
சமீப காலமாக குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. மனித உரிமை மீறல்களிலேயே மோசமானதாக கருதப்படும் இந்த குற்றங்களை புரிபவர்கள், பெரும்பாலும் உறவினர்களோ, பெற்றோர்களோ அல்லது குழந்தைக்கு நன்கு பரிச்சியம் ஆனவர்களாகத்தான் இருக்கிறார்கள். இந்த குற்றங்களை பற்றி பேசுபவர்கள் பெரும்பாலும் வீட்டிற்கு வெளியே நடக்கும் குற்றங்களை மட்டும் தான் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள். பெற்றோர் சிலரே குழந்தைகளுக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல கொடுமைகளை செய்து வருகிறார்கள் என்பது உணரப்படாத உண்மை. இந்த கொடுமைகள் பலவகைப்பட்டது.
பெண் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளுக்கு சிகரமாக இருப்பது அறியா வயதிலேயே பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கும் ஈனச் செயல்தான் . 'நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்' என்று நாம் நம்பும் உறவுக்காரர்கள் தான் குழந்தைகளுக்கு எதிரிகள் என்றால், உங்களுக்கு அதிர்ச்சியாய் இருக்கும். ஆனால் இது தான் உண்மை.
இந்தப் பதிவில் சமீபத்தில் ராஜமுந்திரியில், பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடுமையை மட்டும் பார்ப்போம்.

இந்தப் பெண்களின் பெற்றோர்களே இவர்களை புரோக்கர்கள் உதவியுடன். கோவா, சென்னை, பெங்களூர் போன்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். 10,000 ல் இருந்து 12,000 வரை விலை போகும் இவர்கள் அனைவரும் 18 வயதை தாண்டாதவர்கள். எச்ஐவியின் தாக்கத்திற்கு பயந்து, இப்பொழுது இது போல இளம்பெண்களுக்கு என்ன விலை ஆனாலும் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் சிலர். இது போல அதிக விலை கொடுக்க முன்வருபவர்கள், பாதுகாப்பான உடல் உறவில் (ஆனுறையை உபயோகித்தல்) அக்கறை காட்ட மாட்டார்கள். அவர்களின் பாதுகாப்பிற்காக இந்தப் பெண்களை நாடுகிறார்கள்..ஆனால் இந்த அப்பாவிப் பெண்களின் பாதுகாப்பை பற்றி அவர்களின் பெற்றோர்களே கவலை படுவதில்லை. இவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, இரக்கமில்லாத பாலியல் கொடுமைகளுக்கு துணை போகிறார்கள். மனதளவில் கொஞ்சமா பாதிக்கப்படுவார்கள் இந்த பிஞ்சுகள்..ம்ம்ம்ம்.. நினைத்துப் பார்க்கவே நெஞ்சு பதைக்கிறது. இது போன்ற வன்செயல்களுக்கு பெற்றோர்களே காரணமாய் இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை.
சென்ற மாதம் விஜயவாடாவில் ஒரு பயிற்சி முகாம் நடத்த சென்றிருந்தபோது, எச்ஐவியால் பாதிக்கப் பட்டிருந்த 15 வயது சிறுமியை பார்த்தேன். 15 வயதில் எப்படி என்று அதிர்ச்சியாக இருக்கவே, அவளிடம் மெதுவாக பேச்சு கொடுத்து விஷயத்தை தெரிந்து கொள்ள முனைந்தேன். கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லக் கூட தெரியாத வெகுளிப் பெண்ணாக இருந்தாள். பின்னர் அவள் இருந்த காப்பக நிர்வாகி சொன்ன தகவலைக் கேட்டு ஆடிப் போய்விட்டேன். அவளின் வீட்டில் திருமணம் ஆகாத அவளின் சித்தப்பா....ம்ம்ம்..அந்த அயோக்கியன், வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில் அண்ணன் மகளையே பலவந்தப் படுத்தி, அவனின் மன விகாரங்களுக்கு அவளை உபயோகப் படுத்தி இருக்கிறான். பல பெண்களிடம் தொடர்பு இருந்த அவனுக்கு எச்ஐவி தொற்றிக்கொள்ள, இந்த பிஞ்சுக்கும் அது..... ம்ம்ம்.. என்ன சொல்ல... அவளுக்கு வந்து இருக்கும் நோயின் கொடுமையோ, தீவிரமோ தெரியாமல் சிரித்து விளையாடிக் கொண்டிருந்த பரிதாபக்காட்சியில் இருந்து இன்னும் என்னால் மீளமுடியவில்லை... உனக்கு என்ன வேண்டும் என்று நான் கேட்டதற்கு, உடனே, எந்த வித தயக்கமும் இல்லாமல், எனக்கு சிவப்பு தாவணி ஒன்று வேண்டும் என்று கண்களை அகல விரித்தப்படி சொன்னது மனதை என்னவோ செய்தது. அந்த காப்பகத்தில் இருந்தவர்களிடம் பணத்தை குடுத்து வாங்கி குடுக்க சொன்னேன்.அவள் இந்த காப்பகத்திற்கு வரும் போதே நோய் முற்றிய நிலையில் தான் வந்து இருக்கிறாள். இவளுக்கு இந்நோய் இருப்பது தெரிந்தவுடன் அவளின் பெற்றோர்கள் இங்கு தள்ளி விட்டு சென்று விட்டார்களாம். பெற்றவர்களும், சொந்தபந்தங்களுமே உலகம் என்று இருந்த இந்த குழந்தைக்கு அவர்களே எதிரிகள் ஆகிவிட்டனர்.
அகில இந்திய அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கம் ஒன்றில் ஒரு பாதிரியார் பேசினது நினைவிற்கு வருகிறது. அரங்கில் அமர்ந்து இருந்தவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் மாணவர்கள். பேசிகொண்டிருந்த பாதிரியார் சொல்கிறார், "நீங்கள் தவறு செய்தால் எச்ஐவி வரும். அதனால் தவறான வழியில் செல்லாதீர்கள்"....
நான் மேலே குறிப்பிட்ட பெண் என்ன தவறு செய்தாள்?. அவளுக்கு ஏன் இந்த நிலமை.?..
இதில் தவறு செய்தது யார்?..

இது ஒரு புறம் இருக்க, நம் சமுதாயத்தில் காலங்காலமாக அவதூறு பேச்சுக்களுக்கு ஆளாகி வரும், சில சுயநலவாதிகளால் ஒடுக்கப்பட்டு, பாலியல் தொழிலில் 'தள்ளப்பட்ட' 'தேவதாசிகள்', மனித நேயத்துடன் சில உன்னத காரியத்தில் தங்களை ஈடு படுத்தி வருகிறார்கள். கர்நாடகாவில் பகல்கோட் மாவட்டத்தின், கலடிகெ என்னும் கிராமத்தில் தான் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் வாழ்கிறார்கள். இங்கு இருக்கும் கஸ்தூரி, ஒரு பாலியல் தொழிலாளி. இவரும் இன்னும் சில பாலியல் தொழிலாளர்களும், சைத்தன்யா மஹிலா சங் (sex workers' collective) என்னும் அமைப்புடன் சேர்ந்து பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள். இவர்களின் குழந்தைகள் இந்த தொழிலுக்கு வரக்கூடாது என்பதற்காக அவர்களுக்கென ஒரு பள்ளியை நடத்தி, கல்வியுடன் எச்ஐவி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும், பாலியில் தொழிலாளிகள் அதிகமாக இருக்கும் இந்த கிராமத்தில் ஒரு பெண் (யாரும் செய்யத் துனியாத ஒரு காரியம்) ஆணுறையை வீடு வீடாக சென்று விற்று வருகிறார். "எங்களை நாங்கள் தானே பாதுகாத்துக் கொள்ளவேண்டும், அதனால் வெக்கத்தை தூர எறிந்து விட்டு முழுமனதோடு இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ளேன்" என்கிறார்.
ஹ்ம்ம்ம்..மனித நேயத்துடன் வாழும் இவர்கள் எங்கே.... சொந்த மகளையே காசுக்கு விற்று போலியான கவுரவத்துடன், பெற்றோர்கள் என்னும் போர்வையில் வாழும் ஈனப் பிறவிகள் எங்கே...ம்ம்ம்ம்
கலாச்சார சீர்கேட்டிற்கும், எச்ஐவி பரவுவதற்கும் காரணமாய் இருப்பது பாலியல் தொழிலாளர்கள் தான் என்று பொருப்பில்லாமல் கூறித்திரியும் இந்த சமூகம், இனியாவது தன் வாயை கட்டிககொண்டால் நல்லது....
குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் பற்றி மேலும் சில தகவல்கள் அடுத்த பதிவில்.....
31 comments:
மிகவும் வருந்தத்தக்கது..
//கலாச்சார சீர்கேட்டிற்கும், எச்ஐவி பரவுவதற்கும் காரணமாய் இருப்பது பாலியல் தொழிலாளர்கள் தான் என்று பொருப்பில்லாமல் கூறித்திரியும் இந்த சமூகம், இனியாவது தன் வாயை கட்டிககொண்டால் நல்லது....//
எழுதுங்கள் மங்கை. இப்படி புள்ளி விவரங்களுடன் தந்தால் மட்டுமே சிலருக்கு புரியும்.
வருகைக்கு நன்றி சேதுக்கரசி அவர்களே...
ஹ்ம்ம்ம்..லட்சுமி..அப்படியாவது புரிந்தால் சந்தோஷப்படுவேன்...
நன்றி..
திங்ககெளம காலையில இப்படி ஒரு பதிவப்போட்டு....
மனசே கஸ்டமாயிடுச்சி...ஊர் கூடி தேரிழுக்கனும்னு சொல்லுவாங்க....எனக்கென்னமோ இந்த விசயத்துல நாம எல்லாருமா சேர்ந்து தோளோட தோள் நின்று போராடினாத்தான் இதுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும்னு நினைக்கிறேன்.
கொடுமைங்க மங்கை.. இப்படி எல்லாம் வேற நடக்குதா நம்ம நாட்டில்!!
இது போன்ற குழந்தைகளுக்கெதிரான அநியாயங்களைக் கூடியவரை வெளிப்படுத்திக் கொண்டே இருங்கள்.. அப்படியாவது மனிதர்கள் திருந்துகிறார்களா என்று பார்ப்போம்...! :((((
:-(((((((
மனசு ரொம்ப கஷ்டமாயிடுச்சி மங்கை.
பங்காளி..
//எனக்கென்னமோ இந்த விசயத்துல நாம எல்லாருமா சேர்ந்து தோளோட தோள் நின்று போராடினாத்தான் இதுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும்னு நினைக்கிறேன்//
இதுல தான் தீர்வு வரும்...
பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து கொண்டீர்கள்..சந்தோஷம்...
நானும் அந்த கொடுமையை பார்த்தேன்...அதனை இவ்வளவு தெளிவான பதிவாக வழங்கி இருப்பது சிறப்பு...
பொன்ஸ்..
இதுக்கு மேலேயும் நடக்குது... பாலியல் கொடுமைக்கு பெண்கள் மட்டும் பலியாவதில்லை..சில ஆண் குழந்தைகளும் இருக்கிறார்கள்... அடுத்த பதிவில் அதைப் பற்றி சொல்கிறேன்..
நன்றி ரவி...
வருகைக்கு நன்றி பாலபாரதி, விடாதுகருப்பு..
Akka...
ennathu ithu..petrorkaleveaa ippidi.. ayooo...nijamavea manasu patharuthu...
விழிப்புணர்வூட்டும் நல்ல பதிவு மங்கை.
இப்போததான் "மிதக்கும் வெளியின்" 'பெண்கள் நிலை' பற்றிய இந்த http://arivagam.blogspot.com/2007/01/blog-post_29.html பதிவை படித்து மனம் நொந்தேன்.
பணத்துக்கும் பகட்டும் ஆசைப்படும் பேய்களின் கண்களுக்கு சமுதாயத்தின் எந்த கட்டுப்பாட்டு வரைமுறைகளும் தெரியாது.
இதற்குமேல் வார்த்தைகள் வரவில்லை.
நன்றி பகிர்ந்தமைக்கு.
இதை தடுப்பதற்கு நாம் என்னென்ன செய்யலாம்?
அடுத்த விவாத களத்துக்கு ஏற்புடைய சமுதாயத்துக்கு மிகவும் உபயோகமான தலைப்பாக இருக்கும் என என் அறிவுக்கு படுகிறது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ?
மேலை நாடுகளில் குழைந்தைள் பெரியவாகளால் துன்புறுத்தப்பட்டால், தீங்கிழைப்பிற்கு ஆளானால் ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு இலவசமாக அழைப்பு விடுத்து முறையிடாலாம்.இந்தியாவிலும் அப்படி செய்யாலாமே. ஆரம்பத்தில் பள்ளியில் இருந்தே விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டு வரவேண்டும். பள்ளியில் ஆசிரியர் குழந்தைகளின் நடத்தையில், மன வேதைனையில் அவதிப்படும் பிள்ளைகளை இனம்கண்டு தக்க பொறுப்பாளர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும். இப்படி எத்தனையோ வகையில் முன்னெச்சரிகையாக இருந்து இது போன்ற அவலங்களை தடுக்கலாம்.
மாசிலா..உங்கள் கருத்துக்களுக்கு நன்றி
இங்கும் அது போன்ற தொலை பேசி அழைப்பு வசதி இருக்கிறது..1098...
சொல்லும் போது.. ten, nine, eight என்று சொன்னால் குழந்தைகள் சுலபமாக நினைவில் வைத்துக் கொள்வார்கள்..
Ministry of Social Justice and Empowerment, Government of India, UNICEF, Department of Telecommunications, street and community youth, non-profit organisations, academic institutions, the corporate sector.. இவர்களின் கூட்டமைப்பாக இந்த child help line செயல்படுகிறது..
எனக்கு தெரிந்து, இதற்கு பாடசாலைகள் மூலமாகத்தான் நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தமுடியும். இவர்கள் இதில் முக்கிய பங்காற்ற முடியும். இதில்லாமல் இக்கால ஊடகங்கள் இதற்கு உதவ வேண்டும்.
இது போன்ற அவலங்களில், வெளிவரும் செய்திகள் மிகச்சிலவனவே. எத்தனை அநியாயங்கள் எங்கெங்கு மறைமுகைமாக நடந்து வருகின்றவோ?
மாசிலா.
பொறுப்பு எல்லோரிடமும் இருக்கிறது.. good touch bad touch எது என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் குடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை...
சக மாணவிகளை, பெண்களை கண்ணியமாக நடத்த, சொல்லிக் குடுக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை...
இதை அவர்களும் கடை பிடிக்க வேண்டும்..
பிரச்சனைகள் கண்டு பிடிக்கபடும்போது, ஊடகங்கள், பெண்ணையும் பெண்ணின் குடும்பத்தையும் தொல்லை செய்து அவர்களை சுத்தி சுத்தி வராமல் குற்றம் புரிந்தவர் யாராய் இருந்தாலும் அவரை அடையாளம் காட்ட வேண்டும்..
ஏழை பணக்காரர், படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று யார் வந்து புகார் கொடுத்தாலும், பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல் துறையின் கடமை..
இது எல்லாவற்றிற்கும் மேல் இந்த சமுதாயாத்தில் வாழும் ஒவ்வொரு வரும் பொறுப்புடன் தங்களின் வரைமுரைகள் தெரிந்து மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்...
நன்றி வெள்ளை..
மிகவும் மன வருத்தத்தைத் தரும் பதிவு. வாழ்வின் நிதர்சனங்கள் மோசமான புனைவைவிட கொடுமையாக இருக்கிறது. வறுமை, அறியாமை, ஆணாதிக்கம் என பல கோணங்களில் சுதந்திர இந்தியாவின் குறைகளை வெளிச்சம் போடுகிறது.
எங்கே போகிறோம் ?
எல்லாரையும் ஃபீலிங்ஸ் ஆகவச்சிட்டீங்க....அடுத்த பதிவு போடும்போது அப்படியே ஆளுக்கு ஒரு கர்ச்சீஃப் கொடுத்தீங்கன்னா புண்ணியமா போகும் தாயீ...யோசியுங்க...
ஹி..ஹி...
(வலைப்பதிவுகள்ள உங்களை வெறுப்பேத்ற ஒரே ஆள் நாண்தானோ!)
1098...1098....1098...1098....1098...1098....1098...1098....1098...1098....1098...1098....1098...1098....1098...1098....
இந்த நம்பர அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க எல்லார் காதுலயும் போட்டு வைங்கப்பா...புண்ணியமா போகும்.....
பங்காளி
நீங்க சென்னைல சப்ளை பண்ணுங்க
...கர்சீப்... :-)))..
விளம்பர கம்பெனி ஒன்னு நீங்க ஆரம்பிக்கலாம்னு நினைக்குறேன்...
மூனு நன்றிகள் உங்களுக்கு..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மணியன்..
ஆனால் இதில் ஆனாதிக்கமோ வறுமையோ ஒரு பெரிய பிரச்சனை இல்லை மணியன் அவர்களே..
எங்கள் ஊரில் ஒரு பலமொழி ஒன்று சொல்வார்கள்.. 'நோகாம நோம்பி கும்பிடுவவர்கள்' என்று.. எந்த வித முயற்சியும் இல்லாமல் சுகத்தை அனுபவிப்பவர்களைத்தான் இவ்வாறு கூறுவார்கள்..
அது போலத்தான் இதுவும்.. CNN-IBNல் தாயே பேரம் பேசும் கொடுமையை பார்த்தேன் இதை என்ன சொல்ல.. உடல் உழைப்பு இல்லாமல் பிழைக்க கற்றுக் கொண்டவர்கள் இவர்கள்..ஹ்ம்ம்
மங்கை,
மிகுந்த வருத்தமளிக்கிறது..
என்ன செய்வது என்று எனக்கு புரியவில்லை..
அந்த அயோக்கியர்களை வன்மையாக கண்டிக்கிறேன்...
வார்த்தைகள் இல்லை எனக்கு.. ஆனால் மனது மிகுந்த வருத்தமளிக்கிறது..
சிவா...
வருத்தம் அளிக்கிற விஷயம் தான்.. அந்த தாய் ப்ரோக்கர்களிடமும் கிராக்கிகளிடமும் பேரம் பேசியதை பார்க்க வேண்டும்..ஹ்ம்ம்ம்... எந்த விசாரனையும் இல்லாமல் சுட்டுத் தள்ள வேண்டும் என்று தோன்றுகிறது... பேரம் பேசி முடிந்த பின் அவர்களின் சிரிப்பும் சந்தோஷமும்..அய்யோ... அந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்களோ இவர்கள் வயிற்றில் பிறக்க..ம்ம்ம்ம்...
//ஆரம்பத்தில் பள்ளியில் இருந்தே விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டு வரவேண்டும். பள்ளியில் ஆசிரியர் குழந்தைகளின் நடத்தையில், மன வேதைனையில் அவதிப்படும் பிள்ளைகளை இனம்கண்டு தக்க பொறுப்பாளர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.//
சரியான தீர்வு. வெறும் போராட்டங்கள் மட்டுமே இந்த அவலங்களை ஒரு முடிவிற்க்கு கொண்டுவராது.
அடிப்படை செக்ஸ் கல்வி அவசியம். பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நிகழும்போது எவ்வாறு எதிர்கொள்வது என்பதை பள்ளியிலேயே சொல்லித்தர வேண்டும்.
இவ்வாறான புகார்களுக்கு எதிராக அரசாங்கமும் காவல்துறையினர் முதலிடம் தரவேண்டும்.
எல்லாவற்றையும் விட முக்கியமான விடயம் சிறுவர் சிறுமியர் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும்.
இதை யார் செய்வது என்பதுதான் இப்போதைய கேள்வி.
//இதை யார் செய்வது என்பதுதான் இப்போதைய கேள்வி//
பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதற்கு முக்கிய பங்கு அளிக்க வேண்டும்...நன்றி
மங்கை,
மனதைக் கனக்க வைத்த பதிவு.
/* இந்த குற்றங்களை புரிபவர்கள், பெரும்பாலும் உறவினர்களோ,
...அல்லது குழந்தைக்கு நன்கு பரிச்சியம் ஆனவர்களாகத்தான் இருக்கிறார்கள்.*/
உண்மை. கடந்த வருடம் இங்கே Toronto வில் 70 வயது நிரம்பிய கத்தோலிக்க மத குருவைச் சிறையில் அடைத்தார்கள். காரணம், பல வருடங்களுக்கு முன் தேவாலயத்தில் பல 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள [பல வருடங்களாக] பாலியல் வன்முறைக்கு ஆளக்கினார் எனும் காரணத்திற்காக.
நீங்கள் சொல்வது போல், இக் குழந்தைகளுக்கு நன்கு பரிச்சயம் ஆனவர்கள்தான் அதிகளவில் இக் குற்றச் செயல்களைச் செய்கிறார்கள்.
மத குரு??...ஹ்ம்ம்ம்
Post a Comment