody after reading your blog has approached him and reffered gave him money it seems to be given it to HIV infected people.. they have reffered you as Mangai...he dint know who is Mangai..then Meenakshi had told him that it is you who is writing in the name of Mangai in tamil... prof was surprised...he said
''very rare to find a person like her who dedicates 100%, without any prejudice, expectation etc.., he also said as a person and as a colleague you are a Gem of a person..

How and why did you leave this place Mam when everybody are wanting you?...why dont you come back and join us in coimbatore...

lots of people do work in HIV...but it is very difficult to see someone who works with heart and soul...

Mam please help in starting a blog..i will get your e-mail id from Meenakshi..

Regards

Vasanth

மங்கை said...

ரவி...இது எந்த ரவி?...நன்றி...

வசந்த்..

ரொம்ப நெகிழ்வா இருக்கு..உங்க பின்னூட்டம்...மனதுக்கு நிறைவா இருக்கு...

இதுக்கெல்லாம் நான் லாயக்கான்னு தெரியலை..

உங்க மன உறுதியும்...தைரியமும் பாராட்டுக்கு உரியவை.....நாங்க இருக்கோம்..கவலை வேண்டாம்... பிளாக் ஆரம்பிக்கலாம்..

Prof என்னைப் பற்றி சொன்னது பெருமையா தான் இருக்கு...அவர் கொடுத்த பயிற்சி தான் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்தது..அவருக்கு என் நன்றிகள்..

நன்றி வசந்த்...சீக்கிறமே பிளாக் ஆரம்பிக்கலாம்... இங்க பாசத்துக்கும்..ஆறுதலிக்கும் நல்லுள்ளங்களுக்கும் பஞ்சம் இல்லை.... அன்புடன் வரவேற்பார்கள்

ரசிகன் said...

// பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மாளான உதவிகள் செய்து, அன்புக் கரம் நீட்டி மனித காப்போம்//

மங்கை அக்கா.. நீங்க எப்பவுமே நியுஸ் பேப்பருக்கு பதிலா காலண்டரத்தான் படிப்பீங்களா?.
இன்னிக்கி என்ன நாள்ன்னு உங்க பதிவுலதேன் தெரியுது..ஹிஹி..

நல்ல விசயமா இருக்கிறதால என்னோட ஆதரவையும் ரெஜிஸ்டர் பண்ணிக்கோங்க..

Unknown said...

//பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மாளான உதவிகள் செய்து, அன்புக் கரம் நீட்டி மனித காப்போம்//

மங்கை,

என் ஆதரவையும் சேத்து பதிவு பண்ணிக்குங்க.

வசந்த், தற்கொலை முடிவிலிருந்து காப்பாற்றப்பட்டது மகிழ்ச்சி. மன உறுதியோடு இருங்கள். நோயை வெற்றிகொள்ள வாழ்த்துக்கள்.

மங்கை said...

நன்றி ரசிகன் மற்றும் தஞ்சாவூரான்

Osai Chella said...

காட்டறு அவர்களின் செய்தி படித்தேன். மிக்க மகிழ்ச்சி. அப்புறம் ஒரு கொசுரு செய்தி.. வினு அறம் என் க்ளாஸ் மேட்! நான் இங்கிருப்பது (கோவையில்) அவருக்குத் தெரியாது! விசாரித்ததாகக் கூறவும்!